Blog Archive

Friday, June 26, 2020

நாட்டு நடப்பு 2




வல்லிசிம்ஹன்
அனைவருக்கும் இறையருள் நிறைந்திருக்க   வாழ்த்துகள் .

புத்தகங்கள் கொடுக்கும் இன்பம் வேறெங்கும் கிடைக்காது.
நம்மைத் தவிர  வீட்டில் மற்றவர்கள்,
அலுவலக, கல்லூரி,மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் போது 

நான் சேகரித்து வைத்திருக்கும்  புத்தகங்கள் உறுதுணை.
தொலைகாட்சி இருந்தாலும் நிறைய நேரம் அதில் செலவழிப்பதில் மனம் ஈடுபட மறுக்கிறது.

தாத்தாவுக்கு சாயு மான நாற்காலி ஏன் பிடித்தது என்பதை  என் முதுகு  சுட்டிக்காட்டுகிறது.

கழுத்துக்கும்    முதுகுக்கும்  என்ன ஒரு ஆதாரம் இந்த ஈஸிச்சேர் !!!:)

பாட்டி யு லுக் சோ காம்பர்ட்டபிள் ! என்கிறான் பேரன்.
அவனையும்  அருகில் அழைத்துக் கதை சொல்லியாகி விட்டது.

பதின்ம வயது இளங்காளைக்கு  பஞ்ச தந்திரக்கத்தை எப்படி 
ஈர்க்கும்? அவனுக்கு ராக்கெட் அதை சொல்ல 
பாட்டியிடம் சரக்கு இல்லை.😅😅😅😅😅😅😅😅

பதிலுக்கு அவனுக்கு ஈடுபாடுள்ள ரோபாட்டிக்ஸ் பற்றி அவன் விளக்கம் சொன்னால் அதையும் சேமித்துக் கொள்கிறேன் :)

வெளியே  செடிகள் செழிக்க ஆரம்பித்திருக்கின்றன . பச்சைமிளகாய் நிறைய காய்க்கிறது.
கொத்தமல்லியும், கறிவேப்பிலையும்,
 குடை மிளகாயும் , மற்ற பூ வகைகளும்  வஞ்சனை இல்லாமல் வாரிக் கொடுக்கின்றன.

தந்தையைப் போலவே மக்களுக்கும் ஆர்வம் 
இருப்பதில் அதிசயம் இல்லை.
சின்ன மகன் வீட்டிலும் மாஞ்செடி துளிர் விட்டிருக்கிறதாம்.
ஆடிமாதம் தோரணம் கட்ட இலைகள் கிடைக்கும் என்கிறான்.!!!!!

இவர்களுக்கெல்லாம் கோடை என்பது சில மாதங்களே.
அதற்குள் அனுபவிக்கக் கிடைக்கும் இயற்கை வளங்களை  அள்ளிக்கொள்ள  வேண்டியதுதான்.

ஜகார்த்தாவில் முல்லையும் மல்லிகையும் துளசியும் பூத்துக் குலுங்குகின்றன.
இறைவனுக்கு அனைத்தும் அர்ப்பணம்.

பூ தலையில் வைத்தால் சில பெண்களுக்குத் 
தலைவலி வருவதையும் பார்த்திருக்கிறேன்.

மிக வருத்தமாக இருக்கும்.
பூச்சூடாமல் எப்படி இருக்க முடியும்.!!!!

இந்தியாவில் மின்னல்கள் தாக்கிப் பலருக்கு பாதிப்பு என்று இங்கே இருக்கும்   சானல் சொல்கிறது.

எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும்.

அன்பும் நலமும் ஓங்கி இருக்கப் பிரார்த்தனைகள் .







15 comments:

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. படங்கள் எல்லாம் கொள்ளை அழகு. இந்தச் சாய்வு நாற்காலி எனக்குச் சரிப்பட்டே வராது. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் சிரமப்படுவேன். பிள்ளை எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டு விட்டுட்டார். வரும் காலம் நல்லபடியாகப் போகப் பிரார்த்திப்போம். பேரன் பெரியவனும் இங்கே தான் இருக்கிறானா? எங்கள் பேத்தி பெரியவளை இப்போதைக்கு அனுப்பப் போவதில்லைனு பெண் சொல்லி விட்டாள். ஹூஸ்டனில் தான் இருக்கிறாள். சின்னவளுக்கு (அப்பு) ஆன்லைன் வகுப்புகள் முடிந்து விடுமுறை விட்டிருக்காங்க. பெயின்டிங்க் கத்துக்கிறா!

KILLERGEE Devakottai said...

நினைவுகள் சங்கீதமே...

கோமதி அரசு said...

படங்கள் மிக அழகு.

//கழுத்துக்கும் முதுகுக்கும் என்ன ஒரு ஆதாரம் இந்த ஈஸிச்சேர் !!!:)//


வீட்டில் இரண்டு இருக்கிறது. மாமனாருக்கு என்று வாங்கினோம்.

மகன் வீடுகளில் மாஞ்ச்செடி துளிர்த்து இருப்பது மகிழ்ச்சி. மல்லிகை, முல்லையும் இறைவனுக்கு அர்ப்பணம் ஆவது மேலும் மகிழ்ச்சி.

எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.




