Blog Archive

Tuesday, June 23, 2020

நாட்டு நடப்பு

வல்லிசிம்ஹன்
கையில் கம்புடன் நாட்டு மருந்து வாங்கும் மைலாப்பூர் வாசிகள்;
கம்பின் நுனியில் பை. பையில் மருந்துகளைப் போடும் கடைக்காரர்.
எங்கள் வீட்டு உதவியாளர் ராணியின் செய்தி.படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நடக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

26 comments:

ஸ்ரீராம். said...

நல்ல பாதுகாப்பான முறை. எங்கள் வீட்டருகே நாட்டு மருந்துக் கடை எதுவும் இல்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இதைப் பார்த்ததும் உங்க நினைப்புதான் வந்தது.
மைலாப்பூரில் கச்சேரி சாலையில் நிறைய நாட்டு மருந்துக் கடைகள் உண்டு.
முன்பு இந்தக் கடைகளுக்குச் செல்வது வழக்கம்.

ஸ்ரீராம். said...

அங்கிருந்த டப்பா செட்டி கடையில்தான் எங்கள் வீட்டுப் பெண்களுக்கு பிரசவ நடகாய லேகியம் ஆண்டாண்டு காலமாக வாங்குவோம். தஞ்சையில் இருந்த காலங்களிலும் சரி, மதுரையில் இருந்த காலங்களிலும் சரி! இப்போது அந்தக் கடை இருக்கிறதா என்று தெரியவில்லை. என் பாஸுக்கும் அங்கிருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.

கோமதி அரசு said...

நல்ல பாதுகாப்பு முறை.

இப்போது நாட்டு மருந்துகளுக்கு நல்ல மவுசு.

ஜீவி said...

பழைய மாம்பலத்தில் நாட்டு மருந்து கடைகள் உண்டு. கச்சேரி சாலை டப்பா செட்டி கடை பிரசித்தி பெற்றது. அடையார் டிப்போ தாண்டி இரண்டு மூன்று.. சென்னையில் நிறைய நா.ம.கடைகள் உள்ளன.

KILLERGEE Devakottai said...

இறைவன் அனைவரையும் காக்கட்டும்.

நெல்லைத் தமிழன் said...

இதுவுமே எனக்கு அறியாமை என்றுதான் தோணுது. மருந்தைத் தொட்டுத் தருகிறார் கடைக்காரர். (எத்தனை பேர் அதற்கு முன்னால் அந்த மருந்து பாட்டில்/பொட்டணத்தைத் தொட்டார்களோ). எப்படியோ... அந்த அவேர்னெஸ் இருந்தால் நல்லதுதான்.

Bhanumathy Venkateswaran said...

நல்ல ஐடியாவாக இருக்கிறதே!!

Bhanumathy V said...

நல்ல ஐடியாவாக இருக்கிறதே

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹா ஹா ஹா மக்கள் சில இடத்தில் பயங்கர பாதுகாப்பாகவும் சில இடங்களில் எந்தப் பிரச்சனையுமே இல்லை என்பது போலவும் நடந்து கொள்கிறார்கள்.
இங்கும் பார்மசிகளுக்குள் போக முடியாது, டோர் பெல் அடிச்சு, மைக்கில் பேசித்தான் மருந்து கேட்டுப் போட்டு 2 மீட்டர் தூரமாக நிற்க வேண்டும், அவர்கள் டோரை திறந்து வாசலில் இருக்கும் பாஸ்கட்டில் மருந்தை வைப்பார்கள். பல இடங்களில் காசு பாவனையில் இல்லை, பாங் கார்ட் மட்டுமே எடுக்கிறார்கள்...😀😃

நெல்லைத்தமிழன் said...

ஶ்ரீராம் - என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. (உங்களுக்கு இதைப்பற்றித் தனியா சொல்றேன்). டப்பா செட்டி கடை இன்னும் இருக்கு. தீபாவளி லேகியப் பொடி இங்கு வாங்கினோம். அந்தக் கடையை ஒட்டி எதிர் வரிசையில் நாட்டுமருந்துக் கடைகள் பல முளைத்திருக்கின்றன.

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கும் சில இடங்களில்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இன்னும் அங்கேயேதான் இருக்கு.
முன்னாடி தந்தை இருந்த இடத்தில் மகன் இருக்கிறார்.
பழைய பாரம்பரியம் மிகுந்த கடை.
கச்சேரி ரோடிலியே நாலு கடைகள் வந்துவிட்டது.
அருண்டேல் தெருவிலும் இருக்கு.
நாங்க நம்புவது டப்பா செட்டி கடை மட்டும் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
பாட்டி இதே சாலையில் முன்னால் இருக்கும் வெங்கட் ரமண வைத்திய சாலையிலும்
குழந்தைகளை வைத்தியத்துக்கு அனுப்புவார்.
சின்ன வயதில் வரும் பாலாரிஷ்டம்,கணை சூடு;தோல்வரண்டால் எண்ணெய் என்று எல்லாம் கிடைக்கும்.
இப்போது கேட்கவே வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜீவி சார்.
டப்பா செட்டிக்கு அப்புறம் நிறைய நாட்டு மருந்துகடைகள் வந்து விட்டன.
தி.நகர்ல கூட சலீம் ஸ்டோர்ஸில் எல்லா நாட்டு மருந்தும் கிடைக்கும்.
அடையாரில் நானே வாங்கி இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
வேற யார் காக்க முடியும். இறைவன் மனம் வைத்து இந்த நோயை அழிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நதி மூலம் ரிஷி மூலம் தான்.
என்ன செய்யறது.

