Blog Archive

Friday, July 31, 2020

டணால் தங்கவேலு

வல்லிசிம்ஹன்
மஞ்சள் மகிமை படத்தில் 
தங்கவேலு, ராஜ சுலோசனா
ஜோடி.

அடுத்ததாக அடுத்த வீட்டுப் பெண்.:)
1960 களில் வந்த படம். 
தங்கவேலுவுக்காகவே இந்தப் படத்தைப்
பார்க்கலாம். 

Kanchipuram Kovil Idly #World Biggest Shocking Size Idly Making

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.

Wednesday, July 29, 2020

Maksim - Somewhere in Time...ஒரு மாலைப் பொழுதின் ராகங்கள்.

வல்லிசிம்ஹன்

In memory of Christopher Reeves  The Superman.  One more from  JamesBond movie.


சிங்கத்துக்கு எப்பவும் பிடித்த ஹீரொ
ஆனந்தமாகக் கேட்டு ரசிக்க டீன் மார்டின்.
ஏஞ்சல் பேபி.

Tuesday, July 28, 2020

குங்குமப் பொட்டுக்காரா.......

வல்லிசிம்ஹன்

நாலுவேலி நிலம்
முதலாளி படம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்
60 வருடங்களுக்கு முந்திய படங்களின் பாடல்களில் இனிமை
எளிமை எப்பொழுதும் பிடிக்கும்.
படங்கள் கொஞ்சம் நீளம் அதிகம் என்று தோன்றும்.

முதலாளி படம் இன்னும் பார்க்கவில்லை.
எல்லா பரிச்சயமும் சிலோன் வானொலி உபயம் தான்.
ஏரிக்கரையின் மேலே எப்பொழுது பார்த்தாலும் எல்லாத் திருமண
 நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப் படும்.

வானொலியில் விமரிசிக்கப் படும்
படங்களை வைத்து அந்த ஊர் தியேட்டர்கள் கூட
நிறைய நாட்களுக்கு நினைவு இருந்தது,
திரிகோணமலை, பம்பலப்பிட்டியா என்று இடப் பெயர்கள் வரும்.

நாலுவேலி நிலம் சேவா ஸ்டேஜ் நாடகமாக
சஹஸ்ர நாமம் குழுவினரால் நடத்தப் பட்டு
திரைப்படமாக வந்தது.
 தைபிறந்தால் வழி பிறக்கும் படம் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜசுலோசனா,
ப்ரேம் நசீர் நடித்து வந்தது.
அதில் தான் அமுதும் தேனும் எதற்கு பாடலும்,
மண்ணுக்கு மரம் பாரமா பாடலும் வரும் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் சிரிக்கலாமா!!! 1

வல்லிசிம்ஹன்  படம் சீதா ஔர் கீதா.
கோவையில் பார்த்தது. குழந்தைகளுக்குப் பிடித்த படம்.
பரபரப்பான கிசுகிசுக்களிடையே 
படமாக்கப்பட்ட படம்


சுப்கே சுப்கே படம் சிரிப்புக்காகவே
தயாரிக்கப் பட்டது.
தர்மேந்த்ராவுக்குள் இத்தனை நடிப்பு 
ஒளிந்திருந்ததா என்று எல்லோரும் வியந்த
நேரம்.
அமிதாப், ஜெயா,ஷர்மிளா டாகூர், எல்லோருமேஓம் ப்ரகாஷ், அஸ்ரானி, உஷா கிரனுடன்
சிறப்பாக நடித்திருப்பார்கள்.
 வருடத்துக்கு இரண்டு தடவையாவது பார்த்து விடுவேன்:)
மனைவியின் அக்கா புருஷனின் 
இந்தி மோகத்தைத் தூள் செய்யும் நோக்கத்துடனே
மும்பைக்கு வரும் ப்ரொஃபெஸர் த்ரிபாதியாக படம் முழுவதும் சிரிப்புதான்.

அதில் ஒரு காட்சிதான் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
நிமோனியாவை ,பனிமோனியா என்று சொல்லும் காட்சியில்
யாருக்குமே சிரிப்பு வரும்.
ஓம் பிரகாஷின் அவஸ்தை படம் முழுவதும்
குதூகலப் படுத்தும்.
மனம் லேசாக இந்தப் படம் பார்க்கலாம்.

Monday, July 27, 2020

வாழ நினைப்போம் வாழுவோம்.

வல்லிசிம்ஹன்  கவலையைப் போக்க 
கவிஞரை விடப் பெரிய மருந்து கிடையாது.

பலே பாண்டியாவில் வரும் பாடல் 
எத்தனையோ மனங்களுக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது.
// வாழைமரம் படித்ததில்லை 
கனி கொடுக்க மறந்ததா
வான் முகிலும் கற்றதில்லை 
மழை கொடுக்க மறந்ததா//
இந்த வரிகளும் கேட்க மிக எளிமையாக இருந்தாலும்
அதையும் சொல்லி நம்மை உணர வைக்க
கண்ணதாசன் ஐயா வரவேண்டி இருந்தது.
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலைதீர்ந்தால் வாழலாம்.//
கவிஞரின் பொன்னான வரிகள்.

எத்தனை மனிதரின் கவலையைப் போக்கி இருக்கிறார்
நம் கண்ணதாசன்.!!!!

கர்ணன் படம் வந்த போது ஏற்பட்ட விவாதங்கள்
எத்தனையோ இருந்தாலும்,
மஹாபாரதத்தின் கர்ணனிடமிருந்து
விலகிய இன்னோரு கர்ணன் சரித்திரம்
சிவாஜிக்காக எழுதப்பட்ட விதம் வியக்கவே வைத்தது.கவிஞரின் அருமைத் தமிழில்,
கர்ணன் மனைவி இசைக்கும் பாடலில் 
ஒரு நல்ல மனைவியின் காதலும்,
ஆதங்கமும், ஆறுதலும் பூரித்து
வெளிவரும்.
சுசீலா அம்மாவின் குரலில் தான் எத்தனை 
மாயம்!!!
பாலினில் இருந்தே நெய் பிறக்கும்
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்//

விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்கு இருள் ஏது?

தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது கண்ணா
கருணைக்கு இனமேது.!!!!!!!!!கண்ணதாசன் அவர்கள் பிறந்த நாளை ஒட்டி மனதில்
எழுந்த சின்ன நினைவலைகளில் ஒரு துளி.

