Blog Archive

Monday, December 27, 2021

விழியும் பார்வையும்,கண்களும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.










ஒவ்வொருவருக்கும் பார்வையும் கோணங்களும் வேறு வேறு.

பெற்றோரின் கண் வழி அன்பு.
கணவர் கண்வழி காதல்
சகோதரர்கள் கண் வழி பாசம்,
பிள்ளைகள் கண் வழி இன்னும் என்ன வெல்லாமோ.
அங்கே அவர்கள் நம்மை எல்லாக் கோணங்களிலும் 
தீர்மானம் செய்து ஜட்ஜ்மெண்ட் கொடுப்பார்கள்:)
சினிமாவில் சுவையான சில பாடல்களைப் பதிகிறேன்.




16 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. விழியும் கண்களுமாக உள்ள பாடல்களை மிக பொறுமையாக தொகுத்து அருமை. அத்தனைப் பாடல்களும் நன்றாக உள்ளது. இதில் புது பாடல்கள் மட்டும் நான் கேட்டதில்லை. "விழியே கதை எழுது" என்ற பாடல் வருமென பார்த்தேன்.(ஏதோ என் அறிவுக்கு புலப்பட்ட பாடல்.) அதுபோல் பழைய பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. "கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று வருமோ.. தெரியவில்லை. உங்களுக்கு என்னிடம் திறமையில்லை.

கண்களின் வழி உறவுகளைப் பற்றி கணக்கிட்டதும் அருமை. அதில் பிள்ளைகளின் மனவோட்டங்கள் பற்றி கூறியது சிரிப்பை வரவழைத்தது.எல்லா பாடல்களும் நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

""விழியே கதை எழுது" என்ற பாடல் வருமென பார்த்தேன்.(ஏதோ என் அறிவுக்கு புலப்பட்ட பாடல்.) அதுபோல் பழைய பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. "கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று வருமோ.. தெரியவில்லை. உங்களுக்கு என்னிடம் திறமையில்லை"


அன்பின் கமலாமா,
நீங்கள் சொல்லும் பாடல்களை நினைத்தேன். அதில் ஒன்றை ஏற்கனவே
பதிவிட்டுவிட்டேன்:)அதனால விட்டுவிட்டேன்.
உங்களுக்குத் திறமை இல்லை என்று நான் நம்ப மாட்டேன்.
என்னப்பா நியாயமே இல்லை.நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
உங்களை மாதிரி நல்ல தமிழ் நான் எழுதுகிறேனோ.
விட்டுப் போன பாடல்கள் நிறைய.
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ,
2,கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா,
3,கண்ணெதிரே தோன்றினாள்,
4,கண்ணுக்கு மையழகு,
5,கண்ணிலே அன்பிருந்தால்....
இன்னும் நிறைய இருக்குமா.
மிக மிக நன்றி வந்து படித்து கருத்தும் சொன்னதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

"""கண்களின் வழி உறவுகளைப் பற்றி கணக்கிட்டதும் அருமை. அதில் பிள்ளைகளின் மனவோட்டங்கள் பற்றி கூறியது சிரிப்பை வரவழைத்தது""

சிரிச்சுதான் கடக்கணும் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆஹா தலைப்பு செம..

விழியிலே மலர்ந்தது பாட்டும் நினைவுக்கு வந்தது.

பதிவில் நீங்கள் சொன்ன ஒரு வரி ஹைஃபைவ்....//நம்மை எல்லாக் கோணங்களிலும்
தீர்மானம் செய்து ஜட்ஜ்மெண்ட் கொடுப்பார்கள்:)//

யெஸ் யெஸ். ஜட்ஜ்மென்ட்!!

சில வட்டங்கள் ப்ராண்டும் செய்துவிடுவார்கள்.

யாரையும் ஜட்ஜ் செய்யக் கூடாது என்பது தத்துவம்..!!!!

கீதா

ஸ்ரீராம். said...

விழியிலே மலர்ந்தது, கண்ணிலே அன்பிருந்தால், கண்ணிலே என்ன உண்டு கண்கள்தானறியும், கண்களே கண்களே காதல் செய்வதை, கண்ணே என் கண்மணியே, கண்ணே பாப்பா, விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்தது, விழி தீபம் ஒளியேற்றும்...   எவ்வளவு பாடல்கள் விழியிலும் கண்களிலும் இருக்கிறது...  இன்னொரு முக்கியமான பாடல் கர்ணன் பாடல் 'கண்கள் எங்கே.."

