Blog Archive

Tuesday, June 30, 2020

Chaudvin ka chand.

வல்லிசிம்ஹன்

1964இல் கேட்ட பாடல்.
 முஹம்மது ரஃபியின் குரலில் மயங்கி
எத்தனை தடவை இதைத் தோழிகளுக்காகப் பாடி இருப்பேனோ தெரியாது.
இத்தனை காவியமான ஒரு படத்தை இன்னும் பார்க்கவில்லை.
குரு தத்,வஹீதா ரெஹ்மானின் மாஜிக்
படம் முழுவதும் விரவி நிற்கும்.

நிலா மயக்கம் எப்போதும் உண்டு தான்.
வசந்தகாலத்துக்கு உகந்த பாடல். மேகங்கள் இல்லாத வானில்
கண்ணுக்குக் குளிர்ச்சியான நிலவில்
உறங்கும் பெண்ணிடம் தன் உள்ளத்தைச் சொல்லி
உருகும் காதலனே ஒரு கவிதை.

ஓவியமாக்கியவர் ஷகீல் பdhaaயினி.
உயிர் கொடுத்தவர் ரவி.

11 comments:

பிலஹரி:) ) அதிரா said...

வீடியோ வேலை செய்யவில்லை வல்லிம்மா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். கண்ணா. வேலை செய்யவில்லை. இப்போதுதான் பார்ததேன்.சரி செய்யப் பார்ககிறேன் அம்மா. மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

இப்போது வேலை செய்கிறது. பார்க்கலாம்.:)

ஸ்ரீராம். said...

இனிய மாலை வணக்கம் அம்மா.    

பிற்பாடு வண்ணம் சேர்க்கப்பட்ட காட்சி போலும்!  ஒரு ஆச்சர்யம் என்ன என்றால் இரண்டு நாட்களுக்கு முன்தான் இந்தப் பாடலைக் கேட்டேன்.  எதையோ தாண்டிச் செல்லும்போது இந்தப் பாடல் கண்ணில் பட, கேட்காமல் தாண்ட முடியவில்லை.  என்னுடைய அலைபேசிச் செமெய்ப்பில் இருந்த பாடல்.  மிக, மிக இனிமையான பாடல்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம.. அதிரா பாட்டு கேட்கவில்லை. என்றார்..அதனால் ஹெ.ச்டி பாடலாகப் பதிந்தேன்.
இந்த நாள் நல்ல நாளாகட்டும்மா. பத்திரமாக இருங்கள்.

எனக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவங்கள் கொடுத்த பாடல். தனிப் பதிவாகப் போடலாம்:).

வல்லிசிம்ஹன் said...

இந்த டெலிபதி நம் எல்லோருக்கும் வேலை செய்கிறது பாருங்கள்! ஶ்ரீராம்.

கோமதி அரசு said...

பாடல் மிக இனிமை.
நிறைய தடவை கேட்டு இருக்கிறேன்.
மீண்டும் கேட்டேன். வண்ணத்தில் நன்றாக இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

முகப்புப் படம் நன்றாக இருக்கிறது வல்லிம்மா

பாட்டு நன்றாக இருக்கிறதே ஆங்கிலப்பாடல்கள் கேட்டதில்லை. இந்தப் பாடல் பழைய தமிழ்ப்பாடலை நினைவுறுத்துகிறது. இதே இசை...ஹையோ எனக்கு டக்குனு நினைவுக்கு வர மாட்டேங்குதே. இப்படித்தான் காங்கோ யூஸ் நிறைய இருக்கும். ஸ்ரீராம் சொல்லியிருப்பாரே

உங்கள் நினைவுகள் இனிமை அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹிந்திப்பாடல்களும் கேட்டதில்லை.

ஹையோ இதில் அப்படியே தமிழ்ப்பாடல் ஒன்று உண்டே!!!

மோகனம் என்பதாலோ என்னவோ. ஆனால் இதே போன்று தமிழ்ப்பாடல் உண்டு.

நன்றாக இருக்கிறது வல்லிம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் வல்லிம்மா எனக்கும் முதல் வீடியோ வேலை செய்யவில்லை. மேலே உள்ளதுதான் வேலை செய்கிறது

கீதா

வெங்கட் நாகராஜ் said...

நேற்றே கேட்டு ரசித்தேன் மா.... இனிமையான பாடல். சில பாடல்கள் மறக்க முடியாதவை ரகம் - அதில் இப்பாடலும் ஒன்று.