Blog Archive

Tuesday, July 28, 2020

குங்குமப் பொட்டுக்காரா.......

வல்லிசிம்ஹன்

நாலுவேலி நிலம்
முதலாளி படம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்
60 வருடங்களுக்கு முந்திய படங்களின் பாடல்களில் இனிமை
எளிமை எப்பொழுதும் பிடிக்கும்.
படங்கள் கொஞ்சம் நீளம் அதிகம் என்று தோன்றும்.

முதலாளி படம் இன்னும் பார்க்கவில்லை.
எல்லா பரிச்சயமும் சிலோன் வானொலி உபயம் தான்.
ஏரிக்கரையின் மேலே எப்பொழுது பார்த்தாலும் எல்லாத் திருமண
 நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப் படும்.

வானொலியில் விமரிசிக்கப் படும்
படங்களை வைத்து அந்த ஊர் தியேட்டர்கள் கூட
நிறைய நாட்களுக்கு நினைவு இருந்தது,
திரிகோணமலை, பம்பலப்பிட்டியா என்று இடப் பெயர்கள் வரும்.

நாலுவேலி நிலம் சேவா ஸ்டேஜ் நாடகமாக
சஹஸ்ர நாமம் குழுவினரால் நடத்தப் பட்டு
திரைப்படமாக வந்தது.
 தைபிறந்தால் வழி பிறக்கும் படம் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜசுலோசனா,
ப்ரேம் நசீர் நடித்து வந்தது.
அதில் தான் அமுதும் தேனும் எதற்கு பாடலும்,
மண்ணுக்கு மரம் பாரமா பாடலும் வரும் என்று நினைக்கிறேன்.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமையான பாடல்கள் அம்மா...

முந்தைய பாடல்களில் இனிமை ஒருபுறம் என்றால், நல்ல பல கருத்துக்கள் உள்ளடக்கி இருக்கும் மறுபுறம்... சிந்திக்கவும் வைக்கும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அதனால் தான் அந்தப் பாடல்களை மறக்க முடியவில்லை. எனக்கும் தம்பிக்கும் போட்டியே வரும். இத்தனைக்கும் அவன் என்னை விட நாலு வயது சின்னவன்.
முழுப்பாடலையும் பாடுவான்.
எனக்கு 11 என்றால் அவனுக்கு 7.
தமிழ் அவ்வளவு சீக்கிரம் கற்றுக் கொண்டோம்.
பொற்காலம் தான் ராஜா. நன்றி.

ஸ்ரீராம். said...

அந்தக்  காலப் பாடல்கள் போல இப்போது எதிர்பார்க்கவே முடியாது.  வார்த்தைகள் தெரளிவாக காதில் விழும்.  99% கருத்துள்ளதாக இருக்கும்.  டியூன்கள் இரைச்சல் இல்லாமல் மனதை வருடும்.  மனதின் மென்மையான பாகங்களைத் தொட்டு எழுப்பும்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஶ்ரீராம்.
உண்மைதான். காலங்கள் எல்லாம் மாறிவிட்டன. நம் ரசனைகள் மாறவில்லை நல்ல வேளையாக. நீங்கள் எல்லாம்
பழைய பாடல்களை ரசிப்பதே சாட்சி. நன்றி மா.

Geetha Sambasivam said...

படங்கள் தெரியாதே தவிரப் பகிர்ந்துள்ள அனைத்துப் பாடல்களுமே இனிமை, அருமை, வானொலீ உபயத்தில் அடிக்கடி கேட்ட பாடல்கள் தாம். அப்போவெல்லாம் வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பப்படும் விதம் தெரியாமல் அக்கம்பக்கம் ரேடியோ வைத்திருப்பவர்களிடம், குறிப்பிட்ட பிடித்த பாடலைச் சொல்லி, "அந்தப் பாட்டு வைங்க மாமா!" என்று கெஞ்சியது எல்லாம் நினைவில் வருகிறது.

கோமதி அரசு said...

மூன்று பாடலும் வானொலியில் அடிக்கடி வைக்கும் பாடல்.
இன்று மீண்டும் கேட்டேன்.
முதல் பாடலில் யாரோ ஒருவர் கை , காலை கட்டி போட்டு இருக்கிறார்களே ! வாய் திறந்து உதவிக்கு அழைக்க முடியவில்லையே அவரால்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஸ்ரீராமின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன். நானும் இதைச் சொல்லத்தான் வந்தேன். குறிப்பாக இசை இதமாக இருக்கும். இப்போதைய இசையில் பாடல் வரிகள் தெளிவாகக் கேட்பதில்லை. இசைதான் டாமினேட் செய்கிறது.

மூன்று பாட்டுமே இப்போதுதான் கேட்கிறேன் வல்லிம்மா.

மிக்க நன்றிமா பாடல்கள் பகிர்விற்கு

கீதா

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கீதாமா. நீங்கள்
ரொம்பச் சின்னப் பெண்ணாக இருந்திருக்கவேண்டும்.

இந்தப் பாடல்கள் பிடித்தம் நம் எல்லோருக்கும் உண்டுதானே.
வானொலி வாங்குவதற்கு முன்னால்
நானும் என் தோழி பத்து வீட்டில்
கிரிக்கெட் கமெண்டரி கேட்கப் போவேன்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் நமக்கு.
பாடல்களி ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
அந்தப் படம் நாலு வேலி நிலத்தில் வரும் காட்சி.
எனக்குக் கதை நினைவில் இல்லை.
இந்த வண்டியில் போகிறவர்கள்
அவரை விடுவிப்பார்களோ என்னவோ.

எனக்கு இங்கே தமிழ்த் தொலைகாட்சி கிடையாது.
இணைய வழி யூ டியூப் தான்.
இந்தப் பாடல்கள் தந்தவர்களுக்கும் நம் வந்தனங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் மா,
1950லிருந்து வந்த பாடல்கள் நிறையக் கிடைக்கிறது அம்மா.
இன்ன்னும் கர்னாடக ராகங்களைக் கொண்டு அமைத்த
பாடல்கள் தேவ கானங்களாக ஒலிக்கும். அவற்ற்றையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
நன்றி ராஜா.

வெங்கட் நாகராஜ் said...

மூன்றுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா.