Blog Archive

Friday, May 08, 2020

வாழ்வின் மகிமைகள்

வல்லிசிம்ஹன்

 வாழ்வின் மகிமைகள் உணரும் நேரம் இன்னேரம்.

செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை
எல்லாவற்றையும்  பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
செய்ய வேண்டியவை.
முதலில் பிரார்த்தனை. அசைக்க முடியாத
நம்பிக்கை இறைவனிடம் வைப்பது.
பலபல செய்திகள் காதில் விழத்தான் செய்கின்றன.
நம் குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும்
என்ற கவலை இருக்கத்தான் செய்யும்.

நான் இருக்கும் தேசத்திலிருந்து
இந்த வருடக் கடைசிவரை பயணங்கள் சாத்தியமில்லை
என்று நேற்று சொன்னார்கள்.

நிறைய பேரை பாதிக்கக் கூடிய விஷயம் தான்.
இங்கே இரண்டுங்கெட்டான் நிலையில்
மாட்டிக் கொண்டவர்களுக்கு உதவி செய்யவும் பலர்
முன்வந்திருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் ஒரே கணக்குதான்.
இன்னும் சென்னையில் தனியாக இருந்திருந்தால்
சமாளித்திருப்பேனோ  என்ற கேள்விகளுக்கே
இடம் இல்லை.
என் தோழிகள் அனைவரும் அவரவர் மகன் அல்லது மகள்
வீட்டுக்குப் போய்விட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால் கூட்டுக் குடும்பம் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது
இப்படி எழுத ஆரம்பித்ததும் கிடைத்த செய்தி,
இந்தியா செல்ல ஒரு லக்ஷ்ம் ரூபாயில்
 இங்கு விசா இல்லாமல் தங்கிவிட்டவர்களை
அழைத்துச் செல்ல விமானங்கள்
ஒரு வாரத்துக்கு வரப் போவதாக நல்ல செய்தி
கிடைத்தது.
150,000 நபர்கள் செல்வதாகவும் டிக்கெட்
பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும்  தெரிகிறது.

அங்கு சென்றதும், 14 நாட்கள் க்வாரண்டைனில்
அவர்கள் இருக்க வேண்டும்.
பிறகு அவரவர் இடத்துக்குச் செல்லலாம்.
 அங்கேயிருந்து இங்கே வர வேண்டியவர்களும் இருப்பார்களே.
எனக்குத் தெரிந்தே இரண்டு மூன்று குடும்பங்களில் உறவினர்
வருகை அவசியமாகிறது.
பிள்ளைப்பேறுக்கு அம்மா வந்துதானே ஆகவேண்டும்.'!!!
இறைவன் என்ன மனது வைக்கிறானோ.

செய்யக் கூடாததாக நான் நினைப்பது அதீத கற்பனைகளுக்கு உள்ளாகி நம்
நேர்மறை எண்ணங்களை இழப்பது ஒன்றுதான்.
மனம் நலிவடைந்தால் உடல் அதைக் காட்டும்,.
எங்கும் போகாமல் எவரையும் காணாமல்
சாதாரணமாகப் பேசாமல் நமக்குள்ளேயே
அடங்குவது சிரமமமே.
முடிந்தவரை அலறும் செய்திகளை ஒதுக்கி இருக்கும் இடத்தைப்
பிரார்த்தனைகளால்  நிரப்பி,
எப்பொழுதும் போல் வாழ்க்கையை நடந்து ,கடந்து செல்ல வேண்டும்.
முயற்சிப்போம். இதோ கடமைகள்   நிறையவே காத்திருக்கின்றன.
 வெல்லுவோம் இந்த அரக்கனையும்.

15 comments:

ஸ்ரீராம். said...

உங்கள் உரத்த சிந்தனை நன்று. அதே மாதிரிதான் நானும் யோசிக்கிறேன். ஆனாலும்..்். மனம் ஒரு குரங்கு என்பதை அவ்வப்போது நிரூபிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம், இனிய காலை வணக்கம்.
உண்மைதான். பயம் இல்லாதிருந்தால்
அறியாமையாக அறியப்படுவோம்.
நிறைய பயப்படுவதால் நன்மை கிடையாது.
உங்களைப் போல பொதுமக்கள்
உடன் பழக வேண்டிய சந்தர்ப்பம் வருவதால் கூடவே
சஞ்சலமும் வரத்தான் செய்யும். அனைவருக்காகவும் என் பிரார்த்தனைகள் எப்போதும்.

திண்டுக்கல் தனபாலன் said...

கடைக்கு வந்தால்... அதாவது கணினிக்கு வந்தால்... குறள் சார்ந்த பதிவுகளை யோசிப்பதும், வலைப்பூ அல்லாத வேறு சில புதிய நுட்பங்களை முயல்வதிலும் நேரம் போக முடிகிறது...

கரந்தை ஜெயக்குமார் said...

கொரோனாவை வெற்று வாழ்வோம்

ஜீவி said...

மனத்திற்கு பலம் சேர்க்கக் கூடிய வரிகள்.
இந்த கைங்கரியம் இந்த நேரத்தில் சாலச்சிறந்த ஒன்று. நன்றி.

மாதேவி said...

மனம்தளராமல் கடமைகளை செய்வோம்.அதற்கான சக்தியைதர வேண்டுவோம்.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
பிரார்த்தனை செய்து கொண்டு நம்பிக்கையை கைவிடாமல் இருப்போம். அப்புறம் அவன் பாடு.

இறையருளால் அனைத்தும் நலமாகும் நம்புவோம்.

இராய செல்லப்பா said...

எல்லாம் கடந்து போகும். சற்றே பொறுத்திருங்கள். இறையருள் துணை செய்யும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், ஒவ்வொரு குறளும் வாழவைக்கும் அமுதம். அதை
முறையாகக் கொடுப்பது உங்கள் அன்பான சேவை. நல் வார்த்தைகளுக்குக் காலத்தை மாற்றும் திறமை உண்டு.
நலமே வாழ்வோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்.நிச்சயம் வெல்வோம்.
இறைவன் நம் பக்கம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவீ சார். மனத்தில ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொன்டேன்.
எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
முன்னைவிட மனம் தைரியத்தைச் சீக்கிரமே இழக்கிறது.
அதைத் தெளிவு கொள்ளவைக்கவே நம் வழிபாடுகள்.
துணைக்கு நான் இருக்கிறேன்
என்று சொல்லும் இறைவனை மறவாமல் இருப்பது.
நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, ஆமாம். மனம் தளரக்கூடாது.
இடைவிடா இறை நினைவு நம்முடன் இருந்தால்
பாதி சங்கடங்களையாவது தாண்டி விடலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
வாழ்வின் சிரம நேரங்களில்,
கடவுளின் மனதில் இறுகக் கட்டிக்கொண்டு நாமங்கள் சொல்வேன்.

எத்தனை வழிகாட்டிகள் நமக்கு.
இதையும் கடப்போம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் இராய செல்லப்பா, வணக்கம் சார். நலமா.
தங்கள் சொல்லே நன்மை கொடுக்கிறது.
பாதுகாப்புடன் இறைவன் கரங்கள்
நம்மை அழைத்துச் செல்லும். நன்றி ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை கொள்வோம்.

வெளிநாட்டிலிருந்து இங்கே அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்தது போலவே இங்கே வந்து தங்கிவிட்டவர்களையும் திரும்பிச் செல்ல ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் வல்லிம்மா...

விமானம் மூலம் கடந்த மூன்று நாட்களாக மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.