Saturday, July 25, 2020

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

Pal Bhar Mein Yeh Kya Ho - Swami 1977 Songs - Shabana Azmi - Vikram - La... வல்லிசிம்ஹன்

மழைப் பாடலாக எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்
பஹேலி படப் பாடல் லிங்க் கொடுத்ததும்
சரசரவென்று மழைப் பாடல்கள் மனதில் பூத்தன.
அதில் ஒன்றுதான் ஸ்வாமி படத்தில்
ஷபானா ஆஸ்மி பாடும் இந்தப் பாடல்.

மிக உயர்ந்த கதையும் நடிப்பும் கொண்டது.
விருப்பம் இல்லாத திருமணத்தில் 
தன்னை உட்படுத்திக்கொள்ளும் பெண்
கணவனின் மகிமையைப் புரிந்து கொள்கிறாள்.
அதற்குள் நடக்கும் நிகழ்வுகள் மிக இதமான சங்கீதம்.
கிரிஷ் கர்னாடின் தேர்ந்த கௌரவம்.
ஷபானாவின் மூடி மறைக்கத் தெரியாத
உள்ளடங்கிய சினம்.
அவரது புக்ககத்தாரின் புரிதல் எல்லாமே
புதுமையாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
நான் மிக ரசித்த படம்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jKMc4xogQ9k" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

இந்தப் பாடலின் வரிகளுமிசையும்
மிக அருமை.
என் சுவாசக் காற்றே படம் வெற்றியோ தெரியாது.
ஆனால் இந்தப் பாடல் வெற்றி பெற்றது.
ஸ்ரீராம் குறிப்பிட்டிருந்த பாடல்.
ஒரு விகல்பம் இல்லாத மழைப் பாட்டு.
இத்தனை சினேகமான காதலர்களை
நான் இதுவரை பார்த்ததில்லை.
இசை அமைத்த ரவீந்த்ரஜெயின் என்றும் மனதில் இருக்கிறார்.
இந்த பாரதிராஜாவின் படம் நான் மிக ரசித்தேன்.
பேசத்தெரியாத ரியா சென்னுக்குக் குரல் கொடுத்தது யாரோ.

மனோஜ் நடிப்பும், ரேவதியின் கலங்கிய முகமும், மணிவண்ணனின்
வில்லத்தனமும் தெலுங்குப் பின்னணியில்
படைக்கப் பட்ட கதையும்
வைரமுத்துவின் கவிதையும்,
ரஹ்மான் அவர்களின் இசையும் மிகச் சிறப்பு.


முதுமை அண்டாது சிலருக்கு-/\-

வல்லிசிம்ஹன் https://www.youtube.com/watch?v=VzkbL6Go8NY&feature=share

Thursday, July 23, 2020

Ethir Neechal Full Movie Part 12

 வல்லிசிம்ஹன்

சிங்கம் தேர்ந்தெடுத்த முதல் பாடல்

வல்லிசிம்ஹன்முதல் பாடலில் வரும் கோவேறு கழுதை,
அந்தக் கால விவசாயப் பண்ணைகளில்
மிக மிக முக்கியமானது.
முக்கியமாக மலைப் பிரதேசங்களில்.
நம்மூர் காளைகளைப் போல்
உழைப்புக்கு அஞ்சாதவை. அந்த ஜீவனுக்காகப்
பாடிய பாடல்.
பாடல் ஒரு வயதான, தங்கம் சுரங்கத்தைத் தேடி அலைந்த
Miner, தன் வயதான ஊனமுற்ற mule இடம்
பேசுவதாக அமைந்த பாடல்.

''என் நண்பா உனக்கும் வயதாகி விட்டது
உனக்கும் வயதாகிவிட்டது.
ஏறி இறங்கி சம்பாதித்து வாழ்வின் இறுதிக்கு வந்து 
கொண்டிருக்கிறோம்.
அதோ நமக்காக ஒரு தங்கச் சுரங்கம்
வானத்தில்
காத்துக்கொண்டிருக்கிறது.
அங்கு போய் நாம் இந்த உலகம் சுழல்வதை வேடிக்கை பார்க்கலாம்.
நம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்ற நண்பர்களுக்கு
ஹலோ சொல்லி சந்திக்கலாம்.
அந்தத் தங்க சுரங்கம் சென்றடையும் வரை 
காத்திருப்போம்.

இந்தப் பாட்டை அடிக்கடி சிங்கம் அழகாகப்
பாடுவார். கனவுலகில் கேட்பது போல இருக்கும். எனக்கு
ஏதாவது உடல் நலம் சரி இல்லையானால்
இந்தப் பாடலைச் சுழலவிட்டு விடுவார்.

கழுதை நின்று விட்டது .எஜமானர் சென்று விட்டார்.

எங்களிடம் இருந்த இசைத்தட்டுகளில்
முதலில் வாங்கிய எல்.பி ரெகார்ட் இதுதான்'

சிங்கத்துக்கு பிடித்த குரல்களில் இவர் குரலும் ஒன்று.
ரொமாண்டிக் சிங்கம்.

இன்னும் இந்த ஊரில் தான் வசித்து வருகிறார்.
சினிமாக்களிலும் நடித்து வந்தார்.

இவர் பாடல்களில் காதலன் பாடுவதாக அமைந்த
இசையே அதிகமாக இருக்கும்.

அவரது இருபது 25 வயதுகளில் பாடிக் குவித்த 
பாடல்கள் எல்லாமே ஹிட்ஸ் தான்.
பிறகு இறைத்துதிகளில் இறங்கினார்.

இவர் குரலில் மயங்கியவர் எத்தனையோ.
உண்மையில் ஆங்கில இசை உலகில்
இவர் குரல் யாருக்கும் வாய்க்கவில்லை.

Thanjavur Race Kootu | தஞ்சாவூர் ரேஸ் கூட்டு | Ammavum Naanum Episode #3...

வல்லிசிம்ஹன்   :)))))

Wednesday, July 22, 2020

Kishore Kumar songs

வல்லிசிம்ஹன் இந்தப் பதிவில் எங்கள் குடும்பத்துக்குப்
பிடித்த பாடல்களையும்,
 எனக்கும் சிங்கத்துக்கும் பிடித்த பாடல்களையும் பகிர்ந்து வருகிறேன்.

அவருக்கு மிகவும் பிடித்த பாடகர் ,இந்திப் படங்களின் 
பாடல்களின் அரசர் (அவரைப் பொறுத்தவரை}
கிஷோர் குமார் தான். 
கணக்கில்லா இசைத்தட்டுகள். பயணம் போகும்போகும் போது கேட்க வண்டியில்
கேட்க காசெட்கள்.

