வல்லிசிம்ஹன்
Dedicated to all coffee Rasikas.
Blog Archive
Sunday, May 31, 2020
Friday, May 29, 2020
கதையின் இறுதிப்பாகம் .5
வல்லிசிம்ஹன்
இறைவன் என்றும் காப்பான்.
கதையின் இறுதிப்பாகம் .5
இறைவன் என்றும் காப்பான்.
கதையின் இறுதிப்பாகம் .5
அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் நன்மைக்கானது.
சிகித்சை முடிந்து வெளியே வந்த சேகர்,
முற்றிலும் மாறிய மகனாக அவனுடைய அன்னைக்குக்
கிடைத்தான். சிகித்சையின் போது அவனை விட்டகன்ற
அந்த வெண்குழல் அரக்கன், பிறகு அந்த வீட்டில் பிரவேசிக்கவில்லை.
வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றான்.
வீட்டிலிருந்தபடியே செய்யுமாறு வேறு வேலையைத் தேடிக் கொண்டான்.
இதெல்லாம் நிறைவேறத்தான் ஆறேழு மாதங்கள் ஆகியது.
அடுத்த தடவை தன் அம்மாவுடன் அவனும்
செக்கப்புக்குப் போகும்போது
தேவகி அம்மாவின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் கண்டார்
டாக்டர் செரியன்.
மகனையும் தாயையும் பரிசோதித்து
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வந்து பார்த்தால்
போதும் என்று சொல்லி விட்டார்.
இந்த மகனையுமிழந்துவிடுவோமோ என்ற
பயத்திலிருந்து விடுதலை கண்ட அம்மாவின் 75 ஆவது பிறந்த நாளையும்
அவள் மக்கள்,உறவினர் சூழக் கொண்டாடினர்.
பி கு. இங்கே நான் உபயோகித்திருக்கும் மருத்துவ மொழியோ,
காவல் துறை பரிபாஷைகளோ சரியானது என்று சொல்ல வரவில்லை.
இந்தக் கதையின் நல்ல முடிவுக்கு அவை துணை வந்தன.
நன்றியும் சுபமும்.
இனி எல்லாம் சுகமே
வல்லிசிம்ஹன்
இனி எல்லாம் சுகமே
தம்பியைக் கண்டதும் அதிர்ந்து போனாள் லேகா.
என்னடா ஆச்சு ,இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே என்று பதைத்தவளை,
செரியனிடம் அழைத்துப் போகச் சொன்னான் சேகர்.
சந்தடி கேட்டு கீழே வந்த சரவணன்,
உடனே வண்டி எடுத்துக் கொண்டு,
பணம், க்ரெடிட் கார்ட் எல்லாம் இருக்கிறதா
என்று சரிபார்த்து வண்டியை எடுத்து,
சேகரையும் லேகாவையும் அழைத்துக் கொண்டு
விரைந்தார்.
லேகா மேலேயே சரிந்த நிலையில் தம்பி.
மருத்துவமனை வந்ததும்,
தொங்கப் போயிருந்த டாக்டர் வந்து
உடனே அவனை ஐசியூவில் அட்மிட் செய்தார்.
ரத்த அழுத்தம் எங்கேயோ இருந்தது.
உடைகளைத் தளர்த்தி, மானிட்டர்களைப் பொறுத்தி
உடனே கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்து
வெளியே வந்தவர், இந்த நிலமை வரக்கூடாது என்றுதான்
நான் எச்சரித்தேன்.
அவன் கேட்கவில்லை.
எமெர்ஜென்சி ஸ்டெண்ட் வைக்க வேண்டும்
அவன் மனைவி எங்கே என்றார்.
நாங்கள் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம் டாக்டர்,
அவனைக் காப்பாற்றுங்கள் என்று கண்கலங்கிய லேகாவின் தோளைத் தட்டிக் கொடுத்தார் டாக்டர்.
அவனும் இளவயதுக்காரன் அம்மா.
50 ஆகிறது.
இந்த சோதனை அவனை நல் வழியில் கொண்டு வரட்டும் என்றபடி
உள்ளே விரைந்தார்.
தன் தம்பி மனைவியை அலைபேசியிலழைத்து
நிலைமையைச் சொன்னதும்,
அன்று அங்கு தங்கி இருந்த தனலக்ஷ்மியிடம், தான் பிறந்துவீட்டுக்கு முக்கிய காரியமாகப்
போவதாகவும்
தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை எழுப்ப வேண்டாம்
என்று வலியுறுத்திவிட்டு
திகில் கொண்ட மனத்துடன் மருத்துவமனை விரைந்தாள்.
எல்லோரும் கண்விழித்த அந்த நீண்ட இரவும் அதிகாலை 5 மணிக்கு
வெளிச்சம் கொண்டது.
காலை 6 மணிக்கு அவர்கள் சேகரைக் காண அனுமதிக்கப் பட்டார்கள்.
நினைவு திரும்பாத நிலையில்
அத்தனை இயந்திரங்களுக்கும் நடுவில் அவனைப் பார்த்த லேகாவும்,
மாலதியும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு
வெளியே வந்து விட்டார்கள்.
டாக்டர் தன் ஓய்வறைக்கு விரைந்து கொண்டிருந்தவர்,
உன் தம்பி இப்போது பிழைத்துவிட்டான்.
இனி வாழப் போகும் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டுமானால்
நல்ல பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தளர்ந்த குரலில் சொல்லி விட்டு
வீட்டுக்குச் சென்று 10 மணிக்கு வாருங்கள் என்று
சென்றார்.
அவருக்கும் வயதாகி விட்டது என்பதைஉணர்ந்தாள் லேகா.
மாலதி தான் அங்கேயே இருப்பதாகவும்
அவர்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று அம்மாவைப் பார்த்து
செய்தி சொல்ல வேண்டும் என்றாள்.

தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4
வல்லிசிம்ஹன்
தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4
தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4
சேகர் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றான்.
அவனால் டாக்டரின் குறிப்புகளை ஜீரணிக்க முடியவில்லை.
என்ன செய்வது.
அம்மாவைத் தனியே விடக்கூடாது என்றால் எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தமா.
அம்மாவைக் கவனித்துக் கொள்வதில் நான் அல்லவா இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
மனைவிக்கோ நேரம் இருப்பதில்லை.
முன்பாவது அம்மா சமையல் செய்து வைத்துவிடுவார்.
இருவரும் அந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவரவர் வழியில் சென்று விட்டு வீடு திரும்புவர்.
