Blog Archive

Thursday, July 09, 2020

இன்னும் நிலாப் பாடல்கள்........

வல்லிசிம்ஹன்
மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் கண்டேன் மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும் புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம் துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள் அங்கதனிற் கண்விழித்தே அடடா ஓ அடடா அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன் மங்கயதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன் காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கோர் க்ருவியாம் என்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: பாரதியார் இசை: ஜி. ராமநாதன் ஆண்டு: 1958
வரப்போகும் பாடல் ''எல்லோரும் இன்னாட்டு மன்னர்''
என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
படத்தின் பாடல். நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே....
நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே..
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே அஞ்சிடத் தேவை இல்லை வெண்ணிலாவே இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே!!!!!
இசை டி ஜி லிங்கப்பா.
பாடல் இயற்றியவர் திரு.கு.மா. பாலசுப்ரமணியம்.
++++++++++++++++++++++++++++++++++++
வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா. வேறு துணை யாருமில்லை யாருமில்லை விதி வழியே வந்தேன் நிலவே நிலாவே வா வா.

படம் வஞ்சிக் கோட்டை வாலிபன். பி லீலாம்மா குரலின் அமைதியான கானம்.


8 comments:

வெங்கட் நாகராஜ் said...

தொடரும் பாடல்கள்...

ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மா. தொடரட்டும் பாடல் பகிர்வுகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா வெங்கட். நல்ல பாடல்கள் தரவே விரும்புகிறேன்.. இனிய நாளுக்கான வாழ்ததுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நிலவு பாடல்கள் என்று கேசட் வாங்கிய நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது அம்மா...

மாதேவி said...

பழைய தெரிந்த பாடல்கள்தான்.கேட்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
எல்லாத் தலைப்பிலிலும் பாட்டுகள் வந்தது போல நினைவு.
பெரிய மகன்
தேடி வாங்கி வருவார்.

கோமதி அரசு said...

நிலவு பாடல்கள் எல்லாம் மிக அருமை.
காலத்தை வென்ற பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி.
நலமாப்பா. ஆமாம் எல்லாம் நாம் கேட்டு
அனுபவித்த பாடல்களே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி என்றோ கேட்ட பாடல்கள்.
இன்னும் ஒன்று மீதி இருக்கிறது.
தூக்கத்திலும் அவள் வரவே என்று கடைசி வரிகள் வரும்.
நேற்று நினைத்திருந்தேன் இன்று மறந்து விட்டதுமா.
நன்றி.