Blog Archive
Friday, December 31, 2021
Thursday, December 30, 2021
Wednesday, December 29, 2021
ஏற்றுக் கொள்ளுதல்.
வல்லிசிம்ஹன்
முன் பதிவில் புனர்ஜன்மம் பற்றி சில எண்ணங்களைப் பதிந்து இருந்தேன். அதன்
தொடர்பாக இந்தப் பதிவும்.
மனமே பிரச்சினை
தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.
காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..
முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் என கூறினார்..
முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.
இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த குடிலை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.
அரசரால் தூங்கவே
முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார்..
மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.
அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது.
நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன.
ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
அவரை எழுப்பிய அரசர்,
''என்ன மனிதர் நீங்கள்...
இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது...???'' என்று புலம்பினார்.
முனிவரோ, தனது வழக்கமான நிதானத்துடன் கூறினார்:
''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை;
கோஷமிடவில்லை
அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு அரசர் தங்கி இருப்பது தெரியாது.
அவைகள் படிப்பதில்லை.
அவற்றுக்கு அறிவும் கிடையாது.
அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன.
நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்...!!!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்...???'' என்றார் அரசர்.
உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.
அப்படிப் போராடாதீர்கள்
.
பிரச்னை குரைப்பொலி அல்ல,
உங்கள் எதிர்ப்பு உணர்வு.
நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை.
ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்.
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....???
ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்...!!!'' என்றார் முனிவர்.
'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க போனார் அரசர்.
ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து முனிவரைச் சந்தித்தார் அரசர்...!!!
''ஆச்சரியம்தான்....!!! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன்.
ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அரசர்.
முனிவர் நமக்குச் சொல்கிறார்:
"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் கவனத்தை உள்முகமாகத் திருப்பு.
எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய்.
உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும்;
அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய்.
அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம்..
உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது..
அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.
யாரையும் நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
thank you Jayanthi Kannan. God Bless.
Tuesday, December 28, 2021
மறு பிறவி.
வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக இங்கிருக்கும் தோழமைகளுடன்
ரீ இன்கார்னேஷன் , மறு பிறவி நிகழ்ச்சிகளை அலசி வருகிறேன்.
அதிசயத்தின் மேல் ஆச்சர்யம் நிகழ்வது போல இருக்கிறது.
எல்லோருக்கும் ஒரு மீண்டும் மீண்டும் வரும் ஒரு கனவு இருக்கிறது. சிலருக்கு
அடையாளம் தெரியாத பயம்.
பார்த்த ஞாபகம் இல்லையோ முகங்கள்.
அடுத்த பதிவில் இதை விவரிக்கிறேன்.
இந்திப் படங்கள் மஹல் இலிருந்து ஆரம்பித்த
திரைப் படங்கள். மதுமதியிலும் ,மிலன், பீஸ் சால் பாத்,கர்ஸ்
என்று தொடர்ந்தது.
நம் ஊரில் பிராப்தம், நெஞ்சம் மறப்பதில்லை
இதுவரை தெரியும். பிறகு ஏதாவது படம் வந்ததாக நினைவில்லை.
Monday, December 27, 2021
விழியும் பார்வையும்,கண்களும்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் பார்வையும் கோணங்களும் வேறு வேறு.
பெற்றோரின் கண் வழி அன்பு.
கணவர் கண்வழி காதல்
சகோதரர்கள் கண் வழி பாசம்,
பிள்ளைகள் கண் வழி இன்னும் என்ன வெல்லாமோ.
அங்கே அவர்கள் நம்மை எல்லாக் கோணங்களிலும்
தீர்மானம் செய்து ஜட்ஜ்மெண்ட் கொடுப்பார்கள்:)
சினிமாவில் சுவையான சில பாடல்களைப் பதிகிறேன்.
