Blog Archive

Friday, December 17, 2021

சில உண்மைகள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அன்புத் தங்கை சுபா அனுப்பிய செய்தி.

[3:45 AM, 12/17/2021] Subha.: படித்ததில் பிடித்தது!

60 லிருந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_

“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”
என்று கேட்டேன்.

அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார்.

அவ்வாறே அவர் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட பட்டியலை அனுப்பினார். இதோ 👇

1) என் பெற்றோரிடம்,
என் உடன்பிறந்தோரிம்,
என் மனைவியிடம்,
என் குழந்தைகளிடம்,
என் நண்பர்களிடம்
அன்பும், பாசமும், காதலும்
கொண்டிருந்த நான், இப்போது
என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.

2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.

3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.

பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன்.

4) நாள் முழுதும் உழைக்கும் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு  மீதிச் சில்லறைக்
காசுக்காகக் காத்திராமல் திரும்புகிறேன்.

இதனால் அவர் முகத்தில் அரும்பும்
புன்னகையை விரும்புகிறேன்.

5) என்னைவிட முதியவர்கள்
ஒரு செய்தியை - நிகழ்வை - கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும், 'இதை நீங்கள்
முன்பே கூறிவிட்டீர்கள்'   என்று முகத்தில் அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன்.

6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.

நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது   _(Peace is more precious than perfection) என்பதை உணர்ந்துகொண்டேன்.

7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

8)என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம் இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை. தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன்.  _  *(personality speaks louder than appearances.)

9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன்.

10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை.

11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை.

12) உறவுகளை முறித்துக் கொள்வதைவிட என்னுடைய egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்.

13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன்.

14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன்.

15) மற்றவர்களைக் குறைசொல்வதையும், புறங்கூறுவதையும் முற்றிலுமாக தவிர்த்துள்ளேன்.

16) என்னால் மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன்.

17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன்.

18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன்.

19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக்கொண்டுள்ளேன்.

ஏன் வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்?  _எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே! _*அமைதியான அன்பான வாழ்க்கைக்குக் கைகொடுக்குமே! வழி காட்டுமே!
[4:58 AM, 12/17/2021] Revathi Narasimhan: 👌👌👌👌👌👌👌👌

13 comments:

KILLERGEE Devakottai said...

அருமை அம்மா ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டிய அற்புதமான விஷயம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்லதொரு கருத்துக்களுடனான அருமையான பதிவு.இதை அழகாக எழுதி தொகுத்தவருக்கும், பகிர்ந்தவருக்கும் பாராட்டுக்கள்.உங்களுக்கு வாட்சப்பில் கருத்தாக வந்த இந்த பொன்னான பழக்கங்களை 60 லிருந்தே பின்பற்ற ஆரம்பித்தால்,ஒவ்வொருவருக்கும் முதுமையின் வலிகள் குறையலாம். ஒவ்வொரு எண்ணங்களும் சிறப்பான மன தைரியத்தை தருகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

மறுபடி மறுபடி படிக்க வைக்கிறது. யோசிக்க வைக்கிறது. மிகவும் அருமை.

Geetha Sambasivam said...

soooperooooo soooper

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

கோமதி அரசு said...

எனக்கும் வந்தது இந்த வாட்ஸ் அப் செய்தி மிக அருமையான பகிர்வு அக்கா.

இதில் பாதியாவது கடை பிடித்தால் ந்ம்மதியாக இருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

நல்ல கருத்துகள் ,மிகவும் உணர வேண்டிய தத்துவங்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

"""உங்களுக்கு வாட்சப்பில் கருத்தாக வந்த இந்த பொன்னான பழக்கங்களை 60 லிருந்தே பின்பற்ற ஆரம்பித்தால்,ஒவ்வொருவருக்கும் முதுமையின்""

முதுமை வரும்முன்னாடியே இவற்றை நாம்
பின்பற்றினால் வாழ்வில் குறை வராது.
நாமும் சிலசமயம் வேதனை அனுபவிப்பது
முறை தவறிப் பேசும்போதுதான்.
அடக்கம் ஒன்றே நல் வழி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்
நலமுடன் இருங்கள்.
''மறுபடி மறுபடி படிக்க வைக்கிறது. யோசிக்க வைக்கிறது. மிகவும் அருமை."

நானும் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,

நலமுடன் இருங்கள்.
மிக நல்ல யோசிக்க வேண்டிய கருத்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ,
நலமுடன் இருங்கள்.
எல்லோரும் நல்ல படியாகச் சிந்திக்கிறார்கள் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
உங்களுக்கும் வந்ததா. நல்ல சிந்தனைகள் பரவட்டும். நன்றி மா.

மாதேவி said...

நல்ல வழிகாட்டுதல்கள்.