Sunday, December 29, 2019
மார்கழி 14 ஆம் நாள்.
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
14 ஆம் நாள் மார்கழியின் இனிமை.
நாச்சியார் திருவடிகளே சரணம்.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியில்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் பூத்தன காண்
செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணா னைப் பாடேலோர் எம்பாவாய்........
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அடுத்த பாவையை எழுப்ப ஆண்டாளும் தோழிகளும் வருகிறார்கள்.
அவர்களுக்கு உடனே கண்ணில் தெரிவது அவளது தோட்டத்துக்குளம்தான்.
அதில் அழகாக மலர்ந்திருக்கும் செங்கழுநீர் மலர்கள்.
தாமரை போன்ற குணம் உடையவை .
அதேபோல் ஆம்பல் மலர்கள் கூம்புகின்றன.
சூரிய உதயமும் தாமரை மலர்வதும் போல
கண்ணனை நினைக்கையில் மனம் மலர்கிறது.
காவி உடை உடுத்திய துறவிகள் , வெண் பற்கள் பொருந்திய தூய வாயில் வெண்சங்கைப் பொருத்தி இறைவனின்
புகழை வலியுறுத்துவார் போல முழக்கம் செய்வது உன் காதில் விழவில்லையா பெண்ணே ?
எங்களை முன்பே வந்து எழுப்புவதாக நேற்று உரைத்தாயே.
இதோ நாங்கள் வந்து விட்டோம் நீதான் உறங்கி கொண்டிருக்கிறாய்.
உன் உரையை நீயே மறந்தாய்,வெட்கமாக இல்லையா உனக்கு.
நாவன்மை படைத்தவளே , சங்கும் சக்கரமும், சாரங்கமும் ஏந்தும்
கரங்களை உடைய நம் நாராயணனைப்
பாட எங்களுடன் கலந்து கொள் .வா
இதோ இந்த மலர்களைப் போலவே மலர்ந்த
திருமாலின் அழகான கண்கள்
நம்மை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
என்று அழைக்கிறாள் ஸ்ரீ ஆண்டாள். நாமும் செல்வோம்.
கோதா தேவி! உன் பாதங்கள் சரணம்.
Saturday, December 28, 2019
மார்கழி 13 ஆம் நாள் புள்ளின் வாய்க் கீண்டானை
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
மார்கழி 13 ஆம் நாள் புள்ளின் வாய்க் கீண்டானை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மார்கழி 13ஆம் நாள் , திருமாலின் அவதாரங்களில் கண்ணனையும் ராகவனையுமே சேர்த்துப் போற்றுகிறாள் கோதை.
வெண்மை நிறத்தில் பெரிய கொக்காக வந்த அரக்கனை அவன் வாய்க்குள்
புகுந்து இரண்டாகக் கீறி மாய்த்து விடுகிறான் சின்னக் கண்ணன்.
ராகவனோ பத்துத் தலை ராவணனின் சிரங்களைக் கிள்ளிக்
களை கிறான்.
ராமனையும் கண்ணனையும் பாட எல்லோரும்
பாவை த்தலத்துக்கு அதாவது திருப்பாவை பாடி சேவிப்பதற்காகவே ஏற்பட்ட இடத்துக்கு வந்துவிட்டார்கள்.
அழகிய மலர்ந்த தாமரை போன்ற கண்களைக் கொண்டவளே
பறவைகள் சேர்ந்து ஒலி எழுப்பிக் களிப்பது
உன் காதுகளில் விழுகிறதா.
இதோ வானில் வெள்ளி முளைத்து விட்டது.
பிரகஸ்பதி உறங்கி சுக்கிராச்சாரியார் விழித்து எழுந்து விட்டார்
நாம் எல்லோரும் கண்ணன் பக்தர்கள்.
தனித்தனியே போவது அழகில்லை.
