Blog Archive

Wednesday, October 30, 2019

சிகாகோ/பாசல் தமிழ்நாடு.பயணம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

சிகாகோ/பாசல் .பயணம் 

இங்கும் அங்கும்  என்று  ஒரு பாடல் .
அது மனத்துக்குத் தான். இங்கு வந்தால் அந்த ஊர் நினைப்பு. அங்கு போனால் இந்த ஊர் நினைப்பு.
நம் ஊருக்குப்   போனால் வேறெந்த நினைவும் வராது.
அதுவே நிறைவாக. 
இருக்கும் 13 நாட்களில்  பார்த்தே ஆக வேண்டிய சில பேர்.
பார்த்துப் பேச விரும்பும் அருமை நண்பர்கள்.

நடுவில்   நிறைவேற்றிய வேண்டிய பித்ரு கார்யம். அடுத்த நாள் ஒரு திருமணம்.
அடுத்த நாள்  திருக்குறுங்குடிப் பயணம்.

மூ ன்று நாட்களில் திரும்பினால்  மீண்டும் பயணம்.
குழந்தைகளுக்கு வேண்டும் என்கிற  பரிசுகள்.
வாங்கிக்கொண்டு ஜகார்த்தா பயணம்.

எல்லா இடத்திலும் இறைவன் நின்று காக்க வேண்டும்.
 மிகமிக பிஸியான  மானேஜர்கள்  இப்படி ஓரிடம் நில்லாமல் தமிழ்நாடு  
பறப்பதை பார்த்திருக்கிறேன்.

வேலையே இல்லாமல்  ,சொந்த இடத்தை விட்டு நகராதவர்களும் 

வடதுருவம் தென் துருவம் என்று அலை கிறோம்.
வேடிக்கைதான்.











Monday, October 28, 2019

சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10

வல்லிசிம்ஹன்
எல்லோரும்   நலமாக வாழ வேண்டும்.

சப்த ஸ்வரங்கள்  மாறினாலும் இசை ஒன்றுதான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வித விதமான தீபாவளி அனுபவங்கள்.
வித விதமான வாழ்த்துக்கள்.
அன்பு சொன்னவர்கள், மறந்தவர்கள் 
எல்லா வருடங்களிலும்  நடப்பதுதான்.

ஜீரண அஜீரணங்கள் தொடராமல் மருந்தும் சாப்பிட்டால் 
பொங்கல் வரை சுகமாக  நடைபோடலாம்.:}
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


நிகிதா,தன்யா மானசி ,பரணி இவர்களுடன் சாரிக்காவும் ,அவள் 
பாட்டியும்,
எமிரேட்ஸ்  விமானத்தில் வந்திறங்கினார்கள் .
அவர்களுக்கு ஏற்கனவே ஏர் பி அண்ட் பியில் மைலாப்பூரில் இரண்டு முன்று   வீடுகளில்  ஏற்பாடாகி இருந்தது.
தங்குவது அங்கே ,சாப்பிடுவது  பிடித்த இடத்தில்.

அவரவரது  ஷெட்யூல்  நகரத்தின்  வாணி மகால், ஆர் ஆர் சபா,
கிரிஃபித் ரோட்,பொட்டி ஸ்ரீராமுலு ஹால் 

என்று தி.நகரைச் சுற்றியே இருந்தன,.

இறங்கினதும் அவர்கள் விரைந்தது  மஹி வீட்டுக்குத்தான்.

கார்த்திக்கும் அங்கே இருந்தான். 
அவனுக்கு இவர்கள் எல்லோரின் உத்சாகமும் மிகப் பிடித்திருந்தது.




நிகிதா ,ஒரு சந்தோஷச்  செய்தி சொன்னாள் 

ரகு நந்தனும் . மாநசியும்   வரும்  ஜூன் மாதம் 
திருமணம்  செய்வதாகத் தீர்மானித்திருக்கிறார்கள் 
என்று.
இன்னொரு அலை அங்கே பொங்கியது. மகிழ்ச்சி  எல்லோர் இதயத்திலும் பரவ  பரணி, தன்யா வை  நோக்கினார்கள். உங்கள் கதை எப்படி எப்படி என்ற கேள்வி  அவர்கள் கண்களில்.


இருக்கு இருக்கு என்ற பரணி, தன்யா  தனக்கேற்ற 
இளைஞனைக் கண்டு பிடித்துவிட்டாள்.

இன்று மாலை  அவர்கள் நடனம்  பார்த்தசாரதி சபாவில் என்று செய்தியை அவிழ்த்தான்.

தன்யா  சும்மா இல்லை,  பரணியும்,தனக்கு ஒத்து ஊதும் பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டான் .
இதோ வராங்க என்று உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாரிக்காவைக் 
  கை  காண்பித்தாள்..

பாருடா. இந்த  ஜோடியை. ஒண்ணுமே தெரியாதது போல முகம் வைத்துக் கொண்டு.
எப்படி எப்படி என்று சூழ்ந்தனர் அவர்களை.

எனக்குப் பக்க பலமாக அவள் இருப்பாள் என்று உறுதி தோன்றியதும் பாட்டியிடம் கேட்டுவிட்டேன்  என்று சிரித்தான் .


ஹரனும் வருகிறான்.இது  நிகிதா வின்  பங்களிப்பு.
அமெரிக்காவில் குடியேறுவது இப்போது கடினமாயிற்றே 
எப்படி சமாளிப்பீர்கள்  ,இது அடுத்த கேள்வி.

அவன் அங்கே வரவில்லை என்றால் நான் இங்கே வந்துவிடுகிறேன்,சிம்பிள். என்றாள்  நிகிதா.

Image result for mUSIC SEASON  DECEMBER  CHENNAI

ஹரனும் வந்து சேர்ந்தான். முகத்தில் பழைய பொலிவு குறைந்திருந்தது.
சிநேகிதர்களைக் கண்டதும் மனம் மலர்ந்தது

நிகிதா அவன் அருகில் வந்து கைகளைக் கோர்த்துக் கொண்டாள் .
   மாலை  தன்யாவின்  லக்ஷ்மன்  ஆடிய  நடனத்தை அனைவரும் சென்று பார்த்தனர்.

கலாக்ஷேத்ராவின்  மாணவனை  இரண்டு மூன்று வருடங்களாகவே அறி வாள் தன்யா.
நடனம் அறிந்த ஒருவர்  
தனக்கு  வாழ்க்கைத் துணையாக வருவதையே அவள் விரும்பினாள்.

திருமணத்துக்கு அவர்கள் அவசரப்  படவில்லை.
வாழ்க்கையில் ஸ்திரம்  வந்ததும் அந்த வாழ்க்கையைப் பற்றி  யோசிப்பதையே  ஆரம்பிக்கலாம் என்பதே அவர்கள் முடிவு.



மஹி கார்த்திக்,

ஹரன் நிகிதா,

மாநஸி ,ரகு நந்தன் ,

பரணி சாரிகா,

தன்யா  லக்ஷ்மன்.


இவர்களது எதிர்காலம்   வளமாக  இருப்பது அவர்கள் கைகளில் தான் இருக்கிறது.

இசை ஒன்று சேர்த்த  அவர்கள்   வாழ்வு சுருதி விலகாமல் 
பக்குவமாகப் பாதுகாப்பதற்கான வயதில் இருப்பவர்கள் தான்.

நிதானமாக யோசிக்கும் இளைய சமுதாயம் 

இனி எடுத்து வைக்கும் அடிகளிலும் 

ஒருவரை ஒருவர்  ஆதரித்து,அனுசரித்து வாழ நம் வாழ்த்துக்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பல நண்பர்களையும் குழப்பி ஒரு கதை எழுதினேனோ என்று 
முதலில் கவலைப் பட்டேன்.

இந்தக் கதையின் பாத்திரங்கள் நான் சந்தித்தவர்கள் தான். சாரிக்காவைத் தவிர.

மஹி  கார்த்திக்  நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்துவிடும்,

அடுத்து ரகு நந்தன் ,மானசி  மனமும் உறுதி.

ஹரன்  பெற்றோர்களிடம் நிகிதாவை அறிமுகப் படுத்தியாச்சு.

அதுவும் நடந்துவிடும்.

இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கும் பரணி,சாரிக்காவின் காதலும் பாட்டியின் துணையுடன்  திருமணத்தில்  முடிவது  உறுதி.

தன்யா  லக்ஷ்மண்   அடுத்த வருடங்களில் தங்கள் வாழ்க்கையைத் 
தீர்மானிக்கலாம் .

மகிழ்ச்சி மட்டுமே இந்த இளம்தம்பதிகளைச் சேர நம் வாழ்த்துக்கள்.


















Saturday, October 26, 2019

சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் .  அனைவருக்கும்  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.




மஹிக்குப் புரியாதது  பாட்டியின்  அவசரம் ஓன்றுதான் .

அமெரிக்காய் பயணம் முடிவதற்கு 
முன்  காத்திருக்க முடியாதா .

சென்னை வந்த பிறகு விடை கிடைத்தது.

