வல்லிசிம்ஹன்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5
அடுத்த நாள் நிகிதாவின் வீணைக்கு பரணி யின் புல்லாங்குழலும் ஒத்துழைத்தது அவனாக மேடையில் தானும் வாசிக்கப் போகிறேன் என்றதும் நிகிதாவுக்கும் , மற்றவர்களுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இரண்டு பேருக்கும் எப்படிப் பொருந்துகிறது என்பதை பார்க்கவே நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
பரமானந்தமாக இருந்தது.
எப்படி இருவருக்கும் இது சாத்தியமாகிறது. ?அவள் வாசிக்க அதே ஸ்வரத்தை அவன் புல்லாங்குழலில் தொடர ,மீண்டும் அதற்கு அவள் அலங்காரம் செய்ய, அவன் வேறு ஸ்வரத்துக்குப் போக என்று இருவரின் சாமர்த்தியமும், இசையின் இழைதலும் நம்பமுடியாத அளவுக்கு இனிமை சேர்த்தது. அனைவரையும் கவனத்தையும் கவர்ந்த இருவருக்கும் பார்த்தவர்கள் ,அளித்த கர ஒலி அந்த ஹாலையே கலகலப்பாக்கியது.
அடுத்த நாள் சிகாகோவில் ஷாம்பெர்க் கலைக்கூடத்தில்
எல்லோருடைய நிகழ்ச்சிகளும் வேறு வேறு நேரங்களில் அமைந்திருந்தது.
சிகாகோ தம்பதியர் முரளி ஸ்ரீனிவாசனும், மனைவி சுகந்தாவும்
மஹி, நிகிதா,தன்யா ,மானசி அனைவருக்கும்
அவர்களது வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பரணி , ராகு, ஹரன், வெங்கட் அவர்களின் சிநேகிதர் டாக்டர் டக் குபாட்டி அவர்கள் வீட்டில் தங்க ஏற்பாடு.
அவர்கள் பெண் குழந்தைகள் உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் நடனம் கற்றுத் தருவது சௌமியா குமரன்.
சென்னை மயிலையைச் சேர்ந்த சகோதரிகளில் ஒருவர்.
நாளை கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டு ,எல்லோரும் ஓய்வெடுக்கும் வேளையில் வெங்கட்
அவர்கள் ,, பழைய நாட்டியத் தாரகைகள் ஆடிய தொகுப்பு ஒன்றை
டெலிவிஷனில் போட்டுக் காண்பித்தார்.
வைஜயந்திமாலா, பத்மினி ராகினி,குமாரி கமலா என்று ம் ,பத்மா சுப்பிரமணியம்,சுதாராணி ரகுபதி, சித்ரா விஸ்வேஸ்வரன் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடிய சில நடனங்களும் அலர்மேல்வள்ளி,
மற்றும் இளையதலைமுறையைச் சேர்ந்த
சில இளம் கலைஞர்களின்
நடனங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.
மானசியும் தன்யாவும் தாங்கள் இன்னும் கற்க வேண்டிய கடலளவு நாட்டிய சாஸ்திரத்தை நினைத்து
உணர்ந்து உறங்கப் போனார்கள்.
அடுத்த நாள் அவரவருடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு
சிகாகோ நோக்கிப் பயணப்பட்டவர்கள் மஹி, மானசி ,தான்யா, நிகிதா,
ரகுநந்தன், ஹரன் ,பரணி.
கலையைத் தவிர வேறு ஒன்றும் அவர்கள் மனதில் இல்லை.
தொடரும்.

21 comments:
நடனங்களை கண்டு மகிழ்ந்தனர். நல்ல உத்தி. நாங்களும் கண்டோம். வைஜெயந்தியின் ஓவல் ஃபேஸ் தூக்கலாக விழியுருட்டி நர்த்திக்க--
அட! பத்மா சுப்ரமணியமா அது?.. அடையாளமே தெரியலையே!
கலையைத் தவிர வேறு ஒன்றும் அவர்கள் மனத்தில் இல்லை என்ற கடைசி வரி அர்த்தம் பொதிந்தது..
