Blog Archive

Thursday, July 23, 2020

Thanjavur Race Kootu | தஞ்சாவூர் ரேஸ் கூட்டு | Ammavum Naanum Episode #3...

வல்லிசிம்ஹன்   :)))))

13 comments:

ஸ்ரீராம். said...

அம்மாவும் மகனும் அருமையாய்ப் பேசிக்கொண்டே செய்திருக்கும் சமையல் சூப்பர்.  எளிமையாயும் இருக்கிறதே...

நெல்லைத் தமிழன் said...

நான் பச்சை மிளகாய்க்குப் பதில் சீரகம், சிவப்பு மிளகாய் அரைப்பேன். கடலைப் பருப்பு சேர்ப்பது புதுசு. நாளை செய்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

/சமையல் சூப்பர். எளிமையாயும் இருக்கிறதே...// - ஸ்ரீராமுக்கு 'தஞ்சை சமையல்'னு போட்டா போதுமே... பாராட்டு தாராளமா வருதே..ஹா ஹா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா இது ரேஸ் கூட்டா? நம்மூரில் வேறு பெயர் இதுக்கு.

நான் என் ஒன்றுவிட்ட நாத்தனார் அவர் ஒரு தஞ்சாவூர் சமையல் மாமாவிடம் ரேஸ் குழம்பு, கூட்டு குறிப்புகள் கற்றதை நானும் கற்றுக் கொண்டேன். அது வித்தியாசமாக இருக்கும்.

நான் செய்து படம் எடுத்துள்ளேன் திங்க வுக்கு இன்னும் அனுப்பவில்லைமா. அனுப்பினாலும் ஸ்லாட் எப்பவோ!!! ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராமிடம் தான் கேட்க வேண்டும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பிறந்த வீட்டில் இது அடிக்கடி செய்யப்படும் கூட்டுக் குடும்பம் ஸோ இளவன் தான் கட்டுப்படியாகும்னு பெரிய தடியங்காய்/இளவன் வாங்கி அதை இப்படித்தான் செய்வாங்க. சில சமயம் ப மி க்குப் பதில் சி மி வ போட்டு அரைத்துச் செய்வாங்க.

மற்றொன்று அரைக்கும் போது இதோடு கொஞ்சம் ஜீரகமும் சேர்த்துப் போட்டுச் செய்வாங்க. பொதுவா இதை கடலைப்பருப்பு போட்ட கூட்டுனு சொல்வதுண்டு.

இதையே மஞ்சள் பூஷணி, சௌசௌ, போட்டுச் செய்வாங்க. பாண்டிச்சேரியில் இருந்தப்ப பக்கத்து வீட்டில் அவங்க இதே முறையில் சுரைக்காய், பீர்க்கங்காயில் செய்தாங்க நானும் செய்வேன். கோஸில் கூட பிறந்த வீட்டில் செய்வாங்க.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயர் ஆனால் செய்முறை என்னவோ அதே தான்.

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கூட்டு செய்முறை அம்மா,மகன் இருவருமாக பேசி கொண்டே அழகான விளக்கம் தந்திருக்கிறார்கள். காணொளியை ரசித்தேன். நானும் இந்த தடியங்காய் (இது திருநெல்வேலி பக்கம் இப்படித்தான் இதற்கு சொல்வழக்கு என்பது தாங்களும் அறிந்திருப்பீர்கள்.) கூட்டு கடலைப்பருப்பு சேர்த்து இப்படித்தான் செய்வேன். ஆனால் சிகப்பு வத்தலும், ஜீரகமும் அரைத்து விடுவேன்.கடைசியில் தேங்காய் எண்ணெய் மணத்துடன் தாளித்தவுடன் கூட்டு அமிர்தமாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.

ஒரு ஆறு மாதங்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன்.
திரு நெல்வேலி குறிப்புகள் சொல்லி வந்தாரே என்று பார்த்தேன்.
தஞ்சாவூருக்கு மாறி இருக்கிறார்.
எங்கள் வீட்டில் அம்மா செய்வது கீதா ரங்கனும்,
அன்பு கமலாவும் சொல்வது போல இருக்கும்.