கார்த்திகேயனின்  தந்தைக்கு  மத்திய கிழக்கு நாடு ஒன்றில் 
நல்ல வேலை கிடைத்திருப்பதால் 
அவர் செல்லும் முன்  அவனுடைய    திருமணம் 
நிச்சயம்  செய்ய  விரும்பினார்.

பிரபல நிறுவனத்துடன் ஐந்து வருட ஒப்பந்தம்.
வருடத்துக்கு ஒரு முறை வரமுடிந்தாலும்,

மகனைத் தனியே விட்டுச் செல்ல  மனமில்லை.



மஹியை முன்பே கச்சேரிகளில் பார்த்தும் கேட்டும் இருக்கிறார்.

அவள் தோற்றமும் ,இசையும் பிடித்ததால் 
அவர்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்.
 பாட்டிக்குப் பேத்தியிடம் சொல்லத்  தயக்கம் தான்.  கேட்டு வைக்கலாம். நடந்தால் நல்லதுதானே  என்ற  நினைப்பில் மகளிடம் பேசி செய்தியைச் சொல்லி உடனே வரும்படி    சொன்னார் .
படத்தையும் அமேரிக்கா சென்ற ஒருவரிடம் அனு ப்பினார்.

மஹியும் அம்மாவும் வந்து சேர்ந்து,இரண்டு நாட்களில் தீபாவளி .

தோழிகளிடம் அரட்டையில் இருந்தாள்  மஹி.

வாசலில்  குரல்கள்.
 மாமா ,அத்தை யாரவது வந்திருப்பார்கள்   என்று நினைத்தபடி 
மஹி  வெளியே வந்தாள்.

புது மனிதர்களை ப்  பார்த்ததும் தயங்க,
மஹி ,இவர்கள்  திரு. சந்தானமும் அவர் மனைவி  கீதாவும் என்று அறிமுகப் படுத்தினார்.

மஹியின் திகைப்பைப் பார்த்து,  "சொல்லாமல் வந்ததற்கு  மன்னிக்கணும்.
தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல வந்தோம். " என்றார் .

இருவரது   புன்னகை முகத்தைக் கண்டதும் மஹிக்கு ஒன்றும் சொல்லத் 
தோன்றவில்லை. 
வணக்கம் என்று  சொல்லிவிட்டு, இதோ வருகிறேன் என்று தன்  அறைக்குள் சென்றாள் .

அம்மாவும் அப்பாவு ம் அவர்களோடு உத்ஸாகமாகப் பேசுவது கேட்டது.

சிறிது நேரத்தில் அம்மாவே உள்ளே வந்தார்.
நீ அங்கே  வந்து பேசலாமே மா. நல்லவர்கள் தான். என்றார்  சிரித்தபடி.

சொல்லாமல்  இப்படி  வந்தால் எப்படிம்மா, என்று 
சிணுங்கினாள். . எதோ ஆசையாக வந்திருக்கிறார்கள். ரெண்டு வார்த்தை பேசிவிட்டுப்போ 
என்று சொன்ன அம்மாவை தொடர்ந்து வெளியறைக்கு வந்தால் மஹி.

அவர்கள்   உண்மையான  ஆவலுடன் அவள் சங்கீத  அனுபவங்களை பற்றிப் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் இயல்புக்கு வந்தாள் .

அன்று மாலை மைலாப்பூர் பைன்  ஆர்ட்ஸில் அவள் கச்சேரியைக் கேட்க வர போவதாக  இருவரும் சொன்னதும்.. 
 அவளுக்கு வித்தியாசமாகப் படவில்லை.  
4 மணிக்கு கச்சேரி  என்பதால் ,சில  ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டி இருந்தது.

மீண்டும்  என்று  , உள்ளே சென்று விட்டாள் .
அம்மா அவர்களை வழி அனுப்பும் சத்தம் கேட்டதும் ,தன்  வேலை யில் மும்முரமானாள் .

அன்று மாலையே  கார்த்திகேயனிடமிருந்து அழைப்பு.

நிதானமாகப் பேசும் அவன் குரல் பிடித்திருந்தது.
 இருவரும்   புதன் கிழமை சந்திக்கலாமா என்று கேட்ட 
பண்பும்  பிடித்தது.

நுங்கம்பாக்கத்தில் ஒரு   ஓவியக்  கண்காட்சிக்குப் 
போகலாமா என்று கேட்டதும் சம்மதித்தாள் .

முறையாகப் பெண் பார்க்க வேண்டாமா என்ற பாட்டியைப் பார்த்து சிரித்த  மஹி ,  அதெல்லாம்  இப்ப அவுட் ஆப் FASHION பாட்டி.

சீக்கிரம்  நடக்கிற விஷயம் இல்லை இந்தக் கல்யாணம்.
அவசரமே  இல்லை.  இருவருக்கும் ஒத்துப் போனால் தான் 
மற்றதெல்லாம் என்றாள் .

டிசம்பர் முதல் தேதி  கே {மஹி வைத்த பெயர்}யின் பெற்றோர் கிளம்ப ,
அதற்கு முன்பாக 

மஹி யைக் கலந்தாலோசித்து  நவம்பர் 6 ஆம் தேதி 
இரு பெற்றோர்கள்  மட்டும் கலந்து கொண்ட  திருமண நிச்சயம் நடந்தது.

திருமணத்தேதி   நிச்சயிக்கப் படவில்லை.
ஒரு வருடம்   சென்ற பிறகு தான். என்று மஹியும் கேயும் 
செய்த  தீர்மானம். 
அடுத்த ஒரு வாரத்தில்  அமெரிக்க நண்பர்களின்  வரவு 
ஊரே கலகலத்தது. மீண்டும்   தொடரும் .






Tuesday, October 22, 2019

சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9

வல்லிசிம்ஹன் 

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


சப்த ஸ்வரங்கள்  நடத்தும்  கதை. 9




ஒரு வார  விடுமுறை முடிந்து மாநசி, பரணி, ரகு நந்தன், 

திரும்பிச் சென்றார்கள்.

தன்யா,நிகிதா, மஹியுடன்   ஹுயூஸ்ட்டன் வந்தார்கள்.

 இன்னும்   ஒரு வாரத்தில்  சென்னை திரும்ப வேண்டிய அவசியம் மஹிக்கு ஏற்பட்டது.

மஹியின்   பாட்டி  , மஹிக்கு   ஒரு வரன் பார்த்து வைத்திருப்பதாகவும்

அந்தப் பையன்  மஹியின் பாட்டுக்காகவே அவளை விரும்புவதாகவும்.

வெளிநாடு செல்லும் உத்தேசம் இல்லாத 
மஹிகாவை மிகப் பிடித்திருப்பதாகவும் 
நீண்ட   தொலைபேசி அழைப்பில் சொன்னார் 
மஹியின் அம்மா.

தான்  கலி போர்னியாவிலிருந்து   
கிளம்பி ஹூஸ்டன்  வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

மஹி இதற்கெல்லாம் அசரவில்லை.

பெரியவர்களை மீறி   அறியாதவள். அதனால் கிளம்ப சம்மதித்தாள்.



அவள் மனதில்  சலனம் இல்லை.

23 வயதில்  திருமணத்திற்கு  அவசியமில்லை  என்ற தீர்மானத்திலிருந்தாள் .

ஹுய்ஸ்டனில்  மீனாக்ஷி அம்மன் கோவிலில் 
மஹியின் இசையும், தன்யாவின்  நடனமும் ,நிகிதாவின் வீணைக் கச்சேரியும் 

அரங்கேறின.


இரண்டு மூன்று நாட்களில்  அம்மாவும் வந்து சேர்ந்தார். 

அவர்கள் தங்கியிருந்த வீடு நியூஜெர்சி, மற்றும் வடகரோலினா 
மாகாணத்தைச் சேர்ந்த இசைப் பிரியர்களின் சொந்த வீடு.

நிகழ்ச்சிகள் முடிந்த இரவு, தோழிகள்  மனம் விட்டுப் பேசினார்கள்.

மஹி, நிகிதாவிடம்  ஹரன்  உள்ளத்தை அறிந்து சொல்வதாகவும்.

இப்பொழுது அவன் இருக்கும் நிலையில் சரியாக சிந்திக்க முடியாது என்றும் 
விளக்கினாள் .

தான் அவனுடன்   தோழமையாக இருந்தது நிஜம் என்றாலும் 

அவன் அளவுக்குத் திருமணத்தில்  தற்போது ஈடுபாடு இல்லை என்றும் சொன்னாள் .
நிகிதா மனம் நிம்மதி அடைந்தது.

இருவரும் தனியாவை  நோக்க,  யாருக்கு மாப்பிள்ளை யாரோ என்று 
அபிநயம் பிடித்தாள் .
குறும்பைக் கண்டு ரசித்தார்கள்  மற்ற இருவரும்.

நாம் தான் அடுத்த மாதம் பார்ப்போமே, அதற்குள்,"நல்ல சேதி சொல்லடி மீனாக்ஷி." என்று மஹி பாட  " வீணையடி நீ எனக்கு மேவும் விரல் 
நான்  உனக்கு." என்று நிகிதாவும் சேர்ந்து  கொண்டாள் .

"அப்போ மஹி  நீ என்ன கதை சொல்கிறாய்."