எத்தைத் தின்னால் பித்துத் தெளியும் கதைதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா.
ஆமாம். இதையும் நன்றாக அலம்பித்தான் உபயோகிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
மேற்கத்திய நாடுகளில் விதிமுறைக் கட்டுப்பாடுகள்
அதிகம்.
நம் நாட்டில் மக்களும் டிமாண்டும்
அதிகம். சமாளித்துக் கொண்டுதான் போகணும்.

ரொம்ப பேருக்கு சாப்பாட்டுக்கு வழி செய்வதே சிரமமாக இருக்கிறது.
ஜுரம்,கபம் வந்தால் இந்தக் கடைகளை நாடுவார்கள்.

சர்க்கரை வியாதிக்குக் கூட நல்ல மருந்து கொடுப்பார்
இந்த கடைக்காரர்.நன்றி ராஜா பத்திரமாக இருங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல ஐடியாவா இருக்கு. இங்கு எல்லாம் நாமேதான் வாங்கிக் கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது.

மைலாப்பூர், மேற்குமாம்பலம், அடையார் எல்லா இடங்களிலும் நாட்டுமருந்து கடைகல் இருக்கின்றன.

இங்கு எல்லாரும் தங்கள் விருப்பப்படிதான் இருக்கிறார்கள் அம்மா. பங்களூரிலும் பெரும்பாலும் 4 ஆம் தேதிக்குப் பிறகு லாக்டவுன் இருக்கும் என்று தெரிகிறது.

லாக்டவுனினால் நன்மை இருக்கிறதோ தெரியவில்லை. சம்பளம் கட் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல ஐடியா.

கேரளம் பரவாயில்லாமல் போகிறது என்றே தோன்றுகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா வட மாநிலங்களைப் பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நல்லகாலம் விரைவில் வர வேண்டும்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல ஐடியா.

கேரள்ம் பரவாயில்லாமல் போகிறது என்று தோன்றுகிறது தமிழ்நாடு, மகாராஷ்ட்டிரா வட மாநிலங்களைப் பார்க்கும் போது. நல்லகாலம் விரைவில் வர வேண்டும்.

துளசிதரன்

Geetha Sambasivam said...

மருந்தைத் தொட்டுத் தானே தருவார். பொட்டலங்களாக இருந்தாலும் அதைத் தொட்டுத் தானே தருகிறார். நான் தினம் தினம் வீட்டில் நெல்லிக்காய், பாகற்காய், சின்ன வெங்காயம், இஞ்சியோடு சேர்த்து அரைத்துச் சாறு எடுத்துக் காலை வெறும் வயிற்றில் குடித்துவிடுவோம். பின்னர் முருங்கைக்கீரையோடு சின்னவெங்காயம் சேர்த்து அதோடு லவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகு, ஜீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் எல்லாம் போட்டுத் தக்காளியும் சேர்த்து வதக்கிக் குக்கரில் இரண்டு தம்பளர் நீரோடு வைத்து நாலைந்து விசில் கொடுத்துப் பின்னர் குக்கர் திறந்ததும் அதை எடுத்து நன்கு வடிகட்டிக் கொஞ்சம் மிளகு, ஜீரகப் பொடி சேர்த்துக் குடிக்கிறோம்.இதான் இப்போதைக்கு மருந்து. கூடியவரை வெளியே போவதில்லை. எல்லாம் கீழேயே வாங்கிக்கறோம்.

Geetha Sambasivam said...

இங்கேயும் இடி, மின்னலோடு அவ்வப்போது தூற்றல் இருக்கிறது. நேற்றுக் கொஞ்ச நேரம் மழை பெய்தது. பிஹாரில், உபியில் இடி விழுந்து சுமார் 83 பேர்கள்/சிலர் 105 பேர் என்கிறார்கள். இறந்திருக்கின்றனர்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா. கையில் உறை அணிந்து கொடுப்பதாகச் சொன்னாலும்

எப்படித்தான் அதைப் பராமரிப்பதோ தெரியவில்லை.
இதோ இந்தியாவிலிருந்து மருந்துகள் வந்து 3 நாட்கள் ஆகின்றன.
இன்னும் திறக்கவில்லை.

கொடுத்த கூலியோ அதிகம்.
சரி பார்க்க ஆசைதான். இருந்தாலும்
பல நாடுகள் கடந்து வந்திருக்கிறது.

பயமாகத் தான் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இதையே ஒரு பதிவாக நீங்கள் போட வேண்டும். எத்தனை மருந்துகள் உள்ளடக்கித் தயார் செய்கிறீர்கள்.
மனம் நிறை பாராட்டுகள்.
பத்திரமாக இருங்கள். மிகத் தேவை இந்த தயாரிப்பு.