Sunday, December 26, 2021
சினிமாப் படங்களுக்கு ஊடே வரும் நடனங்கள்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
பழைய படங்களிலும் ,ஏன் இப்போது கூட
1,
கதையில் ஒரு திருப்பம் வேண்டும் என்றால்,
2, வில்லைனை மயக்க வேண்டும் என்றால்,
3 கதா நாயகனை சிறையிலிருந்து
விடுவிக்க வேண்டும் என்றால் ஒரு ஜோடிகள் நடனமாடும்:)
4, கதா நாயகியே ஜிப்சி யாக இருந்துவிட்டால்
அது இன்னும் சிறப்பாகப் படமாக்கப் படும்,
இவை எல்லாம் சேர்ந்த ஒரு கதம்பம்
இங்கே பதிவிடுகிறேன்.
எல்லோர் கைகளிலும் ஒரு யூகலேலி வாத்தியம். பழைய
ஸ்பானிஷ் பாடகர்களை நினைவுக்குக்
கொண்டு வரும். புதுமைப் பித்தன் படத்தில்
பார்க்கலாமா:)
சபாஷ் மீனா படத்தில் மாலினி என்பவர்
நடித்திருப்பார். சிவாஜி சித்திரம் பேசுதடி என்று பாட
அந்தஹ் சித்திரமாகவே
தோன்றுவார். அவர் வில்லைனை மயக்கி உண்மை வரவழைக்கவும்
ஆடுவார்:)
1948இல் வந்த சந்திரலேகா படத்தில் எல்லாமே சுவையான பாடல்கள்
, அற்புதமாகப் படமாக்கப் பட்டவை.
அதில் வரும் ஐலோ பக்கிரியாமா. என்ன அர்த்தம் தெரியாது.:)
என் எஸ் கிருஷ்ணனும் மதுரம் அம்மாவும் அழகாகப் பாடி ஆடி
நடித்திருப்பார்கள்.
அடுத்தபடம் உத்தம புத்திரன் படம் ராகினி தங்கவேலு என்று நினைக்கிறேன்.
அதே படத்தில் பத்மினியும் சாவியை எடுக்க வில்லன்
சிவாஜி முன் ஆடுவார்!! பத்மினியை விட சிவாஜியின் நடிப்பு மிஞ்சி நிற்கும்!!!
நம் மதுரை வீரன் படத்தில் இந்தப் பாட்டும் நடனமும் மிக
மிகப் பேசப்பட்டது 50களின் இறுதியில்.
வெள்ளையம்மா,மதுரை வீரன் எம் ஜி ஆரும் நடனமாடும் காட்சி.
Friday, December 24, 2021
நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | K. Balaji, Actor & Producer...
அனைவருக்க்ம் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
காளி தாசன்....
அனைவரும் வாழ்க வளமுடன்.
வாட்ஸாப்பில் தங்கை ஜெயந்தி , ஸ்ரீரங்கம் அனுப்பிய
தகவல். நன்றி ஜெயந்தி கண்ணன்.
வல்லிசிம்ஹன்காளி தாசன்....
ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!
சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!
காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!
உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் சந்திரன் !
ஒருவர் சூரியன் !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!
சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!
உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
ஒன்று செல்வம்!
இரண்டு இளமை!
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!
சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....
உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
ஒன்று பூமி !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று மரம் !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!
சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!
அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
ஒன்று முடி !
மற்றொன்று நகம் !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....
தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!
உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்!
ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன்
மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் ! என்றாள்! ...
காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!
உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!
சாட்சாத் சரஸ்வதி தேவி யே அவர் முன் நின்றாள்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,
தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!
"நீ மனிதனாகவே இரு" என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...!
இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தரவேண்டும்!
பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், கைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென வாழ்க்கையை இயந்திர மயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!
*நீ நீயாகவே "மனிதனாகவே இரு" , வாழ்க வளத்துடன் மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்.......
வாட்ஸ் அப்பில் வந்தது .... படித்தேன் ... ரசித்தேன் ... பகிர்ந்தேன்.
Thursday, December 23, 2021
88 Srivilliputhur - ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
8 ஆம் நாள் மார்கழி.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பறந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாற்றிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
நாச்சியார் சமேத ஸ்ரீரங்கமன்னார் திருவடிகளே சரணம்.
Tuesday, December 21, 2021
கம கம வென
வல்லிசிம்ஹன்
இரட்டைக் கிளவி எப்போதோ படித்த நினைவு.
சரியாக நினைவில்லை.
