Blog Archive

Friday, October 04, 2019

புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

எல்லோரும் இனிதாக வாழவேண்டும்.

சினிமாவும் புத்தகங்களும்
++++++++++++++++++++++++++++++++
 இதென்ன ஒப்பு என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா.
எனக்கு இரண்டுமே மிகப் பிடித்தவை. 
இப்பொழுது பார்ப்பது குறைந்து விட்டாலும்
தொலைக்காட்சியில் டிசிஎம் திரைப்படங்களும்
கையில் இருக்கும் புத்தகங்களும் , கணினியில் வரும் பாடல் காட்சிகளும், 
அருமையான திரைப் படங்களும் என்னை வெகுவாகக்'
கவர்கின்றன.
பொன்னியின் செல்வன் பாட்காஸ்ட் திருமதி கவிதா அவர்கள் வழங்குவது மிகப் பிடிக்கிறது.
அதே போல் ஆடியோ செய்திகளும்,  ஆடியோ புத்தக வாசிப்பும்.

மிக மிகப் பிடித்த கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் விஸ்தாரமான் விவரணைகளொடு
செங்கமலம், பந்தல் குடி பாமா,மோஹனாம்பாள்,சிவகாமி,சிங்காரம் எல்லோரையும் 
விகடனில் பார்த்த பிறகு திரையில் பார்க்க அவ்வளவு மனம் ஒப்பவில்லை.

பிறகு ஒருவாறு சமாதானப் படுத்திக் கொண்டேன்.

இது வேறு தளம். அதுவேறு தளம். ஆனால் சிவாஜி சொல்ற மாதிரி
விதை நான் போட்டது 
போலத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
அண்மையில் ஆங்கில எழுத்தாளர் ஸ்பை த்ரில்லர் எழுதுபவர்
தன் மனக்குறைகளைச் சொல்லி பேட்டி கொடுத்தார்.
என் ஹீரோ புத்திசாலி. அவனுக்குப் பெண்களும்
கருவிகளும் வேண்டாம். காதல் வேண்டாம். அவன் ஒரு வேலையைச் செய்ய
போகிறான். முடித்து உயிருடன் வந்தாலும் வருவான்.
இறந்துவிட்டால் அவன் இடத்துக்கு இன்னோருவன் வருவான்.

நான் படைத்தவன் இந்த சினிமா ஹீரோ இல்லை
என்று சொல்லி வருத்தப்பட்டதாக 1955 ஆம் வருடம் கொடுத்த பேட்டி வந்தது.

என்ன செய்யலாம் மக்களைப் பழக்கிவிட்டது தயாரிப்பாளர்கள்.
அவர்களுக்குப் புத்தக கதானாயகனை விட கண்ணில் தெரியும் சாஹச
 ஹீரோ மிகவும் பிடித்து விட்டது.

தில்லானா மோஹனாம்பாள் ஷண்முக சுந்தரம், சிவாஜியாகப்
பரிமளித்த போது இவரையும் பிடித்தது.
இதுபோல நம்ம சிக்கலார் காதலை வெளிப் படுத்தவில்லையோ.

அவர்களுக்கு சண்டை போடத்தான் நேரம் இருந்தது.

ராவ்பகதூரும் திரையில் எடுபடவில்லை.
அவன் நம் சிங்காரம் செங்கமலமாக என் மனதில் உட்கார்ந்து விட்டார்கள்.
கோபுலுஜி எழுதின சித்திரங்களில் வாழ்கிறார்கள்.
சுஜாதா சார் கூட, 
தன் எழுத்து திரையில் தெரியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு சமாதானம்
 செய்து கொண்டு விட்டதாக் கேள்விப்பட்டேன்.
இது வேறு அது வேறு. பணம் கொடுத்து அவர்கள் வாங்கிய பிறகு

அதை மறந்து விடவேண்டும் என்று கரை எல்லாம் செண்பகப்பூக்கள் பேட்டியில் சொல்லி இருந்தார்.

Eye of the Needle movie was a success. நாவல் அதைவிட நன்றாக இருந்தது.

பிறகு பார்க்கலாம். கண் டாக்டர் அழைத்திருக்கிறார்.
அரைத்த மாவு மாதிரி பதிவு இருந்தால் மன்னிக்கவும்.
புதிதா எழுதினதுதான்.









18 comments:

டிபிஆர்.ஜோசப் said...

