Blog Archive

Thursday, December 02, 2021

2007 April ,,,,150...இன்று டிசம்பர் 3 வரை 2501 பதிவுகள்

வல்லிசிம்ஹன்

2007 April Post 150 .



  
ஒரு வருடமும் ஓடி விட்டது. என்னதான் துளசி மாதிரி சத்தம் போடாம இருக்கணும்ன்னு பார்த்தாக் கூட முக்கால் குடம், நிறைகுடம் இந்த வகை இல்லை . 

அதனால் ''அப்பப்போ, பார்த்தியா நானும் நானும் ''என்று கூவ வேண்டும் போலத் தோன்றியதால் சொல்லி விட்டேன் நீட்டோலை வாசியா நெடுமரமாக(நிற்காமல்) 

என்னை விட்டு வைக்காமல் பள்ளியில் சேர்த்த அப்பா, சிலேட்டும் கையுமாக உட்கார வைத்த அம்மா, போட்டிக்காகக் கூடப் படித்த என் தம்பிகள், என் ஆசான்,ஆசிரியைகள் தமிழ் மன்றம்,

 இப்பொது தமிழ்மணம். பிழையோடு எழுதினாலும் பொறுத்துக் கருத்தை மெச்சும் என் இனிய நண்பர்கள். மஞ்ஜுர் ராஜா, தமிழ் எழுத்துருவை விளக்கி இ.கலப்பை அறிமுகம் செய்து வைத்து மற்றொரு உலகத்துக்கு அழைத்த உதவி செய்தவர். நன்றி அவருக்குத்தான் சொல்லணும். வலை நட்புகள். என்னப்பானு கேட்க துளசி, கூடவே வளர்ந்த கீதா சாம்பசிவம், பிரேமலதா, அன்பு மதுரா பின்னூட்டம் இட்டுப் பெருமை சேர்த்த ஓகை, குறும்பன்,வடுவூர் குமார், நம்ம கொத்ஸ், மௌலி மதுரையம்பதி,ரவி கண்ணபிரான்,(புதுக் குரல் அறிமுகமாக என்னைப் பாடச் சொல்லி அன்பர்களைக் காண்பித்துக் கொடுத்தார்கள் இருவரும்)


 குமரன் திரு எஸ்.கே, தி.ரா.ச, கோவி.கண்ணன், ஜெயஸ்ரீ, பிரியா, சந்தர் , பின்னூட்டம் போட ஓடி வரும் நாகை சிவா, நம்ம பொன்ஸ்.யானை,பூனைப் படங்களை எங்கே தேடலாம்னு சொல்லிக் கொடுத்தவர்.:-) 

அம்பி,(கல்யாண மாப்பிள்ளை. மே மாதம் டும்டும்டும்) ஷைலஜா ,
சர்வேசன்(பாட வைத்தார்) முத்துலட்சுமி,மங்கை ,செல்லி, மழை ஷ்ரேயா,கஸ்தூரிப் பெண்,மாதங்கி, காட்டாறு..... இப்படிப் போகிறது என் வலைக் குடும்பப் பட்டியல்.

 இன்னும் எத்தனையோ பெயர்கள் விட்டு இருக்கும். இன்று சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியதை எழுதிவிட்டேன். பின்னூட்டம் போடாமல் அம்மாவை ஊக்குவிக்கும் 
நான் பெற்ற செல்வங்களையும் சொல்லணும். எல்லாவற்றுக்கும் மேலெ வலையில் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்கள் எத்தனையோ!! 

அதில் உலகம் சின்னது என்று சொல்ல வைத்தது தமிழ்மணம் தான். ஓவர் செண்டிமெண்ட் வேண்டாம் இல்லையா? மீண்டும்.பார்க்கலாமே.

அனைவருக்கும் நன்றி.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2021 December 2 .


எட்டி எட்டி 2500 வர எண்ணிக்கைதான் கூடி இருக்கிறது.
பதிய வேண்டிய எண்ணங்கள் இன்னும் எத்தனையோ .
தெம்பும் ஊக்கமும் வர இறைவனே அருள வேண்டும்.
எத்தனை நல்ல உள்ளங்களோடு 
பயணித்திருக்கிறேன் நான். 

எவ்வளவு 
பாக்கியம் செய்திருந்தால் இத்தனை நட்புகள்
கிடைத்திருக்கும். !!!!!

இப்போது சேர்க்க வேண்டியது, தி கீதா, நெல்லைத் தமிழன் ,ஸ்ரீராம்.
திருமதி கோமதி அரசு,.எங்கள் ப்ளாக்,துளசிதரன் தில்லையகத்து. பானு வெங்கடேஸ்வரன்,கமலா ஹரிஹரன்
வெங்கட் நாகராஜன், மறக்காமல் இருக்க இறைவன் துணை.

''கண்ணிலே அன்பிருந்தால் ''பாடல் நினைவுக்கு வருகிறது.
 