மாலுவின் பெற்றோரும் சென்னையில் இருப்பதால், சனி ஞாயிறு
அவர்களைச் சந்தித்துத் திரும்புவாள்.
அப்போதெல்லாம் அம்மாவுடன் இருந்துவிடுவான் சேகர்.
அம்மா எத்தனை வற்புறுத்தினாலும்
வெளியே செல்ல மாட்டான்.
சிந்தித்துக் கொண்டே அலுவலகம் வந்து விட்டான்.
உடனே ஏதோ ஒரு வழக்கு விஷயமாக வேலூர் வரை போக வேண்டி இருந்தது.
இரவு முழுவதும் காத்திருந்து ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆளைப்
பிடிக்க வேண்டும்.
சேகருக்கு முன்பே அவனது குழுவினர் சென்று விட்டிருந்தனர்.
தானும் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு,
விரைந்து சென்றான்.
வேலூரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அவனது குழுவினர் மஃப்டியில்
இருந்தனர். அங்கிருந்த டீக்கடை ஒன்றில்
சாதாரண உடை,லுங்கி, டி ஷர்ட் என்று உடுத்திக் கொண்டு
இவன் வருகைக்காகக் காத்திருந்தனர்.
தன் நண்பன் கதிர்வேலுவை மட்டும் அழைத்துச் சென்று
நிலைமையை விசாரித்துத் தெரிந்து கொண்ட சேகர்,
குற்றவாளி தங்கியிருந்த வீட்டுக்குப் பின்புறம்
ஐந்து காவல்காரர்களைத் துப்பாக்கியுடன் அனுப்பிவிட்டு,
தானும் மற்ற இன்ஸ்பெக்டர்களுல் எதிரெதிரே இருந்த வீட்டு
தாழ்வரையிலோ ,திண்ணையிலோ, வாசலிலோ
உலவியவாறு இருக்கும்மாறு கவனித்துக் கொண்டான்.
ஒரி துளி சந்தேகம் வந்தாலும் அந்தக் குற்றவாளி நொடியில் தப்பி
விடுவான்.
அடக்க முடியாமல் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போதுதான்,
தன்னையே பார்த்த வண்ணம், ஒரு உருவம் எதிர்வீட்டு மாடியில்
தெரிவதைக் கண்டு,
அலட்சியமாகத் திரும்புவது போல தான் இருந்த வீட்டுக்குள் நுழைந்தான்.
இருட்டுக்குள் சென்றதும், மொபைல் ஃபோனில்
தன் குழுவை உசார் செய்ய,
அடுத்து வந்த நிமிடங்கள் அங்கே கலவரம் பற்றியது.
சேகர் முதல் நாளே திட்டமிட்டுக் கொடுத்திருந்தபடி
அவன் குழுவினர், தங்கள் வேலையைக் கத்தியின்றி ரத்தமின்றி செய்து முடித்தனர்.
என் தம்பி சொல்வதுபோல ''கோழியை அமுக்கிப்'' பிடித்துவிட்டனர்:)
வேலை முடிந்து திரும்பும்போது அதுவரை பட்ட இறுக்கம்
முதுகுவலியாக உருவெடுக்க
சேகரின் இதயத் துடிப்பு இமயத்தை எட்டியது வலியின் பரிணாமத்தால்.
தன் வீட்டுக்குச் சென்று இறங்காமல் அக்கா, லேகா வீட்டுக்கு வந்துவிட்டான்.
நல்ல வேளையாக அம்மா அங்கே இல்லை.
Wednesday, May 27, 2020
இப்படியும் ஒரு இன்ஸ்பெக்டரா?? சீர்காழி காவல் ஆய்வாளர் மு.சதீஷ் செய்ததை ப...
வல்லிசிம்ஹன்
Greetings and best wishes.
Greetings and best wishes.
தேவகிக்கு விடுதலை எது.3
வல்லிசிம்ஹன் .
வளமுள்ள வாழ்வு இறைவன் தருவான்.
தேவகிக்கு விடுதலை எது.
ஒரு அன்னைக்கு வேண்டியது அவள் பெற்ற செல்வங்களின் நலம் மட்டுமே.
அந்த வகையில்
அவள் இழப்பை சந்திக்க நேரிட்டது முதல் மகன்
தவறிய போது.
எத்தனையோ பாடுபட்டு மேல் படிப்பெல்லாம் படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல விதமாகத் தன் உழைப்பை
20 வருடங்கள் தந்த நிலைமை. திடீரென்று வந்த அதிர்ச்சி இதய நோய்.
அன்று கூட அவன் வெளி நாட்டுக்குப் பயணமாகிக் கொண்டு இருந்தான்.
இடது கை விபரீதமாக வலிப்பதை ,சட்டை செய்யாமல்
நீவி விட்டுக் கொண்டே கிளம்பிய மகனை,
வைத்தியரை அணுகச் சொன்னது அம்மா தான்.
42 வயதில் நோயை நினைக்க அப்போது நேரம் எங்கே இருந்தது.?
அம்மா, தன் வைத்தியரை வீட்டுக்கே வரவழைத்துவிட்டார்.
அவர் சொன்னதும் செய்ததும் அதிர்ச்சி கொடுத்தன.
சந்திரனை உடனே மருத்துவமனையி சேர்க்க வேண்டும்.
இரவு முழுக்க அவனுக்கு வலி இருந்திருக்கிறது.
என்று சொல்லித் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.
அலுவலகத்துக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தம்பி சேகருக்கு வந்தது.
விஷயத்தைத் தெரிவித்து விட்டு
அண்ணன் இருந்த மருத்துவமனைக்கு மற்றவர்களொடு
சென்றபோது,
அவன் உடனடி அறுவை சிகித்சைக்கு அழைத்துப் போகப்பட்டிருப்பது தெரிந்தது.
அதிர்ச்சியில் குடும்பமே மூழ்கியது.
சந்திரனும் மீண்டு வந்தான். எண்ணிப் பத்துவருடங்கள்
இருந்துவிட்டு இறைவனடி சேர்ந்தான்.
வைத்தியரின் எச்சரிக்கைப்படி அனைவரும்
உடல் நலம் பேணவேண்டிய அவசியம் தெரியவந்தது.
அம்மா நொடித்துப் போனாள்.
தன் மற்ற இரு செல்வங்களையும் காக்க
அவள் தினமும் கடவுளிடமே சரண்., காலை மாலை,இரவு
எல்லா நேரமும் இறைத்துதிதான்.
தனக்கும் நோய் வந்த போது,
மேற்கொண்டு அதிர்ச்சிகளை எதிர்னோக்கும் சக்தி இல்லை
அவளிடம். அவள் நினைத்தபடி விடுதலை கிடைக்கவில்லை.