எங்கள் வண்டியின் கதவையும் திறந்து,
அந்த ரேடியோ திருடியவர் யாரோ:(
பிறகு தொலைக்காட்சி சானல்களில் கேட்டு மகிழ்ந்தார்.
மகன் வாங்கிக் கொடுத்த த்ரீ இன் ஒன்
எங்கள் இசைத்தாகத் தணித்தது.

அவருக்குப் பிடித்த எத்தனையோ பாடல்களில்
சிலவற்றைப் பதிகிறேன்.

Tuesday, July 21, 2020

Kai Kodutha Deivam Movie : Sivaji Ganesan came to S V Rangarao house to ...

வல்லிசிம்ஹன்
மனதை விட்டு நீங்காத காட்சிகள்.

Veerapandiya Kattabomman Movie Scenes | Sivaji questions Santhanam | Gem...

வல்லிசிம்ஹன்கட்டபொம்மன் பராக்.பராக்,

Monday, July 20, 2020

Super Cute Birds - Dawlish Black Swan Cygnets Entering the Water in Dawl...

வல்லிசிம்ஹன்எத்தனை பாசம் இந்த அன்னப் பறவைகளுக்கு!!
எத்தனை பொறுமை.
தண்ணீரில் இறங்க மறுக்கும் அந்தக் கடைசிக்
குஞ்சுவுக்கு தான் பயம்.
பொறுமையாக அதற்குக் குரல் கொடுத்துக் கொண்டே
வரும் அம்மா அப்பா இருவருக்கும் அவ்வளவு சர்வ நிச்சயமாகத்
தெரியும் அந்தக் குட்டி எப்படியும் நீந்தும் என்று.
கம்பீரமாக சுற்றி வருகின்றன.
இந்த அன்னங்களை நான் லண்டனில் பார்த்திருக்கிறேன்.

நெல்லுக்குள்ளே உண்வையும்,
நெருப்பினில் ஒளியையும் வைத்த  இறையை
நம்பும் பறவைகள். நமக்கும் அவனே துணை,

Saturday, July 18, 2020

வியாபாரி

வல்லிசிம்ஹன்

அனைவரும் நலமாக இருக்கப்     பிரார்த்தனைகள்.1973 இல் வந்த இன்னோரு படம் சௌதாகர்.
ஒரு வெல்ல வியாபாரியைப் பற்றிய கதை.

அமிதாப், நூத்தன்,பத்மா கன்னா மற்றும் குணசித்திர நடிகர்கள்
நடித்த  வித்தியாசமான படம்.
தன் காதலிக்கு மெஹர் ,வரதட்சிணை கொடுப்பதற்காக

இன்னோரு பெண்ணைத் திருமணம் செய்கிறார் மோதி.
அவள் அவர் கொண்டு வரும் பேரிச்சம்பழ ரசத்தைக்
காய்ச்சி, வெல்லம் செய்து கொடுக்க அதை விற்று,
பணம் சேர்ந்ததும்,
தலாக் சொல்லி விட்டு,
காதலியைக் கைப்பிடிக்கிறார்,.

இந்த துரோகத்தால் மனம் உடைந்து போகும்
மனைவியை இன்னோருவர் தன் குழந்தைகளுக்காகத் 
தன்னை திருமணம் சொல்லக் கேட்டுக் கொண்டதும்

வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்.

காலம் மாறுகிறது.
மோதியின் காதலிக்கு வெல்லம் காய்ச்சுவது கை வரவில்லை.
வியாபாரம் சறுக்கி விடுகிறது.
 அவளிடம் ,தர்க்கம் செய்துவிட்டு, சாறு இருக்கும் பானைகளைக் கொண்டு
முதல் மனைவியின் கணவரிடம்
தயவாகக் கேட்கிறான்.

நல்ல மனிதர் அவர். வியாபார நீக்கு போக்குகள்
அறியாத அவர் அவனுக்குக் கனிவு காண்பிக்க,
நூதன் மறுக்க அந்த நேரம்
கண்ணீருடன் வரும் மோதியின் காதலியைக்
கண்டு மனம் கனிந்து அவளை அணைத்துக் கொள்கிறாள்.

பார்த்துக் கொண்டிருக்கிறான் வியாபாரி.
அவன் மனம் பதப் பட்டதா என்பது கேள்வியே.

வியாபாரி

Amazon.in: Buy Saudagar (video cd) DVD, Blu-ray Online at Best ...

Friday, July 17, 2020

பறக்கும் சித்தரோடு பழகியவர் | yaanan speech | சித்தர் ரகசியம் | channel ...

வல்லிசிம்ஹன்

ஆடி அன்னை பிறந்தாள்.

வல்லிசிம்ஹன்ஆடி பிறந்து அனைவருக்கும் ஆனந்தம்
கொடுக்கப் போகிறது.
முன்னைவிட அதிகமாக இப்போது கடவுளர்கள்
நேரலையில் தரிசனம் தருகிறார்கள்.
எங்கள் மயிலைக் கற்பகமும், கபாலீஸ்வரரும்
*{ஷிர்டி ஸாயியும் }
ஓதுவார் தேவாரங்களுடன் கற்பூர ஆரத்திகளுடன்
இணையத்தில் வரும் போது உண்மையில் ஆசீர்வதிக்கப் 
பட்டவளாக உணர்கிறேன். வாழ்க நலம்.
பக்தியும் இறை மேலாண்மையும் என்றும் நம்மைக் காக்கும்.Sukravara Amman - Karpagambal - Kapaleeswarar Temple , Myl… | Flickr

Zubi-dubi.mp4 (iLoveGoogoosha)

வல்லிசிம்ஹன்

Just  loved it.!!!!!!!!!
 உறவுகளுக்காக நல் வாழ்த்துகளுடன்
எதிர்காலத்தில் அவர்களின்  சிறந்த வாழ்க்கைக்கும்
பிரார்த்தனைகளுடன்.
இந்தப் பதிவு.

Thursday, July 16, 2020

ஒவ்வொரு நாள் ஒரு ஆசை, ஒரு நினைவு.

வல்லிசிம்ஹன்
இன்று நிலவரங்களைப் படிக்கும் போது

 இந்த கிருமித் தொற்றுக்கு  பணம் படைத்தவர்கள்
இல்லாதவர்கள் யாரும்
விலக்கு இல்லை  என்று தோன்றுகிறது.