வணக்கம் ஜீவி சார். இது தான் நான் நினைத்தது. நான் பார்த்தவரை. இங்கே இருக்கும். குழந்தைகள். அவரவர். கலையில் மிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். முன்னேற வேண்டும் என்கிற முனைப்பும் அதிகம். வைஜயந்தி மாலா வர்ணனை கச்சிதம். பத்மா சுபரமணியத்தின் நடன அசைவுகளுக்கு. மறு வார்த்தை. கிடையாது.அற்புதமான நடன மணி. நன்றி சார்.
கதையில் இப்போதைக்கு கலைதான் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. காதல் பின்னே சென்றிருக்கிறது. காத்திருக்கிறேன்...
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
ஆமாம். இளம் வயது ,அங்கேயும் இங்கேயும் ஊசலாடுகிறது.
புது மொபைல் வந்திருக்கிறது. எங்கள்ப்ளாக் ரீடர்ஸ் வாட்ஸாப்
வர முடியவில்லை.எல்லாம் இன்ஸ்டால் ஆனதும்
சரியாக வருகிறேன்.
கதையில் ஆங்காங்கே பொருத்தமான காணொளிகளையும் இடுவது அழகான உத்தி.
கதையை வாசித்துவிட்டேன். முதலில் பெயர்கள் கொஞ்சம் குழப்பியது. மீண்டும் முந்தையதை வாசித்தேன். ஹா ஹா ஹா
ம்ம்ம் யாருக்கு மாப்பிள்ளை யாரோ ந்ற பாடலும், கொஞ்சம் இந்தக் காலத்துப் பாடலான யாரோ எம் புருஷன் ந்னு மணிரத்னம் படத்துல வருமே ஒரு பாடல் அது நினைவுக்கு வந்தது.
ம்ம்ம் இன்னும் அவர்களது மனம் முடிவு செய்யவில்லை போலும். தங்கள் எதிர்கால லட்சியத்தில் இருப்பவர்கள்...நல்லதே நடக்கும் தொடர்கிறேன் அம்மா. இதே போன்று ஒரு சில லட்சியத்தில் இருப்பவர்கள் வேறு துறையில் இருப்பவர்களும் ஒரே துறையில் இருப்பவர்கள் கூட தங்களுக்குப் பிடித்திருந்தாலும் வாழ்க்கை என்று நினைத்து சேர்ந்து வாழும் போது பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமே அதுவும் தொழில் பக்தி கொண்டவர்கள்....ரொம்பவே யோசிக்கிறார்கள்!!! குறிப்பாகப் பெண்கள்...
நன்றாகச் செல்கிறது அம்மா தொடர்கிறேன்
கீதா
வல்லிம்மா நலமா?
புதிய தொடரின் 5 பாகங்களையும் சேர்த்து வாசித்தேன். இசை, நடனம் பற்றி சுத்தமாக எனக்கு எதுவும் தெரியாது. மகள் நடனம் கற்றுக் கொண்டு மேடையில் ஆடியிருந்தாலும் கூட. கதை இசை நடனம் இவற்றைச் சுற்றி இடையில் காதல் இலை மறை காயாக வருவது போல் வந்து ஆனால் இன்னும் உறுதியாகவில்லையோ?
இவர்களில் யார் யாரைத் தங்கள் எதிர்காலத் துணையாகத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? இல்லை தங்களின் நடன, இசையில் உள்ள ஈடுபாட்டிற்கே தங்கள் வாழ்க்கையை டெடிக்கேட் செய்யப் போகிறார்களோ என்றும் தோன்றுகிறது. ஆவலுடன் தொடர்கிறேன். அருமையாகச் செல்கிறது.
துளசிதரன்
கலையா? காதலா என்று நினைக்கமுடியாமல் இப்போது கலைதான் அவர்களை ஆக்ரமித்து இருக்கிறது.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று .
பாடல் பகிர்வுகள் அருமை.
காணொளிகள் அருமை.
இசைபிரவாகம் முன்னிலையில்,மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமே.காலம் கனிந்திடட்டும்.