அதுதான் இப்போதைக்கு நான் சமாளித்துக் கொண்டிருக்கும்
பிரச்சினை.
எல்லா நண்பர்களும் என்னை மன்னிக்க வேண்டும்.
மீண்டும் அடியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

17 comments:

நெல்லைத் தமிழன் said...

முதல்ல உங்களுக்கு வாழ்த்துகள்.

நீங்க மத்தவங்களைக் கவனித்து அவங்க கதையை எழுதும்போது சூப்பர். எல்லாவற்றிலும் ஏதோ ஒன்று நமக்கு உபயோகமாக இருக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்.

நெல்லைத் தமிழன் said...

பெயர் சொல்லிப் பாராட்டினால், அவங்களுக்கு சந்தோஷம். ஆனால் இதில் பிரச்சனை என்னன்னா... எப்படியும் சில பெயர்களைக் குறிப்பிட மறந்துடும்.ஹாஹா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமாக உள்ளீர்களா? இன்று வரை 2000க்குமேல் பதிவுகள் தந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.உங்கள் பதிவுகளின் மூலம் நாங்களும் நிறைய கற்றிருக்கிறோம். நான் சென்ற வருடம் உங்களுடன் அறிமுகமானாலும், இப்போதுதான் அதுவும் இந்த 2021ல் தான் உங்களுடன் அதிகமாக பழக்கமாகியுள்ளேன். பழகிய நாள்தொட்டு உங்கள் அன்பான பண்புள்ளம் கண்டு நான் வியக்காத நாளில்லை. உங்கள் அன்பான நல்ல பேச்சுகளையும், நல்லெண்ணங்களையும் உங்களிடமிருந்து கற்று வளர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்கு உங்களுக்கு என்றும் என் பணிவான நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
மிக மிக உண்மை. இது மற்றதோழிகள் போல
பெரிய சாதனை இல்லை.

எனக்கு என்னை நினைவு செய்து கொள்ளத்தான்
இந்தப் பதிவு.

எழுதும் போது விட்டுப் போனவர்களின்
பெயர்களும் இப்போது நினைவுக்கு வருகிறது.

அவர்களுக்கு என்னைத் தெரியும் என்ற
நம்பிக்கையில் மேலே செல்கிறேன்.

வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி மா.
முன் போல வேகம் கொண்ட எக்ஸ்ப்ரஸ்
இல்லை. பாஸன்ஜர்தான்:)
பயணம் நீண்டதா குறுகியதா என்று காலம் தான்
தீர்மானிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

உங்கள் மாதிரி நல்ல உள்ளங்களே எனக்கு பக்க பலம்.
இன்னும் முக நூலில் சகுந்தலா கேசவன் என்று ஒரு தோழி இருக்கிறார்.
என்னை விட மூத்தவர். பாகவதம் போன்ற நல்ல விஷயங்களைத் தினம்
என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்.

நம் காமாட்சிமா இருக்கிறார்.
நெல்லைத் தமிழன் சொன்ன மாதிரி நிறைய பெயர்களை
விட்டிருக்கிறேன்.

இந்த வயதில் கூட நல்ல வார்த்தைகளைச் சொல்லவில்லை என்றால்
என் பெற்றோருக்கு இழைத்த அனீதியாகும்.

விரைந்து வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி.
நலமுடன் இருங்கள்.

ஸ்ரீராம். said...

நன்றி பாராட்டுதல் நல்லதொரு, பயில வேண்டிய கலை.  நான் உங்கள் தளத்தில் முதலில் கவரப்பட்டது, பதிவுக்குப் பதிவு இடம்பெறும் 'எல்லோரும் நலமாய் வாழணும்' வரி.

KILLERGEE Devakottai said...

இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் அம்மா.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி. உங்களுக்கு 2500 பதிவுகள் என்பது குறைவோ எனத் தோன்றியது. ஆனால் கணினி சொல்லுமே! எனக்கும் கிட்டத்தட்ட 2900 பதிவுகள் ஆகி இருக்கின்றன. எப்போவோ 3000 தாண்டி இருக்கணும். பதிவுகள் போடுவதைக் குறைத்துக் கொண்டதாலும் உடல்நலக்கேடால் சில மாதங்கள் பதிவுகளே எழுதாததாலும் 3000க்கு வரலை. ஆனால் இதைத் தவிர்த்து மற்ற வலைப்பக்கங்களைச் சேர்த்தால் நிறைய ஆகி இருக்கும். அப்படி நினைச்சு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான். :))))

மீண்டும் உங்களுக்கு வாழ்த்துகள். கண் விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ உங்கள் ஊர் தாங்க்ஸ் கிவிங்க் டே போல பதிவா!! ஆனால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அது தாங்க்ஸ் கிவிங்க்! நன்றி நவிலல்.
பாசிட்டிவ் விஷயம் அது.
அது போல நீங்கள் எப்போதும் சொல்லும் எல்லோரும் நலமாக வாழவேண்டும் ம் என்பது. (கோமதிக்காவும் வாழ்க வளமுடன் என்பதும்..)

அத்தனை பேருக்கும் சொல்லி எங்களையும் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க மிக்க நன்றி அம்மா.