அந்தப் பூட்டுக்குத் தப்பும் பொழுது 72 வயதாகிவிட்டது அவளுக்கு.
இதோ இன்று தன்னைக் காக்கும் உத்தேசத்தில்
டாக்டர் செரியன் அனுப்பி இருக்கும் 35 வயது மதிக்கத்தகுந்த தாதியர்.
தான் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வருவதை அவளால்
உணர முடிந்தது.
முதல் நாள் ,இரவு சேகர் முதுகு வலியில் தவித்த போது
அவனருகே உட்கார்ந்து தனக்குத் தெரிந்த
வகையில் அவனுக்கு ஆறுதலாக இருந்தாள்.
தூங்கிவிட்ட மகனின் அருகில் விழித்திருந்து,
மருமகள் மனோவை எழுப்பிப் பார்த்துக் கொள்ளச் சொல்லித் தான் துயிலச் சென்றாள்.
''பயந்துட்டியாமா"" என்ற மகன் குரல் கேட்டே விழித்தாள்.
சிரித்த முகத்துடன் தன்னை எழுப்பிய மகனிடம்
இல்லையேப்பா, உன் வலிக்கு என்ன மருத்துவம் பார்ப்பது
என்றே யோசித்தேன். என்றாள்.
பிறகுதான் மகள் வந்து தன்னைப் பரிசோதனைக்கு
அழைத்துப் போக இருப்பது நினைவுக்கு வந்தது .
அதற்குப் பிறகு நடந்ததை நாம் பார்த்தோம்.
வந்திருக்கும் இரு பெண்களும் கச்சிதமாக உடை அணிந்திருந்தார்கள்.
லேகாவின் மாமியார், மங்கிய கண்பார்வையில் அவர்களை பார்த்தார்.
பக்கத்திலிருந்த தேவகி அம்மாவின் கரங்களை பற்றி,
''எல்லாம் நல்லதுக்கு கென்றே நினையுங்கள்.
யாரும் இல்லாத வீட்டில் உங்களுக்குத் பேச்சுத் துணைக்கு இப்போது ஆள் வந்தாச்சு'' என்று புன்னகைத்தார்.
தேவகிக்கு இந்த ஏற்பாடு உகப்பாக இல்லை.
''செரியன் என்ன சொன்னார் , எதற்கு இப்போது எனக்கு காவல்?''
என்று வினவினார்.
அம்மா முதலில் சாப்பிடலாம். உங்கள் மருமகன் கூட
இதோ வந்துவிட்டார்' என்று வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டு சொன்னாள் .
'நினைத்த பொது நீ வரவேண்டும்...
நீல எழில் மயில் மேல் அமர் வேலா..'
என்று நல்ல குரலில் பாடியபடி வரும் மாப்பிள்ளையைக் கண்டு எழுந்து நின்றார் தேவகி.
அட! அத்தை, சேகர் ! எங்கடா இந்தப் பக்கம்.
என்ன இங்க ஒரு மாநாடு நடக்கிறதா என்று சிரித்தபடி அமர்ந்தான்
சரவணன்.
சாப்பிட்டுக் கொண்டே பேசலாம், நீங்களும்
வாங்க என்றதும்.
இதோ வந்தேன் என்று கைகால் கழுவப் போனான் அவன்.
.

Tuesday, May 26, 2020
தேவகியின் விடுதலை 2
வல்லிசிம்ஹன்
வண்டியில் ஏறி உட்கார்ந்த தம்பி சேகரிடம்,
''உன்னிடம் எத்தனை தடவைடா சொல்வது. அம்மாவுக்கு எப்பொழுதும் உன் கவலை தான்.
அப்பா வேற இல்லை, அவளுக்கு ஆறுதல் சொல்ல.
இந்தப் புகையை நிறுத்தக் கூடாதா. நம் வீட்டில் யாருக்கும் இந்தப்
பழக்கம் இல்லையே"
உனக்கு ஏதாவது என்றால் அம்மா தாங்க மாட்டாள்.
நீங்கள் இருவரும் இல்லை என்றால்
எனக்கு மட்டும் என்ன இருக்கிறது.
அண்ணாவாவது இருந்தானா. அவனும் ஒரே நாள்
வலியில் இறைவனடி சேர்ந்தான்.'' என்று சொல்லியபடி வண்டியை
நிறுத்தினாள்.
எங்கே இங்க பார்க்கில் நிறுத்தறே, மருந்து வாங்க வேண்டாமா.
அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு நான்
சென்னைக்கு வெளியே அரசாங்க விஷயமாய் செல்ல வேண்டும்.
போலீஸ் உத்தியோகத்தில் இருப்பவன் சேகர்.
நல்ல பதவி.
ஆளும் உயரமும் பெருமனுமாக விசால நெற்றியும்,
சிரிக்கும் கண்களுமாக நன்றாக இருப்பான்.
இந்த உத்யோகம் தான் அவனை
இந்தப் பழக்கத்தில் கொண்டு விட்டதோ என்ற சந்தேகம்
வரும் லேகாவுக்கு.
மெதுவாக டாக்டர் சொன்ன செய்தியைச் சொன்னாள். உடனே கண்கலங்கி விட்டது
அவனுக்கு.
அவன் மனைவியும் நல்ல படிப்பும் உத்தியோகமும் கொண்டவள் தான்.
இரு மகன்கள் , வெளியூரில் தங்கிப் படிக்கிறார்கள்.
அம்மா, அவர்கள் வீட்டில் தனியாக இருப்பதே
லேகாவுக்குப் பிடிக்கவில்லை.
இப்பொழுது வைத்தியரும் இப்படிச் சொன்னதில்
அவள் மனம் நொந்தது.
தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றால்
வயதான மாமியாருக்கு ஒரு அறை, தங்களுக்கு, மகள்கள் இருவருக்கும் ஒரு அறை
என்று இருக்கிறவர்கள்.
மாமியாரைக் கவனித்துக் கொள்வதே நாள் முழுவதும் சரியாக இருக்கும்.
டயபெடிஸ் நோயினால் கண்ணை இழந்தவர்.
வருகிறவர் போகிறவர் நிறைய.
நினைக்க நினைக்க லேகாவுக்குக் கண் நிறைந்து வழிந்தது.
அவள் அழுவதைப் பொறுக்காத தம்பி,
யேய் வருத்தப் படாதடி.
நான் விமலாவிடம் பேசி இந்தச் சோதனையிலிருந்து விடுபட வழி சொல்கிறேன்.
