Blog Archive

Sunday, May 17, 2020

சில சமயம் சோதனை

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.

எழுதுவது சில சமயம் சோதனை தான்.

//கட்டாயம் என்று  ஒன்றும் இல்லை.
  ' சர்வே ஜனா சுகினோ பவந்து ' என்று ஆரம்பிக்கிறோம்.
பொழுது போவது  என்று ஆரம்பித்தது 
சில  சமயம் சங்கடங்களில் 
மாற்றிவிடுகிறது.//

இது என்  மொழியில்லை . வைத்தியர் ஸ்ரீஹரியின் 
எழுத்து. 
யாருக்கோ   மருந்து சொல்லப் போய்,
அது  பயன்படாமல்   போகிறது.
அதாவது   இவர் சொன்ன  பத்தியத்தை 
அவர் அனுசரிக்காமல்     மருந்தையே  உணவாக உண்டது விபரீதத்தில் 

முடிகிறது.
அடுத்த அத்தியாயத்தில்   ஆதிமூலமே  என்று 
ஆரம்பிக்கும் போது 
Rightwing Rumblings: My commentary on Gajendra Moksham
நமக்கு செய்தி என்ன என்று புரிகிறது. இத்தனை 
பெரிய  வைத்தியருக்கே   இந்த கதி  என்றால் 

நாம் எழுதும்போது எத்தனை    ஜாக்கிரதையாக 
இருக்க வேண்டும்   என்று யோசிக்க வைக்கிறது.





26 comments:

KILLERGEE Devakottai said...

துணிந்து எழுதுங்கள் அம்மா சோதனைகள் சாதனை ஆகட்டும்.

ஸ்ரீராம். said...

வணக்கம் அம்மா. பொதுவாக எழுதி இருக்கிறீர்களா, ஏதாவது நிகழ்வை ஒட்டி எழுதி இருக்கிறீர்களா என்று புரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி. எண்ணைத் துணிக கர்மம். அதே தான் எழுத்துக்கும்.

என்னை விடப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் அவர்
சில புத்திமதிகளைச் சொல்லி ,அவைகளைக் கடைப்பிடிக்கச் சொன்னார்.

அதைப் பின்பற்றி இனி கவனமாக எழுதுவேன் மா.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் பா. ஆமாம் இன்று இந்தியாவில் ஒரு பெரியவரை வாழ்த்த ஃபோன் செய்த போது அவர் சொன்ன மொழிகள் என்னைக் கொஞ்சம் ஜாக்கிரதைப் படுத்தி இருக்கிறது. குடும்பத்தை விட்டு நகரந்து பொதுவாக யோசித்து எழுத்துக்களைப் பதியச் சொன்னார். அவர் என் பதிவுகளைப் படிக்கிறார் என்று கூடத் தெரியாது:)

இனி யோசித்து எழுதுகிறேன. வேறு ஒன்றும் இல்லை மா.நன்றி.

நெல்லைத் தமிழன் said...

நீங்கள் எழுதுவதில் அனுபவம் மற்றும்தான் காண்கிறேன்.

தொடர்ந்து நீங்க எழுதுங்க.

ஒருத்தரோட மருந்து இன்னொருவருக்கு ஒத்துக்கும்னு எப்படிச் சொல்லமுடியும்?

நெல்லைத் தமிழன் said...

சிறுநீரக கற்களுக்கு வாழைத்தண்டு நல்லது. ஆனால் வாழைத்தண்டை (அதன் நீரை) அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலிலுள்ள மினரல்களையும் அது வெளியேற்றிவிடும். விஷக்கடிக்கு வாழைத்தண்டுப் பட்டையை பிழிந்து சாறு கொடுப்பார்கள் (விஷ முறிவுக்கா அல்லது வைத்தியரிடம் கொண்டுசெல்லும்வரை டிலே செய்வதற்கா என்பது நினைவில்லை). ஆனால் அதிலும் பின்விளைவுகள் உண்டு.

கரந்தை ஜெயக்குமார் said...