நான் படித்த கான்வென்டில் சொல்லிக் கொடுத்த விஷயம் இது : தினமும் காலையில் எழுந்ததும் இறைவனைத் தொழுது உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை. இரவு தூங்கும் முன் இறைவனுக்கு நன்றி சொல்வது.

இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.

கடையில், பேருந்தில் ரோட்டில், ஆட்டோ ஒட்டுபவர் என்று எங்கும் நன்றி சொல்லிவிடும் பழக்கம். அப்படிச் சொல்லும் போது அவர்களின் முகத்தில் தோன்றும் அந்த உணர்வு! ஸ்மைல்!

அம்மா எழுதிக் கொண்டே இருங்கள்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

'கண்ணிலே அன்பிருந்தால் ''பாடல் நினைவுக்கு வருகிறது.

அதுதான் இப்போதைக்கு நான் சமாளித்துக் கொண்டிருக்கும்
பிரச்சினை.
எல்லா நண்பர்களும் என்னை மன்னிக்க வேண்டும்.
மீண்டும் அடியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.//

கண்ணிலே அன்பிருந்தால்// ஆம் மற்றவர்களுக்கும் நம் கண்ணை நாமே அன்பு செய்ய வேண்டும் அதற்கு நன்றியும்...

உங்கள் பிரச்சனை கண்டிப்பாக விரைவில் சரியாகிவிடும் அம்மா. அந்தக் கண்கள் கொடுக்கும் அன்பே அக்கண்களைப் பாதுகாத்துவிடும்.

எதற்கு மன்னிப்பு எல்லாம்? எப்போது முடிகிறதோ அப்போது எழுதுங்கள் அம்மா.

எல்லாம் சரியாகிவிடும்

கீதா

மாதேவி said...

2500 வாழ்த்துகள்.நலமாக இருங்கள்.

கோமதி அரசு said...

2501 பதிவுகள்! அருமை.

வாழ்த்துக்கள். உங்கள்
நட்பு வட்டத்திலும் இருக்கிறேன், அன்பு தங்கையாகவும் நான் இருப்பது மகிழ்ச்சி எனக்கு.

உடல் நலத்தோடு எல்லோரையும் வாழ்த்தி கொண்டு எப்போதும் பதிவுகள் கொடுத்து கொண்டு இருங்கள்.
பதிவுலகம் வந்த முதல் ஆண்டு நிறைவு பதிவு அருமை.

கண்ணிலே அன்பிருந்தால் பாடல் அருமையாக இருக்கும், அது போல உங்கள் கண்ணிலும் வார்த்தைகளிலும் எப்போதும் அன்பு நிறைந்து இருக்கும்.

வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
நலமுடன் இருங்கள்.
இனிய காலை வணக்கம்.

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனை
எப்பொழுதும் உண்டுமா.

நம் வாழ்வின் அடிப்படையே அதுதானே.
அனைத்து உயிர்களும் நன்மை பெற வேண்டும்போது
நாமும் நன்மை பெறுவோம்.

இப்பொழுதும் வேண்டுவது அதுதான்.
வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி
என்றும் நலமுடன் இருங்கள்.
கவனம் எடுத்து வந்து வாழ்த்தியதற்கு மிக நன்றி.
இணைந்திருப்போம் இணையத்தில்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பின் கீதா ரங்கன் மா.
எழுதுவதில் பிரச்சினை இல்லை. படிப்பதில் தான். எல்லோரும் ஆடியோ ப்ளாகிற்குப் போய் விடலாம என்று தோன்றுகிறது:)

இன்னும் அனைத்துப் பதிவுகளுக்கும் சென்று
பின்னூட்டம் இடவில்லை.

15 வருடங்கள் எழுதியதில் கிடைத்த நனமைகளுக்கு
நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

மீண்டும் வந்து படித்ததற்கு மிக நன்றிமா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதிமா,
வாழ்க வளமுடன்.

வாழ்த்துகளுக்கு மிக நன்றி .
நம் பதிவர்களில் 5000 தொட்டவர்கள் கூட
இருக்கிறார்கள்.
எழுதுவதை விட வந்து படித்துப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு
பதில் சொல்வது இன்னும் பெரிய கடமை.

அதை தான் இன்னும் சிறந்ததாக நினைக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்றால்,
கேள்விப்படுவதைப் பகிராமல் இருக்க முடியவில்லை.

அதனால் எல்லோரிடமும் இதையே சொல்கிறேன்.
எல்லோரும் அவரவர் வேலைகளுக்கு நடுவில்
எப்பொழுதாவது வந்து பார்த்தால் போதும்.

கோடையே தேவலை என்று ஆகிவிட்டது.
இந்த செயற்கை உஷ்ணம் படுத்தும் பாடு. தோல் வரண்டு
தொந்தரவு செய்கிறது.
மீள்வோம். பத்திரமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி.
மிக மிக நன்றி மா. தொடர்ந்து பயணிப்போம்.
நலமுடன் இருங்கள்.