இப்ப வீட்டுக்குப் போகலாம் வா. அம்மா சந்தேகப் படுவார்.
மருந்து கிடைக்கவில்லை.
நுங்கம்பாக்கம் கல்யாணி ஃபார்மசி போய்த் தான் வாங்க வேண்டும் என்று சொல்லிவிடலாம்,
என்றான்.
வண்டியைத் திருப்பி, வீடு வந்து சேர்ந்த போது,
அம்மாவும், மாமியாரும் நட்புடன் பேசிக்கொண்டிருந்ததைக்
கண்டார்கள்.
இருவரும் மன நிலையை மாற்றிக் கொண்டு சிரித்த முகத்தோடு வருவதைக் கண்ட
தேவகி அம்மா, ''பெரிய மீட்டிங்க் போல இருக்கே!
30 நிமிடங்கள் ஆகிவிட்டதே'' என்று குறும்பாகச் சிரித்தார்.
லேகாவின் மாமியாரும்,'' என்ன இருந்தாலும் வயதான நம்மைப் பற்றிப்
பேசி முடிவெடுக்க வேண்டாமா''
என்று சிரிக்காமல் சொன்னார்.
லேகாவும், சேகரும் திகைத்து நின்றனர்.
''அம்மா நான் தான் தனம், இது ஜயலக்ஷ்மி,டாக்டர் அனுப்பினார்''
என்று குரல்கள் கேட்ட பக்கம் திரும்பி இன்னும் திகைத்தனர்
இருவரும்

Monday, May 25, 2020
தேவகியின் விடுதலை
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளம் பெற வேண்டும்.
தேவகியின் விடுதலை
அந்த மருத்துவமனையின் படிகளில் ஏறிய
லேகாவின் ஒரே எண்ணம் டாக்டர் செரியனின் அலுவலகத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் ,அனைவரையும் தாண்டி முதலில் அவரைப் பார்த்து விடவேண்டும் என்கிற நினைப்புதான்.
ஒரு வினாடி அம்மாவும் தம்பியும் வருகிறார்களா என்று கவனித்தாள் .
ஆமாம் அம்மாவுக்கு சக்கிர நாற்காலி வந்துவிட்டது.
மிக அன்புடன் ஒரு நர்ஸ் அம்மாவை அதில் உட்கார வசதி செய்து கொடுத்தாள் .
தானே அம்மாவுடன் வந்திருக்கலாம். தம்பி அளவு பொறுமை கூடத் தனக்கு இல்லையே என்று ஒரு க்ஷணம் தோன்றியது.
தம்பி வைத்தியரைப் பார்க்கும் போது பயப்படுவான்.
லேக் , நீ போடி, நான் அம்மாவுடன் வருகிறேன் என்பான்.
அதனால் தான் அவள் முந் திக் கொண்டாள் .
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இந்த டாக்டருடன் பழக்கம்.
சென்ற வருடம் அம்மாவுக்கு முதல் இதய அதிர்ச்சி ஏற்பட்ட போதும்
இவர்தான் மீட்டு வந்தார்.
அம்மாவின் மேல அவருக்கு அதீத பாசம்.
ஒரு நொடி கூடத்தன் நோயைப் பற்றி
வருந்த மாட்டாள் . அவர் சொன்ன பத்தியம் மருந்து எல்லாம் ஒழுங்காக
சாப்பிடுவாள்.
தான் இருந்த வீட்டைச் சுற்றி தினம் 20 நிமிடமாவது நடப்பாள்.
ஒவ்வொரு மாத செக் அப் போதும் டாக்டரின் நன் மதிப்பைப் பெற்றுப் பாராட்டப் படுவாள்.
சிந்தித்துக் கொண்டே டாக்டரின் அறைக்கு வந்துவிட்டால்.
வெளியே நோயாளிகளும்
அவர்களுடன் வந்திருக்கும் மகனோ, மக்களோ,கணவனோ
மனைவியோ இவர்களால் நிறைந்திருந்தது அந்த பெரிய வராந்தா,.
இவள் தலையைக் கண்டதும் நர்ஸ் சாரதா சிரித்த முகத்துடன் தேவகி
அம்மா வந்திருக்கிறார்களா?
அதிகம் காக்க வைக்காமல் டாக்டர் அவர்களைப்
பார்க்க விரும்புகிறார் என்றாள் .
அதற்காகத்தான் முன் கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொண்டேன் சாரதா. அம்மாவால் முன் போல உட்கார முடிவதில்லை என்று கவலையுடன் சொன்னாள் லேகா.
இதற்குள் தம்பி சேகரும் அம்மாவுடன் வந்துவிட்டான்.
நீயும் டாக்டரிடம் சோதனை செய்து கொள்கிறாயா.
முதுகு வலி நேற்று அதிகம் இருந்ததே
என்று வினவினாள்.
சேகர் முகம் சுளித்தான்.
அம்மாதான் முக்கியம். என் வலி ரெண்டு ப்ரூபென் எடுத்துக் கொண்டால் போய்விடும் நீ பெரிசு பண்ணாதே,.
நான் வெளியே போய்க் காத்திருக்கிறேன்.
கைப்பையில் இருந்த சிகரெட் பெட்டியைத் தேடியபடி
அவன் வெளியே நடப்பதை வேதனையுடன் பார்த்தவள்.
அம்மாவை டாக்டரின் அறைக்குள் அழைத்துச் சென்றாள் .
முகமெல்லாம் புன்னகையாக அம்மாவை வரவேற்ற டாக்டர்,
கொஞ்ச நேரம் அவளை சோதித்த பின்,
நல்லா இருக்கீங்கமா. மகளை என்ஷுர் எனர்ஜி பானம் வாங்கி கொடுக்கச் சொல்லுங்கள்.
அடுத்த மாதம் பார்க்கலாம் என்றவருக்கு நன்றி சொல்லி விட்டு
வெளியே வந்த லேகாவிடம் , அவசரமாக வெளியே வந்த சாரதா,
டாக்டர் இன்னொரு மருந்து கொடுத்திருக்கிறார்,
நீங்கள் போய் அவரைப் பாருங்கள் என்றதும்,
அம்மாவுடன் அவளை இருக்கச் சொல்லிவிட்டு அறைக்குள்
நுழைந்த லேகா வைக் கடுமையாக நோக்கினார் டாக்டர்.
அம்மாவை நீங்கள் சரியாக்க கவனிக்கவில்லை. அவள் இதய நிலைமை
எனக்கு கவலையாக இருக்கிறது.