ம்ம். எனக்காக ஒரு கண்ணன் தவமிருக்கிறாராம்.

இரண்டு மூன்று வருடங்கள் காத்திருந்தால் 
நான் சரி என்று சொல்ல வாய்ப்புண்டு 
என்று சட்டமாகச் சொல்லிவிடப்  போகிறேன்  என்றாள் மஹி.

யார் கண்டார். ஆளை பார்த்ததும், வரச்  சொல்லடின்னு பாடுவியோ என்னவோ என்றதும்    மஹி முகம் சிவந்தது.

மற்றும் இரண்டு நாட்கள் கழித்து 
தோழிகளிடம் பிரியா விடை பெற்றவள் கையில் அம்மா 
ஒரு படத்தை திணித்தார்.

"என்ன ?" என்று கேட்டவளிடம்   பாட்டி சொன்ன  கார்த்திகேயன் 
என்றார்  அம்மா.
ஏற்கனவே இரு தேவியர் ஹ்ம்ம்...

 வைத்துக் கொண்டு கல்யாணமா "
என்று பரிகாசம் செய்தாலும் மஹியின் மனம் 
கொஞ்சம் அசைந்து கொடுத்ததுதான் நிஜம்.



கதையைப் பூர்த்தி செய்ய இன்னும் நான்கு  நாட்களாவது ஆகும்.

அமெரிக்க நண்பர்களுக்கு  போய்வருகிறேன் என்று சொல்லி மீண்டும் சந்திக்க ஆவலுடன் வல்லிம்மா.













Sunday, October 20, 2019

நினைவுகள்.

வல்லிசிம்ஹன்
சிங்கத்தின் நினைவுக்கு சில பாடல்கள்.


சிங்கத்துக்கு பழைய பாடல்கள். மிகப் பிடிக்கும்
சில நடிகர்கள், நடிகைகள், இந்தி ,ஆங்கிலப்பட படங்கள்
மீண்டும் மீண்டும் டெலிவிஷன் சானல்களில் ஓய்வு நேரங்களில் பார்ப்பார்.  கிஷோர்குமார், தேவ் ஆனந்த், ராஜேஷ்கன்னா, நூதன்,சாதனா. . தமிழ் என்றால் சிவாஜி, ஜெய்சங்கர் படங்கள். ஆங்கிலத்தில்   அர்னோல்ட் ஷ்வாஸ்நேகர்,கிரிகரி பெக்,Antony Quinn.இப்படிப் போகும் அவரது சுவை. Where Eagles dare, JamesBond movies, Die hard, Terminator,Guns of Navaronne. எத்தனை தடவை வந்தாலும் பார்ப்பார்.

இப்பொழுது அந்த டிவிக்கும்.  வாழ்க்கை இல்லை.  அதைக் கவனிக்க எங்களுக்கும் நேரம் இல்லை.




Image result for sean connery

Image result for die hard

Saturday, October 19, 2019

சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 8

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.

சப்தஸ்வரங்கள்   ராகமாலிகா  8


ஹரன்  மைசூர் வந்தடைந்த போது , அவன் அப்பாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி   முடிந்திருந்தது.

விமானத்தை விட்டிறங்கிய  அவனைச் சந்திக்க மாமா வந்திருந்தார்.
கண்கள்  கலங்க தன்னை அனைத்துக் கொண்டவனைத் தேற்றினார்.

உடனே கவனித்ததால்   நம் நல்ல வேளையும்   சாமுண்டீஸ்வரியின்  கருணையும் 

அப்பாவின் ஆரோக்கிய வாழ்க்கையும் காப்பாற்றியது.

நாளை காலை நாம் அவரைப் பார்க்கச் செல்லலாம் என்று சொன்னவரை மறுத்தான் ஹரன் 
அம்மாவைப் பார்க்கணும் மாமா  என்று சொல்வதற்குள் தொண்டை அடைத்துக் கொண்டது.

அம்மா வீட்டில் தான் இருக்கிறாள்.
அவளுக்கு  ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது.
அதனால்  நான் தான் ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

முன் மாதிரி  ஒரு வாரம் எல்லாம் அங்கே இருக்க வேண்டாம்.
இந்த வேகத்தைப் பார்த்தால் நீயே  அசந்து விடுவாய்.
வீட்டுக்குப் போகலாம் வா என்று அழைத்துச் சென்றார்.

அம்மா பத்து நாட்களில் இவ்வளவு வாடிப் போனதைக் கண்டவனுக்கு ஒரே அதிர்ச்சி.

நாற்காலியிலியே  உறங்கி விட்டிருந்தாள் .
அவனைப் பார்த்து   அனைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னாள் .
ஆசை ஆசையாக கிளம்பினீயேப்பா.

மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
போகலாம்  என்ற அம்மாவின்   அன்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தான்.

அவர்கள் எல்லோரும் இங்கே வருகிறார்கள் . இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.
நாம் அவர்களை இங்கே அழை க்கலாம்  அம்மா. நீ 
சாப்பிட்டியா. என்றபடி உதவிக்கு வந்திருந்த மாமிக்கு வணக்கம் சொன்னான்.
 " நீ கவலைப்படாதேப்பா. அம்மா தைரியசாலி. நீயும் அப்படியே இருக்கணும். போய்க் குளித்து விட்டு,
சாப்பிட வா" என்றாள் .
 மாமா  மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பினார்.



அமெரிக்காவுக்கு செய்திகள் அனுப்பியதும் உறங்கப் போனான் ஹரன் .
உடனே பதில்  வந்தது  நிகிதாவிடமிருந்துதான்.

பிறகு வந்த செய்திகளை பார்க்க அவனுக்கு  
களைப்பாக இருந்தது.

சிகாகோவில் மற்றவர்களுக்கு  நிம்மதியாக 
இருந்தது.  

முதலில்  மூன்று  மாத நிகழ்ச்சிகளாக   நினைத்து ஆரம்பித்த 
எண்ணம், இந்தியாவுக்கு நவம்பரில் சென்றுவிடும் தீர்மானமானது.

மஹி  , சற்று முன்பே சென்று   இசை நிகழ்ச்சிகளை 
 நடத்தும்  சபாக்களிடம் பேசி  முடிக்க நினைத்தால். மற்றவர்களும் அவரவர் உறவினர்கள் வழியாக 

பேசி முடிக்க  முடிவு செய்தனர்.

நவம்பர் 20ஆம் தேதி  அனைவரும் சென்னை செல்ல பயணசீட்டுகள் வாங்கப் பட்டன.

அடுத்த நாள் , நியூஜெர்சி சென்ற  கலைஞர்கள்,

சென்னையிலிருந்து 30 வருடங்களுக்கு முன்பே 
இங்கே செட்டிலாகிவிட்ட பல குடும்பங்களுடன் தங்கினர் .

Image result for New Jersey  carnatic  hindu festivals festival



நியூ ஜெர்சியில் வாழும் இந்தியர்கள் மிக அதிகம். 
அதிலும் தமிழர்கள்  எண்ணிக்கை   கணக்கில் கொள்ள முடியாது.
சென்னையில் இருக்கும் உணர்வைத் தரும் கடைகள். பூக்கள் அலங்காரம், உணவு  வகைகள் பரிமாறும்  விடுதிகள்.

இவர்களது நிகழ்ச்சிகள் இரண்டு கோவிலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

Image result for new jersey hindu temple

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்    பிரிட்ஜ்வாட்டர். நியூ ஜெர்சி.

மனதை ஒரு நிலைப் படுத்த   தியானம் செய்தபிறகே 
அனைவரும் கிளம்பினார்கள்.

ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில்  நடனக் கச்சேரி .
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் இசையும்  ஏற்பாடு ஆகி இருந்தது.


நிகிதா தன்  நிகழ்ச்சி முடிந்ததும்  ஹரன்னுக்கு  
 தொலைபேசி வெகு நேரம் உரையாடினாள் .
மஹி அவளிடமிருந்து   செய்திகளை க்  கேட்டுக் கொண்டாள் 

மன  நிம்மதிக்காக   ஸ்வாமி நாராயணா  கோவிலுக்கும் சென்று வந்தார்கள். 







Friday, October 18, 2019

சப்தஸ்வரங்கள் 7

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.
சப்தஸ்வரங்கள் 7

சாரிகா, 
ரகு நந்தன்,
மஹி, மானசி 
பரணி 
நிகிதா, ஹரன் 
தன்யா 
 கமகம்  வரவில்லை இன்னும்.

ஹரனுக்கு, டாக்டர் உடனே சுபா டிராவல்ஸ் வழியாக அன்றே கிளம்பும்படி டிக்கட் வாங்கி கொடுத்தார் 
காதே பசிபிக் ,ஹாங்காங் வழியாகச் சென்னையை அடைய அடுத்த நாள் ஆகிவிடும். எல்லோரும் சேர்ந்து 
அவனைச் சூழ்ந்து கொண்டு சமாதானப் படுத்தி ,இந்தியாவுக்கும் பேசவைத்தார்கள்.

டாக்டர் சொல்படி ஹரன்  அப்பாவுக்கு வந்திருப்பது மைல்டு இருதய அடைப்பு.

