வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
ரொம்பப் பழைய கதை 2006. ஜூன்.
எப்பொழுதும் யாருக்குமே
பிடிக்காத விஷயங்கள் எத்தனையோ இருக்கும்.
அதில் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலிருந்து,
பல் வைத்தியர் காது,மூக்கு,தொண்டை என்று லிஸ்ட் நீளும்.
நானும் அந்த வகையைச் சேர்ந்தவள்தான்.
எத்தனை நாட்கள் வேதனை தாங்க முடியுமோ அத்தனை நாள் பொறுத்துக் கொண்டு இனி நம்மால் முடியாது என்று வைத்தியரை அணுகுவது என் வழக்கம்.
எத்தனை நாளாக இந்தத் தொல்லை என்று அவர் கேட்டால் பொய் சொல்லவும் தெரியும்.இதோ நேத்திலேருந்துதான் இப்படி இருக்கு என்றதும்
அவர் ஒரு மாதிரி தான் பார்ப்பார்.
என்ன மருந்து எடுத்தீர்கள் என்று கேட்டால் இருப்பதிலியே சாதாரண மாத்திரைகள் பெயர் சொல்லிப்
போக்கு காட்டுவதும் உண்டு.
அதே மாதிரி மெடிக்ளைம் இன்ஷுரன்ஸ் எடுக்கப் போனபோதுதான்
எத்தனை இனிப்பான
நபர் நான் என்று தெரிந்தது.
மற்றவர்கள் நினைப்பு(ம்க்கும்)...யாருன்னு சொல்ல மாட்டேன்!!! இத்தனை நாட்கள் எப்படி வராமல் இருந்தது? இவள்தான் நாற்காலியில் இருந்து எழுவது
மூன்று வேளை தான். அவைகள் பின் வருமாறு:)
சாப்பிட,சாமிகும்பிட,தூங்க...........
இந்த சர்க்கரை எனக்கு மட்டும் எப்படி வந்தது.
பாட்டிக்கு இருந்தது. சாக்ரின் மாத்திரை எடுத்துப்பார்.
அவரும் 75 வயது வரை இருந்து சட்டென்று இறைவனடி
சேர்ந்தார். எனக்கும் ரொம்ப நாளா இருந்து இருக்கும் போல் வைத்தியர் சொன்னார்.
இப்பதான் தெரிய வந்தது.
இப்போ நமக்கு வரும் ஞானம் எதிர்காலத்தைப் பற்றி.
முதல் கண்டிஷன் ரெகுலர் டைபெடிக் க்ளினிக் விசிட் .
அப்படி நேற்றும் எனக்குக் கட்டாய (:-)) பரிசோதனை
ஒன்று இருந்தது.
அப்படி வழக்கமாகப் போவது போல க்ளினிக்கிற்கு
சென்றேன்.
போனதும் கண்ணில் படுவது இரண்டு வகை மனிதர்கள்,
ரொம்ப குண்டாக இருப்பவர்கள்.ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள்.
எனக்கு ஏனென்று புரியவில்லை.
அப்புறம் இந்த டய பெடிக்கிலும் ரெண்டு ஜாதியாம்.
ஊசி போட்டுக்கிற ரகம் ஒல்லியா இருக்குமாம். மாத்திரை
மட்டும் எடுத்துக் கொள்ளும் ரகம் (கொஞ்சம்)
ஓவெர் வெயிட்டாக இருக்குமாம்:)))))))))))( இங்கே திருவிளையாடல் நாகேஷ் நினைவுக்கு வருவார், நக்கீரரைப் பார்த்து "இதில் நீங்க எந்த வகைன்னு உமக்கே தெரியும்" என்று!!!!
இப்போது என் கதைக்கு வருவோம் .
நேற்று*(அதாவது 2006 ஜூன் 20) நான் போய் உட்கார்ந்ததும் என் கண்களில் பட்டவர்கள் என்னை ஆச்சரியப் பட வைத்தனர்.
ஒரே கலப்படமாக ஜோடிகள்.அம்மா பெண், கணவன்பெண்டாட்டியும், மாமியார் மருமகள்.
முன்பு பிரபலமாக இருந்த டாக்டர்,
ஒரு கர்னாடக இசைப் பாடகி (ராதா ,ஜெயலக்ஷ்மி)
என்று பலர்.
அதில் ஒரு அம்மா தனியாகத் தெரிந்தார்,.
நாற்காலி பூராவும் அவர் நிறைந்து இருந்ததால்
அவருக்கு நம்ம 'சுகரினம்' என்று நினைத்தேன்.
அவர் கணவர் அவரைவிட சோகமாக தன்னுடைய முறைக்காகக் காத்து இருந்தார்,.
அவர் அந்த அம்மாவை என்ன , எல்லாம் ரெடியா வச்சு இருக்கியா, மருந்து டப்பா சரியா இருக்கா எல்லாத்தையும் கவனம் பண்ணிக்கோனு சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவங்களும் தலையை ஆட்டி சரி சரின்னு பதில் சொன்னாங்க.
