Blog Archive

Friday, June 12, 2020

எண்ணெய்க் குளியலின் ஆனந்த நாட்கள்

வல்லிசிம்ஹன்.
எல்லோரும் நலமாக வாழ வேண்டும் 

எண்ணெய்க் குளியலின்  ஆனந்த நாட்கள் 

குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல் வேண்டாம் || no oil massage for Children
அம்மா  உன் கைதான் எத்தனை  இதம்.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு | பண்ணையார் தோட்டம்

                    குளியல் . எங்கள் மக்களுக்குத் திருமணம் நடந்து,
பேரன்,பேத்திகளுக்குக்  குளியல் முறை வந்தபோது நோகாமல்
குளிப்பாட்டக் கற்றுக் கொண்டேன்.
இங்கெல்லாம் பிரசவம் ஆன மூன்றாம் நாள் காலை வீடு வந்துவிடலாம்.

அன்றிலிருந்து ஸ்பஞ் பாத் கொடுத்துவிட்டு,
பதினோராம் நாள் புண்ணியாக வசனம் அன்று அம்மாவுக்கும் ,பிள்ளைக்கும்
எண்ணேய்க் குளியல்.
முதல் பேரனுக்காவது எல்லாம் செய்ய முடிந்தது.
அப்போது எண்ணெயில் அவன் ஊறிக் கொண்டிருக்க

அந்தக் குளிர் நாட்களில் வெய்யிலில் அவனைப்
காட்டிவிட்டு,
சமையலறையிலியே சிங்க்கில் தொட்டியை வைத்து இதமான
சூட்டில் குழந்தைகளுக்கான ஷாம்பூ தேய்த்து

குளிப்பாட்டும் போது நானும் அவனும் மகிழ்ந்தோம்.
அழாத, குழந்தைக்கு ஸ்னானம் செய்விப்பது எத்தனை
சந்தோஷம். 


உலகம் மாறிவிட்டது என்னவோ
உண்மைதான். அன்னை பாசமும்,
பாட்டி பேரன் பேத்திகள் உறவும் 
மாறுவதில்லை.

இன்னும் எத்தனையோ எழுத இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு உத்சாகம் வேண்டும்.
முடிந்த போது தொடரலாம். படித்துப் பின்னூட்டம் இட்ட 
அனைவருக்கும் நன்றி.

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை...

துரை செல்வராஜூ said...

>>> சமையலறையி சிங்க் தொட்டியில் வைத்து இதமான சூட்டில்..<<<

இப்படித்தான் அபுதாபியில் பேத்திகளைக் குளிப்பாட்டியது...

துரை செல்வராஜூ said...

>>> உலகம் மாறிவிட்டது என்னவோ
உண்மைதான். அன்னை பாசமும்,
பாட்டி பேரன் பேத்திகள் உறவும்
மாறுவதில்லை... <<<

உண்மை.. உண்மை..

மாதேவி said...

அம்மாவாக இருந்து செய்த பொழுது இருந்த மகிழ்ச்சிக்கும் பேரபிள்ளைகளுக்கு செய்கிறபோது ஏற்படும் மகிழ்ச்சிக்கும் வித்தியாசமிருக்கும். கால ஓட்டத்தில் நமக்கு பொறுப்புக்களுடன் பொறுமையும் கூடிவிடுகிறதே. நானும் அம்மம்மா ஆகிவிட்டேன்.பொழுதுகள் இனிதாக களிகின்றன.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான குளியல் அந்த எண்ணெய்க் குளியல்.

சில வரிகள் இரண்டு முறை வந்திருக்கிறதும்மா....

மனோ சாமிநாதன் said...

//உலகம் மாறிவிட்டது என்னவோ உண்மைதான். அன்னை பாசமும்,பாட்டி பேரன் பேத்திகள் உறவும் மாறுவதில்லை.//

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும் இது தான் உண்மை! இந்த அன்பும் பரிவும் பாசமும் இன்னும் அங்கங்கே இருப்பதால்தான் உறவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

KILLERGEE Devakottai said...

