Blog Archive

Sunday, June 21, 2020

எண்ணங்கள் எழுத்துக்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்
எண்ணங்கள் எழுத்துக்கள்

பலவேறு உத்திகளை  கடைபிடித்து  பாசிட்டிவ் 
எண்ணங்களை வளர்க்க  இந்த நேரத்தைத் 

தாண்டி வரவேண்டி  இருக்கிறது.
சென்னையிலிருந்து   ஏதாவது   நல்லவை அல்லாத செய்தி வரக்கூடாது 
என்றே பிரார்த்தனை.
மாற்றிச் சொல்ல  வேண்டுமானால் நல்ல செய்திகளுக்காக காத்திருக்கும் நேரம்.

கடைப்பிடிக்கும் வழிகள், நல்ல சமையல், 
கேட்க  நல்ல இசை, படிக்க நல்ல புத்தகங்கள்,
பிரார்த்தனை   தொடர்ச்சியாக ஒலிக்கும் ஒலி .

எழுத, படிக்க என்று உட்கார்ந்து விட்டால் 
காலில் வீக்கம் வந்து விடுகிறது.
என்னால் மற்றவர்களுக்கு கவலை.

இதைத் தவிர   வேறென்ன செய்ய முடியும் 
என்று  யோசித்த போது ,
தோன்றிய  எண்ணம்,
இசைக்காக ஒரு பதிவு வைத்துக் கொள்ளலாம்.

பாடலைப் பதிந்து கொண்டு என்  நாச்சியார் பதிவில் 
அதைப் பற்றி எழுதாவிட்டால் 
எதோ தவறாகச் செய்த  மனப்பான்மை 
பாதிப்பு வருவதால், 
என் பழைய வலைப்பூ குறுங்குடி வல்லியைத் 
தூசி தட்டி,  திரை இசை எல்லா வகைகளும் ,
என் வாழ்வில் வெவ்வேறு அங்கம் வகித்த நேரங்களில் என்னுடன் துணை வந்த பாடல்களை 
பதிய ஆரம்பித்தேன்.

இது தனிப்பட்ட செல்வம்.  காதுகள் செயல் படும் வரை கேட்கலாம்.

இனிதான் செம்மையாக அமைக்க வேண்டும்.

''எனக்குப் பிடித்த  பாடல்  அது உனக்கும் பிடிக்குமே''
என்று  சொல்ல வரவில்லை.:)

முடிந்த போது  யாரும் கேட்கலாம்.
இது இப்போதைய தேவை எனக்கு.

சோர்ந்து போக விரும்பவில்லை.
அவசியமில்லாத  பயமுறுத்தும்  காணொளி 
காண விருப்பம் இல்லை.
எல்லோரும் தொலைக் காட்சிகள், செய்தி தாள்களைப்  படிக்கிறோம் .
நாம் சொல்லித்தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதனால் செய்தி வீடியோக்களை பதிய ப் 

போவதில்லை. இந்த புத்தி வர இத்தனை நாட்கள் ஆயிற்று.
இதோ  மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வந்து விடுவோம். இறை வழி காட்ட  நாமும் மீளுவோம்.

அவனே காப்பான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இதோ என் புதிய பழைய தளம் இசைக்காக.

.kurungudi-valli.blogspot.com








22 comments:

நெல்லைத் தமிழன் said...

இசை எப்போதுமே மனதை மலரச் செய்யும்.

செய்திகளைப் பார்க்காமல், இசையில் ஆழ்ந்துபோவதும் ஒரு உத்திதான். எனக்கு அரசியல் செய்திகளைப் படித்தால், அது மனதில் போய், மற்ற வேலைகளில் மனம் ஒன்றாது செய்யும். அதனால் பெரும்பாலும் அரசியல் செய்திகளைத் தவிர்த்துவிடுவேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
ஆமாம் கண் பார்ப்பது, காது கேட்பது எல்லாமே
நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும்.

மனத்தைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கண்டு என்ன செய்யப் போகிறோம்?
அதைக் கவனித்துக் கொள்ள இளைய தலை முறை இருக்கவே இருக்கிறது.

நம்மால் முடிந்து கடவுளை நினைப்பது, மனதை ஆரோக்கியமாக வைப்பது.