துணிந்து எழுதுங்கள்
தொடர்ந்து எழுதுங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவானாலும் தொடர்ந்து எழுத்துலகிலும் பயணிக்க வேண்டும் அம்மா...

கோமதி அரசு said...

மருந்து கண்டு பிடிக்கும் போது ஒருவர் சாப்பிட்டு பார்த்து இறந்து விட்டாரே ஒரு மருத்துவர் அவரையும் இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் போலும்.

பெரியவர் உறவினரா?

கவலை படாதீர்கள் நமக்கு எல்லாம் குடும்பத்தை விட்டு வேறு யோசிக்க முடியுமா?

நீங்கள் நல்லதைதான் எழுதுகிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தொடர்ந்து எழுதுங்கள் மா.. நல்லதே நினைப்போம்.

Geetha Sambasivam said...

ஆமாம், குடும்ப நபர்கள் படிக்கிறார்கள் என்றால் நாம் மிகக் கவனமாகவே எழுத வேண்டும்.

மாதேவி said...

அவரின் அறிவுரைகளா.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். எழுதுங்கள். நல்லது நடக்கும். நலமுடன் இருக்கிறீர்கள்தானே அம்மா

துளசிதரன்

அம்மா முதலில் எனக்கு என்ன என்று புரியவில்லை. எதைப்பற்றி சொல்கிறீர்கள் என்று. அப்புறம் ஸ்ரீராமிற்கு நீங்கள் கொடுத்த பதிலைப் பார்த்ததும் புரிந்தது.

பொதுவாக எழுதுவது நல்லதுதான் அம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா பொதுவா எழுதுவது நல்லதுதான்னதும் நீங்கள் வீட்டில் ஏதாவது புதிய டிஷ் செய்தால் போடாம இருந்திடாதீங்க...ஹா ஹா ஹா ஹாஹ் ஆ

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வது உண்மைதான்.
ஒருவரின் மருந்து இன்னொருவருக்கு ஒத்துக் கொள்ளாதுதான்.
நோயாளியே மருந்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றால்
ஆபத்தில் முடியும்.
வைத்தியர் சொன்னது மேலுக்குப் பூச வேண்டியது.
இது ஆயுர் வேதம். முறைப்படி மருந்தை
வலி இருக்கும் இடத்தில் காலையும் மாலையும்
தடவி வென்னீர் ஒத்தடம் கொடுக்கச் சொன்னதை
நோயிருப்பவர் அருந்தி விட்டார்,.
இது இன்று நடந்ததில்லை.1955.