நதியில் குள்ளக் குளிர முங்கி குளித்து ஆனந்தித்து
எங்களுடன் வந்து அவனை அனுபவிக்க வா.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
கனைத்திளங் கற்றெருமை மார்கழி 12
எல்லோரும் வளம்பெற வாழ வேண்டும்
கனைத்திளங் கற்றெருமை மார்கழி 12
ஸ்ரீ கோதை நாச்சியார் ஆறு தோழிகளை எழுப்பிவிட்டாள் .
இப்போது ஏழாவது வீட்டை அணுகி,
அந்தப் பெண்ணின் வீட்டுப் பெருமையைச் சொல்லி
கண்ணனின் அவதார மகிமைகளையும்
உணர்ந்து பாடி , கண்ணனின் நினைப்பிலேயே மயங்கித் துயிலும் இந்த பக்தையையும் எழுப்புகிறாள் .
கறவை க்கணங்கள் பற்றி முந்தைய பாசுரத்தில் உரைத்தவள்
இன்று பால் கறக்காமலேயே தானே சுரந்து வழிந்தோடி வெள்ளமாக இருக்கும் காட்சியைக் கண்களுக்கும் மனதுக்கும் எடுத்துரைக்கிறாள்.
கேட்காமலேயே அருளுரையை வழங்கும் ஆச்சார்ய வள்ளல்களை போன்றே இந்த
இளம் வயதுப் பசுக்களும் எருமைகளும்
கன்றுக்குட்டிக்கு ஊட்டியது போக மிச்சம் இருக்கும் பாலை
வடிய விடுகின்றனவாம்.
சேறு போலத் தேங்கி இருக்கும் பாலுக்கு நடுவே இப்போது ஆண்டாளும் தோழிகளும்
நின்று வீட்டு மகளை அழைக்கிறார்கள்.
" கீழே பால் வெள்ளம் சில்லென்று இருக்கிறது.
தலை மேலே பனி கொட்டுகிறது.
நீயோ அயர்ந்து கண்ணனைப் பற்றிய நினைவில் ஆழ்ந்து
இருக்கிறாய்.
இந்தப் பசுக்கூட்டங்களின் உரிமையாளனான் தனவானின்
அருமைத்தங்கையே,
தன் மனைவியை அபகரித்த தென்னிலங்கை கோமான் இராவணனை இராமனின் சினம் கொன்றது.
அதே ராமன் நம் மனதுக்கு இனியவனாகிறான் .
மனதுக்கு இனியவன் நமக்கு இனிக்கிறான்.
அக்கம்பக்கத்தில் உள்ளோர் அறியும் முன் நீ எழுந்து வந்து எங்களுடன் இணைந்து விடு.
இந்தப் பேருறக்கம் உனக்கு அழகல்ல என்று இதமாக
உரைக்கிறாள்.
அழைக்கும் குரலுடன் இணைந்து நாமும் பாடுவோம்.
சரணம் தாயே.
Friday, December 27, 2019
1700, இங்கிலிஷ் பாட்டி 8
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் .
இங்கிலிஷ் பாட்டி 8
அடுத்த நாள் காலையில் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது
சந்தோஷுக்கு.
இன்னும் இரண்டு நாளுக்கு இப்படி இருக்கும். இன்றாவது இரவு 10 மன்னிக்குத் தூங்கப் போக வேண்டும்,என்று
நினைத்துக் கொண்டே, குளித்து அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினான்.
வயல் வெளிகளிடை நடந்து கிராம எல்லைக்கு வந்து விட்டான்.
ஒரு ஓடையின் அருகில் நின்று சூரியன் உதிப்பதைக்
கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
பக்கத்தில் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பினான்.
வயதான பெரியவர் ஒருவர்,முகத்தில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்,.
என் பேரு சாம்பமூர்த்தி . சீதாலெட்சுமியின் மாமனார்.
சந்தோஷ் ஒரு நிமிடம் ஒன்றும் பேச முடியாமல்
ஹலோ மட்டும் சொல்லிப் புன்னகைத்தான்.