வேண்டாத தலைவலி வரவழைக்கும்
எந்த காணொளியும் வேண்டாம். நன்றி மா.

ஸ்ரீராம். said...

எல்லாம் சரியாகிக் கொண்டு வருகிறதும்மா.. கவலை வேண்டாம். உங்கள் வாட்ஸாப்புக்கு இன்றும் ஒரு ஆடியோ அனுப்பி இருக்கேன். கேளுங்க..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். ரொம்ப நன்றிப்பா. குடும்பத்தைச் சேர்ந்த முதியவர்கள்,
அதாவது என்னை விடப் பெரியவர்கள் அல்லது இங்க் பக்கத்தில் கனடாவில் ஒரு 48 வயதுக்காரர் மறைவு சஞ்சலப் படுத்தி விட்டது.
பத்திரமாக இருக்க வேண்டித்தான் கவலை.

உங்கள் ஆடியோ நல்ல தெளிவாகச் சொல்லிவிட்டார்களே.
மிக மகிழ்ச்சி ராஜா.
இது போல யார் என்னிடம் கவனம் வைத்து
சொல்வார்கள்.
நன்றாக இருங்கள் மா. இனி எல்லாம் தெளிந்து விடும்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

பாடல்கள் தான் எனக்கும் எப்போதும் மருந்து...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு தனபாலன். எத்தனையோ கவிதையாளர்கள் நமக்கு விட்டுப் போன சொத்து.
அவையே நமக்கு மருந்து.

KILLERGEE Devakottai said...

இசைக்கு மயங்காதோர் உண்டோ...
எல்லாம் நலமாகும் இறையே துணை.ஆக

வெங்கட் நாகராஜ் said...

இசை நல்லதோர் மருந்தும்மா... நானும் இசையைக் கேட்டுக் கொண்டே தான் வேலை செய்கிறேன்.

நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு இருப்போம்.

கோமதி அரசு said...

அக்கா இசை கேட்பது மனதுக்கு மகிழ்ச்சி. கவலையை போக்கும்.பாடல்களை விருப்பம் போல் பகிர்ந்து கொள்ளுங்கள். காலை தொங்கபோடாமல் கீழே ஏதாவது ஸ்டூல் போட்டு காலை அதில் வைத்துக் கொள்ளுங்கள், பாதக்குளியல் அடிக்கடி செய்யுங்கள்.
காலை, மாலையும் செய்தால் நல்லது. இடை இடையே கொஞ்சம் நடந்து விட்டு அமருங்கள்.

எல்லாம் விரைவில் சரியாகும் என்று நம்புவோம்.

Thulasidharan V Thillaiakathu said...

இந்த நேரத்திலும் எந்த நேரத்திலும் நல்லதையே நினைப்போம் அம்மா. மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டு ஏதாவது வேலைகளில், பிடித்த விஷயங்களில் மூழ்கிக் கொண்டுவிட்டால் நல்லதுதான்.

உங்கள் உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். பிரார்த்தனைகள்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

பலவேறு உத்திகளை கடைபிடித்து பாசிட்டிவ்
எண்ணங்களை வளர்க்க இந்த நேரத்தைத்

தாண்டி வரவேண்டி இருக்கிறது.//


ஆமாம் அம்மா நிறையவே நாம் பாசிட்டிவாக இருக்க இருக்க நல்லது. இன்று கூட ஸ்ரீராம் நான் அவரிடம் இது எப்போ தீருமோ என்று சொன்னதற்கு அழகா பாசிட்டிவா சொல்லியிருந்தார். நானும் பாசிட்டிவாகத்தான் இருப்பது உண்டு. இருந்தாலும் இடையில் வீட்டுப் பெரியவர்களை நினைக்கும் போது வரும். அதுவும் தனியாக இருப்பவர்களை நினைக்கறப்ப...

