திறக்கும் கதவுகளுக்குப் பின்
நிற்கும் விழிகள்
சிலசமயம் அன்பு
சிலசமயம் கேள்வி
சில சமயம் மறுப்பு
சிலசமயம் வரவேற்பு.
எல்லாவற்றுக்கும் மௌனன சாட்சி
கதவுகளுக்குள் இருக்கும்
கண்ணில் தெரியாத கதவுகள்.
பாட்டியின் காலத்தில் கதவை மூடினநாட்கள் இல்லை.
பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த
திருடர்களும் இல்லை.
அவள் மன உரமே அங்கே இரும்புக் கோட்டை ஆனது.
அவளும் நிலை வாசலைவிட்டு மறைந்தாள்.
கூடவே சென்றன வெள்ளியும்,வைரமும்,தங்க ஒட்டியாணமும்.
இப்போதோ நாம் இருவர்.
இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.
பக்கத்து வீட்டுப் பழனி மேலும் காவல்
எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்
அம்மா
நான் பார்த்துக்கிறேன் வீட்டை.''
இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஒரு அதிர்ச்சி:(
*********************************
இந்த உரைநடைக் கவிதை '' வல்லமை '' மின்னிதழில் முதலில் வெளியானது
ஆசிரியருக்கு என் நன்றிகள்.
15 comments:
கவிதை மிக அருமை.
மலரும் நினைவுகள் நன்றாக இருக்கிரது.
அப்போது எல்லா வீடும் அடையா கதவுகள்.இப்போது எல்லா வீடுகளும் அடைத்த கதவுகள்தான்.
காலம் செய்த கோலம்.
//இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஒரு அதிர்ச்சி:(//
அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத காலம் இப்போது. யாருக்கும் யாரையும் கண்காணிக்க நேரம் இல்லை.
கவிதை நன்று அம்மா நிகழ்வை அழகாக பிரதிபலித்தது.
அன்பு கோமதி மா.,
அப்பொழுது அடிக்கடி வெளியூர்
செல்லும் வழக்கம் இருந்தது. வீட்டுக்காவலுக்கு யாரையும் வைக்கம் வழக்கம்'
இல்லை.
சிங்கத்துக்கு வீட்டின் மேல்
கவலை அதிகம் கிடையாது. செடிகளின் மேல் அபார கவலை. அருகில் இருக்கும் பூங்காவிலிருந்து ஒருவரை அழைத்து
கவனித்துக் கொள்ளச் செல்வார். அவரும்
தண்ணீர் சம்ப்பிலிருந்து
வாளியில் தண்ணீர் எடுத்து செடிகளுக்கு
பாய்ச்சுவார்.
ஆமாம் இப்போது யாரும் யாரையும் கவனிப்பதில்லை.
அதுவும் ஒரு வருத்தம் தான்.
அன்பு தேவகோட்டைஜி,
மிக மிக நன்றி மா.
அப்போதிருந்த மன நிலையில்
தமிழும் சரியாக எழுதினேன் என்று நினைக்கிறேன்.
நல்லதொரு கருத்தில் கவிதை அருமை. ஆமாம், எத்தனை எத்தனை நிகழ்வுகளுக்கு சாட்சி அந்தக் கதவுகள்... அருமை அம்மா.
அன்பு ஸ்ரீராம், இனிய காலை வணக்கம்.
கதவுகள் அனைத்துக்கும் சாட்சி.
அதற்கு மட்டும் வாயிருந்தால் அத்தனை கதைகளையும் சொல்லும்.!!
எத்தனை உறவுகள் ,எத்தனை நிகழ்வுகள்
எத்தனை விழாக்கள். எத்தனை தோரணங்கள்.
மிக நன்றி மா. இந்த நாள் நன்மை தரும்
நாளாக இருக்க வாழ்த்துகள்.
கவிதை அருமை அம்மா...
கருத்துள்ள கவிதை. பாராட்டுகள் மா.
இப்போதெல்லாம் பகலிலேயே வீட்டுக்கதவைப் பூட்டுப் போட்டுப் பூட்டி விடுகிறோம். :(
ஆஹா! உங்களுக்குள் இப்படி ஒரு கவிதாயினி இருப்பது இப்போதுதான் தெரிகிறது. அவரை பூட்டி வைக்காமல் வெளியே விடுங்கள்.
அன்பு தனபாலன்,
மிக நன்றி மா. அனைத்து நலங்களும் பெருகட்டும்.
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம் மா.
மிக நன்றி பாராட்டுக்கு.
நலம் பெருகட்டும்.
அன்பு கீதாமா,
அதுதான் பின்பு எங்களுக்கும் பழக்கமானது.
ஊரின் நிலைமை அப்படி. என்ன செய்யலாம்:(
இப்போது பகவானே அந்தச் சிறையில் நம்மை வைத்திருக்கிறான்.
எப்படியோ எல்லோரும் சுகமாக இருந்தால் போதும்.
அன்பு பானுமா.
எண்ணங்களை எழுதினால்
அது கவிதையாகிவிட்டதோ.!!
அவ்வப் பொழுது எனக்குள் இருக்கும்
தமிழ் புத்தி விழித்துக் கொள்கிறது போலிருக்கிறது. மிக மிக நன்றி மா.
Post a Comment