உங்கள் அம்மா என்னிடம் வந்து பேசினார். எங்களுக்கு இந்த விஷயத்தில் பூரண சம்மதம்
சீதா நாங்கள் பெறாத பெண். இந்த நாலு வருடமாக அவளை பார்த்து நாங்கள் வருந்திக் கொண்டிருக்கிறோம்.
நேற்று இங்கு வந்ததும் ,கோயிலில் உங்களைப்
பார்த்ததும் எங்களுக்கு மனம் லேசாகிவிட்டது.
அவர் குரல் நடுங்குவதை பார்த்து மனம் குழைந்தது சந்தோஷுக்கு.
உங்கள் மருமகளுக்கு இதில் ஈடுபாடு இருந்தால்
மட்டுமே நல்லது நடக்கும் ஐயா. வருந்த வேண்டாம்.
அன்னை பரமேஸ்வரி நினைக்க வேண்டும்.
கல்யாணத்தில் மட்டும் கட்டாயப் படுத்த முடியாது.
ஏற்கனவே தோல்வியைச் சந்தித்தவன் நான்.
ஆழம் தெரியாமல் காலை விட முடியாது.
எந்த முடிவுக்கும் நான் தயார்.
அம்மாவின் ஆசை நிறைவேறினால் மகிழ்ச்சியே.
என்று பதில் சொன்னான்.
சாம்பமூர்த்தி ஆழ்ந்த யோசனையுடன் அவனுடன் நடந்தார்.
கோவிலின் மணி ஓசை கேட்டதும் அவர் கைகள் குவிதைக் கவனித்தான்.
மருமகள் மீது இத்தனை அக்கறையா.
அந்தப் பெண் உண்மையில் நல்ல மருமகளாக
இருந்திருக்க வேண்டும் என்றதும், தன் மனத்தில் ஆவல் துளிர் விடுவதை உணர முடிந்தது.
அவன் கையைப் பிடித்தபடி கோவிலுக்குள்
அவர் நுழைவதைக் கண்ட சீதாவின் மனதில்
பரவசமும் படபடப்பும் ஒன்றாகப் பூத்தது.
மறைந்த கணவனை நினைத்துக் கண்ணில் நீர் வந்தது.
அருகில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்திக்கும்
கண் கலங்கியது. சீதாவை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள் .
அம்பாளின் மாலையை சந்தோஷுக்கு அணிவித்து மரியாதை செய்தார் குருக்கள்.
எல்லோரும் மலர்கள், குங்குமப் பிரசாதங்களை பெற்றதும்,
அன்றைய உணவுக் கட்டளையாகச் சர்க்கரைப் பொங்கல் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் பொங்கலை பாக்கு மட்டையில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்த சீதா, சந்தோஷுக்கும் கொடுத்தாள் .
தன்னருகில் வந்து உட்கார்ந்த சீதாவின் முகத்தை
கெஞ்சாத குறையாகப் பார்த்தார் சாம்பமூர்த்தி.
எனக்குப் புரிகிறது மாமா. இன்னும் கொஞ்சம் நாட்கள் எனக்கு வேண்டும்.
சட்டென முடிவுக்கு வர முடியவில்லை. என்றபடி ஆனந்தியையும் , இன்னும் மாலையைக் கழற்றாத சந்தோஷையும் நிமிர்ந்து பார்த்துவிட்டுப் புன்னகைத்தாள்.
ஆனந்தியின் மனதில் பூ மழை சொரிந்த உணர்வு. இனி எல்லாம் நல்லபடி நடக்கும் என்று அம்பாள் சொல்வது பொல்லாத தோன்றியது.
உடனே நேரே சந்நிதி அருகே சென்று விட்டாள் .
அருகே சந்தோஷ் வந்து நின்று கொண்டு என்னம்மா, காரியம் பழமா
என்று கேட்டான்.
அப்படித்தான் நினைக்கிறேண்டா என் செல்லமே.
இன்னும் ஆறு மாதங்களில் எனக்கு இன்னொரு மருமகள்
வந்துவிடுவாள். இது அம்பாள் கொடுக்கும் நல்வாழ்வு
என்றபடி சீதாவையும் அவள் மாமனாரையும் பார்த்துப்
புன்னகை செய்தாள் .
