வல்லிசிம்ஹன்
மாயா பஜார் படம் சிரஞ்சீவியான திரைப்படம்.
பலே பலே தேவா
பாரோர் அறியார் உன் மாயா.
ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் இங்கே உனக்கு வினோதம்
அடியார் யாரோ அறியார் யாரோ
அதையே விதியும் அறியாதைய்யா.......
உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே..தினம்
உனது மாயை விளையாடுதைய்யா
உண்மையில் உந்தன் மாயாலீலையே....
உணர்ந்தவன் தானே தன்யன் ஐயா...
பலே பலே பலே தேவா...
மாயா பஜார் படத்தில் வரும் இந்தத் திருப்பு முனைப் பாடல்.
கண்ணனின் சாரதி தாருகன் பாடுவதாக அமைந்த பாடல்.
அந்த நடிகர் யாரோ தெரியாது. ஆனால்
என்ன ஒரு கம்பீரம்!!
அபிமன்யுவும்,அவன் தாய் சுபத்ரையும்
புறக்கணிக்கப் பட்டு வனம் செல்லும் காட்சி.
அவர்கள் மனதில் சோகமும் ,அவமானமும்
கொதிக்கிறது.
இதற்கென்றே அமைந்த இந்தப் பாடல்தான்
எத்தனை அருமை.
என்றும் மறக்க முடியாது. சீர்காழியின் குரலில் தமிழ் கம்பீரம்
மாயா பஜார் படம் சிரஞ்சீவியான திரைப்படம்.
பலே பலே தேவா
ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் இங்கே உனக்கு வினோதம்
அடியார் யாரோ அறியார் யாரோ
அதையே விதியும் அறியாதைய்யா.......
உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே..தினம்
உனது மாயை விளையாடுதைய்யா
உண்மையில் உந்தன் மாயாலீலையே....
உணர்ந்தவன் தானே தன்யன் ஐயா...
பலே பலே பலே தேவா...
மாயா பஜார் படத்தில் வரும் இந்தத் திருப்பு முனைப் பாடல்.
கண்ணனின் சாரதி தாருகன் பாடுவதாக அமைந்த பாடல்.
அந்த நடிகர் யாரோ தெரியாது. ஆனால்
என்ன ஒரு கம்பீரம்!!
அபிமன்யுவும்,அவன் தாய் சுபத்ரையும்
புறக்கணிக்கப் பட்டு வனம் செல்லும் காட்சி.
அவர்கள் மனதில் சோகமும் ,அவமானமும்
கொதிக்கிறது.
இதற்கென்றே அமைந்த இந்தப் பாடல்தான்
எத்தனை அருமை.
என்றும் மறக்க முடியாது. சீர்காழியின் குரலில் தமிழ் கம்பீரம்
16 comments:
பாடல் வரிகளை சேதப்படுத்தாத தெளிவான இசை.
திரும்பப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் விமரிசனம். கிடைத்தால் பார்த்து விடுகிறேன்.
இப்போதுதான் முதல் முறை கேட்கிறேன். சீர்காழி குரல்!
அன்பு திரு கோயில் பிள்ளை,
வணக்கம். அதைத்தான் நானும் ரசித்தேன்.
மிக நல்ல பாடல்.நன்றி.
அன்பு கீதா மா.
நம் ஆதாரம் இராயணமும் மஹா பாரதமும் தான். அதுவும்
விஜய வாஹினி
எடுத்த படங்கள் எல்லாமே நல்ல வேற்றியைக் கொடுத்திருக்கின்றன.
என் ஒன்பது வயதில்
சீனிம்மாப் பாட்டி அழைத்துப் போய்ப்
பார்த்துக் களித்த படம்.
இப்பொழுது நேரம் குறைக்கப்
பல காட்சிகளை வெட்டி விடுகிறார்கள்.
இருந்தும் நன்றாகத்தான் வந்திருக்கிறது.
தவறாமல் பாருங்கள்.நன்றி மா.
கடோத்கஜனுக்காக:)
அன்பு ஸ்ரீராம்,
மிக நல்ல பாடல் மா.
எப்படிப் பொருந்துகிறது பாருங்கள் அவர் குரல்.
என்னுடைய இசைக் குவியலில் இந்தப் பாட்டுக்கு முதல் இடம்.
குடும்பத்துக்கே பிடித்தபடம்.
பாடல் கேட்டு இரசித்தேன்.
உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே..தினம்
உனது மாயை விளையாடுதைய்யா
உண்மையில் உந்தன் மாயாலீலையே....
உணர்ந்தவன் தானே தன்யன் ஐயா...//
உண்மையான வரிகள்.
இந்த காலக் கட்டத்தில் நம் மனதை தைரியமாக வைத்துக் கொள்ள உதவும். எல்லாம் இறைவனின் பொறுப்பு . அவர் லீலை நம் கையில் ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தும் பாடல்.
இனிமையான பாடல்மா.... கேட்டு ரசித்தேன்.
எனக்குத் தெரிந்து முதல் முறையாகக் கேட்கிறேன்.
மாயாபஜார் மிகவும் ரசித்துப் பார்த்த படம் அப்போது. ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். எல்லாம் கோயில் தேரடியில் போட்டதால்.
பாடல் அருமையான பாடல். பல வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன்.
கீதா
மாயாபஜார் - பலமுறை பார்த்த படம்...
அன்பு கோமதிமா,
அதனால் தான் இந்தப் பாடல் மிகப்
பிடித்தது.
பழைய பாடல்களில் தான் எத்தனை உண்மைகளை
எழுதி வைத்தார்கள்!!
அதுவும் சீர்காழியின் குரலும்
காட்சியும் இணையும் போது அற்புதம் தான். மிக நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி,
உலகின் தத்துவம் இந்தப் பாடல். நன்றி மா.
உண்மையாகவா மா வெங்கட்.
மாயாபஜார் முடிந்தால் பாருங்கள். உள்ளத்துக்கு நல்ல ஊக்கம்.
அன்பு கீதாமா,
தேரடியில் படம் போடுவார்களா!!
ஆனந்தமாக இருக்கிறதே கேட்கவே.
லயித்துப் பார்த்திருப்பீர்கள்.
பாடலைக் கேட்டு ரசித்திருக்கிறீர்கள்.
மிக நன்றி ராஜா.
அன்பு தனபாலன் . உண்மைதான் அங்குலம் அங்குலமாக ரசிக்க வேண்டிய காட்சிகள்.
நாமெல்லாம் ஒரே இனம். இசையினம்.திரை இனம்.
Post a Comment