இறைவன் அனைவருக்கும் நலம் அளிக்க வேண்டும்.

ஆடி மாதப் பிறப்பு 
சமயபுரம் அம்மா நம்மைக் காப்பாள்.

Wednesday, July 15, 2020

நிலைக் கதவு பற்றி

வல்லிசிம்ஹன்
2011 இல் ஒரு நிலை.நிலைக் கதவு பற்றி

திறக்கும் கதவுகளுக்குப் பின்

நிற்கும் விழிகள்

சிலசமயம் அன்பு

சிலசமயம் கேள்வி

சில சமயம் மறுப்பு

சிலசமயம்  வரவேற்பு.


எல்லாவற்றுக்கும் மௌனன சாட்சி

கதவுகளுக்குள் இருக்கும்

கண்ணில் தெரியாத கதவுகள்.



பாட்டியின் காலத்தில்  கதவை மூடினநாட்கள் இல்லை.

பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த

திருடர்களும் இல்லை.


அவள் மன உரமே அங்கே இரும்புக் கோட்டை ஆனது.

அவளும் நிலை வாசலைவிட்டு மறைந்தாள்.

கூடவே சென்றன வெள்ளியும்,வைரமும்,தங்க ஒட்டியாணமும்.


இப்போதோ நாம் இருவர்.

இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.

பக்கத்து வீட்டுப் பழனி  மேலும் காவல்

எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்

அம்மா

நான் பார்த்துக்கிறேன் வீட்டை.''



இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது

முகமில்லாத கண்கள் எங்களைக்

கண்காணிப்பது போல்

ஒரு அதிர்ச்சி:(

*********************************

இந்த உரைநடைக் கவிதை  '' வல்லமை '' மின்னிதழில் முதலில் வெளியானது



ஆசிரியருக்கு என் நன்றிகள்.


venkatesh bhat makes gobi manchurian | gobi manchurian | starters | manc...

வல்லிசிம்ஹன்
சாப்பிடலாமா.

Tuesday, July 14, 2020

வணங்காமுடி

வல்லிசிம்ஹன்

 சிந்தாதிரிப் பேட்டையில், சித்ரா டாக்கீஸும்
கெயிட்டியும் இருக்கும்.
மெரினா போய்விட்டு வரும்போதோ

காசினோ தியேட்டர் போய் சினிமா பார்த்துவிட்டு வரும்போதோ
புரசவாக்கம் பஸ் அந்த வழியாகத்தான் போக வேண்டும்.

1957 என்று நினைக்கிறேன்.
அந்த மாபெரும் கட் அவுட் கண்ணில் பட்டது.
அப்பொழுது அதற்குப் பெயர் கட் அவுட் என்று கூடத் தெரியாது.
சிவாஜி மிகப் பெரிய உருவத்தில்
 விலங்குகளால் கட்டப்பட்ட, கை கால்களுடன் 
கம்பீரமாக நிற்பார்.அந்தப் பிரம்மாண்டத்தைப்
பார்க்க ஒரு கூட்டமே நிற்கும்.
அது போல இது வரை ஒரு கட் அவுட் வந்ததோ தெரியாது.
என் நாலடி உயர்த்துக்கு 
அந்த பிம்பம் அவ்வளவு பெரிதாகத் தெரிந்ததோ:)

வணங்காமுடி என்ற பெயர் வேறு அதிசயமாக
இருந்தது.

பாட்டி என்னை இந்தப் படத்துக்கு அழைத்துப்
போகவில்லை. 
பின்னர் வணங்காமுடியின் பாடல்கள் சிலோன் வானொலியில் 
கேட்டு
மிகப் பிடித்தது.மோகனப் புன்னகை வீசிடும் நிலவே பாடலும் தான்
எத்தனை இனிமை.
தஞ்சை ராமையாதாஸ் அவர்களுக்கும், திரு .ஜி.இராமனாதனுக்கும்
எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மலையே உன் நிலையே நீ பாராய்.,
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI  அவர்களுக்கும் என்றும் நன்றி
சொல்லுகிறேன்.

யூ டியூபில் இருக்கும் பழம் பாடல்களை
அவர் மீட்காவிட்டால் இன்று கேட்கமுடியுமோ
என்னவோ!!!

Monday, July 13, 2020

VADIVEYRU THIRISOOLAM THONTRUM MLV GROUP @ PAARTHTHIBHAN KANAVU

வல்லிசிம்ஹ    வடிவேறு திரிசூலம் .....
முன்னம் அவனுடைய நாமம் 
வல்லிசிம்ஹன் .

ஜீவி சார் சொல்லி அவர் மகன் ஜீவாவின் 
பதிவைப் பார்த்ததும்,http://jeevagv.blogspot.com/2020/06/blog-post_21.html
சிறிதே  மறந்திருந்த சிவகாமியின் நினைவுகள் வந்து விட்டன.

மிக நன்றி ஜீவி சார் ,ஜீவா.

நான் நினைத்திருந்த மாமல்லருக்கும்,
பார்த்திபன் கனவில் வரும் மாமல்லரூ க்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் 
கதை அதேதான் இல்லையா:)

மீண்டும் அந்தப் பாடல்கள் 
எம் எல் வி அம்மா  குரல் வழியே 
ஆனந்தமாக நினைவு கொள்ள வைத்தன.


இங்கே சில பாடல்கள்  சிவகாமிக்கு சமர்ப்பணம்.
கேட்டு பார்த்து ரசிக்க முடியும் என்று நம்புகிறேன்.❤🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
அந்தி மயங்குதடி..

Baby has never seen her dad without a beard...till now! Watch what happ...

வல்லிசிம்ஹன்
Happy Daddy. Happy Baby.:)

Sunday, July 12, 2020

ஒன்றைப் போல் ஒன்று 1900 ஆம் பதிவு.