அவள் எதிர்பார்த்தபடியே அம்பாளின் அனுக்கிரகத்தில் சந்தோஷும் சீதாவும் அவர்களின் கிராம வீட்டிலேயே
அவர்களின் நட்புக்கள் உறவுகள் சூழ மணம் புரிந்து கொண்டனர்.
சிக்கல் ஏதும் இல்லாமல் அமெரிக்காவுக்குப் பயணித்தார்கள்.
புதிய பாதையில் பயணித்த இருவர் மனதில்
தூய அன்பு நிறைந்திருந்தது.
ஆனந்தி மீண்டும் பாட்டியாகும் வாய்ப்பு அடுத்த வருடம்
கிடைத்தது.
மிக நீண்ட கதையைத் தொடர்ந்து வந்து படித்த அன்பு கோமதி, கீதா மா, ஸ்ரீராம்,மாதேவி அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து ....
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மார்கழியின் 11 ஆம் நாள் பாசுரம்.
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
+++++++++++++++++++++++++++++++++++++++++
வேங்கடவற்கு எம்மை விதி என்ற மாற்றத்தைக் கடவாமல் இருக்க,அவனைப் பாதித்த துதிக்க ,
கோதை நாச்சியார்
தனது ஆறாம் நாள் பாவையை அழைக்கத் தோழிகளுடன்
அவள் வீட்டு வாயிலுக்கு வருகிறாள்.
அவளோ பெருந்தனக்காரரின் பெண்.
அவள் வீட்டில் கன்றுகளும் கறவை மாடுகளுமாகக் கூட்டங்கள்
அவைகள் அனைத்தையும் கறந்து பால் சேர்க்கும் வல்லமை படைத்த கோவலனின் பொற்கொடி அவள்.
அங்க லாவண்யமும் ,சௌந்தர்யமும் பொருந்தியவள் .
அவள் தந்தையோ கண்ணனைப் பகைத்தவர்களை அடியோடு அழிப்பவர்.
குற்றமே இல்லாத , புனமயில் அவள் நிச்சிந்தையாக உறங்குவதை
பார்த்து ஆண்டாள்,
உன் சுற்றத்துத் தோழிமார் அனைவரும் இங்கே வந்துவிட்டோம். உன் முற்றத்தில் நின்று கண்ணனைப் பாடிக் கொண்டிருக்கிறோம்.
அதைக்கேட்டும் நீ உறங்குவது சரியல்ல.
மறுத்துப் பேசாமல் எங்களுடன் வா என்று வேண்டுகிறாள்.
நாமும் செல்வோம்.

Thursday, December 26, 2019
இங்கிலிஷ் பாட்டி. 7
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
இங்கிலிஷ் பாட்டி. 7

ஆனந்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி மகன் வந்ததில்.
அவன் மனம் பிடிபடாவிட்டாலும்
அவனது வேற்று வாழ்க்கையில் ஒரு மாறுதல் இருக்கட்டும் என்றுதான்
வராகி சொன்னால்.
எதோ திரைப்படங்களில் வருவது போல
வந்தான் காதலில் விழுந்தான் ,அடுத்து திருமணம் என்பதை அவளும்
நம்பவில்லை.
லக்ஷத்தில் ஒருவருக்கு இது போல தோன்றலாம்.
தன் மகனின் இலட்சிய நோக்கு அவளுக்கு த் தெரியும். இருந்தும் ஒரு தாய்க்கே உரிய பாசத்தினால் நன்மை விளைந்தால் நல்லதே
என்ற எண்ணமே அவளை இவ்வாறு யோசிக்க வைத்தது.
வந்த உடனே குளித்துக் கோவிலுக்கு கிளம்ப தயாரான
மகனைப் பெருமையுடன் பார்த்தாள் .
இருவரும் நடந்தே கோயிலை அணுகினர்.
