வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளம் பெற வேண்டும்.
தேவகியின் விடுதலை
அந்த மருத்துவமனையின் படிகளில் ஏறிய
லேகாவின் ஒரே எண்ணம் டாக்டர் செரியனின் அலுவலகத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் ,அனைவரையும் தாண்டி முதலில் அவரைப் பார்த்து விடவேண்டும் என்கிற நினைப்புதான்.
ஒரு வினாடி அம்மாவும் தம்பியும் வருகிறார்களா என்று கவனித்தாள் .
ஆமாம் அம்மாவுக்கு சக்கிர நாற்காலி வந்துவிட்டது.
மிக அன்புடன் ஒரு நர்ஸ் அம்மாவை அதில் உட்கார வசதி செய்து கொடுத்தாள் .
தானே அம்மாவுடன் வந்திருக்கலாம். தம்பி அளவு பொறுமை கூடத் தனக்கு இல்லையே என்று ஒரு க்ஷணம் தோன்றியது.
தம்பி வைத்தியரைப் பார்க்கும் போது பயப்படுவான்.
லேக் , நீ போடி, நான் அம்மாவுடன் வருகிறேன் என்பான்.
அதனால் தான் அவள் முந் திக் கொண்டாள் .
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இந்த டாக்டருடன் பழக்கம்.
சென்ற வருடம் அம்மாவுக்கு முதல் இதய அதிர்ச்சி ஏற்பட்ட போதும்
இவர்தான் மீட்டு வந்தார்.
அம்மாவின் மேல அவருக்கு அதீத பாசம்.
ஒரு நொடி கூடத்தன் நோயைப் பற்றி
வருந்த மாட்டாள் . அவர் சொன்ன பத்தியம் மருந்து எல்லாம் ஒழுங்காக
சாப்பிடுவாள்.
தான் இருந்த வீட்டைச் சுற்றி தினம் 20 நிமிடமாவது நடப்பாள்.
ஒவ்வொரு மாத செக் அப் போதும் டாக்டரின் நன் மதிப்பைப் பெற்றுப் பாராட்டப் படுவாள்.
சிந்தித்துக் கொண்டே டாக்டரின் அறைக்கு வந்துவிட்டால்.
வெளியே நோயாளிகளும்
அவர்களுடன் வந்திருக்கும் மகனோ, மக்களோ,கணவனோ
மனைவியோ இவர்களால் நிறைந்திருந்தது அந்த பெரிய வராந்தா,.
இவள் தலையைக் கண்டதும் நர்ஸ் சாரதா சிரித்த முகத்துடன் தேவகி
அம்மா வந்திருக்கிறார்களா?
அதிகம் காக்க வைக்காமல் டாக்டர் அவர்களைப்
பார்க்க விரும்புகிறார் என்றாள் .
அதற்காகத்தான் முன் கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொண்டேன் சாரதா. அம்மாவால் முன் போல உட்கார முடிவதில்லை என்று கவலையுடன் சொன்னாள் லேகா.
இதற்குள் தம்பி சேகரும் அம்மாவுடன் வந்துவிட்டான்.
நீயும் டாக்டரிடம் சோதனை செய்து கொள்கிறாயா.
முதுகு வலி நேற்று அதிகம் இருந்ததே
என்று வினவினாள்.
சேகர் முகம் சுளித்தான்.
அம்மாதான் முக்கியம். என் வலி ரெண்டு ப்ரூபென் எடுத்துக் கொண்டால் போய்விடும் நீ பெரிசு பண்ணாதே,.
நான் வெளியே போய்க் காத்திருக்கிறேன்.
கைப்பையில் இருந்த சிகரெட் பெட்டியைத் தேடியபடி
அவன் வெளியே நடப்பதை வேதனையுடன் பார்த்தவள்.
அம்மாவை டாக்டரின் அறைக்குள் அழைத்துச் சென்றாள் .