வல்லிசிம்ஹன்

கொஞ்சம்  க்வாண்டோ கொஞ்சம் நில்லடி
  வெகு நாட்களாக எண்ணியிருந்த பதிவு.
பாடல்களைப் பதிவிடும் போது
சிலசமயம் ஒலிப்பதில்லை. 
   அன்பு வெங்கட்  நாகராஜன்
சொல்வது போல ,கேட்க முடியாதவர்கள்
யூ டியூபில் சென்று கேட்கலாம் என்று
டிஸ்கியும் இணைக்க வேண்டும்.:)


தீன் தேவியான் என்ற இந்திப் படத்திலும்
தேவ் ஆனந்தை மறைந்திருந்து பார்க்கும் நந்தா:)

Saturday, July 11, 2020

சங்கம் திரிவேணி 1964

வல்லிசிம்ஹன்

பதின்ம வயதுகளில் காணும் எல்லாமே
நினைவில் நீங்காமல் தங்கி விடுகிறது.
சென்னையில் ஒரு வருட காலம் 
பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்த நேரம்.
அதுவரை வருடத்துக்கு ஒரு முறை ,
கோடைகாலத் தென்றலாக சென்னை
தோன்றிய நேரங்கள்.
அன்பு மாமா அனுப்பிய ஒரே ஒரு கடிதம்
அம்மா அப்பாவின் கட்டுப்பாட்டோடு 
இருந்த என்னை பாட்டியின் கட்டுக்குள்
பந்தப் படுத்தியது.
ஒரு வெய்யில் காலம் நிலாக் காலம் ஆகியது.
முப்பது பைசா செலவில் கல்லூரி சென்று திரும்பி விடலாம்.

எத்தனை வித விதமான நட்புகள்.
வட இந்தியப் பெண்களின் நாகரீகம்,
என்ன விட மூன்று வயது சீனியர்களின் 
நளினம், என்னுடன் பயணித்த தமிழ்த் தோழிகளின் பாசம்
என் 365 நாட்களின் ஒவ்வொரு
நொடியும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

திண்டுக்கல்லில் வீட்டு ஜன்னலோரம் நிற்கக் கூட
அப்பா விடமாட்டார்.
அவருக்கு என் விஷயத்தில் அத்தனை அக்கறை.

எனக்கு வெளி உலகத்தைக் காண்பித்த
அந்த வருடத்திற்கு என் நன்றி.
சென்னையில் ஷாந்தி தியேட்டரில் பார்த்தபடம் சங்கம்.
முக்கோணக் காதல்.
கௌரவமான ராஜேந்திரகுமார்,
உற்சாகமே உரு வெடுத்த ராஜ் கபூர்,
அழகும் ,ஆசையும்,காதலும் பொங்கும் வைஜயந்தி மாலா.
சிறு வயது முதல் சேர்ந்து வளர்ந்த மூவரில், ராஜு
இராணுவத்தில் சேர,
அவன் உயிராகக் காதலிக்கும் தோழி,
தன் மற்றோரு தோழனை நேசிக்கிறாள்.
அந்தக் கட்டத்தில் வரும் பாடல் இது.

காதலுக்காக ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து
கடைசியில் திருவேணி சங்கமத்தில் 
ஒருவருடைய சாம்பல் கலக்கிறது.
சரஸ்வதியாக ஆத்மாவுடன் கலக்கிறார் ராஜேந்திர குமார்.

இது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்று சொல்லத் தேவை 
இல்லை,.
வெளி நாடுகளில் சுற்றிப் படம் எடுத்தார் ராஜ் கபூர்.
ராஜேந்திர குமார் தன் அமைதி தியாகத்தால்
மற்ற இருவரின் நெஞ்சங்களில் பூரணமாகக் குடியேறுகிறார்.
படம் பார்த்துவிட்டு வந்த பிறகு
ஆராய்ச்சி செய்வது என் வழக்கம்.
புரியாத வருத்தம் என்னை இரண்டு நாட்கள் மௌனமாக்கி விட்டது.
 மற்ற படங்களைப் பார்த்து கலக்கம் 
தீர்ந்தது வேறு விஷயம்:)
அப்போது அதுதான் வாழ்க்கை.




Relieve Eye Strain with these Expert Tips

வல்லிசிம்ஹன்

Friday, July 10, 2020

Mohana Ranga Ennai Parada - Maamiyar Mechiya Marumagal

வல்லிசிம்ஹன்
மாமியார் மெச்சிய மருமகள் படம் 
அருமையான கதையுடன் வெளிவந்தது.
ஜி.வரலட்சுமி,  எஸ்.எஸ்.ராஜேந்திரன்,எம் என் ராஜம் எல்லோரும் போட்டி 
போட்டுக் கொண்டு  நடித்திருப்பார்கள்.
ஒரு குழந்தைக்காக  இந்தத் தம்பதி படும்  பாடும்,
அம்மாவை நம்ப வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் நகைக்க வைக்கும்.
 மோஹன ரங்கா பாடல் ,எம் எல் வி அம்மா, சீர்காழி கோவிந்தராஜன் குரல்களில்   அமிர்த கானம்.

அடுத்த பாடல் சிவகாமி என்ற படத்தில் வந்தது என்று பதிய பட்டு இருக்கிறது .
தி எம் சௌந்தர  ராஜன் அவர்களின் குரலில் 
கம்பீரமாக ஒலிக்கும்  .
இந்தப் பாடலை நிலவுப் பாடல்களோடு சேர்த்திருக்க வேண்டும்.

பாடல் வரிகளை மறந்து தேடிக்கொண்டிருந்தேன்.
சட்டென நினைவுக்கு வந்தது.

நல்ல பாடல் கிடைத்தது.
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Nana Patekar Always Best Actor

வல்லிசிம்ஹன்

Nana Patekar  at his best.😊😊😊😊😊😊😊😊😊😊

இசைப்பயணத்தின் 27ஆவது நாள்.

வல்லிசிம்ஹன்

60களில் வந்த இன்னோரு மறக்க முடியாத படம் 
போலீஸ்காரன் மகள். ஏற்கனவே 
மேடையில் பார்த்த நினைவு.
சஹஸ்ர நாமம் போன்ற நடிகர்கள் 
இப்போது இல்லையே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
முத்துராமன் ,பாலாஜி,விஜயகுமாரி என்று
எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள்.
வசனம் அழுத்தம் திருத்தமாக அழகுத் தமிழில்
பேசப்படும்.
கண்ணீரில் முடிந்தாலும் மணமாலை சூட்டிய 
மகளாக விஜயகுமாரி வெளியேறுவதைப்
பார்த்து ஆறுதல் அடைந்த இளம் வயது:)
புஷ்பலதாவைப் பார்த்து பாலாஜி 
பாடும் பாடல். பி பி ஸ்ரீனிவாசன் குரலில்
அமுதாகக் கேட்கும்.
அடுத்த பாடல் விக்கிரமாதித்தன் படத்தில் வரும் 
நடிகை பத்மினியின் பாடல்.
அதுவும் சுசீலாம்மாவின் குரலில்
ஒலிப்பதுதான்.
நம் திண்டுக்கல் தனபாலன் இரண்டு நாட்களுக்கு
முன் இட்ட பதிவில் காதலனைப் பிரிந்து காதலி அவதியுறும்

நிலமையை அழகாகக் குறள் வழிக் கோலங்களாக
விவரித்திருப்பார்,.
இன்னும் அந்த அதிசயத்திலிருந்தே மீள முடியவில்லை.
இந்தப் பாடலைக் கேட்டதும்
அதே எண்ணத்தைப் பிரதிபலிப்பது
போலிருந்தது.
''சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு.
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு''
சக்தி வாய்ந்த வார்த்தைகள்.

