வல்லிசிம்ஹன்
இறைவன் காப்பார் .
புதிய ரெசிப்பி என்று சொல்ல வரவில்லை.
இன்று தோசைக்குத் தொட்டு கொள்ள பசங்களுக்காகச் செய்தது.
மதியம் மிளகுக் குழம்பும் பீட் ரூட் கறியும் , பொரித்த அப்பளமும் ஆயாச்சு.
இப்பொழுது சாயந்திரத்துக்குத் தேங்காய், அவல் , பாசிப்பருப்பு,மெந்தியம்
கொஞ்சம் அரிசி சேர்த்து ஊறவைத்து அரைத்த பிறகு சாம்பார்
வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து செய்தென்.
மாங்காய் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது.
ப.பருப்பு மசித்து வைத்துக் கொண்டு, முருங்கை , மாங்காய்,
உ.கிழங்கு ஒன்றாக உப்பு , மஞ்சள் பொடி போட்டு வேக வைத்து,
கடுகு,ப.மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து (பச்சை மிளகாய் தான் முக்கியம்)
விட்டால் சாம்பார் தயார்.
பொடியும்,
புளி யும் இல்லாததால்
ருசியே வேறு மாதிரி இருந்தது.
இறைவன் காப்பார் .
முருங்கை ,மாங்காய்,உ.கிழங்கு சாம்பார் |

15 comments:
ஆமாம்... இதுவரை இப்படிச் செய்ததில்லை! செய்து பார்த்துவிடலாம். அட... மிளகுக்குழம்பா.. பாஸ் கிட்ட ஒரு மாதமா கேட்டுகிட்டே இருக்கேன்...
கூட்டும் இப்படித்தானே செய்வார்கள். கூட்டுக்கும் இதற்கும் என்ன வித்யாசம். புளிப்பு மாங்காய்???
Jayakumar
அன்பு ஶ்ரீராம், இனிய காலை வணக்கம்.
பசங்களுக்கு காரசாரமாக வேண்டி இருக்கிறது. அதான் மிளகு குழம்பு. இந்த மாங்காய்ப் புளிப்பு
,பச்சை மிளகாய் காம்போ நன்றாக இருந்தது. நன்றி மா. பாஸ் பண்ணித் தருவார்.
அம்மா சொன்னேன்னு சொல்லுங்ஙகோ:)
அன்பு ஜெயக்குமார், இனிய காலை வணக்கம்.
பா. பருப்புக்குப் பதிலாக அது.பருப்புதஆன. போடவேண்டும். அஅங்கே அது வாய்வு தருவதால் பாசிப்பருப்பு போடுகிறோம். நன்றாக இருந்தது.
மாங்காய் இங்கேயும் நிறைய கிடைக்கிறது இப்போது.
முருங்கையும்!
சுவையான குறிப்பு. செய்து பார்த்துவிடலாம்!
புதிய வகை போல...
அட... முருங்கை உருளை மாங்காய் சாம்பார்.. முருங்கையை விட்டுவிட்டு மற்றதை உபயோகப்படுத்திச் செய்துபார்க்கலாம்.
அங்க கருவேப்பிலை கொத்தமல்லிலாம் கிடைக்குதா?
சாம்பார் நன்றாக இருக்கிறது.
மாங்கா, முருங்கை , உருளை போட்டால் சாம்பார் சுவையாக இருக்கும்.
அருமை
அன்பு வெங்கட், இனிய மண நாள் வாழ்த்துகள்.
இது செய்வது ரொம்ப சுலபம்.நன்றி.
அன்பு தேவகோட்டைஜி,
புதிது இல்லைப்பா. மாங்காய் காலம்
வந்த உடன். புளிக்குப் பதிலாக மாங்காய் உபயோகப்'
படுத்துவது சகஜம். பருப்பு கடையும் போது
மாங்காய் கலந்து விடும். நன்றி ராஜா.
அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வது போலச் செய்தாலும்
நன்றாகவே இருக்கும். இங்கே வீட்டிலயே
கருவேப்பிலைச் செடிகள் இருக்கின்றன.
கொத்தமல்லி நிறையக் கிடைக்கிறது.
குறைவில்லை.
நேற்றுதான் இந்தியக் கடையிலிருந்து சௌ சௌ,
புடலங்காய் எல்லாம் வந்தன.
விலைதான் ஜாஸ்தி.
சுவையான சாம்பார்.
அன்பு கோமதிமா,
இதுவும் பெருங்காய வாசனையோடு சுடச்சுட
நன்றாக இருந்தது. நன்றி மா.
அன்பு கரந்தை ஜெயக்குமார்,
மிக நன்றி மா.
Post a Comment