முகமெல்லாம் புன்னகையாக அம்மாவை வரவேற்ற டாக்டர்,
கொஞ்ச நேரம் அவளை சோதித்த பின்,
நல்லா இருக்கீங்கமா. மகளை என்ஷுர் எனர்ஜி பானம் வாங்கி கொடுக்கச் சொல்லுங்கள்.
அடுத்த மாதம் பார்க்கலாம் என்றவருக்கு நன்றி சொல்லி விட்டு
வெளியே வந்த லேகாவிடம் , அவசரமாக வெளியே வந்த சாரதா,
டாக்டர் இன்னொரு மருந்து கொடுத்திருக்கிறார்,
நீங்கள் போய் அவரைப் பாருங்கள் என்றதும்,
அம்மாவுடன் அவளை இருக்கச் சொல்லிவிட்டு அறைக்குள்
நுழைந்த லேகா வைக் கடுமையாக நோக்கினார் டாக்டர்.
அம்மாவை நீங்கள் சரியாக்க கவனிக்கவில்லை. அவள் இதய நிலைமை
எனக்கு கவலையாக இருக்கிறது.
அவள் இருதய சிகித்சையை மறுத்துவிட்டாள்.
இப்போது 40 சதவிகிதம் அவள் இதயம் இயங்குகிறது.
மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறது.
அவள் கூடவே இருந்து கவனித்துக் கொள்ள
ஒரு உதவியாளர் தேவை.
நம் மருத்துவமனையிலேயே தாதிகள் இருப்பார்கள்.
நான் அனுப்பும் இருவரை பகலுக்கு ஒருவர் ,இரவுக்கு ஒருவர் என்று
வைத்துக் கொள்ளுங்கள்''
என்றதும் திகைத்துப் போனாள் லேகா.
குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெளியே வந்து அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு
வெளிவந்து அவளைத் தன் வண்டியில் உட்கார வைத்துத் தம்பியைத் தேட , அவனும் வந்தான். எல்லோரும் கிளம்பினர் .
சி.பி.ராமசாமி சாலையின் நெரிசலில் வண்டியைத் திருப்பியபடி
சேகரைப் பார்த்தவள். , டாக்டர் புது மருந்து சொல்லி இருக்கிறாரடா ,
அம்மா என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு
ஓய்வெடுக்கட்டும்,
நானும் நீயும் வாங்கி வந்துவிடலாம்
என்றாள் .
கேசவப்பெருமாள்புரம் வந்ததும் வீட்டு முன் வண்டியை நிறுத்தி அம்மாவை மெதுவாக அழைத்துச் சென்று, சோபாவில் உட்கார வைத்துவிட்டு,
காம்பிளான் கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள் .
அம்மா இதோ போய் வந்து விடுகிறோம். யசோதா உன்னுடன் இருப்பாள்.
இந்தா இந்த வாரக் கல்கி என்று அம்மா கையில் கொடுத்துவிட்டு,
தம்பியை நோக்கினாள் .
நீ மருந்து சீட்டைக் கொடு நான் போய் வருகிறேன் என்றவனை இல்லப்பா,
எனக்கும் மருந்து வாங்கணும் நானும் வருகிறேன் என்று கிளம்பினாள்.
தேவகி
அம்மா தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் .
தன மகளுக்கு சரியாக நடிக்க வரவில்லை என்று
நினைத்தபடியே புத்தகத்தைப் புரட்டினாள் .
நாளை பார்க்கலாம்.

17 comments:
நன்றாக கதை செல்கிறது.
அம்மாவுக்குத் தெரியாதா தன் உடல் நிலை.
அம்மாவின் இதயப் பிரச்சனை தெரிந்தும் மகன் சிகரெட் பிடிக்கிறானே.... அதுவும் இதயத்துக்கு எமன் அல்லவா?
இனிய காலை வணக்கம் அன்பு முரளி மா. ஆமாம்,
அந்தக் குடும்பத்தில் அனைவருக்கும் இதய பாதிப்பு இருந்தது.
