Blog Archive

Wednesday, May 27, 2020

தேவகிக்கு விடுதலை எது.3

வல்லிசிம்ஹன் .

வளமுள்ள வாழ்வு இறைவன் தருவான்.

தேவகிக்கு விடுதலை எது.

  ஒரு அன்னைக்கு  வேண்டியது அவள் பெற்ற செல்வங்களின் நலம் மட்டுமே.
அந்த வகையில்
அவள் இழப்பை சந்திக்க நேரிட்டது முதல் மகன்
தவறிய போது.
எத்தனையோ பாடுபட்டு மேல் படிப்பெல்லாம் படித்து  ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல விதமாகத் தன் உழைப்பை
20 வருடங்கள் தந்த நிலைமை. திடீரென்று வந்த அதிர்ச்சி இதய நோய்.
அன்று கூட அவன் வெளி நாட்டுக்குப் பயணமாகிக் கொண்டு இருந்தான்.

இடது கை விபரீதமாக வலிப்பதை ,சட்டை செய்யாமல்
நீவி விட்டுக் கொண்டே கிளம்பிய மகனை,
வைத்தியரை அணுகச் சொன்னது அம்மா தான்.
42   வயதில் நோயை நினைக்க அப்போது நேரம்  எங்கே இருந்தது.?
அம்மா, தன் வைத்தியரை வீட்டுக்கே வரவழைத்துவிட்டார்.

அவர் சொன்னதும் செய்ததும் அதிர்ச்சி கொடுத்தன.
சந்திரனை உடனே மருத்துவமனையி சேர்க்க வேண்டும்.
இரவு முழுக்க அவனுக்கு வலி இருந்திருக்கிறது.
என்று சொல்லித் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.
அலுவலகத்துக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு தம்பி சேகருக்கு வந்தது.
விஷயத்தைத் தெரிவித்து விட்டு
அண்ணன் இருந்த மருத்துவமனைக்கு  மற்றவர்களொடு
சென்றபோது,
அவன் உடனடி அறுவை சிகித்சைக்கு அழைத்துப் போகப்பட்டிருப்பது தெரிந்தது.

அதிர்ச்சியில் குடும்பமே மூழ்கியது.
சந்திரனும் மீண்டு வந்தான். எண்ணிப் பத்துவருடங்கள்
இருந்துவிட்டு இறைவனடி சேர்ந்தான்.

வைத்தியரின் எச்சரிக்கைப்படி அனைவரும்
உடல் நலம் பேணவேண்டிய அவசியம் தெரியவந்தது.
அம்மா நொடித்துப் போனாள்.
தன் மற்ற இரு செல்வங்களையும்  காக்க
அவள் தினமும் கடவுளிடமே சரண்., காலை மாலை,இரவு
எல்லா நேரமும் இறைத்துதிதான்.

தனக்கும் நோய் வந்த போது,
மேற்கொண்டு அதிர்ச்சிகளை எதிர்னோக்கும் சக்தி இல்லை
அவளிடம். அவள் நினைத்தபடி விடுதலை கிடைக்கவில்லை.
அந்தப் பூட்டுக்குத் தப்பும் பொழுது 72 வயதாகிவிட்டது அவளுக்கு.
இதோ இன்று தன்னைக் காக்கும் உத்தேசத்தில்

டாக்டர் செரியன் அனுப்பி இருக்கும் 35 வயது மதிக்கத்தகுந்த தாதியர்.
தான் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வருவதை அவளால்
உணர முடிந்தது.

முதல் நாள் ,இரவு சேகர் முதுகு வலியில் தவித்த போது
அவனருகே உட்கார்ந்து தனக்குத் தெரிந்த
வகையில் அவனுக்கு ஆறுதலாக இருந்தாள்.
தூங்கிவிட்ட மகனின் அருகில் விழித்திருந்து,
மருமகள் மனோவை எழுப்பிப் பார்த்துக் கொள்ளச் சொல்லித் தான் துயிலச் சென்றாள்.

''பயந்துட்டியாமா"" என்ற மகன் குரல் கேட்டே விழித்தாள்.
சிரித்த முகத்துடன் தன்னை எழுப்பிய மகனிடம்
இல்லையேப்பா, உன் வலிக்கு என்ன மருத்துவம் பார்ப்பது
என்றே யோசித்தேன். என்றாள்.
பிறகுதான் மகள் வந்து தன்னைப் பரிசோதனைக்கு
அழைத்துப் போக இருப்பது நினைவுக்கு வந்தது .

அதற்குப் பிறகு நடந்ததை நாம் பார்த்தோம்.

வந்திருக்கும் இரு பெண்களும்  கச்சிதமாக உடை அணிந்திருந்தார்கள்.