அவள் இருதய சிகித்சையை மறுத்துவிட்டாள்.
இப்போது 40 சதவிகிதம் அவள் இதயம் இயங்குகிறது.
மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது.
அவள் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள
ஒரு உதவியாளர் தேவை.
நம் மருத்துவமனையிலேயே தாதிகள் இருப்பார்கள்.
நான் அனுப்பும் இருவரை பகலுக்கு ஒருவர் ,இரவுக்கு ஒருவர் என்று
வைத்துக் கொள்ளுங்கள்''
என்றதும் திகைத்துப் போனாள் லேகா.
குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெளியே வந்து அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு
வெளிவந்து அவளைத் தன் வண்டியில் உட்கார வைத்துத் தம்பியைத் தேட , அவனும் வந்தான். எல்லோரும் கிளம்பினர் .
சி.பி.ராமசாமி சாலையின் நெரிசலில் வண்டியைத் திருப்பியபடி
சேகரைப் பார்த்தவள். , டாக்டர் புது மருந்து சொல்லி இருக்கிறாரடா ,
அம்மா என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு
ஓய்வெடுக்கட்டும்,
நானும் நீயும் வாங்கி வந்துவிடலாம்
என்றாள் .
கேசவப்பெருமாள்புரம் வந்ததும் வீட்டு முன் வண்டியை நிறுத்தி அம்மாவை மெதுவாக அழைத்துச் சென்று, சோபாவில் உட்கார வைத்துவிட்டு,
காம்பிளான் கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் .
அம்மா இதோ போய் வந்து விடுகிறோம். யசோதா உன்னுடன் இருப்பாள்.
இந்தா இந்த வாரக் கல்கி என்று அம்மா கையில் கொடுத்துவிட்டு,
தம்பியை நோக்கினாள் .
நீ மருந்து சீட்டைக் கொடு நான் போய் வருகிறேன் என்றவனை இல்லப்பா,
எனக்கும் மருந்து வாங்கணும் நானும் வருகிறேன் என்று கிளம்பினாள்.
தேவகி
அம்மா தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் .
தன மகளுக்கு சரியாக நடிக்க வரவில்லை என்று
நினைத்தபடியே புத்தகத்தைப் புரட்டினாள் .
நாளை பார்க்கலாம்.

Sunday, May 24, 2020
முருங்கை ,மாங்காய்,உ.கிழங்கு சாம்பார்
வல்லிசிம்ஹன்
இறைவன் காப்பார் .
புதிய ரெசிப்பி என்று சொல்ல வரவில்லை.
இன்று தோசைக்குத் தொட்டு கொள்ள பசங்களுக்காகச் செய்தது.
மதியம் மிளகுக் குழம்பும் பீட் ரூட் கறியும் , பொரித்த அப்பளமும் ஆயாச்சு.
இப்பொழுது சாயந்திரத்துக்குத் தேங்காய், அவல் , பாசிப்பருப்பு,மெந்தியம்
கொஞ்சம் அரிசி சேர்த்து ஊறவைத்து அரைத்த பிறகு சாம்பார்
வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து செய்தென்.
மாங்காய் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது.
ப.பருப்பு மசித்து வைத்துக் கொண்டு, முருங்கை , மாங்காய்,
உ.கிழங்கு ஒன்றாக உப்பு , மஞ்சள் பொடி போட்டு வேக வைத்து,
கடுகு,ப.மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து (பச்சை மிளகாய் தான் முக்கியம்)
விட்டால் சாம்பார் தயார்.
பொடியும்,
புளி யும் இல்லாததால்
ருசியே வேறு மாதிரி இருந்தது.
இறைவன் காப்பார் .
முருங்கை ,மாங்காய்,உ.கிழங்கு சாம்பார் |

Thursday, May 21, 2020
Monday, May 18, 2020
TAMIL OLD--Parakkuum paravaiyum neeye(vMv)--KAVITHA
வல்லிசிம்ஹn
Nambiyar hero. Jamunaraani singer. a wonderful song. thank you sri. Janarthan KB.
Nambiyar hero. Jamunaraani singer. a wonderful song. thank you sri. Janarthan KB.
அவ்வையார்
வல்லிசிம்ஹன்
Mayavaram Venu
(1954 இல் )பார்த்தது.இன்றோடு அவ்வையார் கதை சொல்வது முடிகிறது.
குழந்தைகளின் தமிழ் இன்னும் மேலே வளர்கிறது.
சொல்வதற்கு முன் படத்தையும்,
நீதி நெறி, மூதுரை உட்பட பல
பாடல்களையும்
படித்து, காண்பது வழக்கமாகிவிட்டது.
எத்தனை உன்னதமான படம் இந்தப் படம்!!!
ஆரம்பத்திலிருந்து முடிவு வரை தூய தமிழ்.
அந்தக் காலத்து உடை.
தம்பதிகளின் ஆதர்சம்.
கே பி சுந்தராம்பாளின் அற்புத பிரசன்னம்.
கணீர் குரல். எல்லோரிடமும் காட்டும் வாத்சல்யம்.
நம் அசோகன் கூட ஒரு சோழ அரசனாக வருகிறார்.
வள்ளல் பாரியாக வருபவர் எம் கே ராதா என்று நினைக்கிறேன்.
சந்த்ரலேகா படத்தில் ஹீரோ ஆக வருபவர்.
நகைச்சுவை மன்னன் சாரங்கபாணிக்கு இரண்டு வாய்ப்பு.
சுந்தரிபாயின் கட்டுக்கோப்பான நடிப்பு.
அதிசயமான ஆங்காரம். நொடியில் மாறும் முக பாவங்கள்.
முதல் தடவை சிறுமியாகப் பார்த்த போது கிடைத்த அதே
ஆச்சர்ய அனுபவம் இப்போதும் கிடைத்தது தான்
அதிசயம்.
இந்தப் படம் இப்பொழுதும் நமது தொலைகாட்சி
திரைகளில் வரலாமாய் இருக்கும்.
இந்த பக்தியும், அந்த விநாயகரும், யானைகள் வந்து மோதி சுவை உடைத்து தெய்வீகக்கனை மீட்கும் காட்சியும்,
பொறுமை என்னும் நகை அணிந்து பாடலையும்,
மயிலேறும் வடிவேலனையும் என்னால் மறக்க முடியவில்லை.
கடைசியில் கைலாசம் செல்லும் அவ்வை ய்ப்பிராட்டியோடு நாமும் சிவா பார்வதி தரிசனம் தத்ரூ பமாகக் காண்கிறோம்.