அப்போலோவில்  உடனே சரிசெய்து விடுவார்கள். 
மைசூர்  அப்போலோ மிகவும் பிரசித்தி பெற்றது.

KEEP A CALM FRONT HARAN. YOUR FATHERIS ONLY  49.
HE CAN WITHSTAND  ANYTHING,

HE HAS T GO TO THE DOCTOR IMMEDIATELY.


mysore
அப்போலோ மைசூர்.
நானும் அங்கே பேசுகிறேன் கவலை இல்லாமல் போ என்று வழி அனுப்பி வைத்தார்,.

மதியம் அவனை உண்ண  வைத்து ,விமானத்தில் ஏற்றிவிட்டு வந்தார்.
மற்றவர்களின் மன நிலை 

இசையில் ஈடுபடவில்லை.
டாக்டரின் அம்மா கனகவல்லி 
 மிகச் சிறந்த பாடகி.

அவர் அனைவரையும் அமர வைத்து 
ஆசுவாசப் படுத்தினார்.

லேசான தம்புரா இசை  தவழ  ஆரம்பித்தது.





அதனுடன் இழைத்த   REYKI HEALING இசை,
, டிகே பட்டம்மாளின் ஷாந்தி நிலவ வேண்டும் பாடல் எல்லாமே 

அவர்களைக் கொஞ்சம் நிதானப் படுத்தியது.
கனகவல்லி அம்மாவே இசை தெரபிஸ்ட் தான்.

இசையால் சாதிக்க முடியாததே இல்லை என்பதை 
திடமாக நம்புபவர்.

அடுத்த நாள் கச்சேரிகளுக்கு அவர்களைத் தயார் செய்தார் .
சாரிகாவும்  அவர்களுடன்  இணைய  அமைதியாக
உறங்கப் போனார்கள். 

மஹி மனதில் ஹரனுக்கான  கவலையும் கனிவும் 
பெருகியது.
அவனுக்கு  அமேரிக்கா வந்து விட வேண்டும் என்கிற நினைப்பு வெகு நாட்களாக 
ஆசை. மஹிக்கு அந்த ஆவல் இல்லை.

டிசம்பருக்கு டிசம்பர்  சென்னை வந்து போகும் பக்ஷிகள்  கூட்டமாக இருக்க அவளால் முடியாது.

ஒரு நல்ல துணைவன்  கிடைத்தால் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பிறகு  திருமணம் செய்யலாம்.  இசைக்கு முதல் இடம் தருபவனே வேண்டும்.
ஹரன்  தந்தையின் நல்வாழ்வுக்குப் பிரார்த்தித்தபடி  தூங்கிப் போனாள் .
நிகிதாவின் மனம்  ஹரனுடன் சென்று விட்டது.  நல்வீணையும் நாதமும் போல  அவள் மனம்   அவன்பால் சென்றது. 
கிடைத்த இடைவெளிகளில் அவனுடன் , அரிசோனா வந்து 
இசையில் எம் பில், பி  ஹெ  ச்.டி  செய்யலாம் என்ற 
 எண்ணத்தையும் விதைத்தவள்  அவளே.. இப்போது இந்த செய்தி அவளைக் கலங்க வைத்துவிட்டது.

மாநசியும்  ,ரகுநந்தனும்    ஏற்கனவே பழகி இருந்ததால் 
இருவரின்   இலக்கமும் ஒரே மாதிரியாக குழப்பம் இல்லாமல் தொடர்ந்தது.

இருவருக்கும் இசையில் முன்னேற்றம், வாழ்விலும் முன்னேற்றம்.
வீட்டுக் கொடுத்து தாராள மனப்பான்மையோடு இருக்கத்  தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 பரணியும் தன்யாவும் மற்றவர்களை ரசித்தபடி இருந்தார்கள்.

எப்படிச் செல்கிறது என்பதைத் தொடர்ந்து கவனிக்கலாம் 

  








Thursday, October 17, 2019

ஸ்வரங்கள் இழைபின்னும் 6

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

ஸ்வரங்கள் இழைபின்னும்  6





Image result for schaumburg high school auditorium

சிகாகோ கிளம்பியதும் வெங்கட் மாமா,  அங்கு நிலவும் அதீதக் குளிர் பற்றி சொல்லி இருந்தார்.
எல்லோருக்கும்    ஸ்வெட்டர், ஜாக்கெட் வாங்க வேண்டி இருந்தது.

Image result for chicago cold

இந்த அளவு பனி இந்த மாதக் கடைசியில்.
சிகாகோ ஏர்போர்ட்டில் இறங்கியதும்   தொழில் மாட்டிய  பையுடன் இசைக்குழு வாயிலுக்கு விரைந்தது.

அங்கே தாயாராகக் காத்திருந்த லிமோசினில் கலைஞர்களும் 
அவர்களுடய   இசைக்கருவிகளும்  பத்திரமா உள்ளே புகுந்தனர்.
டெர்மினல் விட்டு வெளியே வரும்போது முகத்தில் சில்லென்று அறைந்தது காற்று.




பெண்கள் தங்கி இருந்த   வீட்டிலிருந்து  அரைமணி நேரத்தில் போகும் தொலைவில் இருந்தது.

இளைஞர்கள் அவர்கள் இடத்திலிருந்த   டால்க்ராஸ்  பகுதி யிலிருந்து அதே தொலைவு தான்.

அலைபேசியில் பேசிக்கொண்டு  அங்கு செல்லும் நேரத்தைக் குறித்துக் கொண்டனர்.
எப்பொழுதும் வார இறுதியில் நடக்கும்  இசைக் கச்சேரிகள் கொலம்பஸ் நாள் என்பதால் திங்கள் 

நடந்தது.

மஹி,தன்யா,நிகிதா,மானசி  அனைவரும்  ஊபர்  வண்டியில் 
துணைக்கு திருமதி சுதாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

ஹரன், பரணி,ரகு நந்தன்  டாக்டர் டகுபாட்டியின்   வழிகாட்டலில் தாங்களே அரங்கத்தைச் சென்று அடைந்தனர்.
 இவர்களது  நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக 
அமைந்திருந்தது.
மஹியின் இசைக்கச்சேரி 20 நிமிடங்கள். ஒதுக்கப்பட்ட நேரத்தில்  மஹாகவியின் 
பாடலும், பாபநாசம் சிவன்  அவர்களின் பாடலும்,  ஊத்துக்காடு  கண்ணன் பாடல்களில் ஒன்றான "நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் "

பாடலையும்   ஒரு தியாகைய்யரின்  கிருதியுமான 

சீதம்மா மாயம்மா  வையும் அருமையாகப்   பாடி  முடித்துகே கரவொலி பெற்றால்.
ஐந்து நிமிட இடைவெளியில், ஹரனின்  சுகமான இந்துஸ்தானி இசை.

பக்க வாத்தியங்களை சபையினர் ஏற்பாடு செய்திருந்ததால் மனத்தைக் கவர்ந்தவள் சாரிகா.

அவளே  நிகிதாவுக்கும் ,வாசிப்பதாக  ஏற்பாடாகி இருந்தது.
இருவரும் சாரிக்காவைச் சூழ்ந்து கொண்டு ,தங்கள் 
கச்சேரியை வளப்படுத்தியதற்கு 
மகிழ்ச்சியையும்  ,நன்றியையும் சொன்னார்கள். நிகழ்ச்சிகள் முடிந்ததது,
அவர்கள் அனைவரையும்  தங்கள் வீட்டிற்கு  இரவு 
விருந்துண்ண அழைப்பு விடுத்தாள் சாரிகா.



மானசியும் , தன்யாவும்  அடுத்தடுத்து  ஆடினர் .
பிறகு தொடர்ந்தது குழலிசை.

 மதியம் 4 மணி  அளவில் நிகழ்ச்சிகள் பூர்த்தியானதும் 
அனைவரும் சாரிக்காவின் வீடு இருந்த  White Eagle   பகுதிக்கு வந்தனர்.

அனைத்து வீடுகளும் பிரம்மாண் டமாய் இருப்பதாகத் தோன்றியது.

பாதிக்கு மேல் இந்தியர்கள் தான் இங்கே என்றபடி அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்  சாரிகா.
அவளே வண்டி ஒட்டி வந்ததால்  இன்னொரு வண்டியில் மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்.

களைப்புத்தீர   மாலையில் அபாமினாபிள்  படம் பார்ப்பதாக 
முடிவெடுத்தனர். 
குளிருக்கு ஏற்ற  உடைகளை உடுத்திக் கொண்டு,உற்சாகமாகக் கிளம்பும் 
இசைக் கலைஞர்களை பார்த்து மகிழ்ந்தனர் பெற்றோர்.
அடுத்த நாள் சிகாகோவைச் சுற்றி  பார்ப்பதாக ஏற்பாடு. அதற்கு அடுத்த நாள் அரோரா ஸ்ரீ பாலாஜி கோவிலில்    மஹிக்கும் , நிகிதாவுக்கு பாட்டுக்கு கச்சேரியும்  நிகிதாவுக்கு வீணை இசைப்பும் இருந்தன.
மற்றவர்களுக்கு  லெ மான்ட்  ஸ்ரீராமர் கோவிலில்  புல்லாங்குழல்,
நாட்டியக்  கச்சேரிகளும்  இருந்தன.
அங்கேயே  ஹரன்  இசையும்  ஏற்பாடு ஆகி இருந்தது.