என்ன செய்வது. புகைப் பழக்கம் சீக்கிரம் வந்து விடுகிறது.
விட்டுவிட்டாலும் அதன் பாதிப்பு குணத்தைக் காட்டிவிடும்.
தெரியவில்லை அந்த சேகருக்கு.
நல்லபடியாக நோயை வெல்லட்டும் அம்மா. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன். சிகரெட் புகைக்கும் பழக்கம்! :( அதுவும் அம்மாவின் இதயநோய் தெரிந்தும். எங்க வீட்டில் இரு நெருங்கிய உறவினர் சிகரெட்டால் உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்டவர்கள் உண்டு. ஒருவர் உலகிலேயே இல்லை. இன்னொருவர் இதயநோயால் அவதிப்படுகிறார். :(
கொஞ்சகால இடைவெளிக்குப்பின் மறுபடி கதை தொடக்கம். தொடர்கிறேன்.
இனியகாலை வணக்கம் கீதாமா. எத்தனை பேர் இந்த புகை பிடிக்கும் பழக்கத்தால்
பாதிக்கப் படுகிறார்கள்.! வேதனை தரும் விஷயம் . உறவினர் பற்றி அறிய வருத்தம். சரியான நேரத்தில் விழித்துக் கொள்ள வேண்டும்.
அம்மா நலம்அடைவார். நன்றி மா.
இனிய காலை வணக்கம் ஶ்ரீராம்.
சில மன உளைச்சலில் இருந்து மீள வேண்டி இருந்தது. எழுதினால் சலிப்பில்லாமல் இருக்கலாம். நன்றி மா.
அம்மா தனது உடல் நலத்தை தெரிந்துகொண்டாள். தொடர்வோம்....
புரிகிறது. உரையாடல் வரும் போது "....." இப்படி கொட்டேஷன் போட்டுக் கூட இது கதை தான் என்ற உணர்வை ஏற்படுத்த முடியவில்லை
என்பது புரிகிறது.
டாக்டர் செரியன் ஓ.கே. கேசவ பெருமாள் புரம் ஓ.கே.
சி.பி.ராமசாமி சாலை வந்த பொழுது தான் தெருப்பெயர்களில் 'அந்த' நீக்கம் உறுத்தியது.
"இந்தா இந்த வாரக் கல்கி.." என்று அம்மா கையில் கொடுத்து விட்டு
எனகிற அளவு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எழுதியிருந்தது மனசுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. நீங்கள் அந்தக் காலத்திலேயே பத்திரிகை கதைகளை வெறும் கதை என்ற அளவில் வாசிக்கவில்லை என்பது இப்பொழுது புரிகிறது. கதைகளுக்கு எப்படி எழுத்து வடிவம் கொடுக்கிறார்கள் என்றும் யோசித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
இந்த மாதிரியெல்லாம் எழுதும் பொழுது தான் வாசிப்பவருக்கும் எதை வாசிக்கிறார்களோ அந்த விஷயத்துடன் ஒரு அட்டாச்மெண்ட்டும் ஏற்படுகிறது.
பின்னூட்டத்தில் 'அம்மா நலம் அடைவார்ம்மா..' என்று சொல்லியிருப்பது மனதிற்கு ஒரு சந்துஷ்டியைக் கொடுத்தது.
தொடர்ந்து வாசிக்கிறேன்.
கதை நன்றாக போகிறது.
படம் அஸ்தமனமா? வைகரையா?
கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கா?
படம் நன்றாக இருக்கிறது.
எந்த கெட்ட பழக்கத்தையும் தானே உணர்ந்து திருந்த வேண்டும் அம்மா...
மீண்டும் ஒரு தொடர்கதை - உங்கள் பாணியில்.
நல்லதே நடக்கட்டும்.
தொடர்கிறேன் மா...