தேங்காய் சேர்ப்பது குறைவு. அப்பாவின் அம்மா வீட்டில் தேங்காய்
கொஞ்சம் கூடுதல்.
வீட்டுக்கு வீடு மாற்றம் தான்.
அம்மா பிள்ளை அன்னியோன்யம் எனக்கும் பிடிக்கும்.

Geetha Sambasivam said...

இவங்க சமையல் குறிப்புகள் நிறையவே பார்த்திருக்கேன். அம்மாவிடம் அவர் காட்டும் அன்பும், மரியாதையும் மனதைக் கவரும். இந்தக் கூட்டு பூஷணிக்காய் வாங்கினால் இரண்டு நாட்களில் ஒரு நாள் எங்க வீட்டில் உண்டு. இதே போல் தான் பண்ணுவேன். நம்மவர் மஞ்சக்கூட்டு என்பார். ரேஸ் கூட்டு என்னும் பெயர் இதுக்குனு தெரியாது. ரேஸ் குழம்பு கேள்விப் பட்டிருக்கேன். இதோடு ஜீரகம் வைத்து அரைத்தால் அதை நாங்க மொளகூட்டல் என்போம். கொஞ்சம் பாசிப்பருப்பும் அதில் வேக வைத்துச் சேர்ப்போம். கடலைப்பருப்பு மட்டும் போட்டுப் பச்சை மிளகாய், தேங்காய் அரைத்துவிட்டுப் பண்ணுவது தான் அதிகம் பார்த்திருக்கேன். அதிலே சிவப்பு மிளகாய் வைத்தோ, ஜீரகம் வைத்தோ பார்க்கவில்லை. சகஜமாகப் பேசிக் கொண்டே சமைப்பார்கள்.

Geetha Sambasivam said...

ஒவ்வொரு முறையும் ருசி பார்க்கையில் அவர் அழகாய்த் தனிக்கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு எச்சில் பண்ணாமல் தூக்கிப் போட்டுக் கொள்வார். மனதில் ஆச்சரியமும், சந்தோஷமுமாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் மா,
என்னவோ பெயர் சொல்லுகிறார்கள்.
நமக்கு வேண்டியது நல்ல ரெசிப்பி தானே.
இந்தக் கடலைப் பருப்பு போட்டு
கத்திரிக்காய் கூட்டு மிகப்
பிடிக்கும்.அதற்கு சிகப்பு மிளகாய்
தோதுப்படும்.இந்த அம்மா பையன் பிடிக்கும்
அதனால பார்ப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலாமா,
பாட்டி சொல்லிதான் தடியங்காய் பெயர் எல்லாம் தெரியும்.
இப்போது நீங்களும் ,கீதா ரங்கனும் சொல்வது
பிடித்திருக்கிறது.
அருமையாக இங்கு வந்து எழுதுவது பிடிக்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நானும் சிகப்பு மிளகாய், தேங்காய், கொஞ்சம் அரிசி,
சீரகம் சேர்த்து செய்வேன். பெயர் எல்லாம் சொல்லத் தெரியாது.
ஆமாம் ஸ்ரீராமுக்கு தஞ்சை ரொம்பப் பிடிக்கும்.
இல்லாவிட்டாலும் இங்கே வந்து ஒரு ஹலோ சொல்லாமல் போக மாட்டார்.
நன்றி ராஜா. செய்து பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கீதாமா.
சமர்த்தாய் உட்கார்ந்து கொண்டு
அம்மாவுடன் பேசுவதும்,
கிண்ணத்த்ல் தனியாக எடுத்துச் சாப்பிடுவதையும்
பார்க்கும் போது நம் குஹந்தைகள் நினைவு வரும்.
நல்ல நாசூக்கு தெரிந்த பிள்ளை.
நான் சில நாட்களாகப் பார்க்கிறேன்.
பெரிய Chef ஆமாமே?
உலகமே திறமையாய்த் தான் இயங்குகிறது மா.