இதுவொரு ஆனந்தமே
அம்மா சில பத்திகள் இரண்டுமுறை வந்து இருக்கிறது.

Geetha Sambasivam said...

இரண்டு முறை வந்திருக்கு ரேவதி! கொஞ்சம் கவனித்துச் சரி செய்யுங்கள். நானும் எங்க பேத்திகளுக்குக் குளிப்பாட்டும்போது தான் இது எத்தனை எளிது எனப் புரிந்து கொண்டேன். என் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டும்போது பயம்மாக இருக்கும். :)))) பெண் அலறித்தீர்த்துவிடுவாள். எல்லோரும் அவளை நான் தான் ஏதோ பண்ணிட்டேன் என்று நினைத்துக்கொண்டு ஆளுக்கு ஒன்று என ஆலோசனைகளும், புத்திமதிகளுமாகச் சொல்லுவார்கள். பிள்ளைக்குக் குளிப்பாட்டுவதே பெரிய விஷயம்! உடம்புக்கு வந்துடும். காப்பாற்றிக் கொண்டு வரதுக்குள்ளே போதும், போதும்னு ஆகிடும். என்ன கொடுத்தாலும் கொடுத்ததுக்கு மேல் வாந்தி!

கோமதி அரசு said...

//குளிப்பாட்டும் போது நானும் அவனும் மகிழ்ந்தோம்.
அழாத, குழந்தைக்கு ஸ்னானம் செய்விப்பது எத்தனை
சந்தோஷம்.//

நீங்கள் சொல்வது சரிதான் அக்கா அழாமல் சிரிக்கும் குழந்தையை குளிப்பாட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


பேரனுக்கு உடம்புக்கு ஊற்றிக் கொண்டு இருந்தால் சிரிப்பான், தலைக்கு ஊற்றும் போது மட்டும் அழுவான்.
நினைவுகள் பகிர்வு அருமை.

இராய செல்லப்பா said...

பிஞ்சுகளின் எண்ணெய்க்குளியலைப் பார்ப்பதே பேரின்பம்! அதைச் செய்து அனுபவிக்கும் பெண்டிரின் மகிழ்ச்சிக்கு இணையேது?

ஸ்ரீராம். said...

இனிமையான நினைவுகள் அம்மா.

ஏகாந்தன் ! said...

எண்ணெய் ஸ்நானம் - அந்த அருமையான காலம் நினைவில் மீண்டும். கைக்குழந்தைகளுக்கு சில நாட்களாவது எண்ணெய்க் குளியல்-நல்லெண்ணெய்க் குளியல்- செய்துவிடுவது நல்லது. இந்தக் கால அம்மாக்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை! பாட்டிகள் பக்கத்தில் இருந்தால் காரியம் நடக்கும்!

நெல்லைத் தமிழன் said...

எண்ணெய் குளியல் - எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள் பாடல் மனதில் நிழலாடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,

அபுதாபியிலுமா.
அட..எத்தனை இனிமையான நாட்கள் இல்லையாமா.
நாமும் மீண்டும் குழந்தைகளாகிவிடுவோம்.
30 நாட்களில் முகம் பார்க்கும். மீன்றாம் மாதம் பொக்கைவாயால் சிரிக்கும்.
தலையைத் திருப்பி நாம் வருவது
போவதைக் கவனிக்கும்.
ஆறாம் மாதம் கைகளை நம்பக்கம் நீட்டும்.
குழந்தைகளே சொர்க்கங்கள்.
இந்த சங்கிலித் தொடர்பு நீளும்.
நம் பாட்டி நம்மிடம் வைத்த அன்பு,
அம்மாவின் அளவில்லாத பாசம். எத்தனை தப்போ,
தவறோ, அதற்கும் ஒரு காரணம் கண்டு பிடித்து மன்னிக்கும்
குணம். நம் அன்னை உள்ளங்களுக்கு உண்டு.
நன்றி துரை. என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மம்மா மாதேவி. வாழ்த்துகள் மா.
தங்கள் பேரக்குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டும்.