எல்லோரும் திரும்ப  மாலை நேரம்  ஆகிவிட்டது.

ஹரனுக்கு   இந்தியாவிலிருந்து அழைப்பு காத்திருந்தது.
அவன் தந்தைக்கு எதிர்பாராத விதமாக உடல் நிலை 
பாதிக்கப் பட்டதால் உடனே திரும்பும்படி வந்த மாமா மைசூரிலிருந்து 
செய்தி அனுப்பி இருந்தார்.

எதுவுமே நல்லதுக்குத்தான்.



























Wednesday, October 16, 2019

Greta Thunberg

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.


Sunday, October 13, 2019

சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5

வல்லிசிம்ஹன்.

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும் 

சப்தஸ்வரங்களின்  ஆரோஹண அவரோகணங்கள்...5






அடுத்த நாள்  நிகிதாவின்  வீணைக்கு  பரணி யின் புல்லாங்குழலும் ஒத்துழைத்தது  அவனாக மேடையில் தானும் வாசிக்கப் போகிறேன்  என்றதும்  நிகிதாவுக்கும் , மற்றவர்களுக்கும்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இரண்டு பேருக்கும் எப்படிப் பொருந்துகிறது என்பதை பார்க்கவே நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும்

பரமானந்தமாக இருந்தது.

எப்படி இருவருக்கும் இது சாத்தியமாகிறது. ?அவள் வாசிக்க அதே ஸ்வரத்தை அவன் புல்லாங்குழலில் தொடர ,மீண்டும் அதற்கு அவள் அலங்காரம் செய்ய, அவன் வேறு ஸ்வரத்துக்குப் போக என்று இருவரின் சாமர்த்தியமும், இசையின் இழைதலும்   நம்பமுடியாத அளவுக்கு இனிமை சேர்த்தது. அனைவரையும் கவனத்தையும் கவர்ந்த இருவருக்கும் பார்த்தவர்கள் ,அளித்த கர  ஒலி   அந்த ஹாலையே கலகலப்பாக்கியது.



அடுத்த நாள்  சிகாகோவில் ஷாம்பெர்க்   கலைக்கூடத்தில் 
எல்லோருடைய நிகழ்ச்சிகளும் வேறு வேறு  நேரங்களில்  அமைந்திருந்தது.
சிகாகோ தம்பதியர்   முரளி ஸ்ரீனிவாசனும், மனைவி சுகந்தாவும் 

மஹி, நிகிதா,தன்யா ,மானசி அனைவருக்கும் 
அவர்களது வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 

பரணி , ராகு, ஹரன், வெங்கட் அவர்களின் சிநேகிதர் டாக்டர் டக் குபாட்டி   அவர்கள் வீட்டில் தங்க ஏற்பாடு.

அவர்கள் பெண் குழந்தைகள் உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் நடனம் கற்றுத்  தருவது சௌமியா குமரன்.

சென்னை மயிலையைச் சேர்ந்த சகோதரிகளில் ஒருவர்.

நாளை கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டு   ,எல்லோரும் ஓய்வெடுக்கும் வேளையில் வெங்கட் 
அவர்கள் ,, பழைய நாட்டியத்  தாரகைகள்  ஆடிய தொகுப்பு ஒன்றை 
டெலிவிஷனில்   போட்டுக்  காண்பித்தார்.
வைஜயந்திமாலா, பத்மினி ராகினி,குமாரி கமலா என்று ம் ,பத்மா சுப்பிரமணியம்,சுதாராணி ரகுபதி, சித்ரா விஸ்வேஸ்வரன் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடிய  சில நடனங்களும் அலர்மேல்வள்ளி, 
மற்றும் இளையதலைமுறையைச் சேர்ந்த 
சில இளம் கலைஞர்களின்  

நடனங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.



மானசியும் தன்யாவும் தாங்கள் இன்னும் கற்க வேண்டிய கடலளவு நாட்டிய சாஸ்திரத்தை நினைத்து 
உணர்ந்து   உறங்கப் போனார்கள். 

அடுத்த நாள் அவரவருடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு 
சிகாகோ நோக்கிப் பயணப்பட்டவர்கள்  மஹி, மானசி ,தான்யா, நிகிதா,
ரகுநந்தன், ஹரன் ,பரணி.
கலையைத் தவிர வேறு ஒன்றும் அவர்கள் மனதில் இல்லை.

தொடரும்.















Friday, October 11, 2019

சங்கீதம் இணைக்கும் சப்த ஸ்வரங்கள் 4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

சங்கீதம் இணைக்கும்   சப்த ஸ்வரங்கள் 









ஏதுக்கித்தனை மோடி தான் உமக்கு எந்தன் மீதய்யா."

இந்தப் பாடலுக்கு அபிநயித்தது  தன்யாவும்  ,மாநசியும் .

பழைய சாகித்தியங்களை எடுத்துக் கையாள்வதில் இருவருக்கும் மிக ரசனை.
அவர்களின் குரு இந்தியாவிலிருந்து ஸ்கைப்பில்  சொல்லிக்கொடுப்பதையும்,
உள்ளுரிலேயே கற்றுக்கொள்ளும்   வசதியும் இருவருக்கும் இருந்தது.

ஆர்வமும் , இளவயதிலிருந்தே  கற்று வந்த கலை யும் அவர்கள் 
நடனத்தை   சிறக்கச் செய்தன.

சபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த 
மஹி,ரகுநந்தன்,ஹரன் ,பரணி,நிகிதா  அனைவரும் அசந்துதான் போனார்கள்.

அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி  ஒரு கவலை வந்தது.
தங்கள் தங்கள்  கலையை எப்படிக் காப்பாற்றி முன்னேறுவது.

அதற்கு எந்த வித ஆதரவு பெற்றோரிடமிருந்து கிடைக்கும்.?

எல்லோருக்கும் இப்போதே அவர்களது  திருமணம் 
பற்றிய  ஒரு வித தீர்மானம் வந்து விட்டது.

அதிலிருந்து தங்கள்  முன்னேற்றம் பாதிக்கப் படுமா.

மனம் செய்து கொண்டபிறகு தன்னையும் தன்  கலையையும் 

ரசிக்கும் ,ஆதரிக்கும் துணைவனோ, துணைவியோ கிடைப்பாளா.

அவர்களது  தீவிர சிந்தனைக்கு ஒரு சுருதி சேர்ப்பது போல 
நிகிதாவின் வீணைக் கச்சேரி   தொடங்கியது.




நிகிதாவுக்கு மிகவும் பிடித்த குரு  திரு ராஜேஷ் வைத்யா.

அவரது  திரை இசை ஆல்பம்  அனைத்தும் அவளிடம் இருந்தன.
அவளது அமெரிக்க  ஆசிரியை,  திருமதி ராஜேஸ்வரி பத்மநாபன் 
திருமதி கீதா பென்னட்டின் மாணவி.

அவளுக்கு கர்நாடகம், மெல்லிசை எல்லாவற்றிலும் பாண்டித்யம் பெற ஆவல்.
இந்தியா செல்லும்போது  திரு ராஜேஷ் வைத்யாவைச் சந்திக்காமல் வரமாட்டாள்.



அவர் அவளுக்குச் சொல்லும் அறிவுரை, சங்கீதத்தை இரண்டு வகையிலும் அனுபவிக்க வேண்டும். உனக்கும், கேட்பவர்களுக்கும் 

ஆனந்தம் தர வேண்டும். அதே சமயம் பாரம்பரியத்தையும் கைவிடக் கூடாது.
இரண்டுக்கும்  முக்கியத்துவம் நீ தர வேண்டும் என்பதே.

கலை விழாவின் இரண்டாம் நாள் 
அனைவரும்   ஒன்று  சேர்ந்து   உரையாட அமர்ந்தார்கள்.

அவர்களது சிந்தனை எதிர்காலம்., அதை  எப்படிக் கொண்டு செல்வது.

இசையைத்தவிர, நடனத்தைத்தவிர வேறு  உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தர 
முடியுமா. அதில் ஆர்வம் வந்தால் ஏதாவது  ஒன்றை தியாகம் செய்ய வேண்டுமா.

இரண்டுக்கும் முழு மனதோடு ஈடுபாடு காட்ட முடியுமா 
என்பதில் அவர்களது உரையாடல் இருந்தது.

மஹியும் ஹரனும் முதன் முதலாக  ஒரு தயக்கத்தை உணர்ந்தனர்.

நண்பர்களாக அன்புடன் பழகுவது வேறு, திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வீட்டுக் கொடுத்து வாழ எத்தனை 
தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்  கணவறையே இழந்த முன்னணிப் பாடகியும் நினைவும் வந்து அவர்களைத் திகிலில் ஆழ்த்தியது.

தொழிலை  

  ஒரு ஆத்ம அர்ப்பணமாகச் செய்யும்  பாக்கியம் இதுவரை கிடைத்திருக்கிறது.

