Follow by Email

Thursday, May 14, 2020

மைசூர் கூட்டு .....

வல்லிசிம்ஹன்
மைசூர்  கூட்டு  .....veg sagu, veg saagu recipe


 மூன்றாவது  வீட்டில்  இருக்கும்   பிரேமா  சொன்ன 

கொங்கன்  சமையல் இந்தக் கூட்டு.  பூரி, சப்பாத்தி, ,தோசை எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ்.

இரண்டு நாட்கள் முன்பு சப்பாத்தியும், இந்தக் கூட்டும் செய்தோம் .

அவள் சொன்ன காய்கறிகள் 

chow chow ,
குடமிளகாய்,
பட்டாணி ,
உ.கிழங்கு,
காரட்,  இவைகளை  பெரிய துண்டுகளாக நறுக்கி  மஞ்சள் பொ டி போட்டு 
வேக வைத்துக் கொள்ளவேண்டும்.
கூட்டுக்கு   சேர்க்க, அரைக்க வேண்டிய 
பொருட்கள்.

பொட்டுக்கடலை,
வெங்காயம்,
இஞ்சி,
மிளகு,
சீரகம்,
கொத்தமல்லி ,அதாவது தனியா,
மிளகாய் வற்றல்,
கடலைப் பருப்பு 

மேலே சொன்னவற்றை , பொட்டுக்கடலை தவிர 
நன்றாக சிவக்க வறுத்து 
பிறகு பொட்டுக்கடலையும்   சேர்த்து 
மையாக மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில்  சீரகம், ப மிளகாய், வெங்காயம்,கருவேப்பிலை தாளித்துக் கொண்டும் அரைத்த கலவையையும், உப்பு+
வேகவைத்த காய்கறிகளையும் போட்டால் 
கொதித்து வந்ததும் சாகு ரெடி,
கொத்தமல்லி  ,முந்திரி வறுத்தது ,அலங்காரத்துக்கு.
இன்று மதியத்துக்கு  பூரி.

பசங்க சரின்னு சொன்னால் சாகுவும் செய்துவிடலாம்.
பிரேமா மீன் சாப்பிடுபவள்.
இப்போது அந்த மார்க்கெட் இல்லாததால் 
சைவத்துக்கு மாறிவிட்டாள் :)24 comments:

KILLERGEE Devakottai said...

பெயர் பயமுறுத்துகிறதே அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம். பெயரை மாற்றி விட்டேன்மா. நன்றி.

ஸ்ரீராம். said...

இருக்கிறான் வேண்டிய பொருள்கள் உட்பட எதற்கும் ஒரு சுமாரான அளவு கூட சொல்லவில்லையே... எளிதாகவும் வித்தியாசமாகவும் இருப்பதால் ஒருமுறை செய்யலாம்.

நெல்லைத்தமிழன் said...

மைசூர் கூட்டுன்னு போட்டிருக்கு ஆனால் படம் குருமா மாதிரி இருக்கேன்னு யோசித்தேன்.

செய்முறை எளிது.

வீட்டுல செய்தீர்களா? பசங்க என்ன சொன்னாங்க?

Geetha Sambasivam said...

அட? சாகு மாதிரி இருக்கேனு சொல்ல நினைச்சேன், நீங்களே சொல்லிட்டீங்க. கிட்டத்தட்ட நம்ம ஊர்க் குருமா மாதிரித் தான் இது. நான் அடிக்கடி பண்ணுவேன். கொஞ்சம் சுலபமானதும் கூட!

Geetha Sambasivam said...

என்ன பெயர் வைச்சிருந்தீங்க? "சாகு" என்றா? இப்போதைய சூழ்நிலைக்கு ஒத்து வராத பெயர்! அதான் கில்லர்ஜி பயந்திருக்கார். :)

வெங்கட் நாகராஜ் said...

மைசூர் கூட்டு - செய்முறை நன்றாக இருக்கிறது. செய்து பார்க்கலாம் - சப்பாத்திக்கு இணையாக.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தக் கூட்டும் செய்து பார்க்க வேண்டும் அம்மா...

ஸ்ரீராம். said...


// இருக்கிறான் வேண்டிய பொருள்கள் //

அரைக்கவேண்டிய பொருள் என்றிருக்கவேண்டும்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கோமதி அரசு said...

கூட்டு நன்றாக இருக்கிறது. தேங்காய் சேர்க்காமல் கூட்டு.

மைசூர் கூட்டு செய்து பார்த்து விடலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை அம்மா மைசூர் கூட்டு ரெசிப்பி பார்த்ததும் சாகு இது இங்க ரொம்ப ஃபேமஸ் ஆச்சே. எல்லாத்துக்கும் இதைக் கொடுத்துருவாங்க...வெளில சாப்பிடப் போனா. பார்த்ததும் தோன்றியது கடைசில நீங்களும் சொல்லிட்டீங்க. நம்ம வீட்டுல இது அப்பப்ப செய்துவிடுவதுண்டு. சிலர் பூண்டும் போட்டு செய்யறாங்க. ரொம்ப ஈசிதான். எஞ்சாய் அம்மா..நல்லா இருக்கு படம் காணலியே.

கீதா

மாதேவி said...

தேங்காய் இல்லாமல் மைசூர் கூட்டு. செய்து பார்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
வழக்கமான சமையல் தானே மா.
இதை அரை மூடித் தேங்காய்,கசகசா
சேர்த்தும் அரைக்கலாம். வாசனையாக இருந்தது.
சாம்பார் பொடிக்குப் பதிலாக ,புளி இல்லாமல் ஒரு கூட்டு.