லேகாவின் மாமியார், மங்கிய கண்பார்வையில் அவர்களை  பார்த்தார்.
பக்கத்திலிருந்த தேவகி அம்மாவின் கரங்களை பற்றி,
''எல்லாம் நல்லதுக்கு கென்றே நினையுங்கள்.
யாரும் இல்லாத வீட்டில் உங்களுக்குத் பேச்சுத் துணைக்கு இப்போது ஆள் வந்தாச்சு'' என்று புன்னகைத்தார்.

தேவகிக்கு இந்த ஏற்பாடு உகப்பாக இல்லை.
''செரியன் என்ன சொன்னார் , எதற்கு இப்போது எனக்கு காவல்?''
என்று வினவினார்.

அம்மா முதலில் சாப்பிடலாம். உங்கள் மருமகன் கூட 
இதோ வந்துவிட்டார்' என்று வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டு சொன்னாள் .
'நினைத்த பொது நீ வரவேண்டும்...
நீல  எழில் மயில்  மேல் அமர்  வேலா..'
என்று நல்ல குரலில் பாடியபடி  வரும் மாப்பிள்ளையைக் கண்டு எழுந்து நின்றார்   தேவகி.

அட! அத்தை, சேகர்  ! எங்கடா இந்தப் பக்கம்.

என்ன இங்க ஒரு மாநாடு நடக்கிறதா என்று சிரித்தபடி அமர்ந்தான் 

சரவணன்.
சாப்பிட்டுக் கொண்டே பேசலாம், நீங்களும் 
வாங்க என்றதும்.
இதோ வந்தேன் என்று கைகால் கழுவப்  போனான் அவன்.










.




14 comments:

ஸ்ரீராம். said...

மனதில் பலம் இருக்கும்போது எதுவும் சாதிக்க முடியும்.  மனம் பலவீனமடைந்து விட்டால் எளிதான காரியங்களும் சிரமமாகத் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன.

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன் மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். எந்த நிலையிலும்
மனம் தளராமல் இருக்க நிறையப் பிரயத்தனம்
செய்ய வேண்டும்.
எப்போதும் இது முடியுமா என்று தெரியாது.
பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி வெங்கட்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் அம்மா...

Thenammai Lakshmanan said...

தொடராம்மா. மிக சுவாரசியமா இருக்கு. ஆனால் நோய்நொடி என்றால் சிறிது பயமாய்த்தான் இருக்கு :(

Thulasidharan V Thillaiakathu said...

வயதானால் தனக்கு நோய் வந்தால் சிறு வயதில் இருந்ததைப் போல்வே இருக்க நினைத்து தனக்கு எதற்கு ஹெல்பர்ஸ் என்று அவர்களுக்குத் தோன்றுவதுதான். தங்களை விட தங்கள் இளையவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.

தேவகி அம்மாவிற்கும் அப்படித் தோன்றத்தானெ செய்யும். நன்றாக இருக்கிறது. தொடர்கிறேன் வல்லிம்மா

துளசிதர்ன

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா கதை நன்றாகச் செல்கிறது. தேவகி அம்மா பாவம்.

என் பாட்டி நினைவுக்கு வந்தார். தன் இரு மகள்கள், மாப்பிள்ளைகள், மருமகள் அதான் என் அம்மா எல்லாரையும் இழந்துவிட்டு தான் மட்டும் இருக்கோமே என்று புலம்புவார்.

அடுத்து என்ன என்று தொடர்கிறேன்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
கருத்துக்கு மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

என் அன்பு தேனம்மா, இனிய காலை வணக்கம்.
நோய் வருவதில் பயமில்லை. அதை விட்டு நாம் எப்படி வெளியே வருகிறோம் என்பதில்
தான் நாம் சளைக்கக் கூடாது.
நன்றி ராஜா. நலமே வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தி. கீதா.
மிக மிக உண்மையான வார்த்தைகள்.
நமக்கு வந்தால் தாங்கிக்கொள்ளலாம்.

வயதில் இளையவர்களுக்கு ஏதாவது தொந்தரவு என்றால்
சகித்துக் கொள்வது மிக மிக சிரமம். நீங்கள் நிறைய அனுபவித்து இருக்கிறீர்கள்.

உங்களுக்குப் புரியும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கீதா.
நீங்கள் முன்பே சொல்லி இருக்கிறீர்கள்.
பாவம் உங்கள் பாட்டி.
எத்தனை இழப்பு அவர்களுக்கு பாவம்.

கோமதி அரசு said...

தாய்க்கு தனக்கு வந்தால் தாங்கும் தைரியம் வரும், குழந்தைகளுக்கு என்றால் பலவீனமாக ஆகி விடுவாள்.

என் அம்மாவுக்கு வந்த சோதனை யாருக்கும் வரக்கூடாது என்றே வேண்டுவேன்.
சிறு வயதில் கணவரை, மகளை, மகனை இழந்த சோகத்தை தாங்கி கொண்டு மற்ற குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார்.

மாதேவி said...

அனைவரும் நலமாக இருக்கவே விரும்புகிறோம்.