அது தொடர வேண்டுமானால்  ,நாம் எந்த மாதிரி முடிவெடுக்க வேண்டும்.
இன்னும் இரண்டு முயன்று வருடங்களுக்குள் 
பெற்றோர் ,தங்கள் திருமணத்துக்கு முயற்சி ஆரம்பிப்பார்கள்.

திடீரென்று வந்த செய்தி  கதிரி ஸ்ரீ கோபால்நாத் இறைவனடி  சேர்ந்தார் என்பது அவர்களை 
திசை திருப்பியது.
அவர்களது தோழி சிகாகோவில்  அவரிடம்  சாக்ஸபோன் கற்று வருவதும் தெரியும்.

என்ன இது ஏன்  இது போல ஆச்சு  என்று வருந்தியபடி அவருக்கு மனமார அஞ்சலிகள் செலுத்தினர்.


ஒரு உன்னத கலைஞருக்கு நம் அஞ்சலிகளை ச் செலுத்தலாம்.

ஐயா நீங்கள் வழங்கிய இசை எங்கள் மனதை 
 அமைதி அடையச் செய்து குதூகலிக்க வைத்தது.
உங்கள் இசை  என்றும் நிலைத்திருக்கும் .நன்றியுடன்.














Thursday, October 10, 2019

சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.

சப்தஸ்வரங்கள்  ஒலி  மாறுமா. 3
++++++++++++++++++++++++++++++
மஹி  அடுத்த நாள் எழுந்திருக்கும் போது   அருமையான குழலோசை 
காதில்   விழ ,மன மகிழ்வோடு  எழுந்தாள்.
அன்று அமெரிக்க  மக்கள் முன்னால்  பாடப் போவதை நினைத்து 

ஆனந்த அதிர்வுகள்  எழுந்தன .

அருகிலிருந்த அம்மாவிடம்  இந்த  எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்த    போது, அம்மாவைக் காணவில்லை.

கடமைகளை  முடித்துக் கொண்டு   இசை வந்த வழி சென்றாள் .

அங்கு ஏற்கனவே குழுமியிருந்த  நண்பர்களுடன் புதிதாக மூன்று 

நபர்களைக் கண்டு  ஆச்சர்யமாக இருந்தது.

அருமையான  கிருஷ்ணா  நீ பேகனே பாரோ வை இதமாக வாசித்து முடித்தான்.
"வா மஹி. புது நண்பர்களை சந்திக்கிறியா என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

ம்ம் .கண்டிப்பா. சொல்லு என்று அந்த இரு பெண்களையும், இளைஞனையும் 

ஆவலுடன் பார்த்தாள்.

அரிசோனா இசை சங்கத்திலிருந்து  வந்திருக்கும் 
தன்யா , நிகிதா , ரகுநந்தன்.

என்று அறிமுகப் படுத்தவும்.  அவர்களை பார்த்து வணக்கம் சொல்லி   அவர்கள் அருகில்  அமர்ந்தாள்.

அழகாக தாவணி, பாவாடை என்று உடுத்தி இருந்த பெண்கள்.

வேஷ்டி ,குர்த்தா என்று  கம்பீரமாக  அமர்ந்திருந்த  ரகுநந்தன் 
எல்லாருமே  அவளை  அசத்தி விட்டார்கள்.

மேல்நாடுகளில் இந்திய  கலாசாரம் நன்றாக வாழ்கிறது என்று படித்த 
நினைவு வந்தது.



தன்யா  அரிசோனா யுனியில் கணினி துறையில் மூன்றாவது  ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

ரகுநந்தன் மருத்துவத் துறையில் மருந்துகள்  Pharmacy
பிரிவில் நான்காம்  ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.

நிகிதா  கணிதத்  துறையும், அக்கவுண்டன்சி, பைனான்ஸ்,
 நிர்வாகம்  என்று  நான்காவது  ஆண்டில் அடிவைத்திருந்தாள் .

எப்படி இவ்வளவு  படிப்புக்கு நடுவில் இசைக்கும் 
நேரம்  ஒதுக்க முடிகிறது  என்று வியப்பு வந்தது.

இந்த   இசை விழாவுக்காக   விடுப்பு எடுத்து வந்திருந்தார்கள்.

இங்கே முடிந்ததும் இன்னும் சிகாகோ, நியூஜெர்சி  ,கடைசியில் ஹூஸ்டன் 

என்று   நிகழ்ச்சிகள்  இருந்தன.
இளமையின் இனிமை  அங்கே  பூர்வமாக   அமர்ந்தது போல 

மஹிகாவுக்குத் தோன்றியது . அவரவர்  தங்கள்  இசையில் 
நிறைவு கொண்டவர்களாகவும், இன்னும் கற்க ஆசை கொண்டவர்களாகவும் அவளால் உணர முடிந்தது.

San Jose Center For The Performing Arts

சான் ஹோஸே இசை வளாகம்.

 எல்லோரும் கலந்து   உரையாடிக் களித்து இசை சென்டருக்கு கிளம்பினார்கள்.

கொலம்பஸ் தினம் என்று  மூன்று  தினங்கள் விடுமுறையாக இருந்ததால் 

கூட்டத்துக்கு குறைவே இல்லை. 
இந்தியர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்திருந்தார்கள்.

அங்கேயே உணவுக் கூடமும்   இருந்ததால் 
பெரிய விழாவாக நடந்து கொண்டிருந்தது.

முதலில்  ரகுநந்தனும்   பரணியும் சேர்ந்து வழங்கிய புல்லாங்குழல் இசை 
எல்லோரையும்    இருக்கையைவிட்டு  நகர முடியாமல் 

கட்டிப் போட்டது.






அடுத்தடுத்து வந்த  நிகழ்வுகளாக 

ஹரனின் இந்துஸ்தானி சங்கீதக் கச்சேரியும்,

மஹிகாவின்  அரை மணி நேர கர்நாடக இசையும் பலத்த வரவேற்பைப் பெற்றன.

தொடரலாம்.















Tuesday, October 08, 2019

சங்கீத ஸ்வரங்கள் 2

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும் 

சங்கீத ஸ்வரங்கள்  2


இரண்டு நாட்கள் பயிற்சியிலும்  சிறு தூக்கத்திலும் சென்றது.
ஹரன்,மஹி இருவருக்கும்  அமெரிக்க சூழல் 

பொருந்த அந்த நாட்கள் தேவைப்பட்டன. சிபா இயக்கம் அனைத்து இசைக்கலைஞர்களை யம் அரவணைத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்திருந்தது.

     உள்ளுர்க்  கலைஞர்கள் ஒரு நேரம், இந்தியக் கலைஞர்கள் , பெரிதாக  வளர்ந்துவிட்ட  பிரபலங்கள் என்று வித விதமாக 
கச்சேரிகள் தொடர்ந்து கொண்டிருந்தன .
LA TO SFO     வந்தடைந்த குழுவில்  மஹியுடன்,
பரணிகுமார், அவன் தங்கை  மானசி  இருந்தனர்.

மானசி , அமெரிக்க வளமையுடன், மிக அமைதியான குணத்துடன் எல்லோரையும் ஈர்க்கும் பாங்கு கொண்ட  மங்கையாக இருந்தது அவளது நடனத்தை  மிகவும்  அலங்கரித்தது .
அவளது பெற்றோரும்  இசை,நடனக் கலைஞர்களாக 
இருந்தது ஒரு கூடுதல்  ஆதரவு.

நன்றாக அறியப்பட்ட நடனமணியாக  விளங்கினாள்.
சான்ப்ராசிஸ்க்கோ  கலை  அரங்கம் 

மிகுந்த கலை நயத்துடன்  அலங்கரிக்கப்பட்டு    விசாலமான மேடையில் 

நடனமாடுபவர்களுக்கு  இசைவாக அமைந்திருந்தது.


இசைக்கலைஞர்களுக்கும்   எதுவாக   Acoustics arrangement  அமர்க்களமாக 

அமைந்திருந்தது.





அனைவரும்   அந்த  நகரத்தின் முக்கிய பிரமுகர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது . 
மிகப் பிரபலமான தெலுங்கு  தொழிலதிபர்.

எனக்கென்னவோ இந்த இடத்தில் மதன் பூ ர்  மஹாராஜா அரண்மனை நினைவுக்கு வந்தது.:)
மஹி,ஹரன் புதிய இடத்தில் மிக ஆனந்தமாக வளைய வந்தனர்.

இங்கேயே இருக்கலாம்  போல இருக்கு என்று 
சொன்னவனை மறுத்துப் பேசினாள்  மஹி. எல்லாமே ஒரு மேல்பூச்சு    போலத்  தோன்றுகிறது எனக்கு. 

என்றவளை மறுத்துப் பேசினான்  ஹரன் . உள்ளன்போடு தானே இருக்கிறார்கள்.

நாம் எடுத்துக் கொள்ளும் வகையில்  அது இருக்கும் என்றான்.
ம்ம்ம்.யூ  மீ பி ரைட்  என்று பேசியபடி அந்த வீட்டின் மெயின் ஹாலுக்கு வந்தார்கள்.
அங்கே சுருதி சேர்த்தாலும், தபலா மிருதங்க ஒலி யும், வயலின் 
தம்புரா  ,சலங்கை என்று பலவித   ஓசைகள்  கலந்து ஒலித்தன.


