Blog Archive

Tuesday, December 21, 2021

கம கம வென





வல்லிசிம்ஹன்

இரட்டைக் கிளவி  எப்போதோ படித்த நினைவு.
சரியாக நினைவில்லை. 

மட மட வென்று எழுதித் தள்ளிய ,கடகட லொட லொட
வண்டி,  கம கம வென்ற வாசத்தோடு
 போபோ  போ என்று வார்த்தைகள்சேர
ஜல்ஜல் என்ற நாதத்தோடு, நில் நில் என்று சொன்னாலும் 
நிற்காமல் சுகம் சுகம் என்ற சந்தோஷமாகச் செல்லும்.
இன்னும் எத்தனை பாடல்கள்

இருக்கின்றனவோ தெரிய வில்லை.:)
சமய சஞ்சீவி என்ற படத்தில் வரும் பி பி ஸ்ரீனிவாஸ்,ஜிக்கி பாடல்
பாசம் ,படம். ஜானகி அம்மா குரல்.


இதய கமலம் படம், 
சுசீலா அம்மா, ஸ்ரீனிவாஸ் குரலில் இந்தப் பாடல். மதுரையில் பார்த்த 
படம். ஷம்மி கபூரை நினைவு கொள்ள வைக்கும் ரவிச்சந்திரனின் 
நடனம். அப்போது விகடனில் அவ்வளவு 
சுகம் இல்லாத விமரிசனம் படித்த நினைவு.
ஆனால் எங்களுக்குப் பிடித்தது:)


கட கட லொட லொட பாட்டுப் பதிய ஆசைதான். அதில் வரும் ஒரே ஒரு சொல் எனக்கு
உகப்பாக இல்லை. எப்படித்தான் அவசியமில்லாத 
வார்த்தைகளைப் புகுத்தி
விடுகிறார்களோ.
அந்தப் பாடலில் நடிகை ரேகாவின் அம்மாவும், தெலுங்கு நடிகர் ஸ்ரீராமும் 
சிறப்பாக நடித்திருப்பார்கள்.

அந்த ஒரே ஒரு வார்த்தைக்காக அந்தப் பாடலைப்
பதியவில்லை.
1952 ஆம் வருடம் வந்த சம்சாரம் படம்.
அந்தப் படத்திலே வரும் 'அம்மா பசிக்குதே,தாயே பசிக்குதே'
பாட்டைக் கேட்டாலே பதை பதைப்பாக இருக்கும்.

அந்தப் படமும் வெற்றிகரமாக ஓடி இருக்கும்.


தங்கை என்ற படம் 1967இல் வந்தது என்று நினைக்கிறேன்.
இந்த இனியது இனியது உலகம் ''
பாடல்  காட்சியில் சிவாஜி கணேசன் அவர்கள்
நடிப்பு  எப்போதும் போல(!!!!)
மிகச் சிறப்பாக இருக்கும். யூடியூபில் 
இந்தப் பாடல் காட்சியில் ஒரே மழை போலத் தெரிந்தது.
நல்ல சொற்களுக்காக ஒரு பாடல்.

பாட்டுப் பாடவா என்று ஒரு படம் வந்தது. நம் எஸ்பி பி சார் 
பாட்டுகள் மிக மிக இதம்.

அவர் காதலிக்கும் பெண்  அவருக்கு  வைத்தியம் செய்யும் ரஹ்மானை
விரும்புவார்.
இருவரும் பாடும் இந்த நில் நில் நில் 
பாடல் அப்போது மிகப் பிரபலம்.
கண்ணுக்கும் குளிர்ச்சி.


சுசீலா அம்மாவின் குரலில் 
அக்கா அக்கா அக்கக்கா பாடல்.
காக்கும் கரங்கள் படம். இதுவும் மதுரையில் வெளியிடப் 
பட்டது. பார்க்க முடியவில்லை.

பாடல்கள் மிக அருமை.


17 comments:

வல்லிசிம்ஹன் said...