மட மட வென்று எழுதித் தள்ளிய ,கடகட லொட லொட
வண்டி, கம கம வென்ற வாசத்தோடு
போபோ போ என்று வார்த்தைகள்சேர
ஜல்ஜல் என்ற நாதத்தோடு, நில் நில் என்று சொன்னாலும்
நிற்காமல் சுகம் சுகம் என்ற சந்தோஷமாகச் செல்லும்.
இன்னும் எத்தனை பாடல்கள்
இருக்கின்றனவோ தெரிய வில்லை.:)சமய சஞ்சீவி என்ற படத்தில் வரும் பி பி ஸ்ரீனிவாஸ்,ஜிக்கி பாடல்
பாசம் ,படம். ஜானகி அம்மா குரல்.இதய கமலம் படம்,
சுசீலா அம்மா, ஸ்ரீனிவாஸ் குரலில் இந்தப் பாடல். மதுரையில் பார்த்த
படம். ஷம்மி கபூரை நினைவு கொள்ள வைக்கும் ரவிச்சந்திரனின்
நடனம். அப்போது விகடனில் அவ்வளவு
சுகம் இல்லாத விமரிசனம் படித்த நினைவு.
ஆனால் எங்களுக்குப் பிடித்தது:)
கட கட லொட லொட பாட்டுப் பதிய ஆசைதான். அதில் வரும் ஒரே ஒரு சொல் எனக்கு
உகப்பாக இல்லை. எப்படித்தான் அவசியமில்லாத
வார்த்தைகளைப் புகுத்தி
விடுகிறார்களோ.
அந்தப் பாடலில் நடிகை ரேகாவின் அம்மாவும், தெலுங்கு நடிகர் ஸ்ரீராமும்
சிறப்பாக நடித்திருப்பார்கள்.
அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக அந்தப் பாடலைப்
பதியவில்லை.
1952 ஆம் வருடம் வந்த சம்சாரம் படம்.
அந்தப் படத்திலே வரும் 'அம்மா பசிக்குதே,தாயே பசிக்குதே'
பாட்டைக் கேட்டாலே பதை பதைப்பாக இருக்கும்.
அந்தப் படமும் வெற்றிகரமாக ஓடி இருக்கும்.
தங்கை என்ற படம் 1967இல் வந்தது என்று நினைக்கிறேன்.
இந்த இனியது இனியது உலகம் ''
பாடல் காட்சியில் சிவாஜி கணேசன் அவர்கள்
நடிப்பு எப்போதும் போல(!!!!)
மிகச் சிறப்பாக இருக்கும். யூடியூபில்
இந்தப் பாடல் காட்சியில் ஒரே மழை போலத் தெரிந்தது.
நல்ல சொற்களுக்காக ஒரு பாடல்.
பாட்டுப் பாடவா என்று ஒரு படம் வந்தது. நம் எஸ்பி பி சார்
பாட்டுகள் மிக மிக இதம்.
அவர் காதலிக்கும் பெண் அவருக்கு வைத்தியம் செய்யும் ரஹ்மானை
விரும்புவார்.
இருவரும் பாடும் இந்த நில் நில் நில்
பாடல் அப்போது மிகப் பிரபலம்.
கண்ணுக்கும் குளிர்ச்சி.
சுசீலா அம்மாவின் குரலில்
அக்கா அக்கா அக்கக்கா பாடல்.
காக்கும் கரங்கள் படம். இதுவும் மதுரையில் வெளியிடப்
பட்டது. பார்க்க முடியவில்லை.
பாடல்கள் மிக அருமை.
Sunday, December 19, 2021
ஓடங்களும் வெண்ணிலவும்.....
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மார்கழி மாத பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.
பாசுரப்படி குறுங்குடி நம்பி அனைவரையும் காப்பான்.
நான் என் வழக்கப்படி திரைப்பாடல்களில்
லயித்தாலும் மறுபக்கம் இறைவனையும் நினைக்கிறேன்.:)
காத்திருந்த கண்கள். வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு வந்த கதையில்
கேரள ஓடம்.!!!!!அபிமன்யு, வத்சலா, கிருஷ்ண ருக்மிணி.:)
தேன் நிலவில் ஜெமினி, வைஜயந்தி.;0)
பைத்தியமாகப் பார்த்து களித்த பாஹுபலி:)
Saturday, December 18, 2021
அஞ்சலி ,....
