எங்கள் வீட்டு எஜமானருக்கு 79 வயதாகிறது. இருந்திருந்தால்,அடுத்த வருடம் சதாபிஷேகம் செய்திருக்கலாம்.
மகன்கள்,மக்கள் எல்லோரும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
நான் அவருக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு ரசிக்கிறேன்.
இங்கு இரண்டு நாட்களாக அடித்து வரும் பலத்த காற்றைப்போல் இந்த 20 வருஷங்களாகப் பார்த்ததில்லை.
வலிமை பொருந்திய பூமி. வளம் கொண்ட மரங்கள்.
இவரை ஆட்டுவிக்கும் சக்தி கொண்ட காற்று.
பத்துப் பதினைந்து விரைவு வண்டிகள்
வீட்டைக் கடந்து செல்வது போலாச் சத்தம் காதைத் துளைக்கிறது.
காற்று நகரம் என்றே இந்த ஊருக்குப் பெயர்.
எல்லா வீட்டிலும் இருக்கும் புகைக்கூண்டு வழியாக உள்ளே வீசி திகில் கூட்டுகிறது.
எனக்கு வயதாவதால் சத்தம் பொறுக்க முடியவில்லை என்று தான் நினைத்தேன்.
மாப்பிள்ளையும், மகளுமே சொல்லும் அளவிற்கு
ஊழிக்காற்று போல சுற்றிச் சுற்றி வருகிறது. 24 மணி நேரம்
இதை சகித்துக் கொண்டாகிவிட்டது. இப்பொழுத்து நிலைமை கொஞ்சம் தேவை.
வெளியே மாட்டி இருக்கும் மணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பூந்தொட்டிகளைக் கவிழ்த்து இது என்ன ஆர்ப்பாட்டம்.
ஞாயிறு என்பதால் அநேகம் பேர் வண்டிகளை எடுக்கவில்லை.
தொலைவில் செல்லும் தீ அணைக்கும் வண்டிகள் , ஆம்புலன்ஸ் இவைகளின் சத்தம் கூடப் பெரிதாகக் கேட்கவில்லை.
நயாகரா நீரவீழ்ச்சி உறைந்தது. இது நடப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. இந்த வீடியோவைப் பார்க்கும் போது நம்பவே முடியவில்லை. தடதடவென்று ஆழ்ந்த பச்சை நிறத்தில்
அடர்ந்து பாயும் வேகம் திகில் கலந்த அழகாக இருக்கும் .
இப்பொழுதும் மேல்மட்டமே உறைந்திருக்கும் . அடியில் அருவி ஓடிக்கொண்டுதான் இருக்கும் என்றார்கள்.
இங்கே இப்படி என்றால்
நம் ஊரில் வெப்பம் அதிகமாகி இருக்கிறது என்று எல்லோருடைய பதிவுகளையம் பார்த்தால் புரிகிறது. மாசி மாதம் வெய்யில் காயும் ஆனால் உறைக்காது.
இப்பொழுது
பார்க்கும்போது தெரிகிறது. இவ்வளவு மாற்றங்களுக்கும் காரணம்
எல் நினோ எஃ பெக்ட் என்கிறார்கள்
இங்கு பனி உறைவதோடு,மேலே ஐஸ் மழை பெய்யும் பொது அநேகர் வழுக்கி விழுவது
ஆபத்தாக முடிகிறது. தன குழந்தையை பள்ளிக்கூட பஸ்ஸில் ஏற்றிவிட வந்த இந்தியத் தந்தை தடால் என்று விழுந்த அதிர்ச்சியில் சொன்னால் நம்ப முடியாது ..அவர் உயிர் பிரிந்து விட்டது.
இந்தப் பகுதியே சோகத்திலும் பயத்திலும்
ஸ்தம்பித்தது.
எல்லோரும் பள்ளிகளுக்கும் அவரவர் வேலைகளுக்கும் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜாக்கிரதை சொல்லியே எனக்கு நாக்குலர்ந்து போகிறது.
மன முறிவு வளர்ந்தது. உஷாவுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி விழா நல்ல விதமாக நடந்தது தான்.
சென்னையிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து மஹேஷிடம் ஒரு வார்த்தை பெயரவில்லை.
உஷாவும் எவ்வளவோ முயற்சித்தாள் .
சரி. போதும் இதைத்தவிர வேறு பேசவில்லை மகேஷ்.
போதாதா குறைக்கு அவன் வீடு திரும்பும் நேரம்
சந்தர் விழாவில் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு வந்திருந்தான்.
குழந்தைகளோடு அவைகளை ரசித்துக் கொண்டிருந்த உஷாவை அதிர்ச்சி செய்தது வாசல் கதவின் சத்தம்.
என்ன எது என்று பார்ப்பதற்குள் மாடிக்கு விரைந்து விட்டான் மகேஷ்.
சந்தர் முகம் சுருங்கி விட்டது. என்ன உஷா ,அவருக்கு வெளியே போக வேண்டுமா. அவசரமாக மேலே
சென்றார்.
நீயும் தயாராகு.
நான் நாளை வந்து இவைகளை எடுத்துக் கொள்கிறேன்.
என்றபடி குழந்தைகளிடம் விடை பெற்று வெளியேறினான்.
உஷா தன்னுள் படர்ந்த சினத்தை அடக்கியபடி, குழந்தைகளை உட்கார வைத்துப் பாடங்களைபி படிக்க வைத்தால்.
