Blog Archive

Monday, July 27, 2020

வாழ நினைப்போம் வாழுவோம்.

வல்லிசிம்ஹன்  கவலையைப் போக்க 
கவிஞரை விடப் பெரிய மருந்து கிடையாது.

பலே பாண்டியாவில் வரும் பாடல் 
எத்தனையோ மனங்களுக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது.
// வாழைமரம் படித்ததில்லை 
கனி கொடுக்க மறந்ததா
வான் முகிலும் கற்றதில்லை 
மழை கொடுக்க மறந்ததா//
இந்த வரிகளும் கேட்க மிக எளிமையாக இருந்தாலும்
அதையும் சொல்லி நம்மை உணர வைக்க
கண்ணதாசன் ஐயா வரவேண்டி இருந்தது.
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலைதீர்ந்தால் வாழலாம்.//
கவிஞரின் பொன்னான வரிகள்.

எத்தனை மனிதரின் கவலையைப் போக்கி இருக்கிறார்
நம் கண்ணதாசன்.!!!!

கர்ணன் படம் வந்த போது ஏற்பட்ட விவாதங்கள்
எத்தனையோ இருந்தாலும்,
மஹாபாரதத்தின் கர்ணனிடமிருந்து
விலகிய இன்னோரு கர்ணன் சரித்திரம்
சிவாஜிக்காக எழுதப்பட்ட விதம் வியக்கவே வைத்தது.கவிஞரின் அருமைத் தமிழில்,
கர்ணன் மனைவி இசைக்கும் பாடலில் 
ஒரு நல்ல மனைவியின் காதலும்,
ஆதங்கமும், ஆறுதலும் பூரித்து
வெளிவரும்.
சுசீலா அம்மாவின் குரலில் தான் எத்தனை 
மாயம்!!!
பாலினில் இருந்தே நெய் பிறக்கும்
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்//

விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்கு இருள் ஏது?

தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது கண்ணா
கருணைக்கு இனமேது.!!!!!!!!!கண்ணதாசன் அவர்கள் பிறந்த நாளை ஒட்டி மனதில்
எழுந்த சின்ன நினைவலைகளில் ஒரு துளி.

21 comments:

ஸ்ரீராம். said...

ஆம், கண்ணதாசன் கவித்திறமைக்குக் கேட்கவும் வேண்டுமோ?   எல்லாமே அருமையான வரிகள்.  கர்ணன் திரைபப்டாப் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாய் இருக்கும்.  இந்தப் பாடலில் வரும் தருபவன் இல்லையோ கர்ணா நீ..  வரிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

கோமதி அரசு said...

மூன்று பாடல்களும் பிடித்த பாடல்கள்.
ஆறுதலும், தேறுதலும், வாழ்க்கையில் நம்பிக்கையும் கொடுக்கும் பாடல்கள்.
பகிர்வுக்கு நன்றி அக்கா.

நெல்லைத் தமிழன் said...

ஒரு பாடலையே அனுபவித்துப் படிக்க முடியும். நீங்க போட்டிருக்கும் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு கருத்தாழம் மிக்கது.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து பாடல்களையும் பலமுறை கேட்பதுண்டு...

இனிமையை விட மனதிற்கு ஆறுதல் தரும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
உண்மைதான். அவர் பெருமையைச் சொல்ல
ஒரு பதிவு போதுமா.
அவரவர் விழா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த மாபெரும் கவிஞருக்கு. நம்மால முடிந்ததை இரண்டு மூன்று பதிவுகளாவது போடலாமே
நன்றியைத் தெரிவிக்க என்று தான்
ஆரம்பித்தேன்.
கர்ணனைக் கண்ணனாக்கியது கவிஞர்தான்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நாம் எல்லாம் வளர்ந்ததே அவர் பாடல்களைக் கேட்டுத்தானே.
பழகு தமிழில் புரியும் விதமாகப்
பாடல்களைக் கொடுத்து நம் வாழ்வைப்
பதப் படுத்தியவர்.
நீங்கள் வந்து படித்ததும் எனக்குப் பெருமைதான் அம்மா.
வாழ்க வளமுடன் என் தங்கச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

பாடல்கள் எல்லாவற்றையும் எழுத ஆசைதான்.
காலை நிறைய நேரம் தொங்கப் போட முடியவில்லை.
எத்தனையோ கௌரவங்களுக்கு
உரித்தான அற்புத கவி அவர்.
நீங்கள் சொல்வது போல கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
வாழ்வின் எந்தக் கட்டத்துக்கும் அவர் பாடல் எழுதாமல் விட்டதில்லை.
எங்கு தொட்டாலும் பொருள் பொதிந்த மொழிகள் நம் மனதைத்
தொடும். நம்மை இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை
கொள்ளச் சொல்லும்.
உங்கள் பதிவுகளைப் படித்து ஆனந்தம் கொள்வது
உங்கள் எழுத்தாலும் பாடலாலும் தான்.
நன்றி ராஜா.

Bhanumathy Venkateswaran said...

