Blog Archive

Tuesday, May 26, 2020

Temple Curd Rice / Azhagar Kovil Dosa | Rusikkalam Vanga | 02/01/2018

வல்லிசிம்ஹன்

7 comments:

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அருமை, நானும் இந்த ஷனல் பார்ப்பேன், ஆனா இந்த கோஸ்ட் பண்ணும் பெண்ணைப் பிடிக்கவே பிடிக்காது, அது பேசவும் மாட்டுது, கலகலப்பே இல்லை, ச்சும்மா ஸ்ரைல் பண்ணிக்கொண்டு நின்று தலையை தலையை மட்டும் ஆட்டுவா கர்ர்:)).. ஒரு ஷோ எனில், அதை நடத்துபவரின் கலகலப்பில்தான் அதைப் பார்க்கும் ஆவல் வரும்... அந்தப் பெண்ணைப் பார்த்ததும் எரிச்சலாகி, ஷனலை மாத்தி விடுவேன் ஹா ஹா ஹா..

இதில் ஒரு குண்டு மாமி வந்து சிரிச்சுச் சிரிச்சு சமைச்சுக் காட்டுவா, அவவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நெல்லைத் தமிழன் said...

கோவில் தயிர்சாதம் - ஏகப்பட்ட கோவில்களில் சாப்பிட்டிருக்கேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நம் பசியைப் பொருத்து ருசி கூடும் குறையும்.

அழகர் கோவில் தோசை, சில மாதங்களுக்கு முன்பு சாப்பிட்டேன். ரொம்பவும் ஆஹா ஓஹோ என்று இல்லை. எண்ணெயில் பொரிப்பதால், உடலுக்குக் கெடுதல் என்ற எண்ணமே மனதில் ஓங்கியிருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா, நீங்கள் சொல்வது உண்மைதான்.

இந்த சானலில் வரும் அந்த குண்டு மாமியை நானும் பார்த்திருக்கிறேன்.
இந்தப் பொண்ணு மர பொம்மை போல
உப்பெடுத்துக் கொடுத்து
பருப்பெடுத்துக் கொடுத்து;;;;
இந்த மாதிரி ஷோ யாராவது நடத்துவார்களா என்று யோசித்தேன்.

அந்த அக்ரஹார சமையல் மாமியும்
சித்தர் பாடல்கள் சொல்லி,
குருவாயூரப்பன் ஸ்லோகம் சொல்லி
சிறப்பா செய்வாங்க.
அழகர் கோவில் தோசை இது போல் வார்ப்பதாக என் மாமியார்
சொன்னதில்லை.'
மாவைக் கையில் எடுத்து தோசைக்கல்லில் தட்டுவார்கள் என்று கேள்வி,

மொறு மொறுவெண்டு நன்றாக இருக்கும். நன்றி அதிரா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா உண்மைதான்.
கோவில் மடைப் பள்ளியில் உட்கார்ந்து சாப்பிட முடிந்தால் மட்டுமே நல்ல
உணவு கிடைக்கும்.
அதுவும் அம்சிப் பண்ணி வந்தவுடன் கிடைக்கும்
பிரசாதம் ஜோராக இருக்கும்.
நான் அழகர் கோவில் சென்று ...அது ஆச்சு ஒரு 27 வருஷம்.

பசி ருசியைப் பொறுத்தே பண்டம்.

ஸ்ரீராம். said...

யூ டியூப் பக்கம் அதிகம் செல்வதில்லை என்பதால் இந்தக் காணொளி, இந்த மாமி, பெண் எல்லாம் பார்த்ததில்லை.  எனவே எனக்கு விவரம் தெரியாது!

இந்த முறையில் ஒருதரம் தயிர்சாதம் செஞ்சுடலாம்.  அஸ்ஜகர்கோவில் ஐட்டம்லாம் சாப்பிட்டதில்லை.  கோவில் சென்று வருவதோடு சரி!

ஸ்ரீராம். said...

அழகர் கோவில் என்று படிக்கவும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இது புதுயுகம் என்னும் டிவி சானல் ஒளிபரப்பும் நிகழ்ச்சி.
நல்ல தயிர் சாதம் செய்து சாப்பிடலாம்.
கோடைக்கு நல்லது.