Blog Archive

Tuesday, July 07, 2020

சில செய்திகள்.

வல்லிசிம்ஹன்
அனைவரும் சுகமாக வாழப் பிரார்த்தனைகள்.இந்த நாட்டில் வேகமாகத் தொற்று அதிகரித்தாலும்,
நான் இருக்கும் நகரத்தில்
அதி எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருவது 
அரசாங்கத்துக்குப் பெருமை.

அதையும் மீறிக் கோடைக்காலக் கொண்டாட்டங்கள் என்று மக்கள் கூடுவதைக் கண்டபிறகு வெளியே செல்லும் எண்ணமே நம்மை விட்டுப் போகிறது.

காலாற நடக்க முடிவது வீட்டுப் பின்புறம் இருக்கும் புல் வெளியில் மட்டுமே.


நேற்று முதல் காற்றின் மூலமாகவும் 
கிருமிகள் பரவ சந்தர்ப்பம் இருப்பதால்
முக மூடி அணியாமல் வெளி நடக்க வேண்டாம் 
என்ற எச்சரிக்கை தொலைக்காட்சியில் 
ஓடிக்கொண்டிருக்கிறது.

பேரன் இருவரும் அடித்தளத்தில் இருக்கும் பயிற்சிக் கூடத்தில் 
தேகப் பயிற்சி செய்துகொள்கிறார்கள்.
அவ்வப்போது மகளும் மருமகனும் முயலுகிறார்கள்.
வீட்டில் இருந்து வேலை செய்தாலும்
வேலை நேரம் மிக அதிகமாக இருப்பதால்
அயற்சி கூடுகிறது.

முடிந்தவரை நட்புகளுடனும் ,உறவினர்களுடனும் 
தொடர்பில் இருக்கிறேன்.
அன்பு தானே நமக்கெல்லாம் மருந்து.
இணையத்தில் கிடைக்கும் பக்தி சொற்பொழிவு, 
சித்தர் சொல்மொழிகள்,
இறை தரிசனம், அதற்குப் பிறகு பழைய திரைப் பாடல்கள்
மூளை செயல் திறனுக்கு நல்ல உணவு.

உறவுகளுக்கு தொலைபேசும்போது பல 
காதுக்கு ஒவ்வாத செய்திகள் வருகின்றன.
எல்லா வயதுக்காரர்களயும் இந்தத் தொற்று பிடிக்கிறது.

 85 வயது உறவினரின் caregiver was infected.
வீட்டிலேயே பெரியவரைக் கவனித்துக் 
கொண்டவருக்கு எப்படி வந்தது என்று அவர்களுக்குப் 
புரியவில்லை.
அவருக்கும் தனி அறை கொடுத்து அவரைப் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள்.
வீட்டில் மற்றவர்களுக்கு தொற்று இல்லை.

இங்கே நான் இருப்பதால் பல விதமான
ரிப்பேர் செய்பவர்கள் , வீட்டினுள் வர அனுமதி இல்லை.

அலுப்பாகத்தான் இருக்கிறது.
எல்லாம் நலமாக இறைவன் தான் மனம் வைக்க 
வேண்டும்.பிரார்த்தனைகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

இதுவும் கடந்து போகும்.

நலமே விளையும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம் மா.
நீங்கள் சொல்வதுதான் உண்மை. நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் நன்றாகவே நடக்க வேண்டும் அம்மா...

கோமதி அரசு said...

சாமி கும்பிடுவது, படங்கள் பார்ப்பது, பாடல் கேடபது பேரன், மகன் , மகள், மற்றும் உறவினர்களுடன் பேசுவது என்று நேரம் போகிறது. அன்னை மீனாட்சி மனது வைக்க வேண்டும்.
எல்லாம நலமாக நடக்க ஆசீர்வாதம் செய்வாள் என்று நம்புவோம்.