என்ன செய்யலாம் மக்களைப் பழக்கிவிட்டது தயாரிப்பாளர்கள்.
அவர்களுக்குப் புத்தக கதானாயகனை விட கண்ணில் தெரியும் சாஹச
ஹீரோ மிகவும் பிடித்து விட்டது.//

உண்மையில் இந்த ஹீரோ சமாச்சாரம் திரைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும். சினிமாவில் ஒரு சொத்தை ஆளை இவர் தான் ஹீரோ என்று அறிமுகப்படுத்தினால் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். அரசியலில் தகுதியற்றவர்களையும் தலைவர் என்று தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இது தான் பாமர மனப்பான்மை.

நெல்லைத்தமிழன் said...

நாவல்ல உங்க கற்பனைக்கு வேலை இருக்கு. அதுனால ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி கற்பனை பண்ணுவாங்க, கதாபாத்திரங்களைக் குறித்து.

திரைப்படங்களைப் பார்த்தால் அந்தத் திருப்தி வராது.

பாவம் மணிரத்னம். யாருடைய 850 கோடி ரூபாய் விழலுக்கு இரைபடப்போகிறதோ... பாவம்.

ஸ்ரீராம். said...

படித்த நாவலுக்கும் பார்க்கிற சினிமாவுக்கும் மனம் சம்பந்தப்படுத்தாது.  இதை பற்றி ஒரு பழைய முகநூல் பதிவு கூட வியாழனில் போட எடுத்து வைத்திருந்தேன். நம் மன பிம்பத்தில் இருக்கும் கதாபாத்திரங்களை வேறு உருவில் பார்க்க மனம் ஒப்பாது.  அதுவே ரசிக்க முடியாமல் போய்விடுகிறது.   எல்லோருடைய பிரச்னையும் அதுதான்.

Geetha Sambasivam said...

பொன்னியின் செல்வன், ராவ்பகதூர் சிங்காரமெல்லாம் தொலைக்காட்சிகளில் வருதா என்ன? நீங்க எழுதி இருப்பது எல்லாமும் புது விஷயமாக இருக்கிறதே! இதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது! ஆக நீங்கள் எழுதி இருப்பது முழுக்க முழுக்கப் புதுசு தான்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பலருடைய மனதில் உதித்தவைதான். இருந்தாலும் ஒப்புநோக்கிய விதம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜோஸஃப் சார்.
நீங்கள் சொல்லி இருப்பதுதான் உண்மை. நிஜ வாழ்க்கை ஹீரோக்களை

பத்திரிக்கைகள் மூலமாகவும், எங்கள் ப்ளாக் வழியாகவும் தான் அறிகிறோம்.
இந்த ஊரில் ஒரு ஜனாதிபதி சினிமாவிலிருந்து வந்தாலும் நல்லதும் செய்தார்.

பலர் அப்படி அரசியலுக்கு வருவதில்லை.

தான் சார்ந்த அரசியல் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
புத்தக ஹீரோ நம் மனதில் உருவாக்கிய பிம்பம்
சினிமாவில் பார்க்க முடியாவிட்டால்
அது அவர்கள் செய்து கொள்ளும் அட்ஜஸ்ட்மெண்ட் தான்.

அதில் இந்த வீர்யம் குறைந்து விடுகிறது.
படித்து கருத்து சொன்னதற்கு மிக மிக நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, கட்டாயம் யார் வந்தியத் தேவனாக நடித்தாலும் என் மனது ஒத்துக் கொள்ளாது என்று தோன்றுகிறது. அப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் கேரக்டர்.
அதே போல வானதி.
பூங்குழலி. இது பெரிய சாலஞ்.

850 கோடியா. சாமி!!!
மணிரத்ன கதா நாயகர்கள் வேறு. கல்கியின் கதா நாயகர்கள்
வேறு. புதுப் பொன்னியின் செல்வனைப் பார்க்கலாம்.
நன்றி முரளிமா.

கல்கியின் சிவகாமியின் சபதம் டிகேஎஸ் சகோதரர்கள் அரங்கேற்றினார்கள்.
ஷண்முகம் மாமல்லராகத் துடிப்பாக நடித்தார்.
அவர்து தம்பி மஹேந்திர பல்லவனாக நடித்தார்.
இருவரையும் உருவகப் படுத்திக் கொள்ள முடிந்தது.
சிவகாமியாக நடித்தவருடன் ஒத்துப் போக முடியவில்லை.
அவளது ஆக்ரோஷத்தை இந்தக் கதா நாயகியால் காண்பிக்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் சரியாகச் சொன்னீர்கள்.
நாம் மனத்தில் கட்டி வைத்த பிம்பங்களை
திரையில் ஒப்பிட முடியாது.

