வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
ஸ்வரங்கள் இழைபின்னும் 6
சிகாகோ கிளம்பியதும் வெங்கட் மாமா, அங்கு நிலவும் அதீதக் குளிர் பற்றி சொல்லி இருந்தார்.
எல்லோருக்கும் ஸ்வெட்டர், ஜாக்கெட் வாங்க வேண்டி இருந்தது.
இந்த அளவு பனி இந்த மாதக் கடைசியில்.
சிகாகோ ஏர்போர்ட்டில் இறங்கியதும் தொழில் மாட்டிய பையுடன் இசைக்குழு வாயிலுக்கு விரைந்தது.
அங்கே தாயாராகக் காத்திருந்த லிமோசினில் கலைஞர்களும்
அவர்களுடய இசைக்கருவிகளும் பத்திரமா உள்ளே புகுந்தனர்.
டெர்மினல் விட்டு வெளியே வரும்போது முகத்தில் சில்லென்று அறைந்தது காற்று.
பெண்கள் தங்கி இருந்த வீட்டிலிருந்து அரைமணி நேரத்தில் போகும் தொலைவில் இருந்தது.
இளைஞர்கள் அவர்கள் இடத்திலிருந்த டால்க்ராஸ் பகுதி யிலிருந்து அதே தொலைவு தான்.
அலைபேசியில் பேசிக்கொண்டு அங்கு செல்லும் நேரத்தைக் குறித்துக் கொண்டனர்.
எப்பொழுதும் வார இறுதியில் நடக்கும் இசைக் கச்சேரிகள் கொலம்பஸ் நாள் என்பதால் திங்கள்
நடந்தது.
மஹி,தன்யா,நிகிதா,மானசி அனைவரும் ஊபர் வண்டியில்
துணைக்கு திருமதி சுதாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
ஹரன், பரணி,ரகு நந்தன் டாக்டர் டகுபாட்டியின் வழிகாட்டலில் தாங்களே அரங்கத்தைச் சென்று அடைந்தனர்.
இவர்களது நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக
அமைந்திருந்தது.
மஹியின் இசைக்கச்சேரி 20 நிமிடங்கள். ஒதுக்கப்பட்ட நேரத்தில் மஹாகவியின்
பாடலும், பாபநாசம் சிவன் அவர்களின் பாடலும், ஊத்துக்காடு கண்ணன் பாடல்களில் ஒன்றான "நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் "
பாடலையும் ஒரு தியாகைய்யரின் கிருதியுமான
சீதம்மா மாயம்மா வையும் அருமையாகப் பாடி முடித்துகே கரவொலி பெற்றால்.
ஐந்து நிமிட இடைவெளியில், ஹரனின் சுகமான இந்துஸ்தானி இசை.
பக்க வாத்தியங்களை சபையினர் ஏற்பாடு செய்திருந்ததால் மனத்தைக் கவர்ந்தவள் சாரிகா.
அவளே நிகிதாவுக்கும் ,வாசிப்பதாக ஏற்பாடாகி இருந்தது.
இருவரும் சாரிக்காவைச் சூழ்ந்து கொண்டு ,தங்கள்
கச்சேரியை வளப்படுத்தியதற்கு
மகிழ்ச்சியையும் ,நன்றியையும் சொன்னார்கள். நிகழ்ச்சிகள் முடிந்ததது,
அவர்கள் அனைவரையும் தங்கள் வீட்டிற்கு இரவு
விருந்துண்ண அழைப்பு விடுத்தாள் சாரிகா.
மானசியும் , தன்யாவும் அடுத்தடுத்து ஆடினர் .
பிறகு தொடர்ந்தது குழலிசை.
மதியம் 4 மணி அளவில் நிகழ்ச்சிகள் பூர்த்தியானதும்
அனைவரும் சாரிக்காவின் வீடு இருந்த White Eagle பகுதிக்கு வந்தனர்.
அனைத்து வீடுகளும் பிரம்மாண் டமாய் இருப்பதாகத் தோன்றியது.
பாதிக்கு மேல் இந்தியர்கள் தான் இங்கே என்றபடி அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் சாரிகா.
அவளே வண்டி ஒட்டி வந்ததால் இன்னொரு வண்டியில் மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்.
களைப்புத்தீர மாலையில் அபாமினாபிள் படம் பார்ப்பதாக
முடிவெடுத்தனர்.
குளிருக்கு ஏற்ற உடைகளை உடுத்திக் கொண்டு,உற்சாகமாகக் கிளம்பும்
இசைக் கலைஞர்களை பார்த்து மகிழ்ந்தனர் பெற்றோர்.
அடுத்த நாள் சிகாகோவைச் சுற்றி பார்ப்பதாக ஏற்பாடு. அதற்கு அடுத்த நாள் அரோரா ஸ்ரீ பாலாஜி கோவிலில் மஹிக்கும் , நிகிதாவுக்கு பாட்டுக்கு கச்சேரியும் நிகிதாவுக்கு வீணை இசைப்பும் இருந்தன.