ஒரு தலைமுறை விட்டு அடுத்த தலைமுறைக்கு
மாறும்போது நம்மிடம் கனிவு இன்னும்மிகுந்து விடுகிறது.

unconditional love. அதுதான் வித்தியாசம். நன்றி மாதேவி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

வருகைக்கு மிக நன்றி மா.
ஆமாம். நானும் பார்த்தேன். இப்பொழுது திருத்திவிட்டேன் பா.

ரோஷ்ணிக்குத் திருமணம் நடந்து உங்கள் இருவர் கைகளில்
குழந்தை தவழ இன்னும் 8 வருடங்களாவது ஆகும்.
நீங்களும் ஆதியும் எப்படி இருப்பீர்கள் என்று யோசிக்கிறேன்.
வளமுடன் இருப்பீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
நமக்குத் தெரிந்ததெல்லாம் பாசம் ஒன்றே.
அது போதும். வாழ்க்கை தாளம் தப்பாமல் ஓடும்.

அதுவும் மூன்றாவது தலைமுறை என்றால்
நமக்கு கண்ணில் தவறே படாது:)
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி
நன்றி மா.
இப்பதான் கவனித்தேன். திருத்திவிட்டேன் ராஜா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
அம்மாவாக இருப்பது எப்பவுமே ஒரு குட்டி சிரமம்.
பெரியவன் இப்போது தினம் இரு முறை குளித்து
முறையாக பகவத் சேவை.
அந்த சின்னக் குழந்தை பருவத்தில் சாப்பிடப் படுத்தல்,
சட்டை போடப் படுத்தல்.கடவுளே ஒவ்வொரு நாளும் அழ வைத்துவிடுவான்.

மாமியார் பார்க்கும்போது, இந்த அகத்தைக் கொள்ளவில்லையே
என்பார்.
நான் என்ன செய்ய. நேர்மாறா மகள்
அத்தனையும் சமர்த்தா செய்து கொள்வாள்.
சின்னவன் பிடித்ததைதான் சாப்பிடுவான்.

உங்கள் பையர் இப்படி வளர்ந்தாரா. !!!!!
உங்கள் பெண் அலறுவது போல எங்க பையன் அலறுவதைக் கேட்டு
பக்கத்து வீட்டார்கள் எல்லாம், என்னை ராட்சசி என்று நினைத்துக் கொள்வார்கள்.
இன்னும் எனக்கு சிம்ம சொப்பனம் தான்.:)

பேரன் பேத்திகள் வாழ்க:)

வல்லிசிம்ஹன் said...

////////பேரனுக்கு உடம்புக்கு ஊற்றிக் கொண்டு இருந்தால் சிரிப்பான், தலைக்கு ஊற்றும் போது மட்டும் அழுவான்.// ஹாஹா. இதுதான் எல்லாக் குழந்தைகளுக்கும் அலர்ஜி. தலையில் கைவைக்கக் கூடாது!!!!

அப்போ கத்தினவர்கள் எல்லாம் இப்போது ஷவரை விட்டு வெளியில் வரவே
நூறு காசு கேட்கிறார்கள் மா.
நன்றி கோமதிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் இராய.செல்லப்பா, உங்கள் வருகைக்கு
மிக நன்றி. மகிழ்ச்சி.

குழந்தைகளே இன்பம் தர வந்துதித்தவை தான்.
அவர்களின் கண்கள் உணர்த்தும்
எண்ணங்களுக்கு எல்லையே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஏகாந்தன் ஜி,

இப்போதும், மருமகள் பேத்தி,பேரனுக்கு
எண்ணெய் ஸ்னானம் செய்வதைக் கடைப்பிடிக்கிறார்.
சனிக்கிழமை அதுவே பெரிய ரொட்டீன்.

எத்தனையோ நலம் விளையும் இந்தப் பழக்கம்
அருகி வருகிறது.
மிக நன்றி.