Blog Archive

Tuesday, June 09, 2020

புது ப்ளாகரில் படங்களை இணைக்க சுலபமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 


27 comments:

KILLERGEE Devakottai said...

படங்கள் அருமை வாழ்த்துகள்

ராஜி said...

எனக்கு கஷ்டமா இருக்கு, ஒவ்வொரு படங்களா இணைச்சு அது முழுசா சேவ் ஆகுற வரைக்கும் காத்திருக்குறதா இருக்கு. முன்னலாம் டக் டக்ன்னு 10 படங்களை செலக்ட் செஞ்சு மொத்தமா இணைச்சுடுவேன்

Yaathoramani.blogspot.com said...

புது பிளாக் பக்கத்தில் உள்ள சாதக பாதகங்களை தொழிற்நுட்பம் தெரிந்த பிளாக்கர்கள் பதிவிட்டால் அனைவருக்கும் வசதியாய் இருக்குமே..

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்துங்க அம்மா...

அழகான படங்கள்...

ஸ்ரீராம். said...

நான் இன்னும் புது பிளாக்கர் போட்டுக்கொள்ளவில்லை.  இப்போதே கூட படங்களை இணைப்பதில் சிரமமில்லையே...

கோமதி அரசு said...

நீங்களும் மாறி ஆச்சா மகிழ்ச்சி.
படங்கள் நன்றாக இருக்கிறது.

துரை செல்வராஜூ said...

அழகான படங்கள்...

வாழ்க நலம்...

துரை செல்வராஜூ said...

எனது கணினியில் புதிய நடைமுறைக்குச் சென்று + குறையைச் சொடுக்கி - புதிதாக ஒரு இடுகைக்கு ஏட்டினைத் திறக்க முடியவில்லை..

கைபேசியில் புதிய இடுகை திறக்கிறது...
இதைத் திறந்து ஒரு தலைப்பைப் பதிவு செய்து விட்டு
அதனை கணினி வழி திறக்க முயன்றாலும் முடியவில்லை..

என்ன பிழை என்று தெரியவில்லை...

Geetha Sambasivam said...

புது ப்ளாகருக்கு மாறியாச்சா? உங்க பதிவுகள் படிச்சே ரொம்ப நாட்கள் ஆகின்றன. இன்னிக்காவது பார்க்கணும்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா படங்கள் எலலம் அழகாக இருக்கின்றன. மஞ்சள் பூ செமையா இருக்கு. ஸ்வாமி ரூமில் ஷீரடிதான் முதலில் டக்குனு கண்ணில் படுகிறார். அழகு!!

நானும் புது ப்ளாகர்தான் பதிவு போட்டிருக்கிறேன்.

எளிதாகத்தான் இருக்கிறது. பழைய ப்ளாகரிலும் படம் இணைக்கக் கடினமாக இல்லை

படத்தில் ரைட் க்ளிக் செஞ்சால் வரும் சிம்பலில் பேனா பொல இருக்கும் சிம்பலை க்ளிக்கினால் படங்களைப் பெரிதாகப் போட அல்லது சின்னதாகப் போட ஆப்ஷன்ஸ் வருகிறது அம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ராஜி பல படங்கள் இணைக்கறதுல கஷ்டமா இல்லையே. இணைக்கும் போது கன்ட்ரோல் ப்ரெஸ் செஞ்சு எத்தனை படங்கள் சேவ் செய்யணுமோ அத்தனையும் க்ளிக் செஞ்சால் எல்லாமே ப்ளாகர்ல சேவ் ஆகி ப்ளாகருக்குள் வந்திடுதே. ஒவ்வொண்ணா சேர்க்கணும்னு இல்லையே ...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
15 நாட்களாக ஒவ்வொரு பகுதியாக
ஆராய்ந்து வருகிறேன்.
நம் டி டி தான் நல்ல பதிவு போட்டிருக்கிறாரே.
நேற்று படித்த பிறகு இன்னும் கற்றுக் கொண்டேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜிமா,
எனக்குப் பழைய ப்ளாகரிலும் சிரமம் இருக்கவில்லை.
இதுவும் அவ்வளவாகப் பழகாவிட்டாலும்

கொஞ்சம் கொஞ்சமாகப் பழகுகிறேன்.
நாம் என்ன அசந்துவிடுவோமா. அன்பு தனபாலன் அழகாகப்
பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் படிக்க லிங்க் தருகிறேன்.
நன்றி கண்ணா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

https://dindiguldhanabalan.blogspot.com/2020/06/Try-the-new-Blogger.html

This post by our Dhanabaalan is an eye opener.
please read and be benefited by his knowledge'

thank you Dindigul Dhanabalan.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமணி சார்,
நம் தனபாலன் பிரத்தியேகமாக
எல்லோருக்கும் உதவி செய்யும்படி
பதிவிட்டிருக்கிறார்.