வீட்டின் உரிமையாளர் ,அவர்களின்  கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் வெங்கட் 

மனைவியுடன் அங்கே இருந்தார்.
வாங்க வாங்க எல்லோரும் அவரவரது  திறமையை இங்கே அரங்கேற்றுங்கள் என்றதும்.
சிரிப்பலை படர்ந்தது.

முதன் முதலாக  பரணி புல்லாங்குழல் வாசிக்க, அப்பா மிருதங்கம் வாசிக்க, அம்மா பதம் பாட  மாநஸியின்  நடனம் ஆரம்பித்தது.



இனிமையான  திருமதி.எம்.எல்.வசந்தகுமாரியின் பாடலுக்கு எளிமையாக முத்திரைகளை நளினமாக அபிநயித்த மானசிக்கு 
கரகோஷம் எழுந்தது.

பரணியின் குழல் அனைவரையும் கட்டிப் போட்டது.

அடுத்து வந்த மஹி, தனக்கு மிகவும் பிடித்த ,  எம்.எஸ் அம்மாவின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்" பாட, சுற்றி இருந்தவர்கள் சொக்கிப் போனார்கள்.

ஹரனின்   இறைவன் புகழ் பாடும்  பஜன்  அனைவரையும் 
மீண்டும் கேட்கத்  தோன்ற,,, மீண்டும் பாடினான். அவன் குரல் மகிமை அப்படி.




மானசி    ஹரன்   குரலில் மயங்கியே போனாள் .
ஹரன்   மனமும்  அவள் நடனத்தில் வெகுவாக லயித்ததை மஹி கவனித்துப் புன்னகை செய்தாள் .

அடுத்த நாள் வெவ்வேறு நேரங்களில் நடை 
பெறப்போகும்   தங்கள்   இசை,நடனப் பயிர்ச்சுக்குத் தயாராக எல்லோரும்  அவரவர்  அறைக்குச் சென்றார்கள்.

நாமும் காத்திருக்கலாம்.













  








Sunday, October 06, 2019

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா .......

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன்  வாழ வேண்டும்.


சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா 




பாட்டுடன் ஆரம்பித்தது  அவர்கள் உறவு.
அதுவும்  சென்னையிலிருந்து  ஒருத்தியும், 

மைசூரிலிருந்து  ஒருவனுமாக  ரசனையுடன் 
பரிமளிக்க நட்பு.

ஹரனுக்கு இந்துஸ்தானியில் பிடித்தம்.

மஹிகாவுக்கு  கர்நாடகம்.  இருவருமே அவரவர் இசை உலகத்தில் 
முன்னேறிக் கொண்டிருப்பவர்கள்.

ஒரு குளிர்ந்த மார்கழியில்   இசை விழாவின் போது 
ராக தேவதைகளின்   சஞ்சாரத்தில்  
சென்னையே   மிதந்திருக்கும் பொது 

மீண்டும் மீண்டும்  பல சபைகளில் சந்திக்கும் 
வாய்ப்பு  கிடைக்க, சங்கீத   சங்கதிகளை பரிமாறிக் கொண்ட போது 

மனங்களும் நெருங்கின.
ஜுகல்  பந்தி  போல மஹி வீட்டுக்கு அவன் வந்த போது 

இருவரும்  பாடல்களில் உள்ள ஒற்றுமை வேற்றுமை எல்லாம் பாடி அவர்களும் மகிழ்ந்து, குடும்பத்தினரையும் மகிழ்வித்தனர்.

மைசூருக்குத் திரும்பும்போது    ,மஹியின் மனதையும் எடுத்துக் கொண்டே சென்றான் 
ஹரன் .
இருவருமே முதுகலை ப் பட்டம் அந்த  வருடம்  முடித்திருந்தனர்.

இசை ஆர்வம் அவர்களது இதயத் துடிப்பாக இருந்தது.

இசைத்துறையில் இன்னும் பலவித   வகைகளில் 
முன்னேற  ஆவல் இருந்தது.

இருவரின் பெற்றோர்களுக்கும்  இவர்களது அன்பு 
தெரிந்திருந்தது. அவர்கள் மறுப்பு   சொல்லவில்லை.

தொழில் முறையில்  வாழ்க்கை இணையுமா. இரு வேறு துருவங்கள் போல வேறு வேறு 
இடங்களுக்குச் செல்லுபவர்கள்.

இப்போதிருக்கும்  அன்பும்  காதலும் திருமணம் வரை செல்லுமா .

திருமணத்திற்குப் பிறகு  நிலைக்குமா என்றெல்லாம் கவலை .

சம்பந்தப்பட்ட ஜோடி எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவில்லை.
இசைக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் 

இப்படி ஒரு ஒற்றுமையான நட்பு கிடைத்ததையே கொண்டாடினார்கள்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் திருமணத்துக்கு இடம் இல்லை.

பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் இருவருக்குமே இருந்தது.

இந்த நிலைமையில் தான் இருவருக்குமே அமெரிக்க  சான்ப்ரான்ஸிஸ்கொ  இந்தியன்  இசைவிழாவுக்கு 
 அழைப்பு வந்தது.Image result for san francisco indian music festivals 2018


 ஹரனுக்கு  கர்நாடக இசையிலும் பரிச்சயம் இருந்ததால் 

தயாராகவே இருந்தான். அங்கு வசிக்கும் பல இந்தியர்களுடன் அவனுக்குத்  தொடர்பும்  நட்பும்  இருந்தது. 
மஹிக்கு இது முதல் வெளிநாட்டுப் பயணம் 

அவள் அம்மாவும் ஆவலுடன் கிளம்பினார்.

அவர்களின் உறவினர் ராமச்சந்திரன் குடும்பமும் ஒரு இசைக் குடும்பம் .

திரு ராமச்சந்திரன் மகன்  பரணி குமார், இளங்கலை முடித்து,முதுகலை  பட்டத்திற்கு  ஸ்டான்ப்போர்டில் சேர்ந்திருந்தான் .

அவனும் தங்கையும் சிறு வயதிலிருந்தே., பாடுபவர்கள்.

தீபாவளித்த திரு நாளுக்கு முன்னதாக 
சென்னையிலிருந்து புறப்பட்ட மஹியும் அம்மாவும் மும்பை வந்து ஹரன் குடும்பத்தினருடன் 
சிறிது நேரம் செலவழித்து நீண்ட பயணத்துக்குத் தயாராகினர்.

மீண்டும் தொடரலாம்.










Friday, October 04, 2019

புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

எல்லோரும் இனிதாக வாழவேண்டும்.

சினிமாவும் புத்தகங்களும்
++++++++++++++++++++++++++++++++
 இதென்ன ஒப்பு என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா.
எனக்கு இரண்டுமே மிகப் பிடித்தவை. 
இப்பொழுது பார்ப்பது குறைந்து விட்டாலும்
தொலைக்காட்சியில் டிசிஎம் திரைப்படங்களும்
கையில் இருக்கும் புத்தகங்களும் , கணினியில் வரும் பாடல் காட்சிகளும், 
அருமையான திரைப் படங்களும் என்னை வெகுவாகக்'
கவர்கின்றன.
பொன்னியின் செல்வன் பாட்காஸ்ட் திருமதி கவிதா அவர்கள் வழங்குவது மிகப் பிடிக்கிறது.
அதே போல் ஆடியோ செய்திகளும்,  ஆடியோ புத்தக வாசிப்பும்.

மிக மிகப் பிடித்த கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் விஸ்தாரமான் விவரணைகளொடு
செங்கமலம், பந்தல் குடி பாமா,மோஹனாம்பாள்,சிவகாமி,சிங்காரம் எல்லோரையும் 
விகடனில் பார்த்த பிறகு திரையில் பார்க்க அவ்வளவு மனம் ஒப்பவில்லை.

பிறகு ஒருவாறு சமாதானப் படுத்திக் கொண்டேன்.

இது வேறு தளம். அதுவேறு தளம். ஆனால் சிவாஜி சொல்ற மாதிரி
விதை நான் போட்டது 
போலத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
அண்மையில் ஆங்கில எழுத்தாளர் ஸ்பை த்ரில்லர் எழுதுபவர்
தன் மனக்குறைகளைச் சொல்லி பேட்டி கொடுத்தார்.
என் ஹீரோ புத்திசாலி. அவனுக்குப் பெண்களும்
கருவிகளும் வேண்டாம். காதல் வேண்டாம். அவன் ஒரு வேலையைச் செய்ய
போகிறான். முடித்து உயிருடன் வந்தாலும் வருவான்.
இறந்துவிட்டால் அவன் இடத்துக்கு இன்னோருவன் வருவான்.

நான் படைத்தவன் இந்த சினிமா ஹீரோ இல்லை
என்று சொல்லி வருத்தப்பட்டதாக 1955 ஆம் வருடம் கொடுத்த பேட்டி வந்தது.

என்ன செய்யலாம் மக்களைப் பழக்கிவிட்டது தயாரிப்பாளர்கள்.
அவர்களுக்குப் புத்தக கதானாயகனை விட கண்ணில் தெரியும் சாஹச
 ஹீரோ மிகவும் பிடித்து விட்டது.