அது கூத்து கட்டியது போலத் தோன்றும்.
ஷான் கானரிதான் ஜேம்ஸ்பாண்ட் என்பது போல
நினைத்தாலும்,
நாவலில் கொடுத்த விவரங்களை அவர்களால்
கொண்டு வரமுடியவில்லை.

that was entirely different. Now I am seeing Perry Meson
regularly.
this is entirely different.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. குட் மார்னிங்க்.
நான் எழுதி இருப்பது விளையாட்டுப் பிள்ளை,சிவாஜி சினிமா. ராவ் பஹதூர்
சிங்காரம் சினிமாவில் வந்த கதை. உங்களுக்கும் தெரியும்.
பத்மினி என்னதான் ஹ்ம்ம்ம் அழகின்னாலும்
செங்கமலத்துடன் ஒப்பு நோக்க முடியவில்லை.
பொன்னியின் செல்வன் , ஆடியோ கதை கணினியில் கேட்கிறேன்.
Pnniyin Selvan kathaipodcast என்று வருகிறது. எனக்குப் பிடித்திருக்கிறது.
மற்றபடி வேறு திரைப்படங்கள் வந்த மாதிரி இல்லை.
இது புதுப்பதிவு தான்.

Geetha Sambasivam said...

சிவகாமியாகச் சந்திரகாந்தா நடித்த நினைவு! ஏதோ ஓர் திரைப்படத்தில் இது நடனக்காட்சியாக வரும்போது அதில் சந்திரகாந்தா நடித்திருந்தார்.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா,
சந்திரகாந்தா அவ்வளவு அழகா நடிப்பார்.
நடனமும் தெரியும். படங்களில் பார்த்த்ருக்கிறேன் அவர் டிகேஎஸ்
நாடகத்தில் நடித்திருக்கிறாரா.இது செய்தி எனக்கு.
எந்தப் படத்தில் சிவகாமியாக நடனமாடினாரோ.
பார்த்திபன் கனவு படத்தில் கமலா லக்ஷ்மண், சிவகாமியாக
ஆடுவார். அது நன்றாக நினைவில் இருக்கிறது.எஸ்.வி. ரங்கராவ்
மாமல்லனாக வருவார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா வணக்கம்.
ஆமாம் நிழல்களை நம்பி ஏமாறுகிறோம்.

மாதேவி said...

நாவல்வேறு சினிமா வேறுதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மாதேவி,
இதைத் தனியாகவும், அதைத் தனியாகவும் ரசிக்க வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

நாவல் என்பது வேறு சினிமா வேறுதான் ஆமாம் அம்மா சுஜாதா கூட வருத்தப்பட்டு சொன்னது கேள்விப்பட்டிருக்கிறேன். எபியிலும் எப்போதோ ஸ்ரீராம் சொன்ன நினைவும்.

நாவல் என்பது எவ்வளவு பக்கம் நிகழ்ச்சிகள் வரும் அத்தனையும் 2.30 மணி நேரத்திற்குள் சுருக்கணும்னா நல்ல திரைக்கதையாளர் அமைஞ்சாதான் நடக்கும். அந்த 2.30 மணிக்குள்ளும் டூயட், பாட்டுனு சேர்த்துருவாங்க...காமெடினு வேற ஃபைட் இப்படி போனா கதை கொஞ்சமே வரும். என்ன சொல்ல முடியும்? பிக்ஸல சுருக்கறாப்லதான ஃபோட்டோ பிகஸலை சுருக்கும் போது அது ஸோ சோ வாத்தான் வரும் அது போல...

பதிவு அருமை அம்மா..ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க..

கீதா

வெங்கட் நாகராஜ் said...

தமிழகத்தில் இருந்த போதே சினிமா பார்ப்பது குறைவு. இப்போது இன்னும் குறைந்து விட்டது வல்லிம்மா...

புத்தக வாசிப்பு மட்டும் தொடர்கிறது.

புத்தகத்தில் படித்ததை சினிமாவாகப் பார்க்கும்போது அவ்வளவு லயிப்பதில்லை மனது.

நல்ல பகிர்வு. தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. அருமையான விளக்கம்.எதையும் எதனுடனும் ஒப்பிட முடியாதுதான்.
பொன்னியின் செல்வன் ஐந்து பாகத்தை ஐந்து மணி நேரம் எடுத்தால் கூட அந்தப் பொலிவு வராது.

படத்தைப் பெரிதாக்கினாலும் அழகில்லை. சுருக்கினாலும் அழகில்லை.

புதிதாகக் கதை எழுதிப் படைக்க வேண்டியது தான். நன்றி ,மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
படத்தைப் புதிதாகப் பார்த்தால் அது வேறு.
கதையைப் படித்து எதிர்பார்ப்புடன் போனால்
ரசிக்க முடியவில்லை தான்.
அகிலனின், இரு படங்கள் பாவையின் விளக்கு,
இன்னோரு படம் இரண்டுமே வெவ்வேறு விதமாக இருந்தன.
நன்றி மா.