வல்லிசிம்ஹன்
இனி எல்லாம் சுகமே
தம்பியைக் கண்டதும் அதிர்ந்து போனாள் லேகா.
என்னடா ஆச்சு ,இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே என்று பதைத்தவளை,
செரியனிடம் அழைத்துப் போகச் சொன்னான் சேகர்.
சந்தடி கேட்டு கீழே வந்த சரவணன்,
உடனே வண்டி எடுத்துக் கொண்டு,
பணம், க்ரெடிட் கார்ட் எல்லாம் இருக்கிறதா
என்று சரிபார்த்து வண்டியை எடுத்து,
சேகரையும் லேகாவையும் அழைத்துக் கொண்டு
விரைந்தார்.
லேகா மேலேயே சரிந்த நிலையில் தம்பி.
மருத்துவமனை வந்ததும்,
தொங்கப் போயிருந்த டாக்டர் வந்து
உடனே அவனை ஐசியூவில் அட்மிட் செய்தார்.
ரத்த அழுத்தம் எங்கேயோ இருந்தது.
உடைகளைத் தளர்த்தி, மானிட்டர்களைப் பொறுத்தி
உடனே கொடுக்க வேண்டிய மருந்துகளைக் கொடுத்து
வெளியே வந்தவர், இந்த நிலமை வரக்கூடாது என்றுதான்
நான் எச்சரித்தேன்.
அவன் கேட்கவில்லை.
எமெர்ஜென்சி ஸ்டெண்ட் வைக்க வேண்டும்
அவன் மனைவி எங்கே என்றார்.
நாங்கள் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம் டாக்டர்,
அவனைக் காப்பாற்றுங்கள் என்று கண்கலங்கிய லேகாவின் தோளைத் தட்டிக் கொடுத்தார் டாக்டர்.
அவனும் இளவயதுக்காரன் அம்மா.
50 ஆகிறது.
இந்த சோதனை அவனை நல் வழியில் கொண்டு வரட்டும் என்றபடி
உள்ளே விரைந்தார்.
தன் தம்பி மனைவியை அலைபேசியிலழைத்து
நிலைமையைச் சொன்னதும்,
அன்று அங்கு தங்கி இருந்த தனலக்ஷ்மியிடம், தான் பிறந்துவீட்டுக்கு முக்கிய காரியமாகப்
போவதாகவும்
தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை எழுப்ப வேண்டாம்
என்று வலியுறுத்திவிட்டு
திகில் கொண்ட மனத்துடன் மருத்துவமனை விரைந்தாள்.
எல்லோரும் கண்விழித்த அந்த நீண்ட இரவும் அதிகாலை 5 மணிக்கு
வெளிச்சம் கொண்டது.
காலை 6 மணிக்கு அவர்கள் சேகரைக் காண அனுமதிக்கப் பட்டார்கள்.
நினைவு திரும்பாத நிலையில்
அத்தனை இயந்திரங்களுக்கும் நடுவில் அவனைப் பார்த்த லேகாவும்,
மாலதியும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு
வெளியே வந்து விட்டார்கள்.
டாக்டர் தன் ஓய்வறைக்கு விரைந்து கொண்டிருந்தவர்,
உன் தம்பி இப்போது பிழைத்துவிட்டான்.
இனி வாழப் போகும் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டுமானால்
நல்ல பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தளர்ந்த குரலில் சொல்லி விட்டு
வீட்டுக்குச் சென்று 10 மணிக்கு வாருங்கள் என்று
சென்றார்.
அவருக்கும் வயதாகி விட்டது என்பதைஉணர்ந்தாள் லேகா.
மாலதி தான் அங்கேயே இருப்பதாகவும்
அவர்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று அம்மாவைப் பார்த்து
செய்தி சொல்ல வேண்டும் என்றாள்.

12 comments:
word press?
இனி வாழப் போகும் காலம் நலமாக இருக்கட்டும்.
பாசமும், நேசமும் நிறைந்த கதை.
நல்ல பாதை எது என்று டாக்டர் சொன்னாரா? அதைப் பகிர்ந்துகொள்வீர்கள் என நினைத்தேன்
நலமே விளையட்டும்...
அடடா....
நல்லதே நடக்கட்டும்.
தொடர்கிறேன்.
இல்லை கீதாமா.
ப்ளாக்ஸ்பாட். தான்.
அன்பு முரளிமா,
லேகா ,சேகர் இவர்களின் அண்ணா மறைந்த போதே
இவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ரெகுலரா மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
அதிகக் கொழுப்பில்லாத உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று.
சேகரின் வேலைப்பளு,காலம் கெட்ட காலத்தில்
உண்பது, இல்லாவிட்டால் உண்ணாமல் இருப்பது.
தொடர்ந்து புகைபிடிப்பது இவையே உடல் நலக் கேட்டுக்கு
காரணம் என்று நமக்கும் தெரிந்தது தானே.
இவ்வளவில் தப்பியதே .
அன்பு கோமதிமா,
நல்ல வேளையாக நன்மையில் முடிந்தது. நல்ல வைத்தியர்,அவரின் நல்ல அணுகுமுறை,
இப்பொழுது வளர்ந்திருக்கும் புது டெக்னாலஜி
எல்லாமே உயிரை மீட்பதில் உன்னத நிலையில் இருக்கின்றன.
கடவுள் கிருபையில் என் மாமாக்கள் இருவரும்
75 வயதில் பைபாஸ் செய்து கொண்டு நலமாகவே இருக்கிறார்கள்.
நலமாகவே இருக்க வேண்டும். நன்றி மா.
இந்தக் கதையில் வரும் அன்னை கொடுத்து வைத்தவள்.
அன்பு தேவகோட்டைஜி,
எல்லோரும் எப்பொழுதும் நல்ல சுகத்துடன் இருக்க இறைவனே துணை.
நன்றி மா.
நல்லதே ந்டக்கட்டும். நடக்கும். தேவகி அம்மாவுக்குச் சொல்லும் போது அவர் பதற்றப்படாமல் இருக்க வேண்டுமே
துளசிதரன்
எப்படியோ இப்போது பிழைத்துக் கொண்டார் சேகர். இனியேனும் நல்லபடியாக அமையட்டும்.
கீதா
அன்பு துரை, கீதா,
அவனுக்கு உடல் நிலை சரிப்பட்டதும் தான் சொன்னார்கள்.
விபரீதம் ஏதும் நிகழாமல் குடும்பம் தப்பியது மா. நன்றி உங்கள் இருவருக்கும்.
Post a Comment