தக்காளி கூட சேர்க்கவில்லை.
உப்பு மற்ற பொருட்கள் அவரவர் விருப்பப் படித் தான்
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
செய்த போது படம் எடுக்க வில்லை. சப்பாத்தியுடன் சாப்பிட மிக ருசியாக இருந்தது,.
சாகு என்று தேடியபோது கிடைத்த படத்தைப் போட்டால் அதன் தலைப்பும் ஒட்டிக் கொண்டு விட்டது.
அந்தப் பட்டம் பிடிக்காமல் எடுத்து விட்டேன் மா.
பசங்க விரும்பி சாப்பிட்டார்கள்.
இதோ இன்னிக்கு ''நான் பராத்தா''
எலுமிச்சம்பழம் சாறு விட்டு செய்யப் போகிறேன்.
காலிஃப்ளவர்,ப்ரொக்கோலி,பட்டர் பீன்ஸ் எல்லாம்
கலந்து சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா:)
ஆமாம் சாகு தான்.
நம் மெட்ராஸ் பாலாஜி, ஷாந்தா பவன் தி.நகரில் சாப்பிட்டிருக்கிறேன்.
அவர்கள் பூண்டும் ,லவங்கம், கிராம்பு
கலந்திருப்பார்கள்.
இந்த வீட்டில தான் அதெல்லாம் வேண்டாம்:)

நீங்கள் செய்து பார்க்காத உணவு இருக்கக் கூடும்னு எனக்குத் தோன்றவே இல்லை
எனக்கு. என் சமத்துத் தங்கை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

நன்றாக இருக்கும் ராஜா.
நம்மூர்க்காய்கறிகளுக்கு இந்த மசாலா பொருத்தம்.
முடிந்த போது மனைவியிடம் செய்யச் சொல்லவும்.
நலமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் உங்களுக்குத் தெரியாதது
இல்லை. ஆதியும் நன்றாகச் சமைப்பார்.
நீங்கள் ஸ்ரீரங்கம் சென்று
குடும்பத்துடன் பலவித நன்மைகளை அடைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
தேங்காய் சேர்க்கலாம். இங்கு வாரத்தில் இரு நாள் மட்டுமே தேங்காய்
சாப்பாட்டில் நுழையும்:)

தேங்காய், கசகசா,முந்திரி சேர்த்து அரைத்தால் தனி மணம் தான்.
குருமா மாதிரி ஆகிவிடும்.
நீங்கள், ஏஞ்சல், அதிரா எல்லோருமே ரெசிப்பி போட்டிருப்பதை நேற்று இரவு படித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி

தேங்காயுடனும் செய்யலாம் மா. உங்களுக்குத் தெரியாததா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
ஆமாம் பெங்களோரு
ஸ்பெஷல், சென்னையிலும் கிடைக்கும்.
எல்லோருக்கும் தெரிந்த சாகு. இன்றும் செய்தாச்சு..
பசங்களுக்கு நிறையவே பிடித்திருக்கிறது. நன்றி ராஜா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இன்னிக்குதான் படம் தெரிகிறது. சூப்பர் அம்மா ரொம்ப நன்றாக வந்திருக்கு. பூரி நல்ல பட்டூரே போல பலூன் போல அழகா வந்திருகு. சாகு பார்க்க நாவூறுகிறது அதுவும் முந்திருப்பருப்பு அழகா அலங்காரம்.

அம்மா நான் செய்து பார்க்காதது இன்னும் இருக்கு. கற்றுக் கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் புதுசா செய்ய செய்ய நாம் புத்துணர்வு பெறுவோம் இல்லையா. சமையல் என்றில்லை அம்மா, வாசிப்பிலிருந்து எல்லாமே. அதுவும் கிச்சனில்தான் பெரும்பாலும் முன்பு. வலையில் எழுத வந்த பிறகுதான் கொஞ்சம் ஊர் உலகம் தெரிகிறது அம்மா. அதனால்தான் நிறைய செய்து பார்த்தது. அதுவும் சென்னையில் உறவினர் அதிகம்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அம்மா கீதாக்காவைச் சொல்லிருக்கீங்க நான் என்னையோன்னு நினைச்சு ஆமாம் கீதாக்கா செய்து பார்க்காத எதுவுமே இருக்காது. அது போல வாசிப்பும் விஷயம் எல்லாமே. சமத்துத்தங்கை என்பதைப் பார்த்ததும்தான் ஆஹா அது கீதாக்கா..அதானே பார்த்தேன் நான் சின்ன பாப்பா தானே உங்கள் மகள்!!!! ஹா ஹா ஹா இப்படி நெல்லையை கொஞ்சம் வெறுப்பேத்தினாதான் எனக்குத் தூக்கம் வரும்!!! ஹா ஹா ஹா ஹா

அம்மா பாலாஜி பவன் நானும் சாப்பிட்டுருக்கிறேன் பாண்டிபஜார் தானே? மற்றது ஷாந்தா பவன் போனதில்லை கீதா பவனா?!!

கீதா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நன்றி டா. அன்று பூரியும் நன்றாக வந்தது. சாகுவும் நன்றாக வந்தது.
இங்கே எண்ணெய் உபயோகம் கம்மி. இத்தனை. சிரமங்களுக்கு. நடுவில் நீங்கள் வலைக்கு வந்து பின்னூட்டம் இடுவதே
பெரிய விஷயம். நீங்கள் மெதாடிகலா செய்வது மிகவும் அருமை.

ஆமாம் , நம் கீதாவைத்தான் சொன்னேன். கட்டாயம் நீங்கள் என் அன்பு மகள் தான்.