Blog Archive

Wednesday, July 08, 2020

என் இசைப் பயணத்தின் 25 ஆவது பதிவு.

வல்லிசிம்ஹன்
E.V. Saroja

ஒரு அருமையான நடிகை. அழகு முகம்.

நடிக்கத் தெரிந்த கண்கள். ஆடத் தெரிந்த
துடிப்பு. அவருக்கான மதிப்பை பெற்றாரோ
தெரியாது.
மதிப்பான குடும்பத்தைப் பெற்றவர்.இயக்குனர் ராமண்ணாவின் மூன்றாவது மனைவி.
திரைப்படத்துறையே  விசித்திரமானது.

எனக்குப் பிடித்ததது இவரின் சிறந்த நடிப்புதான்.
நடனப் பாடல்களீல்  அபினயம் சிறப்பாக இருக்கும்.

அவருக்குக் கொடுக்கப் பட்ட பாத்திரங்களில்
அளவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்.
அவர் நடித்த படங்களில் 
படிக்காத மேதையும் ,மதுரை வீரனும்
மிகவும் பிடிக்கும்.

மணப்பந்தலில் சுசீலாம்மா பாடி, சரோஜா நடித்த உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
பாட்டு அருமை.
கொடுத்து வைத்தவள் படத்தில் மின்னல் வரும் சேதியிலே
பாட்டும் மனதைக் கவரும்.



வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே....

பாடல்களின் அருமையும் இசையின் இனிமையும்
அமைந்த பாடல்கள்.

7 comments:

ஸ்ரீராம். said...

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் பாடல் மிக இனிமையான பாடல்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
சுசீலாமாவின் குரல் கேட்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இசைப்பயணத்தில் 25-ஆவது பதிவு - ஆஹா... வாழ்த்துகள்.

அனைத்துப் பாடல்களும் இனிமை. முதல் பாட்டு நன்றாகவே இருக்கிறது. கடைசி பாடல் பலமுறை கேட்டு ரசித்த பாடல்.

KILLERGEE Devakottai said...

இனிமையான பாடல்கள் அம்மா.

மதிப்பான குடும்பத்தைப் பெற்றவர். இயக்குனர் ராமண்ணாவின் மூன்றாவது மனைவி.

இது முரணாகிறதே...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

அவர் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்.
அதுதான் திரைப்படத்துறையின் விசித்திரத்தைச் சொன்னேன்.

டி ஆர் ராமண்ணா, டி ஆர் .ராஜகுமாரி, குசலகுமாரி
என்று இருந்த குடும்பத்தில் கடைசியாகப் போய்ச் சேர்ந்தவர்.
முரண் தான்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு தனபாலன்.