முதல் பாடலை பாடியிருப்பது ஜமுனா ராணியா? 'மனம் துவண்டிருக்கும் பொழுது 'வாழ நினைத்தால் வாழலாம்..' பாடலை கேட்டால் ஒரு தனி தெம்பு வரும். கர்ணன் படம் பாடல்களுக்காகவே ஓடியிருக்கும். அந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையையும் பெங்களூர் உட்லண்ட்ஸில் ஒரே நாளில் கண்ணதாசன் எழுதிக் கொடுக்க  அன்றே கம்போஸ் செய்தார்களாம் விஸ்வநாதன்,ராமமூர்த்தி. 

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமா,

முதல் பாடல் பாடியிருப்பது எம்.எஸ்.ராஜேஸ்வரி.
குழந்தைப் பாடல்களுக்காகவே பிறந்தவர்.
சின்ன வருமானத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள்.

கர்ணன் படத்துக்காக இந்துஸ்தானி
ராகங்களைத் தேர்ந்தெடுத்து மெல்லிசை மன்னரும்,
ஐயா ராமமூர்த்தியும்
அற்புதமாக இசை அமைத்தார்கள்.
அத்தனை பாடல்களும் வெற்றி பெற்றன.
மேதைகள் நிறைந்த இசைத்திரை உலகம்
நமக்குக் கிடைத்தது. நன்றி மா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தெரிவு செய்த பாடல்கள் அனைத்தும் அருமை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இன்று நீங்கள் பதிந்த மூன்று பாடல்களுமே அர்த்தங்கள் நிறைந்த இனிமையானவை. கேட்க கேட்க திகட்டாதவை. கர்ணன் திரைப்படப் பாடல்கள்அனைத்துமே நன்றாகத்தான் இருக்கும். இன்றைய பாடல்கள் மூன்றும் கணவனின் மனமறிந்து அவனுக்கு ஆறுதல் சொல்வதாக மனைவி பாடும் பாடல்கள். இசையும்,எழுத்தும், அருமையான முறையில் சேர்த்து கோர்க்கப்பட்ட பாடல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yarlpavanan said...

கண்ணதாசனின் பாத்திறமைக்கு நிகர் யாருமில்லையே!

Thulasidharan V Thillaiakathu said...

இத்தனைப் பாடல்களும் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. கேட்டு ரசித்தேன் வல்லிம்மா. எங்கள் ப்ளாகில் ஸ்ரீராம்ஜி வெள்ளிக்கிழமைகளில் பகிரும் பாடல்கள் தான் நான் பல வருடங்கள் கழித்துத் தமிழ்ப்பாடல்கள் கேட்பது. அது போல் இப்போது நீங்களும் பகிர்வதால் கேட்க முடிகிறது

மிக்க நன்றி

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாப்பாடல்களுமே அருமை அம்மா. கர்ணன் படப்பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

வாழ நினைத்தால் வாழலாம் பாடல் நமக்கு உந்துதல் அளிக்கும் பாடல்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி.
வணக்கம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா மா. சூக்ஷ்மத்தைப் பிடித்து விட்டீர்கள்.
ஆமாம் , இந்தப் புரிதலுக்காகத் தான் இந்தப் பாடல்களைப்
பதிவிட்டேன்.

இந்த நேயம் இருந்துவிட்டால் தம்பதிகளின் வாழ்வு
பரிமளிக்கும் இல்லையா.
I am really very happy ,you got the essence.Thank you dear.
மனைவியின் பலமும் ,துணையும்
கணவனுக்கும் காதலனுக்கும் இருக்கும் பட்சத்தில் அவன் வெற்றி பெறுவது
நிச்சயம்.

கவிஞர் கண்ணதாசன் இத்தனை மனங்களைப் புரிந்து
செயல் பட்டு ,கவிதை புனைந்திருக்கிறார்.
நாம் இன்றும் மகிழ்கிறோம். மிக மிக நன்றி தோழி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு யாழ்பாவணன்,
உண்மையே .அவர் ஒரு பெரிய சமுத்திரம்.
நானெல்லாம் கரைப் பறவை.
அவரை அறிய முடிந்ததே
பெரும்பாக்கியம்.,நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
செய்திகளைப் படிப்பதோ ,பார்ப்பதோ
ஒரு பலனும் கொடுப்பதில்லை.
அவைகளைத் தவிர்த்து இணையத்தில்
உள்ள நல்ல செய்திகளையும்
இசையையும் கேட்பது அமைதி தருகிறது.
அதைப் பதிவதில் மகிழ்ச்சியும் தான்.
உங்கள் வருகைக்கு மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
வாழ நினைத்தால் வாழலாம்.
பாசிட்டிவ் வார்த்தைகளை நம் கண்ணதாசன் எவ்வளவு கொடுத்திருக்கிறார்.

அன்புவத்து உணர வேண்டிய தேவை நமக்கும் இருக்கிறது.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. நன்றி ராஜா,

வெங்கட் நாகராஜ் said...

தேர்ந்தெடுத்து பகிர்ந்த மூன்று பாடல்களுமே சிறப்பு மா.

கேட்டு ரசித்தேன்.