அன்பு மாதேவி,
நம்மை வளர்த்தவர்களுக்கு எல்லாமே புரியும்.
வயதாவதால் அவர்கள் பேச்சு குறையலாம். அறியும் சக்தி
நிறையவே இருக்கும். நன்றி ராஜா. நலமுடன் இருங்கள்.
சி.பி.ராமசாமி சாலை வந்த பொழுது தான் தெருப்பெயர்களில் 'அந்த' நீக்கம் உறுத்தியது.//அன்பு ஜீவி சார். எத்தனை நுணுக்கமாகப் பார்க்கிறீர்கள்.
ஒரு எடிட்டரின் வேலையும் அணுகலும் பிரமிப்பைத் தருகின்றன.
ஆமாம் 2003 வாக்கில் அந்த'' '' பெயர்களிலிருந்து நீங்கி
விட்டார்கள். மனசில் பழைய பெயர்கள் தான்:)
என் எண்ணம் ஓடும் அளவுக்கு, கொட்டேஷன் மார்க்ஸ்
போட்டுத் தடையிட முடியவில்லை.
ஒரு வேலைக்கும் அடுத்த வேலைக்கும் நடுவில் மன நிம்மதிக்காகக் கதை.
நீங்கள் கணித்தது போல, என் எழுத்தில் சம்பவங்களே
முக்கியம். கரு என்பது என்ன என்று எனக்கே தெரிவதில்லை.
வாழ்க்கையில் இருக்கும் சோகம் போதும்,
கதையிலும் வேண்டாம் என்றே தோன்றுகிறது.
இந்தக் கதையில் வந்த கல்கி அப்போது படித்ததுதான்.
பிறகு ஒரு வார இதழையும் பார்க்கவில்லை.
நீங்கள் வந்து இத்தனை சிலாகித்துச் சொல்வது
மனதை நெகிழ வைக்கிறது.
அனேக நமஸ்காரங்கள் சார்.
படித்த கதைகளை என்னால் என்றும் மறக்க முடியவில்லை.
அன்பு கோமதி,
படம் ஒளி கொடுக்கிறது.
இந்தியாவில் மாலை. எனக்கு இப்போது காலை:)
எல்லார் வாழ்வும் சுபமாகச் செல்ல வைக்கவேண்டியது
கதை எழுதுபவரின் பொறுப்பு. இது தான் எனக்குத் தேவை.
பல குழப்பங்களில் பாத்திரங்களை ஈடுபடுத்துவதில்
''இப்போது'' ஈடுபாடில்லை.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.
அன்பு தனபாலன், பழக்கங்களுக்குக் காரணமாக மன உளைச்சலைச் சொல்லித் தப்பித்துக் கொள்கிறார்கள்.
சரியான உணவுப் பழக்கம், மனத்திடம் இருந்தால் எந்தப் பழக்கத்தையும் விட்டு விடலாம்.
என் கணவரும் அப்படிச் செய்தவர்தான்.
இருந்தும் ஒளிந்திருந்து நெஞ்சடைப்பாகத் தன் இருப்பைக் காட்டிவிட்டது.
இறைவன் எண்ணம். அனைவரும் நலமுடன் இருக்க நம்
பிரார்த்தனைகள்.
அன்பு வெங்கட் , வருகைக்கு மிக நன்றி மா.
நல்லது நடக்கும்.
நலமுடன் இருங்கள் அம்மா.
கதையின் முதல் பகுதி அருமையான தொடக்கம். வாசித்துவிட்டேன். தேவகி அம்மா பாவம். தொடர்கிறேன் வல்லிம்மா.
துளசிதரன்
ஓ கதையை மிஸ் செய்திருக்கேன் அம்மா. இதோ அடுத்த பகுதியும் வாசித்துவிட்டு வருகிறென். தலைப்பு சொல்லிவிடுகிறது முடிவு என்னவாக இருக்கும் என்று பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது அம்மா
கீதா
Post a Comment