மாபெரும் காதுகளை இயல்பாக அமைத்து,
நம்மைப் படத்தோடு ஒன்றா வைத்த திரு எஸ்.எஸ். வாசனுக்கும்,
அவர் நடிக்க வைத்த அத்தனை உத்தம நடிக நடிகையருக்கும்
பாடல்கள் எழுதிய கவிஞர்களுக்கும்,
இசை அமைத்த M. D. Parthasarathy
P. S. AnandaramanMayavaram Venu
According to S. Theodore Baskaran, Avvaiyar was perhaps the height of the trend for films celebrating Tamil culture and language: "A story woven around episodes from the life of the legendary poetess Avvaiyar whose works are considered to be one of the glories of Tamil literature. Every Tamil child is initiated into the language and culture through her poems. The film is dedicated to Mother Tamil and opens with a song praising Tamil Nadu. Avvaiyar herself symbolizes Mother Tamil and her deity
இதைவிட நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்.
இந்தப் படத்தையும் ஸ்ரீ தி கே ஷண்முகம் நடித்த அவ்வையாரையும்
ஒத்துநோக்கி சிலர் எழுதினார்கள்.
எண்ணப் பொறுத்தவரை இரண்டுமே உன்னதம்.
இது சினிமா, அது நாடகம். அவ்வளவே வித்தியாசம்.
Sunday, May 17, 2020
சில சமயம் சோதனை
வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
எழுதுவது சில சமயம் சோதனை தான்.
//கட்டாயம் என்று ஒன்றும் இல்லை.
' சர்வே ஜனா சுகினோ பவந்து ' என்று ஆரம்பிக்கிறோம்.
பொழுது போவது என்று ஆரம்பித்தது
சில சமயம் சங்கடங்களில்
மாற்றிவிடுகிறது.//
இது என் மொழியில்லை . வைத்தியர் ஸ்ரீஹரியின்
எழுத்து.
யாருக்கோ மருந்து சொல்லப் போய்,
அது பயன்படாமல் போகிறது.
அதாவது இவர் சொன்ன பத்தியத்தை
அவர் அனுசரிக்காமல் மருந்தையே உணவாக உண்டது விபரீதத்தில்
முடிகிறது.
அடுத்த அத்தியாயத்தில் ஆதிமூலமே என்று
ஆரம்பிக்கும் போது
நமக்கு செய்தி என்ன என்று புரிகிறது. இத்தனை
பெரிய வைத்தியருக்கே இந்த கதி என்றால்
நாம் எழுதும்போது எத்தனை ஜாக்கிரதையாக
இருக்க வேண்டும் என்று யோசிக்க வைக்கிறது.

Thursday, May 14, 2020
மைசூர் கூட்டு .....
வல்லிசிம்ஹன்
மைசூர் கூட்டு .....
மூன்றாவது வீட்டில் இருக்கும் பிரேமா சொன்ன
கொங்கன் சமையல் இந்தக் கூட்டு. பூரி, சப்பாத்தி, ,தோசை எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ்.
இரண்டு நாட்கள் முன்பு சப்பாத்தியும், இந்தக் கூட்டும் செய்தோம் .
அவள் சொன்ன காய்கறிகள்
chow chow ,
குடமிளகாய்,
பட்டாணி ,
உ.கிழங்கு,
காரட், இவைகளை பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள் பொ டி போட்டு
வேக வைத்துக் கொள்ளவேண்டும்.
கூட்டுக்கு சேர்க்க, அரைக்க வேண்டிய
பொருட்கள்.
பொட்டுக்கடலை,
வெங்காயம்,
இஞ்சி,
மிளகு,
சீரகம்,
கொத்தமல்லி ,அதாவது தனியா,
மிளகாய் வற்றல்,
கடலைப் பருப்பு
மேலே சொன்னவற்றை , பொட்டுக்கடலை தவிர
நன்றாக சிவக்க வறுத்து
பிறகு பொட்டுக்கடலையும் சேர்த்து
மையாக மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் சீரகம், ப மிளகாய், வெங்காயம்,கருவேப்பிலை தாளித்துக் கொண்டும் அரைத்த கலவையையும், உப்பு+
வேகவைத்த காய்கறிகளையும் போட்டால்
கொதித்து வந்ததும் சாகு ரெடி,
கொத்தமல்லி ,முந்திரி வறுத்தது ,அலங்காரத்துக்கு.
இன்று மதியத்துக்கு பூரி.
பசங்க சரின்னு சொன்னால் சாகுவும் செய்துவிடலாம்.
பிரேமா மீன் சாப்பிடுபவள்.
இப்போது அந்த மார்க்கெட் இல்லாததால்
சைவத்துக்கு மாறிவிட்டாள் :)

Sunday, May 10, 2020
அன்னையர்கள்.
வல்லிசிம்ஹன்
முழுவதும் நிறைந்திருக்கிறது.
முதல் அறிமுகம் அம்மா. அவள் மடியில்
சொந்தம் கொண்டாடியது இரண்டு வயது வரை. பிறகு
தம்பி முரளி வந்தான்.
நான், என்னைப் பெறாத தாயிடம், என் பாட்டியிடம் ஒட்டிக் கொண்டேன்.
நிறைய செல்லம், கொஞ்சம் கண்டிப்பு நிறைந்தவள்
அந்த அன்னை.
வாழ்வின் பல முக்கிய கட்டங்களில் என் ஆதரவு.
அதே போல என் தோழிகளின் அன்னைகளும்.
அன்பு காட்டத் தயங்காத காலங்கள்.
என் அருமை மாமாக்களின் மனைவிகள்
அடுத்து வந்த பரிவின் பிம்பங்கள்.
அவர்களின் அரவணைப்பை நிறைய அனுபவித்திருக்கிறேன்.
எத்தனை கொடுத்து வைத்த வாழ்க்கை.!
இப்பொழுது என் மக்களின் தோழர்கள், தோழிகள்,
இணையத்தில் நட்பாக இருக்கும் அத்தனை பேருக்கும்
வல்லிம்மா ஆவதில்தான் எத்தனை மகிழ்ச்சி
அனைவரும் என்றும் சீரும் சிறப்புமாக வாழ
வேண்டி என் பிரார்த்தனைகளும் ஆசிகளும்.
நட்புகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்/
எல்லோருக்கும் அன்னையாக இருக்கும்
கடவுளருக்கும், அவர்களை விட்டுப் பிரியாத
சக்திகள் ,தாயார்கள் அனைவரும் நம்மைக் காப்பார்கள்.