வல்லிசிம்ஹன்
அன்புத் தோழி மதுமிதாவின் இனிய கணவர்
உயர்திரு ரங்க நாத ராஜா இறையடி இணைந்தார்.
அன்புத் தோழியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
உயர்ந்த மனிதருக்கு அஞ்சலிகளும் வந்தனங்களும்.
அவர்கள் குடும்பத்துக்கும் இறைவன் ஆறுதல் வழி காண்பிக்க வேண்டும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Friday, December 17, 2021
சில உண்மைகள்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அன்புத் தங்கை சுபா அனுப்பிய செய்தி.
[3:45 AM, 12/17/2021] Subha.: படித்ததில் பிடித்தது!
60 லிருந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_
“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”
என்று கேட்டேன்.
அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார்.
அவ்வாறே அவர் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட பட்டியலை அனுப்பினார். இதோ 👇
1) என் பெற்றோரிடம்,
என் உடன்பிறந்தோரிம்,
என் மனைவியிடம்,
என் குழந்தைகளிடம்,
என் நண்பர்களிடம்
அன்பும், பாசமும், காதலும்
கொண்டிருந்த நான், இப்போது
என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.
2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.
3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.
பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன்.
4) நாள் முழுதும் உழைக்கும் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறைக்
காசுக்காகக் காத்திராமல் திரும்புகிறேன்.
இதனால் அவர் முகத்தில் அரும்பும்
புன்னகையை விரும்புகிறேன்.
5) என்னைவிட முதியவர்கள்
ஒரு செய்தியை - நிகழ்வை - கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும், 'இதை நீங்கள்
முன்பே கூறிவிட்டீர்கள்' என்று முகத்தில் அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன்.
6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.
நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது _(Peace is more precious than perfection) என்பதை உணர்ந்துகொண்டேன்.
7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
8)என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம் இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை. தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன். _ *(personality speaks louder than appearances.)
9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன்.
10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை.
11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை.
12) உறவுகளை முறித்துக் கொள்வதைவிட என்னுடைய egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.
13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன்.
14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன்.
15) மற்றவர்களைக் குறைசொல்வதையும், புறங்கூறுவதையும் முற்றிலுமாக தவிர்த்துள்ளேன்.
16) என்னால் மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன்.
17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.
18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன்.
19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக்கொண்டுள்ளேன்.
ஏன் வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்? _எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே! _*அமைதியான அன்பான வாழ்க்கைக்குக் கைகொடுக்குமே! வழி காட்டுமே!
[4:58 AM, 12/17/2021] Revathi Narasimhan: 👌👌👌👌👌👌👌👌
Thursday, December 16, 2021
சினிமாவில் ஊஞ்சல் பாடல்கள்.
விஜயா கார்டன்ஸில் ஒரு பிள்ளையார் கோயிலும், பக்கத்து மாந்தோப்பும்
அதில் ஒரு குளமும் மேலே இரு ஊஞ்சலும் இருக்கும்.
பார்த்த படங்களையும் பாடல்களையும்
பதிகிறேன்.:)
வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
Wednesday, December 15, 2021
பழைய படங்கள். பாடல்கள்., பெயர்கள்.
Vallisimhan.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
நீளத்தலைப்புகளுடன் 55,60களில் படங்கள் வந்தன.
''பெற்ற மகனை விற்ற அன்னை,''
''தாய் மகளுக்குக் கட்டிய தாலி,''
''கடன் வாங்கிக் கல்யாணம்,''
''கூடி வாழ்ந்தால் கோடி நன்மை,''
மணாளனே மங்கையின் பாக்கியம்,
கணவனே கண்கண்ட தெய்வம்........:)
தை பிறந்தால் வழி பிறக்கும்,
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,
பானை பிடித்தவள் பாக்கியசாலி
""""""""""
தாய்க்குப் பின் தாரம்
தாயைக் காத்த தனயன்
தாய் சொல்லைத் தட்டாதே
மக்களைப் பெற்ற மகராசி
மாதர் குல மாணிக்கம்
டைரக்டர் ஸ்ரீதர் வந்த பிறகு ஏழு எழுத்துப் படங்கள்,
பீம்சிங்கின் பா வரிசை
பி எஸ் வீரப்பாவின் ஆ வரிசை,
மூன்றெழுத்துப் படங்கள்,
பிறகு வந்த இரு வார்த்தை, ஒரு வார்த்தைப் படங்கள், ஒரு எழுத்துப் படங்கள்
எல்லாமே நல்ல ஆராய்ச்சி செய்யப் படவேண்டியவை தான்:)
ரொம்ப அவசியம் இல்லையா.