Thursday, July 09, 2020

Meet the 10-Year-Old Prodigy Already Attending College | The Oprah Winfr...

வல்லிசிம்ஹன்
இப்போது 31 வயதாகி இருக்கும்.எப்படி இருக்கிறாரோ.

இன்னும் நிலாப் பாடல்கள்........

வல்லிசிம்ஹன்
மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் கண்டேன் மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம் துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள் அங்கதனிற் கண்விழித்தே அடடா ஓ அடடா அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன் மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன் காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கோர் க்ருவியாம் என்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: பாரதியார் இசை: ஜி. ராமநாதன் ஆண்டு: 1958
வரப்போகும் பாடல் ''எல்லோரும் இன்னாட்டு மன்னர்''
என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
படத்தின் பாடல். நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே....
நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே..
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே அஞ்சிடத் தேவை இல்லை வெண்ணிலாவே இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே!!!!!
இசை டி ஜி லிங்கப்பா.
பாடல் இயற்றியவர் திரு.கு.மா. பாலசுப்ரமணியம்.
++++++++++++++++++++++++++++++++++++
வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா. வேறு துணை யாருமில்லை யாருமில்லை விதி வழியே வந்தேன் நிலவே நிலாவே வா வா.

படம் வஞ்சிக் கோட்டை வாலிபன். பி லீலாம்மா குரலின் அமைதியான கானம்.


Wednesday, July 08, 2020

என் இசைப் பயணத்தின் 25 ஆவது பதிவு.

வல்லிசிம்ஹன்
E.V. Saroja

ஒரு அருமையான நடிகை. அழகு முகம்.

நடிக்கத் தெரிந்த கண்கள். ஆடத் தெரிந்த
துடிப்பு. அவருக்கான மதிப்பை பெற்றாரோ
தெரியாது.
மதிப்பான குடும்பத்தைப் பெற்றவர்.இயக்குனர் ராமண்ணாவின் மூன்றாவது மனைவி.
திரைப்படத்துறையே  விசித்திரமானது.

எனக்குப் பிடித்ததது இவரின் சிறந்த நடிப்புதான்.
நடனப் பாடல்களீல்  அபினயம் சிறப்பாக இருக்கும்.

அவருக்குக் கொடுக்கப் பட்ட பாத்திரங்களில்
அளவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்.
அவர் நடித்த படங்களில் 
படிக்காத மேதையும் ,மதுரை வீரனும்
மிகவும் பிடிக்கும்.

மணப்பந்தலில் சுசீலாம்மா பாடி, சரோஜா நடித்த உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
பாட்டு அருமை.
கொடுத்து வைத்தவள் படத்தில் மின்னல் வரும் சேதியிலே
பாட்டும் மனதைக் கவரும்.



வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே....

பாடல்களின் அருமையும் இசையின் இனிமையும்
அமைந்த பாடல்கள்.

Tuesday, July 07, 2020

அதே அதே.

வல்லிசிம்ஹன்

பாடல்களின் ஒற்றுமை.
1952 இல் வந்த ஜீன் கெல்லி பாட்டும் நடனமும்,  TCM தயவில்  2006 il
பார்த்தது.
அவரதுTAP டான்ஸ் மிக மிகப் புகழப்பட்ட நாட்கள்.

இதே நடன அசைவுகளுடனும் அச்சு அசல்
அதே மழை, அதே குடை,அதே காவல்காரர்கள்,
அதே அதே.:)

மீண்டும் ''புன்னகை மன்னனி''ல்
ரேவதியின் அழகு முகத்தோடு
''வான் மேகம்'' பாடலோடு
வந்தது மிக அருமை.
மீண்டும் ஒத்திருக்கும்  பாடல்களோடு
இன்னோரு பதிவில் பார்க்கலாம்.

சில செய்திகள்.

வல்லிசிம்ஹன்
அனைவரும் சுகமாக வாழப் பிரார்த்தனைகள்.இந்த நாட்டில் வேகமாகத் தொற்று அதிகரித்தாலும்,
நான் இருக்கும் நகரத்தில்
அதி எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருவது 
அரசாங்கத்துக்குப் பெருமை.

அதையும் மீறிக் கோடைக்காலக் கொண்டாட்டங்கள் என்று மக்கள் கூடுவதைக் கண்டபிறகு வெளியே செல்லும் எண்ணமே நம்மை விட்டுப் போகிறது.

காலாற நடக்க முடிவது வீட்டுப் பின்புறம் இருக்கும் புல் வெளியில் மட்டுமே.


நேற்று முதல் காற்றின் மூலமாகவும் 
கிருமிகள் பரவ சந்தர்ப்பம் இருப்பதால்
முக மூடி அணியாமல் வெளி நடக்க வேண்டாம் 
என்ற எச்சரிக்கை தொலைக்காட்சியில் 
ஓடிக்கொண்டிருக்கிறது.

பேரன் இருவரும் அடித்தளத்தில் இருக்கும் பயிற்சிக் கூடத்தில் 
தேகப் பயிற்சி செய்துகொள்கிறார்கள்.
அவ்வப்போது மகளும் மருமகனும் முயலுகிறார்கள்.
வீட்டில் இருந்து வேலை செய்தாலும்
வேலை நேரம் மிக அதிகமாக இருப்பதால்
அயற்சி கூடுகிறது.

முடிந்தவரை நட்புகளுடனும் ,உறவினர்களுடனும் 
தொடர்பில் இருக்கிறேன்.
அன்பு தானே நமக்கெல்லாம் மருந்து.
இணையத்தில் கிடைக்கும் பக்தி சொற்பொழிவு, 
சித்தர் சொல்மொழிகள்,
இறை தரிசனம், அதற்குப் பிறகு பழைய திரைப் பாடல்கள்
மூளை செயல் திறனுக்கு நல்ல உணவு.