ஸ்ரீராம். said...

அவரவர்களின் பார்வை அவரவர்கள் மனதின் வாசலாகவே, பாதையாகவே இருக்கிறது.  அதனால்தான் அதன்வழி பார்த்து மற்றவர்களை எடை போடுகிறார்கள்!

Geetha Sambasivam said...

பிள்ளைகள் பார்வை பற்றிச் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. நாலாவது காணொளி வரலை.மற்றவை அருமை. சுருக்கமான அர்த்தமுள்ள எழுத்து. எல்லாமேநல்ல பாடல்கள்.

Geetha Sambasivam said...

விழியே கதை எழுது! பாடலை விட்டுட்டீங்களோ? அல்லது வராத காணொளியில் அந்தப் பாடல் தானா?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

கண்ணிலே அன்பிருந்தால் ஏற்கனவே
பதிந்து விட்டேன் அப்பா.
மற்றவை இரண்டாம் பதிவாகப் போடலாமா:)

50,60 பாடல்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதுவும் எனக்குத் தெரிந்து!!
கண் இல்லையினில் சினிமாவில்
காதலேது:)
அவனும் நோக்கினான் அவளும் நோக்கினாள் தானே அடித்தளமே.

வல்லிசிம்ஹன் said...

கண் வழியே கண் வழியே பாடல் மாதிரி
கண்களே நம் மனதில் ஜன்னல்.

அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்மை சொல்லலாம்.
நன்றி ஸ்ரீராம்.

Thulasidharan V Thillaiakathu said...

விழியில் விழுந்து என்று ஒரு பாடல் பாரதிராஜா படத்தில் உண்டு இல்லையா?

நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல்களைக் கேட்டேன்.

விழி வழிதான் மற்றவர்களின் முகபாவங்களைப் பார்க்க முடியும். அகத்தின் அழகு முதத்தில் தெரியும். விழி வழிதான்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

கண் பற்றி ஒரு கருத்து விட்டுப் போச்சு. நேருக்கு நேர் பார்த்து கண்ணோடு கண் பார்த்துப் பேச வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

நம் பேச்சு அவர்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு எடிட் செய்து பேசலாம்.

புறக்கண் புறத்தே பார்த்து ஆராயும்!! அகக்கண் உள்ளே நுழைந்து ஆராயும்!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

யெஸ் யெஸ். ஜட்ஜ்மென்ட்!!

சில வட்டங்கள் ப்ராண்டும் செய்துவிடுவார்கள்.

Dear Geetha R,. so true.

வல்லிசிம்ஹன் said...

பிள்ளைகள் பார்வை பற்றிச் சொன்னது நூற்றுக்கு நூறு சரி.''
நன்றி மா.

விழியே கதை எழுது' பதியலையா.'

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
நிறையப் பாடல்கள் இருக்கின்றன.
இன்னோரு பதிவா வேண்டுமானால் போடலாம்.:)

நீங்கள் வந்து கேட்டதுதான் மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள் அப்பா.

''விழியில் விழுந்து என்று ஒரு பாடல் பாரதிராஜா படத்தில் உண்டு இல்லையா''

ஆமாம் மா. 'தனன தனன தனன நா' என்று வரும் நல்ல பாடல்.

பார்வைகள் பற்றியும் பாடல்கள் உண்டு.
தொகுப்பில் சில பதிவுகளைப் பதிவிட்டு விட்டு மீண்டும் விழிகளைப்
பார்க்கலாம். நீங்கள் எல்லாம் உற்சாகமாகக் கலந்து கொள்வதில் எனக்கு மிக மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,

''கண் பற்றி ஒரு கருத்து விட்டுப் போச்சு. நேருக்கு நேர் பார்த்து கண்ணோடு கண் பார்த்துப் பேச வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது''

எனக்கும் அதுதான் பிடிக்கும். நேரே பார்த்துப்
பதில் சொல்லு என்பேன்.
அப்படிப் பார்த்தால் தான் உண்மை புரியும்.
நன்றி டா.