எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
பழைய படங்களிலும் ,ஏன் இப்போது கூட
1,
கதையில் ஒரு திருப்பம் வேண்டும் என்றால்,
2, வில்லைனை மயக்க வேண்டும் என்றால்,
3 கதா நாயகனை சிறையிலிருந்து
விடுவிக்க வேண்டும் என்றால் ஒரு ஜோடிகள் நடனமாடும்:)
4, கதா நாயகியே ஜிப்சி யாக இருந்துவிட்டால்
அது இன்னும் சிறப்பாகப் படமாக்கப் படும்,
இவை எல்லாம் சேர்ந்த ஒரு கதம்பம்
இங்கே பதிவிடுகிறேன்.
எல்லோர் கைகளிலும் ஒரு யூகலேலி வாத்தியம். பழைய
ஸ்பானிஷ் பாடகர்களை நினைவுக்குக்
கொண்டு வரும். புதுமைப் பித்தன் படத்தில்
பார்க்கலாமா:)
சபாஷ் மீனா படத்தில் மாலினி என்பவர்
நடித்திருப்பார். சிவாஜி சித்திரம் பேசுதடி என்று பாட
அந்தஹ் சித்திரமாகவே
தோன்றுவார். அவர் வில்லைனை மயக்கி உண்மை வரவழைக்கவும்
ஆடுவார்:)
1948இல் வந்த சந்திரலேகா படத்தில் எல்லாமே சுவையான பாடல்கள்
, அற்புதமாகப் படமாக்கப் பட்டவை.
அதில் வரும் ஐலோ பக்கிரியாமா. என்ன அர்த்தம் தெரியாது.:)
என் எஸ் கிருஷ்ணனும் மதுரம் அம்மாவும் அழகாகப் பாடி ஆடி
நடித்திருப்பார்கள்.
அடுத்தபடம் உத்தம புத்திரன் படம் ராகினி தங்கவேலு என்று நினைக்கிறேன்.
அதே படத்தில் பத்மினியும் சாவியை எடுக்க வில்லன்
சிவாஜி முன் ஆடுவார்!! பத்மினியை விட சிவாஜியின் நடிப்பு மிஞ்சி நிற்கும்!!!
நம் மதுரை வீரன் படத்தில் இந்தப் பாட்டும் நடனமும் மிக
மிகப் பேசப்பட்டது 50களின் இறுதியில்.
வெள்ளையம்மா,மதுரை வீரன் எம் ஜி ஆரும் நடனமாடும் காட்சி.
7 comments:
நல்ல அவதானிப்பு (இப்போதுதான் zoom meetingஇல் ஒரு இலங்கை தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டேன்)! நிறைய படங்களை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றாக பார்க்கிறேன்.
அன்பின் பானுமா,
நலமுடன் இருங்கள்.
அவதானிப்பு....!!இதுவே அவர்கள் பேசுவது போலத்தான் இருக்கு!!
இலங்கைத் தமிழர்களுடன் சூம் மீட்டிங்கா.
எதைப் பற்றிப் பேசினீர்கள்...
அன்றன்று தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப்
பாடல்களைச் சேர்த்துக் கொள்கிறேன் அம்மா. இன்னும் நிறைய இருக்கின்றன.
தலைவலி வந்துவிடும் சிக்கல் இருக்கின்றது:)
மிக மிக நன்றி அன்பு பானு.
மிக நல்லதொரு தொகுப்பு. எல்லாப் பாடல்களும் அடிக்கடி கேட்டிருக்கேன் என்பதும் ஆச்சரியம். :)
அம்மா நல்ல தலைப்பு இதுவும். உங்கள் தொடக்க வரிகளை வாசித்துவிட்டுச் சிரித்து விட்டேன். ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போல் இப்படியான சீன் நகர்த்தல்களில் பாடல்கள் வரும். நோட்டிஸ் செய்ததுண்டு ஆனால் நீங்கள் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் படங்கள் பார்த்ததில்லை ஆனால் பார்த்த படங்களிலுமே இப்படியான சீன்கள் தான்.
அடுத்து உங்கள் தலைப்பு என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும்தொடங்கிவிட்டேன்!!!!!!!!! (கதையை சில ஃப்ளாக்ஷ்பேக்குகள் பாடலின் ஊடே சொல்லிச் சென்றுவிடுவது...எனக்குப் படங்கள் எதுவும் நினைவில்லை ஆனால் இப்படியும் உண்டு...)
சந்திரலேகா? படத்தில் அந்தக் கொட்டு டான்ஸ் பிரமாதமாக இருக்கும் அந்தக்காலத்திற்கு அது மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டக் காட்சி எந்தவித நவீன டெக்னாலஜியும் இல்லாமல்....
பதிவை ரசித்தேன்
கீதா
பாடல்கள் எல்லாமே மிகவும் ரசித்த பாடல்கள். இப்போதும் ரசித்தேன். சமீபகாலமாக நிறைய பாடல்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறேன்.
நீங்கள் கவனித்து எடுத்துப் பகிர்ந்த பாடல்கள். நானும் நிறைய படங்கள் பார்த்தவன். பார்க்கும் ஆர்வமும் உடையவன் என்றாலும் இப்போது முடிவதில்லை. பார்த்த படங்களிலும் இப்படி வித்தியாசமான பொருளில் தெரிந்தெடுக்க எனக்கு கூகுள் உதவி தேவைப்படும்!
மிக்க நன்றி வல்லிம்மா
துளசிதரன்
அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
கண்டிப்பாக அம்மா, இந்தப் பாடல்களைக் கேட்காமல்
இருந்திருக்க முடியாது.
அப்போது வந்த பாடல்கள் அப்படி.
கதா நாயகன், நாயகி வில்லன் இவர்களைச் சுற்றி கதை ஆடும்போது
இது போல தனிப் பாடல்கள் நடங்கள் கதையை
அதன் சுருக்குலிருந்து விடுவிக்கும்:)
நீங்களும் கேட்டு ரசித்ததில் எனக்கு மிக மகிழ்ச்சிமா. நன்றி.
அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள் அப்பா.
''நீங்கள் கவனித்து எடுத்துப் பகிர்ந்த பாடல்கள். நானும் நிறைய படங்கள் பார்த்தவன். பார்க்கும் ஆர்வமும் உடையவன் என்றாலும்''
உங்கள் எல்லோருக்கும் தனி வேலையும் இருக்கேப்பா.
எனக்கு இந்தப் பாடல்கள் சிறு வயதில் இருந்து
கேட்டு கேட்டு இதெல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது.
அவ்வளவுதான்:)
மனசாரப் புகழ்ந்து சொன்னதற்கு மிகவும் நன்றிமா.
Post a Comment