உறவுகளுக்கு தொலைபேசும்போது பல 
காதுக்கு ஒவ்வாத செய்திகள் வருகின்றன.
எல்லா வயதுக்காரர்களயும் இந்தத் தொற்று பிடிக்கிறது.

 85 வயது உறவினரின் caregiver was infected.
வீட்டிலேயே பெரியவரைக் கவனித்துக் 
கொண்டவருக்கு எப்படி வந்தது என்று அவர்களுக்குப் 
புரியவில்லை.
அவருக்கும் தனி அறை கொடுத்து அவரைப் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள்.
வீட்டில் மற்றவர்களுக்கு தொற்று இல்லை.

இங்கே நான் இருப்பதால் பல விதமான
ரிப்பேர் செய்பவர்கள் , வீட்டினுள் வர அனுமதி இல்லை.

அலுப்பாகத்தான் இருக்கிறது.
எல்லாம் நலமாக இறைவன் தான் மனம் வைக்க 
வேண்டும்.பிரார்த்தனைகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இசையில் என் உலகம்


Monday, July 06, 2020

Pavakkai Ellukari | பாவக்காய் எள்ளு கறி | Episode #11 | Rakesh Udan | Ra...

வல்லிசிம்ஹன்

வெண்ணிலா நிலா.என் கண்ணல்ல வா.

வல்லிசிம்ஹன்இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.




ஆரவல்லி என்ற படம் வந்த புதிதில் இந்தப் பாடல் அத்தனை நல் வரவு பெற்றது.
மைனாவதியுடன் கூட நடிப்பவர் யார் என்று தெரியவில்லை.
ராஜாவும் ஜிக்கியும் பாடும் பாடல்கள்
எல்லாமே மனத்தை இனிமையாக்கும்.

சிலோன் வானொலியில் அடிக்கடி 
கேட்ட பாட்டை ஆங்கிலப் பாடலாக
ஹிட்ச்காக் படம். ''The man who knew too much"
என்ற த்ரில்லர் படத்தில் கேட்டேன்.

ஆங்கிலத்தில் கேட்டதை விடத் தமிழில் கேட்பது இன்னும்
சுகமாக இருந்தது.
அந்தப் படத்தில் டாரீஸ் டே, மகனை மகிழ்விக்கப்
பாடுவார்.

பின்னர் அதே மகனை விடுவிக்க,
இதே பாடலை இசைக்கவும்,
அவன் மறைத்து வைக்கப் பட்ட இடத்திலிருந்தே
விசில் அடித்து அந்தப் பாட்டை இசைப்பான்.
பார்க்கும் நம் மனம் படபடக்கும்.

முன்பே இந்த ஆங்கிலப் படத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன்.எப்படி அவன் , தந்தையால் விடுவிக்கப் படுகிறான்
என்பதே க்ளைமாக்ஸ்.

Sunday, July 05, 2020

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே.

வல்லிசிம்ஹன்
இருவர் படம் ரசித்துப் பார்த்தேன்.
மோஹன்லாலும் ,ப்ரகாஷ் ராஜும் 
போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.
ப்ரகாஷ் ராஜின் பங்கு கடினமானது. 
கவிதை சொல்ல வேண்டும், அதுவும் உணர்ந்து நல்ல தமிழில்
சொல்ல வேண்டும்.

நிறைய காட்சிகளை ,அழுத்தமாகச் செதுக்கியிருப்பார்
இயக்குனர் மணி ரத்னம்.
இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆ, என்று தெரியவில்லை.

எனக்குப் பிடித்தது.
சரித்திரத்தைப் படமாக்குவது என்பது சுலபம் இல்லை.நேரிடையாகச் சொல்லவும்
வேண்டும் அதே சமயம் 
அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரியும்
இருக்கக் கூடாது.
ஐஸ்வர்யா ராய், ரேவதி,தபூ, கௌதமி அனைவரும் 
நன்றாக நடித்திருப்பார்கள்.
தமிழ் நாட்டின் அரசியலை இத்தனை
சிறப்பாக உணர்த்த முடியுமா என்பது பெரிய கேள்வி.
இருந்தும் பல புரியாத புதிர்கள் 
லேசாகப் புரிந்தன. நன்றி மணி ரத்னம் சார்.
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்.
மன்னிப்பு படம்.
நான் பார்க்கவில்லை.
கிட்டத்தட்ட நாலைந்து வருடங்கள் 
படம் பார்க்காமல் குழந்தைகள் வளர்ப்பில் 
கரைந்தன.
அம்மா வீட்டிற்குப் போனால் என் அருமைத்தம்பி
 சின்னவன் ரங்கன் சினிமா
பார்க்க அழைத்துப் போவான்.
எனக்கும் அவனுக்கும் இருந்த ஒற்றுமை அது.
அதுபோல பார்த்த படங்களைக்
கணக்குப் போட்டு பார்த்தேன் .
ஒரு 15 படங்கள் இருக்கும்.
நன்றிடா ரங்கா.

Saturday, July 04, 2020

பௌர்ணமி நிலவில்....

வல்லிசிம்ஹன்  மஞ்சள் மகிமை படம்
உடுமலை நாராயண கவி பாடல்
பௌர்ணமி நிலவில்
SPB ,JANAKI AMMA SONG FROM KANNIPENN 1969இந்தப் பாடலின் வரிகளை இணைக்க முயன்று
தோல்விதான் கிடைத்தது.
அழகான பாடல். படம் பார்த்ததில்லை.
வானொலிக் காலங்களில் 
ரசித்துக் கேட்ட பாடல். 

அம்மாவுக்கு மிகப்
பிடித்த பாடல்.
அவளைப் பாடச் சொல்லி கேட்க ஏன் தோன்றவில்லை
எனக்கு.?
நல்ல குரல் அம்மாவுக்கு.
அப்பாவும் பாடச் சொல்லி கேட்க மாட்டார்.
அம்மாவுக்கும் வாய்விட்டுப் பாடத் தயக்கம்.
ஏதோ ஒரு நவராத்திரி கொலுவில்

அம்மா பாட என் தோழிகளும் நானும்
திகைத்துப் போனோம். 
அவ்வளவு  ஸ்வரசுத்தம். நல்ல தமிழ்ப் 
பாட்டு. பாரதியாரின் ,
''ஒளிபடைத்த கண்ணினாய்'' பாடல்.
வாய் ஓயாமல் பேசும் நானே,
மௌனமான நாள் இப்போது 
நினைவுக்கு வருகிறது.