பொழுதும், குளிரும் எழுத வைத்த பதிவு.
இன்னும் நிறைய படங்கள். சரியாக நினைவுக்கு
வரவில்லை.
அவற்றிலிருந்து சிலபாடல்கள்.
Monday, December 13, 2021
Sowkar Janaki 90 ...Part 2
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற எது அவசியமோ
அதைக் கைவிடாமல் சாதித்துக் காட்டி இருக்கிறார்.
நம் சௌகார் ஜானகி. சோகப் பாத்திரங்களுக்கே அவர் சரிப்படும் என்று,
தியாகம் செய்யும் அக்கா, மனைவி,
கண்ணில்லாத மங்கை என்ற பாத்திரங்களே
அவருக்குப் பொருத்தம் என்று ஒதுக்கப்
படும்போதும் நடித்தார் . நீ அப்படி இல்லை
..
அடுத்தடுத்த வந்த படங்களில் ,புதிய பறவை,ரங்க ராட்டினம், காவியத் தலைவி,
இரு கோடுகள், தில்லுமுல்லு, உயர்ந்த மனிதன் வெவ்வேறு பாத்திரங்கள்.
பட்டு மாமி பாத்திரத்துக்கு நீதான் என்று எதிர் நீச்சல் படத்தில்
பட்டுப் புடவையில் ஜொலிக்க வைத்தார் இயக்குனர்
பாலசந்தர்..
கண்ணும் கண்ணீருமாகவே பார்த்த நமக்கு இவை எல்லாம்
நல்ல மாறுதல்.
நல்ல பண்பட்ட நடிகையாக வளையவரும்
திருமதி ஜானகியைப் பற்றி எனக்குத் தெரிந்த
செய்திகள் மட்டும் இங்கே.
அவர் குடும்ப வாழ்க்கையிலும் எத்தனையோ
சவால்களைச் சந்தித்து இருக்கிறார்
அந்த செய்திகளும் பேசும்படத்தில் படித்தது தான்.
அவரின் பெண் வழிப் பேத்தி வைஷ்ணவி
சில படங்களில் நடித்திருந்தாலும்
பாட்டியின் முனைப்பு இல்லை.
ஜானகி அவர்கள் ஏழ்மையைக் கடந்து வந்த நாட்கள்
அவரது யூடியூப் பேட்டிகளில் காணலாம்.
அவருடைய உரம் எல்லாப் பெண்களுக்கும் வேண்டும்.
இந்த 90 வயதிலும் அவரால் கண்ணுக்கு இனிமையாகக்
காட்சி கொடுக்க முடிகிறது என்றால்
மன உற்சாகம் தான் காரணம்.
அவர் தரும் நம்பிக்கை நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
வந்தனங்களுடன் வாழ்த்துகளையும் சொல்கிறோம்.
சௌகார் ஜானகி 90.!!!!! Part 1
வல்லிசிம்ஹன்
சௌகார் ஜானகி 90.!!!!!
Iru kodugal
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
டிசம்பர்12 இல்
சௌகார் ஜானகி 90.!!!!!
அருமையாக இருக்கிறது கேட்க.
இனிய கம்பீர வாழ்வு வாழும் ஒரு அருமைப் பெண்ணிற்கு
அனேக வந்தனங்களும் வாழ்த்துகளும்.
என்றும் அழியாத இளமையும், வளமான முக பாவங்களும்,
சிறப்பான நடிப்பையும் நமக்குத் தந்து கொண்டிருக்கும் இந்த
இளைஞிக்கு நமஸ்காரங்கள்.
பாண்டி பசார் கடைகளில் இவரைப் பார்த்திருக்கேன்.