அவர்கள் முறை வந்தது ,இருவரும் மருத்துவர் அறையில் போனார்கள்.
பத்து நிமிடத்தில் வெளியில் வந்ததும் கணவர் உட்கார்ந்து கொண்டார்,.
அந்த அம்மா அங்கிருந்த உதவியாளரிடம், பக்கம் போய் நின்று விவரம் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தார்.
அவர்களுக்குள் எதிர்பாராமல் வார்த்தைகள் சூடாக வந்தன.
அந்த அம்மா திடீரென ஆங்கிலத்தில் பேசஆரம்பித்தார்.
நாங்க வெளியூரிலிருந்து வருகிறோம்.
ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முதலில் நீங்கள் சொல்ல வேண்டும்.//
"you shd have thought of informimg us before hand.
It is not easy to commute from chengalpat
and be told we have to stay here for three more days!!"
அப்படியே எல்லாரும் திகைப்புடன் பார்க்கும்
போது, எனக்குப் புரிந்தது யார் நோயாளி, யார் கூட வந்தவர் என்று,.(கம்பீர கணவர்)
இந்த அம்மா நடக்கும் வேகத்துக்கும் அவர் உடலுக்கும்
சம்பந்தமில்லை.
அவர் தோற்றத்திற்கும் அவர் அறிவுக்கும்
சம்பந்தமில்லை.
அதே போல, வெள்ளையும் சள்ளையுமாய் இருந்த அவர் கணவருக்கும் அவர் உடல் நலக்குறைவுக்கும் சம்பந்தமில்லை.
அந்த அம்மாவுக்கும் ,,,,அதிகாரம் செய்யும் அவர் கணவருக்கும் மட்டும் ஏதோ பொருத்தம் இருந்தது.
வெறும் சந்தர்ப்பங்களையும், உடை,தோற்றங்களையும் வைத்துமனிதர்களை அறிய முடியாது,
என்ற உண்மை மீண்டும் என் அறிவில் உரைத்தது.
என்ன பொருத்தம் உலகில் இந்தப் பொருத்தம்?

8 comments:
//வெறும் சந்தர்ப்பங்களையும், உடை, தோற்றங்களையும் வைத்து மனிதர்களை அறிய முடியாது// உண்மை தான் வல்லிம்மா... தோற்றத்தில் டெரராகத் தெரியும் சிலர் அன்பானவர்களாக இருந்ததை கண்ட அனுபவம் உண்டு.
மனப் பொருத்தம் இருக்கும் தானே...?
இன்று சுகர் இல்லாதவர்களே கிடையாது என்ற நிலை அம்மா.
அன்பு வெங்கட்,
அப்படித்தான் முடிவுக்கு வந்தேன் அன்று.
மனைவிக்குத் தானே கணவன் மேல் பொறுப்பும் அக்கறையும்.
கணவர் கேட்ட கேள்விகளில்
மனைவிக்குத்தான் சர்க்கரை நோய் என்று நினைத்தேன்.
பிறகுதான் தெரிந்தது.
நன்றாக இருக்கட்டும் இந்த ஜோடி.
ஓ. அது இருக்கிறது அன்பு தேவகோட்டைஜி.
இவ்வளவு மருத்துவமனைகள் தோன்றி இருக்கின்றனவே.
கோடிக்கணக்கில் மருந்துகள் வாங்க
வைக்கிறார்கள். நானும் மீள வழி தெரியாமல்
அந்த வழி போய்க் கொண்டிருக்கிறேன். இறைவன் துணை.
அன்பு தனபாலன்,
அந்தப் பொருத்தம் தான் அந்த அம்மாவை வாதாட வைக்கிறது.
மனப்பொருத்தம் எத்தனை இனிமை.
நன்றி ராஜா.
//வெறும் சந்தர்ப்பங்களையும், உடை, தோற்றங்களையும் வைத்து மனிதர்களை அறிய முடியாது//
ஆமாம் வல்லி அம்மா. மிகவும் சரியே.
துளசிதரன்
மிகவும் சரியே வல்லிம்மா. பெரும்பாலும் நான் யாரையும் டக்கென்று யூகிப்பதில்லை. இவர் இப்படித்தாணொ என்று. ஆனால் ஒரு சிலரது முக பாவம் அவரை அணுக நம்மை யோசிக்க வைக்கும். ஆனால் கடைசியில் பார்த்தால் அந்த நபர் படு அப்பாவியாய் இருப்பார். ஹா ஹா சிலர் நன்றாக இருப்பது போல் தோன்றும் ஆனால் உள்ளில் வேறு மாதிரி இருப்பார்கள்.
கீதா
அன்பு கீதாமா,
யாரையுமே ஜட்ஜ்மெண்டலா பார்ப்பது தவறுதான்.
நான் அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்ததில்
ரோல் ரிவர்சலாகத் தெரிந்ததைத் தான் குறிப்பிட்டேன்:)
தோற்றங்கள் தான் எப்படி நம்மை ஏமாற்றிவிடுகின்றன!!
நன்றி கண்ணா.
Post a Comment