பாடல்கள் இனிமைதான்.
சில காட்சிகள் பார்க்க சிரமம்.கண்களை மூடிப் பாட்டை ரசிக்கலாம்:)

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஆகா... இரட்டைகிளவி வார்த்தைகளுடன் வந்த பாடல்கள் அத்தனையும் அருமை.

/மட மட வென்று எழுதித் தள்ளிய ,கடகட லொட லொட வண்டி, கம கம வென்ற வாசத்தோடு
போ போ போ என்று வார்த்தைகள் சேர
ஜல்ஜல் என்ற நாதத்தோடு, நில் நில் என்று சொன்னாலும் நிற்காமல் சுகம் சுகம் என்ற சந்தோஷமாகச் செல்லும்.
இன்னும் எத்தனை பாடல்கள்
இருக்கின்றனவோ தெரிய வில்லை.:)/

ஆகா.. பாடல்களின் இனிமைக்கு முன் நீங்கள் பகிர்ந்துள்ள இந்த ரசனை மிகுந்த வார்த்தை ஜாலங்களை ரசித்தேன்.

"கமகமவென நறுமண மலர்" "நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்." "இனியது இனியது உலகம்" பாடலும் கேட்டு நாளாகி விட்டது. கேட்டு ரசித்தேன். அத்தனை பாடல்களுமே சிறப்பாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

தங்கள் பாராட்டுக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் மிக நன்றி மா.

எப்பொழுது பார்த்தாலும்
பாடல்கள் மனத்தில் ஓடும்.இன்று உதித்த எண்ணத்தைப்
பதிவு செய்ய கொஞ்சம் மூளையைக் கசக்க வேண்டி வந்தது:)))

எவ்வளவு நல்ல பாடல்களை திரையுலகமும், கண்ணதாசனும், விஸ்வ நாதன் ராமமூர்த்தி, வாலி மஹாதேவன் ஐயா கொடுத்திருக்கிறார்கள்.

வானொலியே சதம் என்று கழித்த நாட்கள்

அவை பொன்னானவை.
உங்களுக்கும் அவை பிடித்ததுதான் அருமை.

மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிகப் பிடித்த சில சில ஆண்டுகள மின்னம் பலரும் போற்றும் வண்ணம் “ பாடலைச் சேர்க்க நினைத்து விட்டு விட்டடேன,

ஸ்ரீராம். said...

எனக்கும் ரவிச்சந்திரன் ஷம்மி கபூர் ஸ்டைலில் நடனமாடுகிறார் என்று தோன்றும்.  கே ஆர் விஜயாவைதான் எனக்குப் பிடிக்காது!  பாடல்கள் எல்லாமே இனிமை.  

ஸ்ரீராம். said...

'இனியது இனியது இளமை' பாடலும், 'தண்ணீரிலே தாமரைப்பூ' பாடலும் இன்னும் சில பாடல்களும் சென்ற வாரம் கேட்டுக்கொண்டிருந்தேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

எனக்கு இருவருமே இரண்டாம் பக்ஷம் தான்.
மிகையான மேக் அப். அனாவசிய அலட்டல்கள்.
அம்மாவீடு அப்போது ,விஜயா வீட்டுக்குப்
பக்கத்தில் இருந்ததும் ஒரு காரணம்:)

தங்கை படப்பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
இதில்தானே கேட்டவரெல்லாம் பாடலாம் வரும்?

வல்லிசிம்ஹன் said...

''தண்ணீரிலே தாமரைப்பூ''
பாடல் நல்ல உருக்கம்.

சிவாஜி ஒருவரால் மட்டுமே படத்தை தாங்க முடியும்.
நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அட ! இது அழகான தலைப்பு! அம்மா உங்கள் செலக்ஷன் செம. அதுவும் ஒவ்வொரு தலைப்பு கொடுத்து அதுவும் அதற்கான பாடல்கள் எல்லாம் நினைவு கொண்டு இங்கு பகிர்வது சூப்பர்.