Friday, May 08, 2020
வாழ்வின் மகிமைகள்
வல்லிசிம்ஹன்
வாழ்வின் மகிமைகள் உணரும் நேரம் இன்னேரம்.
செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை
எல்லாவற்றையும் பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
செய்ய வேண்டியவை.
முதலில் பிரார்த்தனை. அசைக்க முடியாத
நம்பிக்கை இறைவனிடம் வைப்பது.
பலபல செய்திகள் காதில் விழத்தான் செய்கின்றன.
நம் குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும்
என்ற கவலை இருக்கத்தான் செய்யும்.
நான் இருக்கும் தேசத்திலிருந்து
இந்த வருடக் கடைசிவரை பயணங்கள் சாத்தியமில்லை
என்று நேற்று சொன்னார்கள்.
நிறைய பேரை பாதிக்கக் கூடிய விஷயம் தான்.
இங்கே இரண்டுங்கெட்டான் நிலையில்
மாட்டிக் கொண்டவர்களுக்கு உதவி செய்யவும் பலர்
முன்வந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் ஒரே கணக்குதான்.
இன்னும் சென்னையில் தனியாக இருந்திருந்தால்
சமாளித்திருப்பேனோ என்ற கேள்விகளுக்கே
இடம் இல்லை.
என் தோழிகள் அனைவரும் அவரவர் மகன் அல்லது மகள்
வீட்டுக்குப் போய்விட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால் கூட்டுக் குடும்பம் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது
இப்படி எழுத ஆரம்பித்ததும் கிடைத்த செய்தி,
இந்தியா செல்ல ஒரு லக்ஷ்ம் ரூபாயில்
இங்கு விசா இல்லாமல் தங்கிவிட்டவர்களை
அழைத்துச் செல்ல விமானங்கள்
ஒரு வாரத்துக்கு வரப் போவதாக நல்ல செய்தி
கிடைத்தது.
150,000 நபர்கள் செல்வதாகவும் டிக்கெட்
பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
அங்கு சென்றதும், 14 நாட்கள் க்வாரண்டைனில்
அவர்கள் இருக்க வேண்டும்.
பிறகு அவரவர் இடத்துக்குச் செல்லலாம்.
அங்கேயிருந்து இங்கே வர வேண்டியவர்களும் இருப்பார்களே.
எனக்குத் தெரிந்தே இரண்டு மூன்று குடும்பங்களில் உறவினர்
வருகை அவசியமாகிறது.
பிள்ளைப்பேறுக்கு அம்மா வந்துதானே ஆகவேண்டும்.'!!!
இறைவன் என்ன மனது வைக்கிறானோ.
செய்யக் கூடாததாக நான் நினைப்பது அதீத கற்பனைகளுக்கு உள்ளாகி நம்
நேர்மறை எண்ணங்களை இழப்பது ஒன்றுதான்.
மனம் நலிவடைந்தால் உடல் அதைக் காட்டும்,.
எங்கும் போகாமல் எவரையும் காணாமல்
சாதாரணமாகப் பேசாமல் நமக்குள்ளேயே
அடங்குவது சிரமமமே.
முடிந்தவரை அலறும் செய்திகளை ஒதுக்கி இருக்கும் இடத்தைப்
பிரார்த்தனைகளால் நிரப்பி,
எப்பொழுதும் போல் வாழ்க்கையை நடந்து ,கடந்து செல்ல வேண்டும்.
முயற்சிப்போம். இதோ கடமைகள் நிறையவே காத்திருக்கின்றன.
வெல்லுவோம் இந்த அரக்கனையும்.

Thursday, May 07, 2020
Kanna nee thoongada song full video song
வல்லிசிம்ஹன்
நேர்த்தியான ஆடை அணிகலன்கள்.
கண்ணில் வழியும் பரிவு. கதா நாயகனின் உள்ளப் பிரதிபலிப்பு.
கட்டப்பாவின் ஆதரவும், புரிதலும்.
அனுஷ்காவின் அண்ணியாக வருபவரின் குறும்பும் ரசிக்கும் படி
இருக்கும். மொத்தத்தில் ஒரு முழுமையான
பாடல்.

Wednesday, May 06, 2020
வல்லிசிம்ஹன்
மிக அருமையான அன்பான குறும்படம்.
இத்தனை அழகாக ஒரு கணவன் .அவனுக்குத்தான். தன் மனை வி
மீது எத்தனை காதல். இந்தப் படத்தை இயக்க நடித்தவர்களுக்கு
வாழ்த்துகள்!
https://youtu.be/EedGW-fzMPA
மிக அருமையான அன்பான குறும்படம்.
இத்தனை அழகாக ஒரு கணவன் .அவனுக்குத்தான். தன் மனை வி
மீது எத்தனை காதல். இந்தப் படத்தை இயக்க நடித்தவர்களுக்கு
வாழ்த்துகள்!
https://youtu.be/EedGW-fzMPA
Tuesday, May 05, 2020
Monday, May 04, 2020
Bagubali super sence
வல்லிசிம்ஹன்
வாழ்வின் பல திருப்பங்களில் கடவுள் பக்தியும், எம் எஸ் அம்மாவின் பாடல்களும், திரைப்படங்களும் உறுதுணை. இந்தப் படமும் இந்த பாஹுபலி போல என்னை மாதக்கணக்கில் ஈர்த்ததில்லை.
மனம் அடிக்கடி சிந்தனையில் மூழ்கி பயப்படும் இந்தத் திரைப்படம் உலகில் அறம் இன்னும் வாழ்கிறது என்ற உறுதியை வரவழைக்கிறது.
கண்ணனும் அர்ஜுனனும் துரியோதனனும் வருகிறார்கள். சூப்பர்சீன் ஸ்பெல்லிங்க் தப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.:)In a sense it’s okay.

Friday, May 01, 2020
Argentine tango flash mob - Golden Age of no social distancing (Budapest...
வல்லிசிம்ஹன்
இதெல்லாம் கொரோனாவுக்கு முந்திய காலம்.
இதெல்லாம் கொரோனாவுக்கு முந்திய காலம்.
ரசமான விஷயம்.
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
ரசமான விஷயம்.
பேரன், வெளியில் தங்கி இருக்கும் போது
க்ரப் ஹப்பில் உணவு இணைய வழி ஆர்டர் செய்து
சாப்பிட்டு,
அஜீரணம் அதிகமாகி பருப்பு போட்டு எதுவும்
சுவைக்கவே முடியவில்லை.
இத்தனை சின்ன வயதில் இப்படிக்கூட
வருமா என்று வேதனையாக இருந்தது.