தில்லானா மோஹனாம்பாள் ஷண்முக சுந்தரம், சிவாஜியாகப்
பரிமளித்த போது இவரையும் பிடித்தது.
இதுபோல நம்ம சிக்கலார் காதலை வெளிப் படுத்தவில்லையோ.

அவர்களுக்கு சண்டை போடத்தான் நேரம் இருந்தது.

ராவ்பகதூரும் திரையில் எடுபடவில்லை.
அவன் நம் சிங்காரம் செங்கமலமாக என் மனதில் உட்கார்ந்து விட்டார்கள்.
கோபுலுஜி எழுதின சித்திரங்களில் வாழ்கிறார்கள்.
சுஜாதா சார் கூட, 
தன் எழுத்து திரையில் தெரியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு சமாதானம்
 செய்து கொண்டு விட்டதாக் கேள்விப்பட்டேன்.
இது வேறு அது வேறு. பணம் கொடுத்து அவர்கள் வாங்கிய பிறகு

அதை மறந்து விடவேண்டும் என்று கரை எல்லாம் செண்பகப்பூக்கள் பேட்டியில் சொல்லி இருந்தார்.

Eye of the Needle movie was a success. நாவல் அதைவிட நன்றாக இருந்தது.

பிறகு பார்க்கலாம். கண் டாக்டர் அழைத்திருக்கிறார்.
அரைத்த மாவு மாதிரி பதிவு இருந்தால் மன்னிக்கவும்.
புதிதா எழுதினதுதான்.









Thursday, October 03, 2019

நவராத்திரி நல் நாட்கள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 
நவராத்திரி நல்  நாட்கள் 
+++++++++++++++++++++++++++++++

சின்ன கொலு, பெரிய கொலு, தெய்வங்கள் கொலு,
நாகரிக கொலு,
தீம் கொலு,
வீடு முழுக்க கொலு.

கடித அழைப்பு,   ஈவை ட் அழைப்பு, 
நாம்  கடைகளில் போகும்போது  சட்டென நினைவு வந்தவர்களாக 
அழைக்கும்  அழகு.

இந்தியா செல்லும்போதே கொலு ரிட்டன்    என்று சொல்லப் படும் பரிசு  பொருட்கள் வாங்கி  வந்து விடுகிறார்கள்.

ஒன்பது நாட்களில் நாலு நாட்களாவது   வீட்டில் சமைக்க வேண்டாம் என்று சொல்லும்படி 

சாப்பாடு.  ஒரு விருந்துக்கு 25  நபர்களாவது கலந்து கொண்டு 
 விவரங்கள் பரிமாறிக்கொண்டு 

படங்கள் எடுத்து,அடுத்த நாளே முக நூலிலே யோ 
வாட்சாப்பிலோ வந்து  குவியும்படி 
இந்த ஊர்மக்கள் கொண்டாடும் விதமே 
அலாதி தான்.

நம் ஊரில்  எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நவராத்திரி  நாயகிகள்  வந்திருக்கும் போது வாசலை   மூடக் கூடாது 
என்பது பாட்டியின் கட்டளை. 

உறவுகளும்  அதிகம் என்பதால், அதிக தேங்காய்கள், வெற்றிலை,
மஞ்சள், பாக்கு, பழம் ,பூ என்று வீடே மணக்கும்.

மாமியாருக்கு ,சரஸ்வதி பூஜை அன்று   ஒன்பது  பெண்களுக்கு 
கட்டாயம், ரவிக்கைத்துணி வைத்துக் கொடுக்க வேண்டும்.
அதுவும் அவர்கள் தைத்துப் போட்டுக் கொள்ளும்படி 
கொடுக்க வேண்டும்.

என் சின்ன மாமியார்  வீட்டில் அதுவே புடவையாகிவிடும்.
எனக்கு ஒன்று கட்டாயம் உண்டு.

ரங்காச்சாரி கடையும் ,நல்லி யுமாக வந்து குமியும்.

வீட்டில் லட்சுமி பூஜை தினமும் உண்டு.
அதற்காகவே ஒரு சுண்டலும்,  ஒரு இனிப்புமாகத் தினம் தயாராகும்.

வெள்ளிக்கிழமை  என்றால் அப்பம் , சனிக்கிழமை என்றால் எள்ளுசாதம்,

இவ்வளவு நாட்களையும் தாண்டி விஜயதசமி அன்று நான் எல்லோர் வீட்டிற்கும் போய் வருவேன்.

இத்தனை விதமான நவராத்திரியை அனுபவிக்க வைத்த 
தேவி களுக்கு என் நமஸ்காரங்கள் . கற்பகாம்பாளும்,  அலர்மேல்மங்கையும் பரிபூரணமாக எல்லோரையும் காப்பார்கள்.

நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.

Image result for NAVARATHTHIRI PICTURES







Tuesday, October 01, 2019

மசால் வடை மகாத்மியம்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும். 
இன்று எங்கள் கடைக்குட்டி பேரனுக்குப் பிறந்த நாள். 

அந்தச் செல்லம் நிறைவாழ்வு,நிறை செல்வம், நிறை மங்களம் பெற்று அமோகமாக வாழ வேண்டும்.

Image result for masala vadai


நெல்லைத்தமிழனுக்கு  மிக நன்றி.
அவர் எழுதின   மசால் வடையைப் பார்த்து மனசில் ஏக்கம் ஏகமாகப் பெருகியது.
இந்த வீட்டில் எண்ணெய்ப் பண்டங்களை மகள்
அதிகமாக அனுமதில்லை.
ஆஞ்சநேயர் பூஜைக்கு மட்டும் மிளகு வடை 108 தட்டி,அற்புதமாகச்  செய்வாள் அதுவும் கோவிலில் செய்வது போல தட்டையாக மிளகு கரகரவென்றி ருக்க அமிர்தமாக இருக்கும்.

அம்மா செய்யும் வடை     மெது  வடை.  அப்பா கேட்டால் 
ஆமவடை என்று பருப்புகள் சேர்த்து கறிவேப்பிலை எல்லாம் போட்டு,
அரைக்கக் கொடுப்பாள்.

ஒன்னு ரெண்டா அரைச்சுக்கோ. மொத்தம் மாவாக்கிடாதே 
என்று இன்ஸ்ட்ரக்ஷன் வந்து கொண்டே இருக்கும்.

ஏ ம்மா பருப்பு மட்டும் தான் இருக்கும். வடையே இருக்காதே என்று புலம்புவேன். எல்லாம் தெரியும்டி. நீ சொன்னதைச் செய் 
என்று  சமயல றைக்குள் போய்விடுவாள். நானும் கிணற்றங்கரையில் 
தேவயானியிடம் பேசிக்கொண்டே 
அரைத்துவிடுவேன்.

அதற்குப் பிறகு சின்னவெங்காயம் சேர்க்கும் வேலை. ஞாயிறு மட்டும் அல்லவட் .

ஒரு நாலு மணிக்குப் பெரியவன் படிப்பை மூடிவைத்து வந்துவிடுவான்.

எண்ணெய்  அடுப்பில் வைத்ததும் சின்னவனும் நானும் அம்மா பக்க்க்க்க்கத்தில் உட்கார்ந்து விடுவோம். 
கடலெண்ணெய் தான் அப்போ எல்லாம். 

அம்மா, பசின்னு பாட ஆரம்பிப்பான். இருடா எண்ணெய் காயட்டும் என்று துளி புளியைப் போடுவாள்.
அது எண்ணெயில் சுற்றி வரும். அம்மா கறுப்பாயிடுத்து 
எடுத்துட்டு வடையைப் போடு என்பேன்.
 அசர மாட்டாள் அம்மா. 
அழகாக மாவைத் திரட்டி பதம் பார்த்து, கொஞ்சம் கடலை மாவை தூவி, மீடியம் சைஸ்  வடையைப் போடுவாள் எண்ணெயில் . அடுத்தது என் முறை.
 தம்பிக்கு அந்த வேலை கொடுக்கப் பட மாட்டாது.:}

நாலே  நாலு வடை.
உம்மாச்சிக்கு காண்பிக்கணும் இல்லையாமா 
என்று சமத்தாக பெரிய தம்பி சொல்வான்.
வெங்காயம் போட்டிருக்குடா கிருஷ்ணர்  சாப்பிட மாட்டார்"
இது நான்.

மனசில நினைச்சுக்கோங்கோ.  காஸ் தொந்தரவு வராது " இது அப்பா அறிவுரை.

ஆளுக்கொரு தட்டு எடுத்துக் கொண்டு வடா ஒவ்வொன்றாக விழ 

அது போகும் ஆறு மணி வரை.  அம்மா நன்றி.😃😃😃😃😃😃😃😃

அடுத்தது கீரை வடை .எஜமானர் வாங்கி வருவது.
அவர் பகவானிடம் செல்வதற்கு முதல் நாள் கூட,ராசிக்குப் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் வாங்கிச் சுவைத்தபடியே திரும்பினோம்.
என் ருசி நன்கு தெரிந்தவர். என் அருமை சிங்கம்.

வாழ்க வளமுடன்.

Keerai Vadai / Spinach Lentil Balls recipe main photo