மாடு மேய்க்கும் கண்ணே.

வல்லிசிம்ஹன்

கண்ணன் என்னும் மன்னன்

வல்லிசிம்ஹன் 


எங்கள் வீட்டுக்குப் புது விருந்தாளி
புது அங்கத்தினர் ,ஒரு அருமைக் குழந்தையின் வரவைக்
கொண்டாட இந்தப் பதிவு.

புதுக் குழந்தை என்னாளும் நல் ஆரோக்கியமும்
வளமுன் மகிழ்ச்சியும் பெற்று
நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் கண்ணன் அருள் புரிவான்.
நல்வரவுடா என் தம்பி பேராண்டி.

Friday, July 03, 2020

பேரிடும் பாட்டன் உருவமோ பேரன் குழந்தை அழகனோ

வல்லிசிம்ஹன்
நீடூழி வாழ்க.

#ThroatInfection தொண்டை கரகரப்பு நோய் தொற்று இருந்தால் கட்டாயமாக இத குடி...

வல்லிசிம்ஹன்

தண்ணிலவு

வல்லிசிம்ஹன்  இனிய இசை  எப்பொழுதும் நம்  வாழ்வை நிறைக்கட்டும்.
60  


முதல்  வந்த படங்கள் அனைத்துமே   ஏதோ நல்ல கருத்தைக் கொண்டு வந்தவை.
படித்தால் மட்டும் போதுமா படம் அந்த வரிசையில்
வந்தது.
அண்ணன் தம்பிகளுக்குள் கல்வியில் இருந்த வித்தியாசம்
குணத்தில் இருந்த வித்தியாசம்,

ஒரு உயிர் பலியாவதிலும்,இன்னோரு உயிர்
நீதிக் கூண்டுக்குள் நிறுத்தப் படுவதிலும்
முடிகிறது.

அண்ணன் விபத்தில் உயிர் துறக்கிறான்.
தம்பி கொலைக் குற்றம் சாட்டப் படுகிறான்.
அண்ணி வந்து நடந்ததைக் கூறி அவன் விடுதலைக்குக்
காரணம் ஆகிறாள்.

அதற்கு முன் அண்ணனும் அண்ணியும் தாம்பத்யம் நடத்தும்
அருமையை விவரிக்கும் விதமும்,
தம்பி அண்ணனின் மீது வைத்த பாசம், அண்ணியின்
மேல் வைத்திருக்கும் பக்தி எல்லாமே சிறப்பாகச் சித்தரிக்கப்
படும். 
படித்த அண்ணன், படிக்காத மனைவியுடன் 
பண்பாக ,காதலுடன் நடத்தும் 
வாழ்க்கையின் போது வரும் பாடலாக
''தண்ணிலவு தேனிறைக்க" பாடல் மனதோடு 
இழையோடும் இசையுடன்,சுசீலாம்மாவின் குரலில்
இன்பமாக ஒலிக்கும்.

தேன் நிலவு படம் அதற்கு முன் வந்து விட்டது.
டைரக்டர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதி தயாரிக்க
 பெரிய நட்சத்திரங்களின் அணிவகுப்பில் தங்கவேலு, எம்.சரோஜா
நகைச்சுவையில் பார்த்தவர்கள் எல்லோரும்
மயங்க,
காஷ்மீர் காட்சிகளில் நாங்கள் எல்லாம்
சொக்கிப் போக வந்த படம். ஏ.எம். ராஜா இசையமைப்பில்,
கவிஞர் கண்ணதாசனின்  கவிதை
வரிகள் தமிழில் நடனமாட வந்த காதல் காமெடி சினிமா.
அந்தப் படத்தில் வந்த நிலவுப் பாடல்
இந்தப் பதிவில் இணைக்கிறேன்.

Thursday, July 02, 2020

இந்த நிலவில்

வல்லிசிம்ஹன்
அனைவரும் வளமாக வாழ வேண்டும். இன்னும் 
ஐந்து நாட்களுக்கு
நிலாப் பாடல்கள் தான்.

அதுவும் எங்கள் சாஹபுக்குப் பிடித்த தேவ் சாப்
பாடல்கள்.
சிங்கம் இருக்கும் போது
அவர் லயித்து இந்தப் பாடல்களைக் கேட்கும் காட்சி
எனக்கு வினோதமாக இருக்கும்.

ஏன் இப்படி என்று அவரை விடாமல்
கேட்பேன். ரொம்ப நளினமாக இருக்கிறார் என்று தேவ் ஆனந்தை
பரிகாசம் செய்வேன். பதிலுக்கு அவர்
எனக்குப் பிடித்த சில கதா நாயகிகளைச் சொல்வார்.
கடைசியில் எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம் என்று முடித்துக் கொள்வோம்:)

இப்போது நான் அவருக்குப் பிடித்த பாடல்களை 
யூ டியுபில் கேட்கும்போது'
என்ன நினைத்துக் கொள்வாரோ.
அப்பவே இருவரும் சேர்ந்து  கேட்டிருக்கலாமே
என்று நினைத்துக் கொள்வாராயிருக்கலாம்.

நல்ல பல இசைக் கோப்புகளை
எனக்கு அறிமுகப் படுத்தியவருக்கு இந்தப்
பாடல்கள் அர்ப்பணம்

Wednesday, July 01, 2020

எல்லோரும் வாழ வேண்டும்.

வல்லிசிம்ஹன்

இந்த டீக்கடையில பாட்டு  ஒண்ணு போட்டாத்தான்
வந்த சனமும் போயிரும்மின்னு
இன்னோர்  கடை போட்டேனே.

அந்தக் கடையில
ஆலாப் பறந்தாலும்.. ஏன்
 இன்னும் ஒரு ஈ கூட வரலியே:)
இன்னும் ஒரு ஈ கூட இங்கே வரலியே!

இது என் சொந்த வரிகள் தான். மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை.!!!!!

பேயத்தேவரின் கதை கள்ளிக்காட்டு
இதிகாசம் என்னையும் எழுதவைக்கிறது.
வைரம் பாய்ந்த வரிகள்.
பாராட்டாமல் இருக்க முடியுமா!!
சந்தடி சாக்கில் நம்ம பதிவுக்கும் விளம்பரம்.:)))))

உன்னை நம்பி நெத்தியிலே பாட்டின் மெட்டு
போட்டுக் கொள்ளலாம்:)