கோயிலின் வாசனைகளும் ,அமைதியாகப் பணியாற்றும் பெண்கள்
ஆண்கள் அனைவரும் அவன் மதிப்பில் உயர்ந்தனர்.
ஆனந்தி வருவதை முதலில் கண்ட சீதா அவள் அருகில் நிற்கும் சந்தோஷைப் பார்த்து விட்டுப் பின் வாங்கிவிட்டாள் .
கடைக்கண்ணால் இதையும் கண்டால் ஆனந்தி.
கோவிலின் பிரகாரத்தில் அவர்களின் குல தெய்வம் மாகாளி சந்நிதிக்கு மகனை அழைத்துச் சென்றாள் .
அங்கே பிரார்த்தனை செய்த பிறகு,அங்கு குருக்கள் கொடுத்த குங்குமத்தை அளவாக அவன் நெற்றியில் பொருத்தினாள் .
மகன் சிரித்தான். அமெரிக்காவில் செய்ய முடியாததை இங்கே செய்கிறாயா.
அங்கேயும் செய்வேனடா. உனக்கு கோவில் வர சந்தர்ப்பங்கள் குறைவு இல்லையா
மெதுவே விநாயகன், வேலவன் சந்நிதிகளை சுற்றி, அம்பாளின் சந்நிதிக்கு வந்தார்கள்.
அங்கு தன் தோழிகளுக்கு மகனை அறிமுகம் செய்து வைத்தாள்
ஆனந்தி.
ஆராதனைகள் முடிந்த பிறகு சீதாவைத் தேடினாள் .
அவள் கோவில் சமையலை அறையைச் சுத்தம்செய்பவர்களோடு இருப்பதை பார்த்து என்னம்மா அம்பாளைத் தரிசனம் செய்ய வரவில்லையா என்று வினவினாள்
கூ ட்டம் களைந்து பிறகு வரேன் மா. நிம்மதியாக அவளுடன் பேசலாம் என்றவளை
ஆழ்ந்து பார்த்து,என் மகனை நான் அழைத்துப் போகிறேன் நீ வா வெளியே என்றாள் ஆனந்தி.
அச்சோ அப்படி எல்லாம் இல்லை மா. அவர் என்னுடன் வேலை செய்யும் மற்றவர்கள் போலத்தான். எனக்கு வித்தியாசமில்லை ,
இதோ வருகிறேன் என்று வந்தவள் அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு வெளியே
வந்தாள்.
மகனை அறிமுகப் படுத்தி வைத்த ஆனந்தி ,
அனைவரையும் தன் வீட்டுக்கு மாலையில் வருமாறு அழைத்தாள் .
பயணக் களைப்பு இருந்தாலும் மலர்ச்சியுடன்
எல்லோருடனும் உரையாடினான் சந்தோஷ்.
எதோ இறுக்கம் கலைந்தது அங்கே.
நாளை இந்த வேளை பார்க்கலாம்.

Wednesday, December 25, 2019
மார்கழி மாதம் 10 ஆம் நாள் நோற்றுச் சுவர்க்கம்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
நோற்று அதாவது நோன்பிருந்து செல்லும் இடம் சுவர்க்கம்.
அதில் வசிப்பதோ நாராயணன் ,கண்ணன்.
அதற்காக நம் கோதை எடுக்கும் முயற்சிகளில் தோழிகளை அழைத்துச் செல்லும்
அழகு பாவைப் பாடல்கள்.
எவ்வளவு எழுப்பியும் எழுந்திராத ஐந்தாவது வீட்டுப் பெண்,
கும்பகர்ணனிடமிருந்து பெற்ற சொத்தைப் போலத் தூக்கத்தைத் தழிவி இருக்கிறாள்
என்ற சந்தேகம் ஆண்டாளுக்கு வர,
துளசியைத் தலையில் சூடிய கண்ணனி
ஆராதிக்க நீ வா. வந்து கதவைத் திற என்று வேண்டுகிறாள்.
அனைவரும் செல்லலாம்.
