Blog Archive

Wednesday, June 10, 2020

தொடரும் எண்ணெய் ஆனந்தமும் உபத்திரவங்களும். 2

வல்லிசிம்ஹன்
அனைவரும்   
நலமாக வாழ வேண்டும் .24 Best antiques images | Indian home decor, Indian decor, Indian home
எண்ணெய்க்கு குளியல்களின் வேறு வேறு காலங்கள்.
குழந்தைகள்  பெரியவர்கள் ஆனார்கள்.  அவர்களது பள்ளிப்படிப்பு சென்னையில் தொடர்ந்தது.

இஷ்டத்துக்கு ஆடி க் கொண்டிருந்தவர்களை பெரியவர்களின் 

கண்டிப்பு கொஞ்சம்  கட்டிப் போட்டது.
மிகுந்த நல்ல பழக்கம், நல்  வார்த்தை களோடு 
வளர்ந்தவர்களுக்கு    இந்தக் கடும்  சொற்கள் 

சுண ங்க வைத்தது. கூட்டு குடும்பம் . வருபவர்கள், இருப்பவர்கள்,
செல்பவர்கள்  என்று அத்தனை பெரியவர்களின் வார்த்தைக்கும் கட்டுப் பட வேண்டி வந்தது.

என்னைவிடப் பொறுமை சாலிகளாக வளர்ந்தார்கள்,குழந்தைகள்.

எண்ணெய்க்குளியல்  குறைந்தது.
பெண்ணுக்கோ நீண்ட அடர்த்தியான கூந்தல்.

வீட்டிலோ தண்ணீர்ப் பஞ்சம் அடிக்கடி வந்து விடும்.
என் இரண்டு தோழிகள் உதவியால் தண்ணீர்
இரண்டு அண்டாக்களில் வந்து இறங்கும்.
எண்ணெய் தேய்த்து அலச வேண்டியது 
என் பொறுப்பு.

சாம்பிராணி எல்லாம் மறந்தாகிவிட்டது.
சைனஸ் பிடித்துக் கொண்டது:)
++++++++++++++++++++++++++++++++++++++++++
     நாக்பூரிலிருந்து  வந்த ஒரு அத்தை ,குளியலறையில் புகுந்தால் வெளியே
வரமாட்டார்.
எங்கள் படுக்கை அறை குளியலறையை அவரது
வீட்டுக்காரர் எடுத்துக் கொண்டதால் என்னாலும் போக முடியாது.

அப்படித்தான் பாட்டியின் குளியலறையில் எண்ணெய்
எடுத்துக் கொண்டு குளிக்கப் போய்,
அவசரக் குளியலுக்குப் பிறகு, கிண்ணத்தை
அங்கே ஸ்டாண்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

கிண்ணத்தில் மிச்சமிருந்த இரண்டு தேக்கரண்டி
எண்ணெயைப் பார்த்து அன்று நடந்த களேபரத்தில்,பாஞ்சாலி சபதம் போல
இனி இந்தக் குளியல் வேண்டாம் என்று தீர்மானித்தேன்.
ரோசத்துக்கு எப்பொழுதும் என்னிடம் குறைவிருந்ததில்லை,.:)

இங்கே குறிப்பிடுவது சிங்கத்தின் அத்தைகள், அத்திம்பேர்களைக் குறித்து:)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
என்று விலகி விட வேண்டியதுதான்.
இதே காரணத்துக்காகவே என் மாமியாரும்
எண்ணெய் ஸ்னானம் எடுப்பதில்லை 
என்று அறிந்தேன்.
அவர்களுக்கே அந்த நிலமை 
நானெல்லாம் சுண்டைக்காய்  இல்லையா.:)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாட்டி மறைந்த பிறகு மாமியாருக்கு இன்னும் சுதத்திரம் கிடைத்தது.
நினைத்த இடங்களுக்கு விருப்பம் போலச் சென்று வந்தார்.
பேத்திக்காகப் பல இடங்களிலிருந்து
பகீரதன் போலத் தண்ணீர் வரவழைத்துக் கொடுத்தார்.
பாட்டிக்கும் பேத்திக்கும் ஒரே அறை.
அதனால்  சௌஜன்யம் ஆதிகரித்தது
பாட்டிக்குக் கண்ணும் தெரியாமல் போனதில் 
பேத்தி, பாட்டிக்கு வலது கை ஆனாள்.
அது ஒரு அபூர்வ அன்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்போதெல்லாம் எண்ணெய் என்று சொன்னாலே 
மிரள்கிறது எனது தலை.துளி எண்ணெய் வைத்தால்
 போதும் தலைவலி வந்துவிடும். 
தொடரும்.Khadi Shikakai Powder, 150 g - Ayurveda 101 Online Shop UK









12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த எண்ணெய் புதிதாக இருக்கிறது அம்மா....

நெல்லைத் தமிழன் said...