நல்லதையே நினைப்போம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சோர்ந்து போக விரும்பவில்லை.
அவசியமில்லாத பயமுறுத்தும் காணொளி
காண விருப்பம் இல்லை.//

அதே அம்மா. நானும் பார்க்க விரும்புவதில்லை. செய்திகள் கூடப் பார்ப்பதில்லை கணினியில். வாட்சப்பில் இப்படியான செய்திகளைத் தவிர்த்துவிடுகிறேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இசை கண்டிப்பாக மனதை இதமடையச் செய்யும். பகிருங்கள் அம்மா. நாங்களும் கேட்க ரெடி.


எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இதுதான் மேலான உண்மை.
பக்தி, ஆனந்தம், எல்லாம் வழங்கும் நல்ல ஒலி
எங்கும் பரவி இருக்கிறது. நாமும் அதில் துளி
பருகலாம் என்றே என் ஆசைமா.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , அதுவும் தனிமையில் இசை சேர்ந்தால்
இன்னும் இனிமை தான். எனக்குத் துணையே
இசை தான். எனக்கும் கணவருக்கும் அது ஒரு பாலம்.
நன்றி மா நேரம் இருக்கும் பொது குறுங்குடி வல்லிப் பதிவில்
பாடல்கள் கேளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
மகள் இந்த டேபிள் மேட் வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.
சோபாவில் காலை நீட்டியபடி
டைப் அடிக்கலாம். தங்கைன்னால் இதுதான். பரிவும் பாசமும்.
இது போதும் அம்மா.
நான் கவனமாக இருக்கிறேன்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி மா,
மிக நன்றி ராஜா. கொஞ்சம் கொஞ்சமாக
மீடியாக்களிலிருந்து விலகிவிட ஆசை.
தற்காப்பு தான் காரணம்.

வீண் தலைவலி வரவழைத்துக் கொள்ள
வேண்டாமே. நீங்களும் குடும்பமும்
பத்திரமாக இருங்கள்.உஷாராக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

பாசிட்டிவாகத்தான் இருப்பது உண்டு. இருந்தாலும் இடையில் வீட்டுப் பெரியவர்களை நினைக்கும் போது வரும். அதுவும் தனியாக இருப்பவர்களை நினைக்கறப்ப..///

இதுதான் என்னையும் கொஞ்சம் வருத்துகிறது மா.

அன்பு கீதா, என் நாத்தனார் 86 வயதில் தனியாக
ஒரு ஹெல்ப்பருடன் இருக்கிறார்.
அவர் குழந்தைகள் இங்கே அமெரிக்காவில்.
என் மனம் அவரை நினைத்தால் நனைந்துவிடு,.
இன்னும் மாமாக்கள், ஆகப் பெரிய தாத்தா
எல்லோரும் இருக்கும் நிலைமை.
நான் நினைத்து ஒன்றும் இல்லை. அவர்கள் சிரமப் படக்கூடாதே
என்ற வருத்தம்.
எல்லோரும் அபார்ட்மெண்டில் இருக்கிறார்கள்.
இறைவன் பார்த்துக் கொள்ளட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அதே அம்மா. நானும் பார்க்க விரும்புவதில்லை. செய்திகள் கூடப் பார்ப்பதில்லை கணினியில். வாட்சப்பில் இப்படியான செய்திகளைத் தவிர்த்துவிடுகிறேன்.//அதுவும் வாட்ஸாப்பில் விபரீதமாக எதையாவது பார்த்துவிட்டால், மனப் படபடப்பு அதிகரிக்கிறது.
வேண்டாம் ராஜா. உங்களைப் பத்திரமாகப்
பார்த்துக் கொள்ளுங்கள் ஸ்ரீராம், பானுமா, நம் கீதா சாம்பசிவம், அன்பு கோமதி இவர்களுடன் அவ்வப் பொழுது பேசுங்கள்.
பேசினாலே மனம் லேசாகும். டேக் கேர் டியர்.

Geetha Sambasivam said...

நானும் எல்லாக் காணொளிகளையும் பார்க்க விரும்புவதில்லை. ஶ்ரீராம் சொல்லியே அனுப்புவார். அவற்றைப் பார்ப்பது/கேட்பது உண்டு. மற்றபடி தொலைக்காட்சிச்செய்திகளே தலை சுற்ற வைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

உண்மை கீதா. நமக்குதேவை என்றால்
பார்க்கலாம். விபரீத செய்திகளைத் தவிப்பது நன்மையே.