இங்க்லீஷ் பாட்டி. 6
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

சந்தோஷ் தன் இருக்கையில் காலை நீட்டி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு
வர போகும் நாட்களை நினைத்துப் பார்த்தான்.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம்.
அம்மா சொல்வதை வைத்து சீதா நல்ல கட்டுப்பாடுடன் வளர்ந்த பெண் என்பது தெளிவானது.
அம்மாவை அந்தப் பெண்ணிடம் எந்த குணம் ஈர்த்தது.
இந்தத் தேசத்தில் வளர்ந்த தனக்கு அது ஒத்து வருமா.
முதலில் அந்தப் பெண்ணின் சம்மதம் கிடைத்ததா .
கோவில் திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் முடியப்
போகும் வேளையில்
இந்த அவசரம் அம்மாவுக்கு என். இந்தியா வருவது அவனுக்குப் பிடித்ததே.
ஆனால் இந்த எண்ணம் எத்தனை நன்மை பயக்கும் என்பது
சந்தேகமே.
இன்னும் சந்தித்திராத சீதா வின் நினைவுகளோடு உறங்கினவன், ஃ பிராங்க் பார்ட் நிலையத்தில் தான் விழித்தான்.
கடந்த சில மாதங்களாக அவன் ஈடுபட்டிருந்த
ப்ராஜெக்ட் அவன் சக்தியை உறிஞ்சி இருந்தது.
ஊருக்கு வருவதே தனக்கு ஒரு நல்ல மாறுதலாக
இருக்கும் என்றே தோன்றியது.
சென்னை சென்று, திருச்சிக்கு மாற வேண்டும்.
அங்கிருந்து வாடகை வண்டி ,எடுத்துக் கொண்டு
மாகாளிபுரம் செல்ல வேண்டும்.

பலவருடங்களுக்கு முன் சென்ற இடம். பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அம்மா பாவம், முப்பது வருட அமெரிக்க வாழ்க்கையில் சிறிதும் மாறவில்லை. தோற்றம் மாறினாலும்
இன்னும் மனதில் தானும் கணவனும் திருமணம் செய்து கொண்ட கோவில் அக்கம்பக்கத்தார்
என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.
இப்பொழுது இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிடுவது தேவையா
என்று அவனுக்குப் புரியவில்லை. இயற்கையில் அவன்
தானுண்டு,தன் வேலை உண்டு என்று இருப்பவன்.
அதுவும் திருமண முறிவுக்குப் பிறகு ,நொந்து போன மனது
மற்ற மாற்றங்களை நாடவில்லை.
அந்த வகையில் தானும் அம்மா மாதிரி தானோ என்ற நினைப்பு முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
ஒரு நல்லதோர் காலை ப் பொழுதில் மாகாளி புரத்தில் பாதம் பதித்தான் சந்தோஷ்.
அந்தப் பசுமை,பழமையைப் பார்க்க மனம் நிறைந்தது.
மார்கழிப் பாசுரம் தூமணி மாடம்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
மார்கழிப் பாசுரம் தூமணி மாடம்
தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலனை மேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நம்

நம் கோதை இப்பொழுது அடுத்த வீட்டுக்கு வருகிறாள்.
ஆவலுடன் கூட வருகிறார்கள் தோழிகள்.
கண்ணனப் பார்க்கப் போகிறோம் சீக்கிரம் போகவேண்டும் என்றபடியே நாலாவது வீட்டைப் பார்த்தால்
கதவு மூடி இருக்கிறது. இந்தப் பெண் இன்னும் எழுந்திருக்கவில்லையா என்ற சந்தேகத்துடன்
திறந்திருக்கும் சாளரம் வழியே ஆண்டாள் பார்க்கிறாள்.
அங்கே அவளை காணும் காட்சி...அழகான மஞ்சம், சுற்றிலும்
விளக்குகள்,
தூய ரத்தினங்கள் பதித்த சுவர்கள் விளக்கொளியைப் பிரதிபலிக்கின்றன.