அன்பு திரு ஜோசஃப் சார் வணக்கம். ஆமாம் மனம் சிதறாமல் கற்றால் மட்டுமே சங்கீதம் நிலைக்கும்.
நான் காதில் விழுந்த செய்திகளுக்கு அலங்காரம் செய்து
பதிவிடுகிறேன். தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.
அன்பு கீதா மா.
சப்தஸ்வரங்களையும் இந்தக் கதைக்குள் கொண்டு வரவேண்டும் என்றே இந்தப் பெயர்களை வைத்தேன்.
இன்னும் சாரிகா வரவில்லை.
பிறகு கொண்டாட்டம் தான்.
முட்டி மோதி நல்ல சங்கீதமாக வாழ்க்கை அமையட்டும்.
இசையும் இசைவான கணவனும் கிடைப்பது அரிது தான்.
நீங்கள் சொன்னபடி இவர்கள் புத்திசாலிகள்.பார்க்கலாம்.
அன்பு துளசி, வேலைகள் முடிந்ததா. குழந்தை
நல்ல கல்லூரியில் சேர்ந்தானா.
நான் நலமே அப்பா.
எனக்கும் இசை கேட்கத்தான் தெரியும்.
மற்றவை எல்லாம் கற்பனையே.
நலமாக இருங்கள் மா. Thulasi maa
அன்பு கோமதி. ஆமாம் அந்தத் தவிப்பைப் பார்த்ததால் தான்
இந்தக் கதை அதில் பிறந்துதான்.
பார்க்கலாம் மா. பெண்ணின் தோழிகள் வந்திருக்கிறார்கள்.
அதனால் பதில் சொல்ல நேரமாகி விட்டதுமா. வாழ்க நலம்.
அன்பு மாதேவி,
அதேதான் மா. இசைக்கு முன்னால்
எதுவுமே எடுபடாது. வாழ்க்கைத் துணையும்
வேண்டுமே. நல்ல கருத்துக்கு மிக நன்றி.
கதையோடு பொருத்தமான காணொளியும் ரசித்தேன் அம்மா.
நல்ல இசை ஒன்றோடொன்று இழைவதைப் போல் அனைவரின் வாழ்க்கையும் நல்லபடியாக ஒன்றாக இணையட்டும். இப்போதைக்கு அவர்கள் மனதில் கலை ஒன்றே இருந்த மாதிரி நாமும் அதையே நினைப்போம். நிகழ்ச்சி வெற்றிகரமாக முடியட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள். சிகாகோவில் அவர்களை நீங்களும் வரவேற்று உபசரித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். :)))))
அன்பு தேவகோட்டை ஜி, வருகைக்கு நன்றி மா.
பயண ஏற்பாடுகள் என்னை அசத்துகின்றன.
பாட்டுகள் இல்லாமல் என்னால் தொடர முடியவில்லை.
மிக மிக நன்றி மா.
ஹாஹா. அன்பு கீதாமா.
பெயர்கள் மாற்றப்பட்டாலும் இந்த
கலைஞர்கள் இங்கிருப்பது உண்மைதான். நல்
உழைப்புடன் இவர்கள் செயலாற்றுவது
பிரமிக்க வைக்கும். ஷாம்பர்க் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. இல்லாவிட்டால் போயிருப்பேன்.
இனிதான் அடுத்த அத்தியாயம் எழுத வேண்டும். விருந்தினர்கள் வருகை ஒரே கலகலப்பு.
அந்தக் குழந்தைகளின் சந்தோஷம் என்னையும் தொற்றிக் கொள்கிறது.
கணினி பக்கம் வரமுடியவில்லை.
போதாக்குறைக்கு வாட்ஸாப் தகராறு வேறு.
பார்க்கலாம்.
கலையைத் தவிர வேறொன்றும் அவர்கள் மனதில் இல்லை. நல்ல விஷயம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
அந்த உறுதி தளர்ந்தது தான் நடந்தது மா.
அன்ப் வெங்கட் நன்றீ மா.
Post a Comment