எனக்குத் தெரிந்த ரெட்டைக் கிளவி பாட்ல் - ஜீன்ஸ் திரைப்படத்தில் சலசலவென ரெட்டைக் கிளவி...என்று வரும் கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டுதான்!! ஹாஹஹாஹா ஆனால் அது இடையில் தான் வரும் தொடக்கத்தில் வராது

நீங்கள் இங்கு பகிர்ந்திருக்கும் எல்லாப் பாட்டுகளும் கேட்டிருக்கிறேன் ஆனால் கேட்டதும்தான் தெரிந்தது கேட்டிருக்கிறேன் என்று!!!!

நல்ல செலக்ஷன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வித்தியாசமான தலைப்பு. பாடல்களும் அருமையான பாடல்கள் தேர்வும்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

வித்தியாசமான தலைப்பு. பாடல்கள் அத்தனையும் அருமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன்....தேர்வு செய்ததும் அருமை.

துளசித்ரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்

மார்கழியும் குளிரும் இப்போ தான் ஆரம்பம்.
இருந்தும்
தாயாரை நினைக்கவும்,
இது போன்ற பாடல்களை எண்ணவும் முயற்சி தேவைப்
படுகிறது.
அந்த முயற்சியில் சில பொழுது குளிரை மறக்கிறேன்.
இரண்டு சொல்
சோகப்பாடல்களும் சில உண்டு.
அவைகளைப் பதியவில்லை.

எல்லாமே 60 களில் வந்த படங்கள்.
பாடல்கள். நீங்களும் கேட்டிருப்பது சந்தோஷம் அம்மா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன் ,
நலமுடன் இருங்கள்.
தவறாமல் வந்து பின்னூட்டம் இடுவதற்கு நன்றி.

ஆமாம் இந்தத் தலைப்பு திடீரென்று
தோன்றியது தான்.
பழைய பாடல்களை என் விருப்பமாகத் தொகுத்து வைத்து அவ்வப்போது
கேட்பது வழக்கம். அவற்றில் என்னை அறியாமலேயே

இது போல சேர்த்து வைத்திருக்கிறேன்.
எடுத்துப் பதிவிட சுலபமாக இருந்தது அப்பா.
ரசித்ததற்கு மிக மிக நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அனைத்து பாடல்களும் ரசித்தவை...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நலமுடன் இருங்கள்.

உண்மையே . நல்ல ரசிகர்களைப் பெற்ற பழைய படங்கள்
பாடல்கள் எப்பொழுதும் இனிமை. நன்றி மா.

கோமதி அரசு said...

தலைப்பை பார்த்தவுடன் கம கமவென நறுமணம் வீச ஆரம்பித்து விட்டது. அந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டது. ஜல் ஜல் பாடலும், மற்றும் எல்லா பாடல்களும் பிடித்த பாடல்கள். கே. ஆர். விஜயாவை (முன்பு ) பிடிக்கும் எனக்கு.

போகும் இடமெலாம் நானும் வருவேன் பாடலும் பிடிக்கும்.
அனைத்து பாடல்களையும் ரசித்து கேட்டேன்.
நன்றி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்..

''பாடல் நினைவுக்கு வந்து விட்டது. ஜல் ஜல் பாடலும், மற்றும் எல்லா பாடல்களும் பிடித்த பாடல்கள். கே. ஆர். விஜயாவை (முன்பு ) பிடிக்கும் எனக்கு."

எனக்கும் கற்பகம் விஜயாவைப்
பிடிக்கும். அப்புறம் வந்த படங்களில் வேறு விதமாக
வேடங்கள் எடுத்துக் கொண்டதில்
எனக்கு லயிக்கவில்லை.

சொர்க்கம் படத்தில் அவர் நடிப்பு நன்றாக இருக்கும்.
பாடல்களை நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள்
என்று நினைத்தேன்:)

நன்றி மா.