நான் எண்ணெய்க்குளியல் குளித்தவரை தண்ணீர் பிரச்சனையைப் பார்த்ததில்லை. ஆறு, கிணற்று நீர் இவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளித்ததனால் இருக்கும்.

கொஞ்சம் மிஞ்சிய எண்ணெயை ஆயில் புல்லிங் 9ம் வகுப்பு படிக்கும்போது செய்து, என் பெரியம்மா, இருக்கிற விலையில் எண்ணெயைக் குதப்பித் துப்பறயா என்று திட்டியது நினைவுக்கு வருது. ஹா ஹா

துரை செல்வராஜூ said...

// சாம்பிராணி எல்லாம் மறந்தாகி விட்டது..//

செவ்வாய், வெள்ளிகளில் கூட
வீடுகளில் சாம்பிராணி தூபம் இடுவது மறந்து போனது...

சுண்டு விரல் கணு அளவுக்கு ஒரு கரித்துண்டு புகைகிறது...

புகை இல்லா அடுப்பு..
தணல் இல்லா அடுப்பு என்றெல்லாம் வந்த பிறகு சாம்பிராணியாவது.. தூபமாவது!..

வெங்கட் நாகராஜ் said...

எண்ணெய் குளியல் - கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பழக்கத்தை விட்டு விட்டோம்... இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றால் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை.

கோமதி அரசு said...

தனிகுடித்தனம் வந்தபின் எண்ணெய் குளியல் கிடையாது.
பேறு கால சமயத்தில் மட்டும் அம்மாவின் கண்டிப்பால்.
என் குழந்தைகளுக்கும் குழந்தைகள் டாக்டர் எண்ணெய் குளியல் கூடாது என்று சொல்லிவிட்டார்.

காலையில் விள்க்கு திரி பொட்டு வைத்து , மிளகு, சீரகம் போட்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெய் மட்டுமே துளி எடுத்து உச்சி, உடம்பில் தேய்த்து குளிக்க வைப்பது மட்டும்தான்.

பேரன் பேத்திகளுக்கு சாம்பிராணி புகை போடுதல் பவுடர் போடுதல், கிரைப் வாட்டர் கொடுப்பது ,, உரை மருந்து கொடுப்பது, கண்மை இடுதல் எதுவும் கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் காலமாற்றத்தால் அடித்துக் கொண்டு போய் விட்டது.

மாதேவி said...

எண்ணைக் குளியலும் சில துயர் தரும் சம்பவங்களும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், ஆமாம் புது எண்ணெய் தான். அந்தத் தூக்கும் இப்போது இல்லை.
பழைய எண்ணெய் இப்போது மூளைக்கு
உபயோமாகிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
ஆயில் புல்லிங்க் பிரமாதமாக இருந்த
காலம் இல்லையா அது.
இப்போது ஒரு முப்பது வருடங்களாகத்தான் தண்ணீருக்கு
சிரமம் இல்லாமல்
இருக்க வழி செய்தார் சிங்கம்.
1983 குடிதண்ணீருக்கு மிகச் சிரமப்பட்டோம்.

எல்லாம் கடந்து வந்தாச்சு.சென்னை நகரை விட்டு நகர்ந்ததில்லை.
மீண்டும் சுபிக்ஷம் எல்லா இடத்திற்கும் வரவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை மா.,
சாம்பிராணிக் காலம் மீண்டும் வந்தது.
அதற்காகவே கரி அடுப்பு கிடைத்தது.
நல்ல சாம்பிராணியும் கிரி ஸ்டோரில் கிடைக்க
வீட்டில் எப்போதும் நறுமணம் தான்.

இப்போது புகை ஆகாத வீட்டில் இருப்பதால்
அதை மறக்க வேண்டியது ஆகிவிட்டது.

கொஞ்சம் புகை வந்தாலே அலார்ம் அடிக்க
ஆரம்பித்து விடும்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
உண்மைதான் மா. அதுவும் உங்கள்
ஊரில் இருக்கும் உஷ்ணத்துக்கு எண்ணெய்
அவசியம் தான்.
ஒத்துக்கொள்ளவில்லையானால் என்ன செய்வது.
நிறைய பழங்கள் சாப்பிட வேண்டியதுதான்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நாம் அனுபவித்த பரம சுகம் நம் பிள்ளைகளுக்குக் கிடைக்க வில்லை.

இங்கே கற்பூரம், சாம்பிராணி எல்லாம் தடை.
கார்பெட் இன்னோரு தடை.
காலம் மாறிப் போச்சுன்னு பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான் மா.

நமக்கே தனிக்குடித்தனம் ஒரு பெரிய மாற்றம்.
அதிலிருந்து மீண்டு இவர்கள் குடித்தனத்தைப் பார்க்கப்
பழகிவிட்டோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,

வாழ்வில் இன்பம் துன்பம் எல்லாம் சகஜம் தானே.
இதுவே அம்மா சொல்லி இருந்தால்
சலித்திருக்க மாட்டேன்.
அதுதான் வித்தியாசம்.நன்றி.மா.