சகஜமாகப் பேரம் பேசிக் கொண்டிருப்பார்.
இவர் உயர்ந்த (உயரமான) பெண் என்ற கற்பனை:)
பார்த்தால் ஒரு சாதாரண குர்த்தா ,சல்வாரில்
கழுத்தோடு நின்று விட்ட முடியோடு,
கன்னம் குழிந்த சிரிப்போடு,
ஒரு சின்னம் சிறு அம்மாவைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம்.
அவரது படங்களிலிருந்து சில பாடல்களையும் காட்சிகளையும்
பகிர்வதில் எனக்குப் பெருமை.
என்றும் வாழ்க வளமுடன்.
உயர்ந்த மனிதன்
https://youtu.be/BjzO0hhE8FU
இப்பொழுதும் நடிகர் சந்தானத்துடன் ஒரு படம் நடித்திருக்கிறாராம். படம் பெயர் பிஸ்கோத்:)
Saturday, December 11, 2021
Wednesday, December 08, 2021
பொன் மாலைப் பொழுது:)
எல்லோரும் வாழ வேண்டும்.
Labels: வணக்கங்கள்., வாழ்த்துகள்
Friday, December 25, 2009
சென்னை -நான்கு லஸ் சாலையில் பூமியின் நேரம்
டிசம்பர் இருபத்தி மூன்றாம் தேதி வழக்கம்போலத்தான் சென்றது. சாயந்திரம் நான்கு மணிவரை. வந்திருந்த உறவினர்களும் கிளம்பினார்கள், அந்தக் சத்தம் பெரிதாகக் கேட்டது.
உடனே ஒரு தீய்ந்த வாசனை. மின்சக்தியும் போய்விட்டது.
"அதான் Inverter இருக்கு. மின்சாரம் வந்துவிடும்"
என்று அதன் பட்டனைத் தட்டினால் ஒ ''என்று காத்த ஆரம்பித்துவிட்டது. இதென்னடா இன்னிக்கு வந்த வேதனை என்று சலித்தபடி,சரி, போ . தானே சரியாகிவிடும் என்று ,ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடிக் கொண்டே வாசலில் செடிகள் பக்கத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,
என்ன இருந்தாலும் இந்தக் காற்றை உள்ளே அனுபவிக்க முடியுமா என்று நினைத்தபடி தி.ஜானகிராமனின் 'அன்பே ஆரமுதே' நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.
குளிர் காலமாச்சே :) இருட்ட ஆரம்பித்துவிட்டது. கொசுக்கள் படையெடுப்பும் ஆரம்பிக்க, உடல் பயிற்சிக்குப் போயிருந்த சிங்கமும் வந்தார். ஏன் இருட்டில உட்கார்ந்திருக்க ? என்று கேட்டபடி உள்ள போய் விளக்கு ஸ்விட்ச் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துவிட்டு,, ஒ!பவர் இல்லையா. வந்துடும் அப்படினுட்டுப் பக்கத்து வீடுகளைப் பார்த்தார்.
ஒரே ஜகஜ்ஜோதியாக விளக்குகள் சுற்றிலும்.
"அட, நம்ம வீட்ல தாம்மா இல்ல.''ஈ.பி '' கூப்பிடு" என்று விட்டுக் குளிக்கச் சென்றார்.
அங்கயும் வெளிச்சம் இல்லாததால் ,
தேடும் படலம் ஆரம்பித்தோம்.
''மெழுவர்த்தி எங்கே, டார்ச் எங்கே.
சாமான் வச்ச இடத்தில இருந்தா இந்தப் பிரச்சினை கிடையாது . தீப்பெட்டில இருந்து ,தேட வேண்டியதா இருக்கே ''என்ற முனுமுனுப்பு காதில் விழுந்தாலும் நான் நகருவதாக இல்லை.
இருட்டில மோதிக்க வேணாம் என்கிற நல்ல எண்ணம்தான்.!
197 அஸ்ஸிஸ்டன்ஸ் அழைத்து,
மாறின லஸ் (கம்ப்ளைன்ட்)நம்பரை அறிந்து
அழைத்தால் அவர்கள்
இதோ வருகிறேன்னு சொல்லி ஒரு மணி கழித்து வந்தார்கள்.
