வல்லிசிம்ஹன்
தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4
தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4
சேகர் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றான்.
அவனால் டாக்டரின் குறிப்புகளை ஜீரணிக்க முடியவில்லை.
என்ன செய்வது.
அம்மாவைத் தனியே விடக்கூடாது என்றால் எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தமா.
அம்மாவைக் கவனித்துக் கொள்வதில் நான் அல்லவா இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
மனைவிக்கோ நேரம் இருப்பதில்லை.
முன்பாவது அம்மா சமையல் செய்து வைத்துவிடுவார்.
இருவரும் அந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவரவர் வழியில் சென்று விட்டு வீடு திரும்புவர்.
மாலுவின் பெற்றோரும் சென்னையில் இருப்பதால், சனி ஞாயிறு
அவர்களைச் சந்தித்துத் திரும்புவாள்.
அப்போதெல்லாம் அம்மாவுடன் இருந்துவிடுவான் சேகர்.
அம்மா எத்தனை வற்புறுத்தினாலும்
வெளியே செல்ல மாட்டான்.
சிந்தித்துக் கொண்டே அலுவலகம் வந்து விட்டான்.
உடனே ஏதோ ஒரு வழக்கு விஷயமாக வேலூர் வரை போக வேண்டி இருந்தது.
இரவு முழுவதும் காத்திருந்து ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆளைப்
பிடிக்க வேண்டும்.
சேகருக்கு முன்பே அவனது குழுவினர் சென்று விட்டிருந்தனர்.
தானும் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு,
விரைந்து சென்றான்.
வேலூரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அவனது குழுவினர் மஃப்டியில்
இருந்தனர். அங்கிருந்த டீக்கடை ஒன்றில்
சாதாரண உடை,லுங்கி, டி ஷர்ட் என்று உடுத்திக் கொண்டு
இவன் வருகைக்காகக் காத்திருந்தனர்.
தன் நண்பன் கதிர்வேலுவை மட்டும் அழைத்துச் சென்று
நிலைமையை விசாரித்துத் தெரிந்து கொண்ட சேகர்,
குற்றவாளி தங்கியிருந்த வீட்டுக்குப் பின்புறம்
ஐந்து காவல்காரர்களைத் துப்பாக்கியுடன் அனுப்பிவிட்டு,
தானும் மற்ற இன்ஸ்பெக்டர்களுல் எதிரெதிரே இருந்த வீட்டு
தாழ்வரையிலோ ,திண்ணையிலோ, வாசலிலோ
உலவியவாறு இருக்கும்மாறு கவனித்துக் கொண்டான்.
ஒரி துளி சந்தேகம் வந்தாலும் அந்தக் குற்றவாளி நொடியில் தப்பி
விடுவான்.
அடக்க முடியாமல் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த போதுதான்,
தன்னையே பார்த்த வண்ணம், ஒரு உருவம் எதிர்வீட்டு மாடியில்
தெரிவதைக் கண்டு,
அலட்சியமாகத் திரும்புவது போல தான் இருந்த வீட்டுக்குள் நுழைந்தான்.
இருட்டுக்குள் சென்றதும், மொபைல் ஃபோனில்
தன் குழுவை உசார் செய்ய,
அடுத்து வந்த நிமிடங்கள் அங்கே கலவரம் பற்றியது.
சேகர் முதல் நாளே திட்டமிட்டுக் கொடுத்திருந்தபடி
அவன் குழுவினர், தங்கள் வேலையைக் கத்தியின்றி ரத்தமின்றி செய்து முடித்தனர்.
என் தம்பி சொல்வதுபோல ''கோழியை அமுக்கிப்'' பிடித்துவிட்டனர்:)
வேலை முடிந்து திரும்பும்போது அதுவரை பட்ட இறுக்கம்
முதுகுவலியாக உருவெடுக்க
சேகரின் இதயத் துடிப்பு இமயத்தை எட்டியது வலியின் பரிணாமத்தால்.
தன் வீட்டுக்குச் சென்று இறங்காமல் அக்கா, லேகா வீட்டுக்கு வந்துவிட்டான்.
நல்ல வேளையாக அம்மா அங்கே இல்லை.
9 comments:
ஒரு பாகமாக எழுதாமல் அதை மூன்று பகுதியாகப் பிரித்து எழிதியாகிவிட்டது. நடந்தது எப்படி இருந்தாலும்
துனபமில்லாத. நடப்புகளையே நானும் எதிர்பார்க்கிறேன. எல்லோரும் நலமே வாழ்க.
ம்ம்ம். நல்லதே நடக்க வேண்டும். தொடர்கிறேன்.
குணமடைய வேண்டுவோம்.
ஓ சேகர் ட்யூட்டியில் இருந்து முடிந்து வரும் போது முதுகுவலியுடனா. என்னாகிறது தொடர்கிறென்
துளசிதரன்
அட! அம்மா, போலீஸ் அமுக்குப் பிடிப்பதைக் கூட அழகா சொல்லிருக்கீங்களே விவரமா!! சூப்பர். சேகருக்கு என்னாச்சோ அடுத்த பகுதிக்குப் போகிறேன்.
கீதா
அன்பு வெங்கட் ,நல்லதே நடந்தது. நன்றி மா.
அன்பு மாதேவி, தொடர்ந்து படித்ததற்கு மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
ஆமாம் அன்பு துளசிதரன்,
எந்த ஒரு ஸ்டெரெஸ்ஸும் தாங்க முடியாத உடல் நிலை ஆகிவிட்டது மா. இறைவன்
அருளால் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.
என் அன்பு கீதாமா,
என் தம்பி ரங்கன்,
அவன் அலுவலக வேலையில் இது போல அத்துமீறி நடப்பவர்களைப்
பிடிக்கையில்
இந்த மாதிரி வார்த்தைகளைப் பிரயோகிப்பான்மா.
Post a Comment