அந்த மஞ்சத்தில் எழிலாக உறங்குவது போலப்
பாவனை செய்தபடி இருக்கும் பெண்.
ஆச்சர்யத்துடன் விளிக்கிறாள் ஆண்டாள்.
அவளோ அசையவில்லை. அவள் அன்னையை அடுத்தபடி அழைக்கிறாள் . அன்பு மாமீர் அவளை எழுப்புங்கள்.
அவளுக்கு காது கேட்கவில்லையா, ஊமையாகிவிட்டாளா
பெண்ணே என்ன உறக்கம் இது உன்னை யாராவது மந்திரத்தால் வசியப் படுத்தி விட்டார்களோ?
நாம் மாதவனை,வைகுந்தனை, மால வனைப் பாட வேண்டாமா.
பொய்யுறக்கம் களைந்து எழுந்து வந்து எங்களுடன் அவன் நாமங்களைச் சொல்
என்று வேண்டுகிறாள்.
நம்மையே அழைக்கிறாள் நாமும் பாடுவோம்.
Tuesday, December 24, 2019
மார்கழி எட்டாம் நாள் பாசுரம் கீழ்வானம்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மார்கழி எட்டாம் நாள் பாசுரம் கீழ்வானம்

Monday, December 23, 2019
இங்க்லீஷ் பாட்டி. 5.
எல்லோரும் வளமாக. வாழவேண்டும்.
மாகாளி புரம். தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தது. வருடத்துக்குஒரு முறை நடக்கும் கோடைத் திருவிழா. கொடை. என்றும் சொல்வதுண்டு.
அவர்களது குலதெய்வம். அவளைப் பார்வதியின் சக்தியாகப் பார்ப்பவர்ளும் உண்டு.
வைணவ வைசியர்களுக்கு அவள் லக்ஷ்மி தேவியின் இன்னோரு வடிவம்.
அரோரா ,சிகாகோவில் அவள் சன்னிதி, அலர்மேல் மங்கா தாயாருக்கு வலது பக்கம்
இருக்கும்.
ஆனந்திக்கு வழக்கமாகக் கலந்து கொள்ளும் சடங்குகளில்
கலந்து கொள்ளாதது வருத்தமே.
தான் கலந்து கொண்டு ,அதனால் அவர்களுக்கு ஏதாவது பாதகமாக நடந்து
விட்டால் இன்னும் வருத்தமாக இருக்கும் என்பதால்
பேசாமல் எல்லாவற்றையும் வேடிக்கை
பார்த்து உதவலாம் என்று சொன்னால் சுற்று வேலைகளைக்
கவனித்தாள்.
அவளுக்கு உதவியாக வந்து அமர்ந்த சீதாலக்ஷ்மியை ஆதரவுடன்
அணைத்துக் கொண்டு அவர்கள் வங்கியைப் பற்றியும்
அவளது புக்கக மனிதர்களைப் பற்றியும்
விவரமாக அறிந்து கொண்டாள்.
அவளுக்கு அவர்கள் மேல் உயர்ந்த மதிப்பு இருந்தது.
அவளைத் தங்களுடன் இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.
பிறந்தகத்தில் அவளுக்கு ஒரு தங்கை மட்டுமே இருந்தாள்.
அவளுக்கும் திருமணமாகி பக்கத்தில் திருச்சியில்
இருந்தாள்.
ஆனந்தியைப் பற்றி அதிகம் சொல்லவில்லை இல்லையா.
அவளுக்கு இரு பிள்ளைகள் . பெண் குழந்தை இல்லை என்று
ஆதங்கம் இன்னும் உண்டு அவளுக்கு.
முதல் மகன் வாழ்க்கை அவ்வளவாகச் சுகப்படவில்லை.
கல்லூரியில் சந்தித்துக் காதலித்த பெண்ணையெ
திருமணம் செய்ய ஆனந்தியும் கணவரும் சம்மதித்தனர்.
ஏதோ ஒரு நிகழ்வில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து
திருமணமாகி இரு வருடங்களில் பிரிந்து விட்டார்கள்.