அப்போதான் புரிந்தது இந்த மின்வெட்டு மாயம்.!!!!
எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்போது, எங்கள் லைனிலிருந்து பிரித்துக் கேபிள் கொடுத்திருக்கிறார்கள். அது நம் மின்சாரத்தைத் துண்டித்து இருக்கிறது
இந்த நேரத்தில் யாரோட சண்டை போடுகிறது என்று நொந்தபடி ,
வந்த லைன்மேன் சொன்னபடி , இவர் பைக்கை எடுத்துப் போய் எக்ஸ்ட்ரா கேபிள் லைன் வாங்கி வந்தார். மணி ஒன்பதரை.
அதற்கு மேல் அவர்கள் வேலை ஆரம்பித்து நடுவில் காப்பி ,குடிக்கப் போய், மின்சக்தி வந்த பொழுது ,மணி பத்தரை.
அதற்குத்தான் இந்தத் தலைப்பு வைத்தேன்.
நாமளும் ஒரு ஆறு மணி நேரம் இருட்டில இருந்து பூமி நேரம் கொண்டாடி பூமியின் வெப்பத்தைத் தணித்து விட்டோம் என்று:)
எல்லோரும் வாழ வேண்டும்.
Tuesday, December 07, 2021
Saturday, December 04, 2021
ஈரமுள்ள நெஞ்சம் ஈரம் கொண்ட கண்கள்...
வல்லிசிம்ஹன்
கண்கள் கிடைப்பது கடவுள் கருணை.
பார்க்க படிக்க உணர நோக்க அன்பு செய்ய
எல்லாவற்றுக்கும் இன்றி அமையாத பார்வை.
சர்க்கரை நோய் என்று தெரிந்தவுடன்
வைத்தியர்கள் சொல்வது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
கண் பரிசோதனை.
யோகம் செய்பவர்களுக்கு எல்லாமே நலம்.
அந்த யோகம் கையில் வருவதற்கும் ஒரு யோகம் வேண்டும்.
வாழ்வே ஒரு தியானம், எட்டு மணிகளுக்கு ஒரு தடவை
உணவு இருந்தால் போதும்.
பசி ஒன்றே நம்மை மதியுடன் இயங்க வைக்கும்.
உண்ட வயிறு மயக்கம் தரும்.
இதெல்லாம் யோகி ஒருவர் சொல்கிறார்.
கண்களுக்கும் உணவு கொடுத்தால் மட்டுமே
புத்திக்கும் வேலை,
ஓய்வு கொடுக்கச் சொன்னது கண்களில் வந்த உலர்வு.
இணையமே உலகம் என்றிருந்தால்
இது போல வரும் என்ற கண்டிப்பான எச்சரிக்கையுடன் விடுவித்தார்
வைத்தியார்.
கண்,திரை, உலர்ந்திருப்பது எல்லாமே
நான் போகும் வழி சரியில்லை என்று சொன்னார்.
இனி படிப்பதையும்,இணையம் மேய்வதையும்
குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி வந்தேன்.
இங்கிருப்பவர்கள் எல்லோரும் , ஏன் உலகம் முச்சூடும்
கணினி மூலம் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று கேட்க
முடியுமா.
அதற்கு ஒரு லெக்சர் கிடைக்கும்!!!!!
Thursday, December 02, 2021
2007 April ,,,,150...இன்று டிசம்பர் 3 வரை 2501 பதிவுகள்
வல்லிசிம்ஹன்
2007 April Post 150 .
ஒரு வருடமும் ஓடி விட்டது. என்னதான் துளசி மாதிரி சத்தம் போடாம இருக்கணும்ன்னு பார்த்தாக் கூட முக்கால் குடம், நிறைகுடம் இந்த வகை இல்லை .
