Blog Archive

Thursday, July 23, 2020

Ethir Neechal Full Movie Part 12

 வல்லிசிம்ஹன்

10 comments:

ஸ்ரீராம். said...

பாலச்சந்தர் படங்களில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு படம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இந்தப் படம் தொலைக்காட்சியில் ஐந்தாறு முறை பார்த்துள்ளேன். இதில் நடிக்கும் ஒவ்வொருவரின் முக பாவங்களும், பாத்திரம் ஒன்றிய இயல்பான நடிப்பு. இதிலுள்ள பாடல்களும் அருமையாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புத் தட்டாத திரைப்படங்களில் இதுவும் ஒன்று. பழசு என்றுமே சிறப்புத்தானே...! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

koilpillai said...

இயக்குனர் பாலச்சந்தர் அவர்களின் படைப்புகளில் இது ஒரு சிறந்த படைப்பு, நாகேஷின் நடிப்பு அபாரம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
நான் ரசிக்கும் பல படங்களில் இந்தப் படத்துக்குத் தனி இடம்.
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,
மிக அருமையான படம் ஒண்டுக்குடித்தனங்களின்
போராட்டம், மகிழ்ச்சி,துயரம். எல்லாவற்றுக்கும் நடுவில் மாது என்ற அப்பாவி.

1967 இல் பார்க்க முடியாத படத்தை
பிறகு மாமியார்,குழந்தைகளுடன் சென்னை பைலட் தியேட்டரில்
பார்த்தேன்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் திரு.கோயில் பிள்ளை.
நடித்த அனைவருமே சிறப்பித்திருப்பார்கள்.
நாகேஷுக்கு கூடுதல் பொறுப்பு.
மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

இப்படத்தை ரசித்துப் பார்த்ததுண்டு.

துளசிதரன்

அம்மா ஆஹா இந்தப் படம் செமையான படம். மீண்டும் பார்க்கத் தோன்றியது. பாலச்சந்தரின் இந்தப்படம் அருமையான படம். நாகேஷ் வாவ்! அதே போல சர்வர் சுந்தரம் படமும். (அது பாலச்சந்தர் படம்னே முதலில் நினைத்திருந்தேன் அப்புறம்தான் தெரிந்தது கிருஷ்ணன் பஞ்சு இவர்களின் இயக்கத்தில் என்று.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

சமீபத்தில் கூட தொலைக்காட்சியில் ரசித்தோம்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, அன்பு துளசி,
வருகைக்கு மிக நன்றி.
வேலைகள் நிறைய இருந்தாலும்
இது போல படங்களைக் காண்பது இதம் தருகிறது.

நாமும் நல்ல படங்களைப் பார்த்திருக்கிறோம்.
பாலச்சந்தருக்கு நன்றி சொல்வோம்.

ஓ சர்வர் சுந்தரம் ,பாலச்சந்தர் படமில்லையா.
எனக்குத் தெரியாது!!!!!
நன்றி கீதாமா.Total Ignorance:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அதுதான் நம்ம ஊரில இருக்கணும்கறது:(
பரவாயில்லை. இணையம் கிடைப்பதே இப்போது
சில நேரம் பிரச்சினையாகிறது.
அத்தனை பேரும் வீட்டிலிருந்தால் மின்வாரியம் தான் என்ன
பண்ணும்!!!!
ஒளிபரப்புகளும் தடைப் படுகின்றன.