மற்றவர்களுக்கு லெ மான்ட் ஸ்ரீராமர் கோவிலில் புல்லாங்குழல்,
நாட்டியக் கச்சேரிகளும் இருந்தன.
அங்கேயே ஹரன் இசையும் ஏற்பாடு ஆகி இருந்தது.
எல்லோரும் திரும்ப மாலை நேரம் ஆகிவிட்டது.
ஹரனுக்கு இந்தியாவிலிருந்து அழைப்பு காத்திருந்தது.
அவன் தந்தைக்கு எதிர்பாராத விதமாக உடல் நிலை
பாதிக்கப் பட்டதால் உடனே திரும்பும்படி வந்த மாமா மைசூரிலிருந்து
செய்தி அனுப்பி இருந்தார்.
எதுவுமே நல்லதுக்குத்தான்.

17 comments:
திடீர்த்திருப்பம் எப்படிப் போகப் போகிறதோ, பார்க்கணும்!
ஹரனின் தந்தைக்கு உடல்நலம் நலம்
குன்றியது நல்லதுக்குதானா? நிச்சயம் இருக்காது. வேறு எதையோ சொல்ல வருகிறீர்கள் என்பது தெரிகிறது.. தொடர்கிறேன்..
'எதுவுமே நல்லதுக்குத்தான்' என்று சொல்லியுள்ளீர்கள். பொறுப்போம்...
கதை மிக சரளமாக போகிறது.
திடீர் என்று ஹரனின் இந்தியா பயணம் என்ன ஆக போகிறதோ என்று நினைத்தால் நீங்கள் சொல்கிறீர்கள் எதுவுமே ந்ல்லதுக்குதான் என்று நல்லதே நடக்கட்டும்.
பாடல் தேர்வு அருமை. கேட்டு மகிழ்ந்தேன் இனிமையான பாடல்களை.
அடுத்த கட்டத்துக்கு காத்திருக்கிறேன்.
துன்பம் நேர்கையில்.. ஆஹா...
ஓ! ஹரன் ஊருக்குத் திரும்ப வேண்டியதாகிப் போனதே! ட்விஸ்ட்...அடுத்து என்ன ஆகும்?
சுஜாதாவின் வாய்ஸ் மற்றும் பாடல் கேட்டேன் அம்மா ரொம்ப நல்லாருக்கு. பொருத்தமான பாடல்!
துன்பம் நேர்கையில் பாட்டு??!! இது வேறு ஏதோ செய்தி சொல்லுகிறதே அடுத்த பகுதியில் வருமோ?!! அம்மா
கீதா
அந்த நல்லது அறிந்திட தொடர்கிறேன் அம்மா.
அன்பு கீதாமா,
சந்தர்ப்பம் இது போல அமைகிறது. திருப்பம் வந்தால் சுவாரஸ்யம்தானே.
அன்பு ஜோசஃப் சார் வணக்கம்.
நல்லது நடக்கும் என்றே நம்புவோம். ஊருக்குக் கிளம்பும் வேலைகள் செய்வதால் காலதாமதமாகிறது.
இல்லாவிடில் முடித்து விடுவேன். நன்றி சார்.
அன்பு மாதேவி, உங்களை நினைக்கையில் பொறுமையும் அன்புமே எனக்கு நினைவுக்கு வரும். நல்லதே நடக்கும்.
அன்பு கோமதி மா.
வாழ்க்கையில் மாறி மாறி நடந்தாலும் கதைகளைப் பொறுத்த வரை துன்பமே வேண்டாம்மா.
சீக்கிரம் பூர்த்தி செய்யப் பார்க்கிறேன். மிக மிக நன்றி மா.
அடுத்த கட்டமா. சரி எழுதிட்டே கிளம்பறேன்.
அன்பு ஸ்ரீராம். எல்லாம் நன்மைக்கே.
அன்பு கீதாமா,
ஹரனுக்காக்ப் பதிவு செய்த பாடல் அது.
யாழெடுப்பவர் அவர் மனதில் நிற்கிறார்.
உங்களுக்கு பாடல்கள் பிடித்ததே எனக்கு மகிழ்ச்சி.
நன்மையே விரும்புவோம்.
கதை வெகு சரளமாகவும், வெகு வேகமாகவும் நகர்கிறது. பாடல்கள் இனிமேல்தான் கேட்க வேண்டும். எல்லாமே எங்கு பிடித்த பாடல்கள்.
மிக மிக நன்றி பானுமா.
காதில் கேட்டதைக் கற்பனையும் கலந்து எழுதுகிறேன்.
பாடல்கள் யூ டியூபில் நிறையக் கிடைக்கிறது அது மகா சௌகர்யம் மா.
அடடா... இப்படி ஒரு திருப்பமா? என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
அன்பு வெங்கட் , ஒரே மூச்சில் எல்லாப் பகுதிகளையும் படித்தீர்கள.
மிக மிக நன்றி மா. திருப்பம் இருந்தால் சுவாரஸ்யம் கூடும் தானே மா.
Post a Comment