அதனால் ''அப்பப்போ, பார்த்தியா நானும் நானும் ''என்று கூவ வேண்டும் போலத் தோன்றியதால் சொல்லி விட்டேன் நீட்டோலை வாசியா நெடுமரமாக(நிற்காமல்)
என்னை விட்டு வைக்காமல் பள்ளியில் சேர்த்த அப்பா, சிலேட்டும் கையுமாக உட்கார வைத்த அம்மா, போட்டிக்காகக் கூடப் படித்த என் தம்பிகள், என் ஆசான்,ஆசிரியைகள் தமிழ் மன்றம்,
இப்பொது தமிழ்மணம். பிழையோடு எழுதினாலும் பொறுத்துக் கருத்தை மெச்சும் என் இனிய நண்பர்கள். மஞ்ஜுர் ராஜா, தமிழ் எழுத்துருவை விளக்கி இ.கலப்பை அறிமுகம் செய்து வைத்து மற்றொரு உலகத்துக்கு அழைத்த உதவி செய்தவர். நன்றி அவருக்குத்தான் சொல்லணும். வலை நட்புகள். என்னப்பானு கேட்க துளசி, கூடவே வளர்ந்த கீதா சாம்பசிவம், பிரேமலதா, அன்பு மதுரா பின்னூட்டம் இட்டுப் பெருமை சேர்த்த ஓகை, குறும்பன்,வடுவூர் குமார், நம்ம கொத்ஸ், மௌலி மதுரையம்பதி,ரவி கண்ணபிரான்,(புதுக் குரல் அறிமுகமாக என்னைப் பாடச் சொல்லி அன்பர்களைக் காண்பித்துக் கொடுத்தார்கள் இருவரும்)
குமரன் திரு எஸ்.கே, தி.ரா.ச, கோவி.கண்ணன், ஜெயஸ்ரீ, பிரியா, சந்தர் , பின்னூட்டம் போட ஓடி வரும் நாகை சிவா, நம்ம பொன்ஸ்.யானை,பூனைப் படங்களை எங்கே தேடலாம்னு சொல்லிக் கொடுத்தவர்.:-)
அம்பி,(கல்யாண மாப்பிள்ளை. மே மாதம் டும்டும்டும்) ஷைலஜா ,
சர்வேசன்(பாட வைத்தார்) முத்துலட்சுமி,மங்கை ,செல்லி, மழை ஷ்ரேயா,கஸ்தூரிப் பெண்,மாதங்கி, காட்டாறு..... இப்படிப் போகிறது என் வலைக் குடும்பப் பட்டியல்.
இன்னும் எத்தனையோ பெயர்கள் விட்டு இருக்கும். இன்று சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியதை எழுதிவிட்டேன். பின்னூட்டம் போடாமல் அம்மாவை ஊக்குவிக்கும்
நான் பெற்ற செல்வங்களையும் சொல்லணும். எல்லாவற்றுக்கும் மேலெ வலையில் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்கள் எத்தனையோ!!
அதில் உலகம் சின்னது என்று சொல்ல வைத்தது தமிழ்மணம் தான். ஓவர் செண்டிமெண்ட் வேண்டாம் இல்லையா? மீண்டும்.பார்க்கலாமே.
அனைவருக்கும் நன்றி.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2021 December 2 .
எட்டி எட்டி 2500 வர எண்ணிக்கைதான் கூடி இருக்கிறது.
பதிய வேண்டிய எண்ணங்கள் இன்னும் எத்தனையோ .
தெம்பும் ஊக்கமும் வர இறைவனே அருள வேண்டும்.
எத்தனை நல்ல உள்ளங்களோடு
பயணித்திருக்கிறேன் நான்.
எவ்வளவு
பாக்கியம் செய்திருந்தால் இத்தனை நட்புகள்
கிடைத்திருக்கும். !!!!!
இப்போது சேர்க்க வேண்டியது, தி கீதா, நெல்லைத் தமிழன் ,ஸ்ரீராம்.
திருமதி கோமதி அரசு,.எங்கள் ப்ளாக்,துளசிதரன் தில்லையகத்து. பானு வெங்கடேஸ்வரன்,கமலா ஹரிஹரன்
வெங்கட் நாகராஜன், மறக்காமல் இருக்க இறைவன் துணை.
''கண்ணிலே அன்பிருந்தால் ''பாடல் நினைவுக்கு வருகிறது.
அதுதான் இப்போதைக்கு நான் சமாளித்துக் கொண்டிருக்கும்
பிரச்சினை.
எல்லா நண்பர்களும் என்னை மன்னிக்க வேண்டும்.
மீண்டும் அடியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)