நான் பேசின பெரியவர் எங்கள் உறவினர். வயதில் வெகு மூத்தவர்.
அவருக்கு நான் பகிர்ந்து கொள்ளும் ''எழுத்துகளில்
சுயம் சம்பந்தப்பட்ட கதைகளோ சம்பவங்களோ
உறவுகளைப் பாதிக்கும்.
எச்சரிக்கையுடன் இரு ''என்று சொல்லவும்
எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.
இருந்தும் இந்த 72 வயதிலும் இடித்துரைக்க ஒருவர் இருக்கிறாரே
என்று ஆறுதல் கொண்டேன்.
அவ்வப்பொழுது கசப்பு மருந்தையும் உட்கொள்ள வேண்டும்.
உடல் நலம் பேணப்படும். அன்பு முரளிமா நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார்,
நன்மையையே எழுதுகிறேன்.
மிக மிக நன்றி மா.அன்பான ஆதரவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அதிகம் படிக்கச் சொன்னார் அந்த முதியவர்.
உண்மைதானே.
எல்லோரும் தன்னைப் பற்றியோ,குடும்பத்தைப்
பற்றியோ மட்டும் எழுதவில்லை.
உலக விஷயங்களை எழுதுகிறார்கள். உங்களைப் போல் திருக்குறள்
கருத்துகளை வரைகிறார்கள்.
இனி என்னை நான் எடை போட வேண்டிய நேரம்.மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
ஆமாம் 90 ஐ எட்டிப் பிடிக்கும் ஒரு உறவினர்.
நல்ல தமிழ் கற்றவர்.
அவருக்கு நேற்று 90 முடிந்தது.
மனைவியும் இல்லை.
பொழுதுபோக்காகக் கணினி பயில ஆரம்பித்து
என் வலைப் பதிவையும் படித்திருக்கிறார்.
அதில் பல இடங்களில் கண்டது,கேட்டது, அனுபவித்தது என்று
தான் எழுதி வந்திருக்கிறேன்.
அதில் கண் புரைக்காகச் செய்த சிகித்சை முறையை
(என் வரை சரி யில்லாத)தால்) எழுதி இருந்தேன்.
அந்தப் பதிவையும் ,சமீபத்தில்
கொரோனா பதிவையும்(அந்தப் பதிவை எடுத்து விட்டேன்)
படித்திருக்கிறார்.
அவர் ஒரு மருத்துவர். ஓய்வு பெற்றாலும்
அதீத புத்தி கூர்மையோடு மருத்துவ உலகைக் கவனிப்பார்.
உனக்கு ஆதாரம் இல்லாத ,தெரியாத விஷயங்களில்
எழுதாதே. ரோஷப்பட்டோ,ஆத்திரப்பட்டோ
பயன் இல்லை.
அவர் எனக்கு நல்லதுதான் சொல்லி இருக்கிறார்.
இனி கவனம் தேவை.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்மையை நினைத்து நன்மையை எழுதலாம் .நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,'இனிய மண நாள் வாழ்த்துகள்.
ஆயிரத்தில் ஒரு வார்த்தை.
கவனத்தில் வைக்கிறேன் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு மாதேவி. பெரியவர்.
அன்பிற்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன், உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டியது
தான் நம் கடமை.
அப்படியே செய்யலாம். நான் மிக நலமாக சந்தோஷமாக இருக்கிறேன்.
நன்றி மா.

அன்பு கீதா கீதா,
கீதா டு த பவர் ஆஃப் 2.:)
எல்லாம் சரியாக இருக்கிறது மா.

டிஷ் செய்யும் போது கட்டாயம் பதிவிடுகிறேன்.
புதிதாக இருந்தால். மிக மிக நன்றி.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

//எழுதுவது சில சமயம் சோதனை தான்.//

ஹா ஹா ஹா ஏன் வல்லிம்மா... எதையும் சோதனையாக நினைக்க வேண்டாம்.. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்... நாம் எழுதுவது அடுத்தவரைப் பாதிக்காத வகையில் இருந்தால் சரிதானே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
எண்ணத்தில் பழுதில்லை மா.
அதை சொவதில்தான் தவறு என்று
சுட்டிக்காட்டினார். இந்தப் பதிவையும் அவர் படிப்பார் என்ற
எண்ணத்தில் இதையும் சொல்கிறேன்.
ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்.
தவறில்லை.:) நன்றி. இனி நாம்தொடரலாம் மகிழ்ச்சியொடூ....

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வல்லிம்மா, நான் சொன்னது படிப்போரின் எண்ணம் பற்றி... நாம் எழுதும்போது நல்லதை நினைச்சே எழுதுவோம், ஆனா படிப்போருக்கு வெவ்வேறு கருத்துக் கொடுக்கலாம் அது அவரவர் மனநிலையைப் பொறுத்து.

உண்மைதான், பெரியோர் சொல் வார்த்தைகளைக் காதில் வாங்குவது நல்லதே.. நம் நன்மைக்காகத்தானே சொல்கிறார்.. ஜாக்கிரதையாக இருப்பது நல்லதே.

பல சமயம் புளொக் எழுதும்போது, இது பொதுவெளி, நமக்குத்தெரியாதோர் பலரும் வந்து படிச்சுப் போகிறார்கள் என்பதை மறந்து, நம் பக்கம் வருவோரை மட்டுமே நினைச்சு எழுதி விடுகிறோம்:))