எனக்கெல்லாம் ஒரு தடவைக்கு இரண்டு தடவை
படித்தால் புரியும். வயதில் சிறியவர்கள் உடனே
புரிந்து கொள்வார்கள் .நீங்களும் படித்துப் பயன் அடையுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அருமை தனபாலன்,
மிக மிக நன்றி மா. புதிதாக ஒன்றைக் கற்பதில் தான் எத்தனை ஆர்வம் வருகிறது.
நீங்கள் அதை விளக்கிச் சொன்னதே
மிகப் பயனுள்ளதாக இருந்தது.
பயிலப் பயில இந்த ப்ளாகரும் புரிந்து விடும்.
அனேக கோடி வணக்கங்கள்.
அருமையான புதல்வன் நீங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இந்த வலைப்பதிவு தங்க வேண்டுமே. அதற்காகப்
புதிதை பழகி வருகிறேன்.

நல்லதைச் சொல்ல நம் தனபாலன்
இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா, மாறும் வரை பயமாக இருந்தது.
புதிது புதிதாக் கற்கும் போது,
நம் தனபாலனின் துணையோடு நிறைய அறிய முடிகிறது.
வாழ்த்துகள் அன்பு கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
கைபேசியில் பல புதிய மாற்றங்கள் உடனே செயல்படும்.
மடிக்கணினி அவ்விதம் இல்லை.
அதற்குக் கொஞ்ச நேரம் பிடிக்கிறது.
எனக்கும் இந்தப் பிரச்சினை வந்தது.

புதிதாக வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியை அணுகுவது
போல இதை முயன்று கொண்டிருக்கிறேன்.
இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகத்தான் செய்யும்.
நீங்கள் சீக்கிரம் வெற்றி பெற வேண்டும்.
எங்களுக்கு உங்கள் கதைகள் வேண்டுமே.அந்த சுயனலம் தான்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
நல்ல சமத்துப் பெண் நீங்கள்.
புதிய ஹிண்டுக்கு மிக நன்றி.
அதை அடுத்தபதிவில் முயற்சிக்கிறேன். உங்கள் பதிவையும் சென்று பார்க்கிறேன்.
மனம் நிறை நன்றி ராஜா.

ஸ்ரீராம். said...

// புதிதாக வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியை அணுகுவது
போல //

ரசித்தேன் அம்மா. நல்ல உவமை.

priyasaki said...

எனக்கு வந்தது வல்லிம்மா. இன்னும் நான் மாறவில்லை. நீங்க கெட்டிக்காரம்மா. எல்லாம் படித்து வருகிறீங்க. படங்கள் எல்லாமே அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. இது ஆச்சரியம் தான்.
நம் பெண்களுக்கே உரித்தான இந்த விஷயங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது.
என் அம்மாவும் இப்படித்தான் இருப்பார்.
வெள்ளிக்கிழமை என்றால் தனி தான்.


சிகைக்காயரைத்த நாள் எல்லாம் சொப்பனம் போல இருக்கிறது.
நமக்கடுத்த தலை முறை இன்னும் மாறிவிட்டது.
நீங்களாவது கடைப் பிடிக்கிறீர்கள் என்பதே நல்ல மகிழ்ச்சி.
விளக்கெண்ணேய் மகாத்மியம் ஹாஹா.
சிம்ம சொப்பனம் தான்.ஹிஹிஹி.

வல்லிசிம்ஹன் said...

புது ப்ளாகருக்கு மாற வேண்டி வருகிறது.
தினம் அந்த அறிவிப்பை யார் படிக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இப்படித்தான் தோன்றியது. எழுதி விட்டேன்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு, பிரியசகி,
அம்மாவுக்கு தோழிகள் நீங்க தானே.
உங்களுக்கு வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு
இதையும் செய்யணும் இல்லையா ராஜா.
அடுத்த மாதம் பாருங்கள்.
எப்படி இருக்கிறது என்று.

வெங்கட் நாகராஜ் said...

புதிய பிளாக்கர் - சுலபமாகவே இருக்கிறதும்மா... நானும் புதியதற்கு மாறிவிட்டேன் - ஆரம்ப நாட்களிலேயே.