ஸ்ரீராம். said...

ஒரு உரத்த சிந்தனையாய் எழுதி விட்டீர்கள்.  ஒன்று மட்டும் மனதில் பதிகிறது.  எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும்.

முதுகு ரொம்ப உள்ளே சாயாமல் எழுந்திரிக்க வசதியாய் இருக்கும் சாய்வு நாற்காலிகள் எல்லாம் இருக்கின்றன.

நெல்லைத் தமிழன் said...

மிளகாய்ச் செடிகள் - படங்கள் போட்டிருக்கலாம்.

உங்க சாய்வு நாற்காலியையும் படம் பிடித்துப்போட்டிருக்கலாம்.

பசங்களுக்கு ஆட்டமேட்டிக்கா பெற்றோர் செய்தவைகளைத் தானும் செய்யும் குணம் வந்துவிடுகிறதோ அல்லது இவையெல்லாம் ஜீன்ஸில் இருக்கா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்.
அந்தக் காலத்து ஈஸி சேரில்லை இது. படம் போட்டு இருக்கிறேன்.
பெரிய பேரன் பிறக்கும் போது நான் டெட்ராய்ட்டில்
வாங்கியது.
குழந்தையை வைத்துக் கொண்டு ஆட்ட இதமாக அப்போது இருந்தது.
இப்போது பாட்டி அதில் ஓய்வாக உட்கார முடிகிறது.
காலை வைத்துக் கொள்ள ஒரு மெத்து (ottoman) ஸ்டூலும் இருக்கிறது.

இங்கேயும் ஹ்யூஸ்டன் கதை தான்.
பெரியவன் பேஸ்மெண்டிலிருந்து ஆன்லைன் இண்டர்ன்ஷிப்
செய்கிறான்.
சின்னவன் ஆன்லைன் கணக்கு,மற்றும் ரொபாடிக்ஸ்
கற்றுக் கொள்கிறான்.
யாரையும் வெளியே அனுப்புவதாக இல்லை.
குழந்தைகள் நலமாக இருக்கட்டும்.
நன்றி மா,

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு தேவகோட்டை ஜி.
வாழ்க்கை சக்கரம் உருளுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு.

சாய்வு நாற்காலி - வசதி தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அழகு...

சாய்வு நாற்காலி பழக்கமாகி விட்டால்... சிரமம் தான், உடலுக்கும் நல்லதல்ல...

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நம்ம புராணக் கதைகளில் கொஞ்சம் உங்கள் கற்பனையை சேர்த்துவிடுங்கள். ரோபோட், வயர்லெஸ், இப்ப உள்ள தொற்றையும்., புராணங்களில் வரும் மாயாவிகளையும் (மறைந்து மறைந்து உரு மாறி வெளியே வருமே மாயாவி அரக்கர்கள் அப்படித்தானே இந்தத் தொற்று இருக்கு!!!) கனெக்ட் செய்து கதை விடுங்கள்!!! ஹா ஹா ஹா

நான் என் மரும்கள் சின்ன குழந்தைய்காக எல் கேஜி படித்துக் கொண்டிருந்த போது அப்படித்தான் அவளுக்கு டைனோசர் ரொம்பப் பிடிக்கும் எனவே டைனசரோடு சேர்த்து பல புராணக் கதைகளை இணைத்து, புஷ்பக விமானம் எல்லாம் வரும் அதில், அவளையும் ஒரு கேரக்டராக்கி கதை சொல்லி சாப்பிட வைத்துவிடுவதுண்டு.

இப்போது நினைத்துக் கொள்கிறேன் அதெல்லாம் அப்படியே எழுத்தாய் மாற்றினால் குழந்தைகள் கதை கிடைக்குமே என்று...ஆனால் முடியவில்லை இப்போது.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வெளியே செடிகள் செழிக்க ஆரம்பித்திருக்கின்றன . பச்சைமிளகாய் நிறைய காய்க்கிறது.
கொத்தமல்லியும், கறிவேப்பிலையும்,
குடை மிளகாயும் , மற்ற பூ வகைகளும் வஞ்சனை இல்லாமல் வாரிக் கொடுக்கின்றன.//

வாவ்!! சூப்பர் சூப்பர்மா...மனதிற்கு இதமாக இருக்கும். இயற்கை அளிக்கும் புத்துணர்ச்சிக்கும் சந்தோஷத்திர்க்கும் ஈடு உண்டோ?!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் மகன்கள் வீட்டிலும் மா மற்றும் பூக்கள் மலர்ந்திருப்பது சந்தோஷம்.

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கியதா? செய்தி உங்கள் மூலம்தான் அறிகிறேன் அம்மா

கடைசில சொன்னீங்க பாருங்க...அதுதான் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தோட்டம் செழிக்கட்டும். அது போல எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் நீங்கள் சொல்லிருப்பது போல். ஈசிசேர் உங்களுக்குச் சௌகரியமாக இருப்பது நல்லது. அது தனி சுகம் தான். இங்கும் குழந்தைகள் வீட்டில்தான். பெரியவனுக்கு ஆன்லைனிலேயே பரீட்சை நடந்தது. சின்னவனுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தான்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கும்மாஅ

கீதா

Abinaya said...

nice.sweet memories.