பயத்தம்பருப்பு மட்டுமே ஒத்துக் கொண்டது.
அப்பொழுதோ வெளியில் போய் வாங்கி வருவதில் தயக்கம் வந்து விட்டது.
நம் ஊர்க்காய்கறிகள் விற்கும் இந்தியக் கடைகள்
பொருட்களைக் கொண்டு வருவதில் தாமதமாகிறது.
இப்பொழுதுதான் கொஞ்சம் சரியாகி வருகிறது.
இதோ இன்றுதான் மயூரி என்ற கடையில் வீட்டில் கொண்டு வந்து தருவதாக
ஒத்துக் கொண்டார்கள்.
விலையும் வேலையும் கூடுதல் தான்.
எதற்கு இத்தனை முன்னெச்சரிக்கை என்று யோசனை
வருகிறது இல்லையா. என்னை முன்னிட்டுதான் இந்த ஏற்பாடு.
வெளியில் செல்லும் எத்தனையோ தம்பதிகளைப் பார்க்கிறேன்.
அவர்களும் ஒரு நாள் கணவன் சென்று வந்தால்,
இரண்டு மூன்று கழித்து மனைவி சென்று வருவார்.
இதோ இன்று வெய்யில் வந்திருக்கிறது.
யார் வெளியில் சென்றாலும் பத்தடி தள்ளி நின்றே
பேசுகிறார்கள்.
வெய்யில் அடித்தாலும் குளிரும் இருக்கிறது.
பைத்தாரக் காத்துன்னு பாட்டி சொல்வது கேட்கிறது.
அந்தக் காற்று காதில் புகுந்தால் சைனஸ்
பிரச்சினை வரும்.:)
இதெல்லாம் இளைய தலைமுறையினருக்கு.
எனக்கு இல்லை! இது இருக்கட்டும்.
60 வயதுக்கு மேல், உள்ள முதியோருக்குச் சீக்கிரம்
நோய் தொற்று வர வாய்ப்பு இருப்பதால்
சிறுவர்கள், இளையவர்கள் வெளியே போய்
அதை வாங்கிக் கொண்டு வந்துவிடக்கூடாது
என்பதில் இங்கிருப்பவர்கள் அதிக கவனம்
வைக்கிறார்கள்.
அதனால்தான் இத்தனை கட்டுப்பாடுகள்.
சரி, பேரன் பிரச்சினைக்கு வரலாம்.
அவனுக்கோ ரசமே பிடிக்காது.
பாஸ்தா, குழம்பு, நன்றாக வதக்கின காய்கறி இதெல்லாம்
பிடிக்கும்.
குழம்போ காரமே இல்லாமல் வைத்தாலும்
ஏப்பம் வந்து கொண்டிருக்கிறது.
ஒருனாள் ,பாட்டி செய்கிற கீரையும் ரசமும் சாப்பிடுடா
என்று கெஞ்சி தயவாய்க் கேட்டுக் கொண்டேன்.
அரைமனதாகச் சம்மதித்தான்.
கீரையை நன்றாக அலசிச் சுத்தம் செய்து
தேங்காய், சீரகத்துடன் வேகவைத்து மசித்து வைத்தாச்சு.
கடுகு தாளித்ததுமே வந்துவிட்டான்.
ஒரு கிண்ணத்தில் கீரையைப் போட்டுக் கொண்டு
முதல் பசி ஆற்றிக் கொண்டான்.
ரசம் எப்படி செய்யப் போறேன்னு கேட்டுக் கொண்டு
பக்கத்திலேயே நின்றவனிடம் விளக்கினேன்.
நம்ம ஐந்து பேருக்கு ஒரு சின்ன அளவு புளி ,உப்பு
போட்டுக் கரைத்துக் கொள்ளணும்.
சரி. நீ கை அலம்பிண்டியான்னு உறுதி செய்தான்.:)
பிறகு அவன் அம்மா வைத்திருக்கும் சின்ன உரலில்
ஜீரகம், பூண்டு, மிளகு போட்டுப் பொடித்துக் கொண்டேன்.
அப்புறம் அந்த ஸ்பைசி பொடி போடுவியா என்றான்.
அவன் சொன்னது சாம்பார்ப் பொடியை.
இல்ல ராஜா, பயப்படாதே என்றபடி அடுப்பில் வாணலியை ஏற்றி
நல்லெண்ணெய் விட்டு
சீரகம் போட்டுப் பொரிந்ததும் கருவேப்பிலைதாளித்து
சீரகப்பூண்டு மிளகை அதில் போட்டு வதக்கும் போது
வந்த வாசனையை முகர்ந்து.
ம்ம்ம்.இட் ஸ்மெல்ஸ் குட் என்றான்.
கூடவே புளி ஜலத்தை விட்டதும்,
ஐந்து நிமிடத்தில் அது பொங்கியது.
ஆச்சு என்று அடுப்பை அணைத்து விட்டேன்.
பக்கத்தில் இன்ஸ்டண்ட் பாட்டில் சாதம் தயார்.
இருடா, பெருமாளுக்குக் கை காண்பித்துவிட்டு சாப்பிடலாம்
என்று ஒரு சுத்தமான தட்டில் சாதம் பயத்தம்பருப்பு மசியல்,நெய் ,
மகள் வளர்க்கும் துளசிச் செடியிலிருந்து இரண்டு துளசி
இணைத்து ,குழந்தைக்கு ஒத்துக்க வேண்டும் பெருமாளே
என்று தியானித்தபடி அவன் தட்டில் வைத்தேன்.
எனக்குப் பாட்டி ?என்று கேட்ட இளையவனுக்கும் அதே.
நோ புக், நோ மொபைல் என்று சொன்னதும்
''நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் பாட்டி'' என்று சொன்னபடி
கைகளைக் கழுவிக் கொண்டு வந்தான்.
கீரையைத் தொட்டுப் போட்டுக் கொண்டு,
நோ க்ரன்ச்? என்றவனிடம், அது இல்லாமல்
இன்று சாப்பிடு.அதுவே வயிற்றுக்குக் கேடு
என்றேன். உ .கிழங்கு வறுவல் இல்லாமல்
முதல் தடவையாகச் சாப்பிட்டு முடித்தான்.
அடுத்தாற்போல் நல்ல தயிர் சாதம்.
கிட்டத்தட்ட இரண்டு வாரமாக ஏப்பம் காணோம்.
சரியாகத் தூங்கி,சரியாக எழுந்தாலே பாதி வியாதி
போய்விடும். பார்க்கலாம். இறைவன் துணை.

Subscribe to:
Posts (Atom)