இதோ 32 வயதில் இன்னும் வேறு திருமணம் செய்யாமல்
அவன் வேலையைப் பார்த்துக் கொண்டு
நிம்மதியாகவே இருந்தான்.
இரண்டாவது மகனும் காதல் திருமணம் தான்.
அவன் குடும்பம் குழப்பம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.
ஒரு பேரனும் இருக்கிறான். இரண்டாவது குழந்தையை
எதிர்பார்த்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இதை எல்லாம் ,தனது புதுத் தோழியுடன்
பகிர்ந்து கொண்டாளானந்தி.
சீதாவுக்கு இதெல்லாம் புதுமையாக இருந்தது.
ஆவலுடன் கேட்டுக் கொண்டாள்.
நீங்கள் நல்ல பொறுமைசாலிதான் என்றாள்.
வருவதை ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பதனால்
எதுவும் மாறப் போவதில்லை மா. பக்குவமாகத் தான்
இருக்க வேண்டும். நமக்கு வேண்டியது குழந்தைகளின்
நல்ல வாழ்வு தானே என்று நிறுத்தினாள்.
கோவில் சன்னிதியிலும் மங்கல ஆரத்தி
எடுக்கும் சத்தம் கேட்டதும் இருவரும் உள்ளே சென்றார்கள்.
அம்பாளைக் கண்டதும் ,ஆனந்திக்கு
ஒரே வேண்டுதல் தான் தோன்றியது.
இந்தப் பெண் தன் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்கிற பிரார்த்தனை தான் அது.

மார்கழி 7 ஆம் நாள் பாசுரம் கீசு கீச்சென்று ஆனைச்சாத்தன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
மார்கழி 7 ஆம் நாள் பாசுரம் கீசு கீச்சென்று ஆனைச்சாத்தன்
Sunday, December 22, 2019
புள்ளும் சிலம்பின காண்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
மார்கழி ஆறாம் நாள்.
ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்,
மார்கழிப் புண்ய நாட்களில் புள்ளும் சிலம்பினகாண் பாசுரம்.
முதல் ஐந்து பாடல்களில் பகவத் விஷயங்களில்
எடுத்தியம்பி நாம் யசோதை மைந்தனை , பரமனை, உத்தமனை, தாமோதரனை,மாயனைப் பாடும் நல்ல நாட்கள் இவை என்று
உறுதி செய்து கொண்டு,
அடுத்து தோழிகளை அழைக்கக் கிளம்புகிறாள்.
இத்தனை நேரம் இவள் கண்ணனை விழித்ததிக் கெட்டவர்கள் தாம் அவர்கள்.
இருந்தும் குளிருக்கு இதமாகப் பாதி விழித்துப்
பாதி உறக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கண்ணனின் பெருமை களை உரைக்கிறாள்.
புள்ளும் சிலம்பின காண் பாசுரத்தில்
கருடாழ்வார் சிறப்பாக ப் பாடப் படுகிறார்.
பறவைகளின் காலை கிராமங்கள் ஆரம்பித்து,
கருடன் மேல் பயணித்து மக்களைக் காக்கும் கண்ணனை நினைக்க.
அங்கு ஊதப்படும் வெண் சங்கத்தின் ஒலி
உனக்கு கேட்கவில்லையா.
பூதனையின் நஞ்சு உண்டு அவளை வைகுந்தத்துக்கு
அனுப்பினானே அவன் புகழ் பாட வேண்டாமா.
தன்னை அழிக்க வந்த சகடாசுரனையும் பிஞ்சுக் கால்களால் உதைத்து மோக்ஷம் கொடுத்தானே,
இவ்வளவையும் செய்து சிறு குழந்தையாய் பிரளய வெள்ளத்தில் ஆலிலையில்
மிதந்து உலகம் காக்கும் அந்த ஹரியை,
முனிவர்கள் விழிக்கும் ஓசை உங்கள் காதில் விழுகிறதா.
எழுந்து வாருங்கள். என்னும் சொல்கிறாள் திருவான பாவை.