எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மார்கழி மாத பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.
பாசுரப்படி குறுங்குடி நம்பி அனைவரையும் காப்பான்.
நான் என் வழக்கப்படி திரைப்பாடல்களில்
லயித்தாலும் மறுபக்கம் இறைவனையும் நினைக்கிறேன்.:)
காத்திருந்த கண்கள். வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு வந்த கதையில்
கேரள ஓடம்.!!!!!அபிமன்யு, வத்சலா, கிருஷ்ண ருக்மிணி.:)
தேன் நிலவில் ஜெமினி, வைஜயந்தி.;0)
பைத்தியமாகப் பார்த்து களித்த பாஹுபலி:)
18 comments:
எல்லாமே மிகப்பிரபலமான, படகு சார்ந்த இனிய பாடலக்ள்! ' நிலவும் மலரும்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!
அன்பின் மனோ ,
நலமுடன் இருங்கள்.
சில நேரங்களில் பாடல்களில் நிம்மதியைத் தேடும் போது
தோன்றிய எண்ணம் இது.
இன்னும் நிறையப் பாடல்கள் இருக்கின்றன.
நிலவும் மலரும் எந்தக் காலத்திலும் கேட்க இனிமை.
கேட்டு ரசித்ததற்கு மிகவும் நன்றி.
சில வருடங்களுக்கு முன் நான் இப்படி படகு பாடல்களாய் பேஸ்புக்கில் போட்டிருந்தபோது நிறைய பாடல்கள் லிஸ்ட்டில் குவிந்தன. மேகம் கருக்கையிலே முல்லை மலர் மேலே, வருது வருது இளங்காத்து, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, ஓ ஷாம் குச் அஜீப், திஸ் ஐஸா.. இப்படி நிறைய மனதில் வந்து கொண்டே இருந்தன / இருக்கின்றன!
நம்புவார் பதி வைகுந்தம் காண்பது கண்ணிநுண் சிறுத்தாம்பினால் பாசுரத்தில்ல்லவா?
இன்னும் ஆறு நாட்களில் அவன் அருள் இருந்தால் திருக்குறுங்குடி தரிசனம் எனக்குக் கிடைக்கும், பாண்டியநாடு மலைநாடு யாத்திரையில்
அன்பின் முரளிமா,
ஆமாம் மா. கண்ணி நுண் சிறுத்தாம்பு தான்.
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே!!
மதுரகவியின் ஆச்சார்யன் நம் நம்பியின் அவதாரம் தானே!!
என்ன இனிமையான பாசுரம்.
நல்ல படியாகப் போய் வாருங்கள் எனக்கும் சேர்த்து
அழகிய நம்பியைச் சேவித்து வாருங்கள்.
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
அட இது ஏற்கனவே வந்துவிட்டதா.!!!
இந்தப் பதிவை எழுதி ஒரு வாரம் ஆனது.
பல காரணங்களால் பப்ளிஷ் செய்யவில்லை.
நிறைய பாடல்கள் இருக்கின்றன.
வோ ஷாம் குச் அஜீப் தி
மறக்க முடியாதது.
ஓ மாஜி ரே என்று ஆரம்பித்தால் நிறைய கிடைக்கும்.
முல்லை மலர் மேலே நல்ல சாய்ஸ்.
அருமையான பாடல்கள் அனைத்தும். நிலவும் படகும் சார்ந்த பாடல்கள்!
ரம்மியமான சூழல். மனம் கிளர்ச்சியடையும் சூழலும் கூட. இளம் வயதென்றால் மனம் கற்பனையை விரித்துப் பறக்கும்.
பகிர்விற்கு மிக்க நன்றி வல்லிமா
துளசிதரன்
நிலவும் படகும் என்றதுமே நினைவுக்கு வந்த பாடல் நிலவும் மலரும் ஆடுது, ஆஹா இன்ப நிலாவினிலே பாடல் இரண்டும்...
அருமையான பாடல்கள் எல்லாமே. கேட்டு ரசித்த பாடல்கள்.
கீதா
எல்லாமே கேட்டு ரசித்த அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.
''அருமையான பாடல்கள் அனைத்தும். நிலவும் படகும் சார்ந்த பாடல்கள்!
ரம்மியமான சூழல். மனம் கிளர்ச்சியடையும் சூழலும் கூட. இளம் வயதென்றால் மனம் கற்பனையை விரித்துப் பறக்கும்''
அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நிலவு அமைதியையே
கொடுக்கும். சில நேரம் பழைய நினைவுகளினால்
சலிப்பதும் உண்டு,
ஆனந்தத்தில் மூழ்குவதும் நடக்கும்:)
"நிலவும் படகும் என்றதுமே நினைவுக்கு வந்த பாடல் நிலவும் மலரும் ஆடுது, ஆஹா இன்ப நிலாவினிலே பாடல் இரண்டும்..."
நமக்கு நினைவு வருவதே இனிய பாடல்கள் தான். நம் வாழ்வுக்கு ஏதாவது அர்த்தம்
கொடுக்கின்றன. நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
எல்லா பாடல்களும் மிக அருமையான தேர்வு.
எல்லா வற்றையும் கேட்டேன்.
சில நேரம் பாடல்கள் மனதை அமைதி படுத்தும்.
உங்கள் மார்கழி மாத பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
குறுங்குடி நம்பி அனைவரையும் காக்க வேண்டும்.
ஆஹா ! இன்பநிலா பாட்டு மிகவும் பிடிக்கும், கிருஷ்ணனின் குறும்பு நன்றாக இருக்கும் இந்த பாட்டில்.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நிலவுதான் நமக்குப் பிடித்த அன்புத்தாய்.
அதோடு அந்த நிலவில்
படகில் செல்வதும் காண மிகவும் அருமை. எனக்கென்னவோ
துடுப்பு வலிக்கும் படகு கொஞ்சம் அச்சத்த்தைத் தரும். மோட்டார் போட் என்றால்
அச்சம் இல்லை.
உங்களுக்கும் இந்தப் பாடல்களும் என் டி ராமராவின்
கிருஷ்ணன் குறும்பு எனக்கும் பிடிக்கும்.
மாயா பஜார் படமும் பிடிக்கும்.
மிக நன்றி தங்கச்சி.
வணக்கம் சகோதரி
இந்த பதிவுக்கு ஒரு கருத்துரை தந்திருந்தேனே வரவில்லையே?
நிலவும் படகுமாக அத்தனையும் அழகான பாடல்கள். பாடல்களை நேற்றே கேட்டு ரசித்து விட்டுதான் கருத்து பதிந்தேன். தந்த கருத்தின் வரிகள் நினைவில் வரவில்லை. அந்த கருத்து வரவில்லை போலும். பகிர்வுக்கு நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
அருமையான பாடல்கள். நிலவும்,ஓடமுமாக இனிமையான அத்தனைப் பாடல்களையும் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் கமலாமா,
இந்த மெயில் ஸ்பாமுக்குப் போயிருந்தது.
மன்னிக்கணும் மா. நீங்க சொல்லி இருக்காவிட்டால் பார்த்திருக்க மாட்டேன்.
இப்போது பதிவு இட்டுவிட்டேன் மிக நன்றி மா.
அன்பின் கமலாமா,
தங்கள் ரசிப்பு மிகுந்த பின்னூட்டங்கள் மிக மிக மகிழ்ச்சி கொடுக்கின்றன.
அதுவும் படகும் நிலவும் நீரும்
சேரும்போது
கிளர்ந்து வரும் பாடல்கள் என்னை எப்பொழுதும்
மகிழ்விக்கும்.நன்றி மா.
Post a Comment