Blog Archive

Friday, July 31, 2020

டணால் தங்கவேலு

வல்லிசிம்ஹன்
மஞ்சள் மகிமை படத்தில் 
தங்கவேலு, ராஜ சுலோசனா
ஜோடி.

அடுத்ததாக அடுத்த வீட்டுப் பெண்.:)
1960 களில் வந்த படம். 
தங்கவேலுவுக்காகவே இந்தப் படத்தைப்
பார்க்கலாம். 

10 comments:

ஸ்ரீராம். said...

நேற்று தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சேனலில் மறுபடியும் மிஸ்ஸியம்மா போட்டார்கள்.  சாவித்ரி அழகு.  ஜெமினி அழகு...   ஜாலி நம்பியார்...   இவர்களுக்கு நடுவில் துப்பறியும் சிங்கமாக தங்கவேலு...   அவரை ரசிக்காமல் இருக்க முடியாது.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கவேலுவின் காமெடி எப்போதும் நன்றாகவே இருக்கும். பேச்சும் சரி, நடிப்பும் சரி.. அவர் பாணியே தனி.. அடுத்த வீட்டு பெண் படத்தில் அந்தப் பாட்டு நான் எப்போதும் விரும்பி கேட்பது. இந்த காமெடி சீன்கள் அந்த காலத்தில் மிகவும் பிரபலம். சிலோன் வாணொலியில் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நாளில் காமெடி காட்சிகளை ஒலிப்பரப்புவார்கள். அதில் தங்கவேலுவின் இந்த காமெடியை போட்டு கேட்டு ரசித்துள்ளோம். .அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

என் பேத்தி ஜுரம் குறைந்து நலம் பெற வேண்டுமென தாங்கள் மனதாற பிரார்த்தித்து கொண்டதற்கு மிக்க நன்றிகள் சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
மிஸ்ஸியம்மா எத்தனை தடவை பார்த்தாலும் அழகு.
அதுவும் தங்கவேலுவின் நடிப்பைக் காணும்போது
அவ்வளவு இயற்கையாக இருக்கும்.
அதுவும் அந்த மச்சம் கண்டு பிடிக்கும் அழகு
சுவாரஸ்யம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,
குழந்தை குணமடைந்து வருவதில் மிக மகிழ்ச்சி.
நமக்கு வந்தால் கூடத் தாங்கிக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஜுரம் வந்தால் தாங்குவது கடினமே.

தங்களுக்கும் குழந்தைகளுகளுக்கும் என்று ஆரோக்கியம்
நிலைத்திருக்க வேண்டும்.

சிலோன் வானொலி நம் வாழ்வின் ஒரு அங்கம்.
மாலை ஒலி பரப்பு மட்டுமே இருந்த நாட்கள்
சில.
பிறகு காலை ஒலிபரப்பும் வந்தது. தென் தமிழகத்தில் இருக்கும் போது
நன்றாகக் கேட்ட ஒலிபரப்பு சென்னை வந்தபிறகு
கேட்கவில்லை.
பிறகு சரியானது.
லண்டன் கந்தையா கேட்ட நினைவு . ஞாயிறுகளில் அந்த ஊரில்
வெளியாகும் படங்கள் பற்றிய விமரிசனம் கேட்போம்.
சில நாட்கள் ஒலிச்சிரம்.
நட்சத்திர பேட்டிகள்.
வெள்ளிக்கிழமை இசையும் கதையும்.
நீங்கள் கேட்டவை, ஒரு படப் பாடல்கள்,
ஒரு வார்த்தை கொண்டு பாடல்கள்.
எத்தனை விதம் கேட்டிருப்போம்.
நினைவுகளை மீட்டதற்கு நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்கவேலு அவர்களின் நகைச்சுவையை என்றும் ரசிக்கலாம்...

ஆரம்பத்தில் ஓரிரு தொழினுட்பப் பதிவுகள் எழுதும் போது, தங்கவேலு அவர்களின் நகைச்சுவையை கேட்பொலியில் இணைத்த ஞாபகம் வருகிறது...

Geetha Sambasivam said...

தங்கவேலு, நாகேஷுக்குப் பின்னரே நகைச்சுவையின் தரம் தமிழ்த் திரைப்படங்களில் குறைந்து விட்டது. வடிவேலு கொஞ்சம் பரவாயில்லை ரகம். இந்த நகைச்சுவைக்காகவே அந்தப் படங்களைப் பார்க்கலாம். இயல்பான நடிப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.,
நீங்கள் பதியாத நிகழ்வுளோ பாடல்களோ இருக்கவே முடியாதுமா எத்தனை பாடல்களைக்கேட்டு. மகிழ்கிறோம் நாங்கள். தங்கவேலு
அவர்களைப் போல நல்ல கொள்கை படைத்தவரைக் கண் முடியாது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதாமா.
தங்கவேலு ,என் எஸ் கிருஷ்ணன், புளி மூட்டை ராமசாமி ,பிறகு நாகேஷ, நீங்கள் சொல்வது போல வடிவேலு. சுத்தமான நகைச்சுவை காணாமல் போய்விட்டது மா.

Thulasidharan V Thillaiakathu said...

இவை எல்லாம் நான் பல வருடங்களுக்கு முன்பு பார்த்து ரசித்தவை. மீண்டும் இப்போது ரசித்தேன் வல்லிம்மா

மிக்க நன்றி

துளசிதரன்

அம்மா நான் ஒவ்வொண்ணா மெதுவாகப் பார்க்கிறேன்

நகைச்சுவை எனக்கு மிக மிகப் பிடிக்கும்..ஆனா எழுதத்தான் தெரியாது ஹா ஹா ஹா ஹா

கீதா

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன் மா.