நிலைமையின் கசப்பு அவளை ஆட்கொண்டது.
சிறிது நேரம் ஆகியும் கீழே வராத மகேஷைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்கு
உணவு அளித்து விட்டுத் தானும் உண்டாள் .
தூக்கம் வர மருத்துக் கண்ணில் நீர் திரண்டது.
இது என்ன கொடுமை. இப்படி சந்தேகப் படும்படி என்னதான் நடந்துவிட்டது. இத்தனை பலவீன மனம் கொண்ட மனிதனையா நான் மணந்தேன்.
இனி வாழ்வு எப்படிச் செல்லும். குழந்தைகள் கதி
என்ன.
யாரிடம் பேசுவது என்று எண்ணியபடியே உறங்கி விட்டாள்
அடுத்த நாள் காலை உணவு கூட உண்ணாமல் சென்று விட்டான் மகேஷ். பையனும் பெண்ணும் அப்பா அப்பா என்றபடி சுற்றி வந்தன.
மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு தன அக்காவுக்கு ஒரு
trunkcall செய்தாள் உஷா.
அக்காவிடம் விளக்குவதற்கும் அழுகைதான் வந்தது.
அவளை வரச் சொல்லி வேண்டிக்கொண்டாள் .
வார இறுதியில் வந்த அக்கா விலாசினி
மகேஷிடம் பேச, மரியாதை இல்லாத வார்த்தைகள் வெளிப்பட்டன மகேஷிடம் இருந்து .
இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் என்றால் மகளிர் மன்றமே சிரிக்கிறதே இந்த விஷயத்தைப் பேசி என்று அதிர்ச்சி கொடுத்தான் .
சற்றுக்கூட உண்மை இல்லாத வார்த்தைகளைக் கேட்ட
உஷா பொறுக்க முடியாமல் ,உங்களிடமிருந்து இந்த கொடுமையை எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் நல்ல நண்பர்கள்.
அவரின் மனைவி யும் கூடவேதானே இருப்பாள்.
உங்களுக்குத் பொறாமையில் புத்தி பேதலித்துவிட்டது.
இனி மேற்கொண்டு என்ன செய்வது. என்னால் குழந்தைகளை இந்தக்
கீழ்த்தரமான நிலையில் வளர்க்க முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள்.
இதோ சென்னைக்கு உங்களுக்கு டிக்கட் பதிவு செய்தாச்சு. நீ உங்க அக்காவுடனே கிளம்பலாம்.
மற்றது என் வக்கீல் மூலம் நாம் முடிவு செய்யலாம். நீ எங்கள் வீட்டுக்குப்
போக வேண்டிய அவசியம் இல்லை.
உன் பெற்றோரிடமே செல்லலாம். என் அம்மாவும் சரி என்று சொல்லி ஆகிவிட்டது
என்றான்.
விலாசினியும்,உஷாவும் அப்படியே உறைந்து போனார்கள்.
ஏட்ஹோ துக்கம் நடந்த வீடு போல அங்கே தெளிவில்லாத சுமை சூழ்ந்தது.
திடீரென்று சுதாரித்துக் கொண்ட உஷா,
அவ்ர் மீண்டும் வந்து வெளியே போ என்று சொல்லும்வரை
நான் இருக்கப் போவதில்லை என்றபடி
என்றபடி, பெட்டிகளை தயார் செய்தாள்.
பயணத்துக்கு வேண்டிய உணவை மட்டும் தயார் செய்து
கொண்டு கனத்த இதயத்தோடு வீட்டைப் பூட்டிக் குழந்தைகள்
கைகளைப் பிடித்தபடி இறங்கினாள்.
தோட்டக்காரரிடம், ஊரில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவும்
ஐய்யாவிடம் சாவியைக் கொடுத்துவிடும்படியும்
சொல்லி,
ஒரு டாக்சியும் அழைத்து வரச் சொன்னாள்.
அவன் மௌனமாக் அவள் சொன்னதைச் செய்ய
மேட்டுப் ப்பாளையம் வந்து நீலகிரி விரைவு வண்டியில் ஏறினர்.
விலாசினி குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டியபடி
உஷாவைக் கவலையோடு பார்த்தாள்.
வெறித்த பார்வையோடு இருந்த உஷா
சென்னையிலும் பெற்றோரிடம் உடைந்து அழவில்லை.
அடுத்து வந்த மாதங்களில் ,தந்தை தாயுடன் பெங்களூருக்கு இடம் மாறினாள்.
அங்கிருந்த பள்ளியில் சம்ஸ்க்ருதம் ,ஆங்கிலம் இரண்டும் சொல்லிக்
கொடுக்கும் வேலை கிடைத்தது..
விவாகரத்து, கிடைத்து அவளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி அனுப்பி
விட்டாள்.
இரண்டு வருடங்கள் கழித்து மகேஷ் மறுமணம் செய்த செய்தி கிடைத்துத் தனக்குள்
சிரித்துக் கொண்டாள். இன்னோரு உறவு அவருக்குத் தான் வேண்டியிருந்தது.
தனக்கில்லை என்று நினைத்தபடி தனியே வாழக் கற்றுக் கொண்டாள்.
மனமும் அலைபாயவில்லை.
குழந்தைகளும் நன்று முன்னேறினார்கள்.
நல்ல வேலை,அவர்களுக்குப் பிடித்த திருமணம் என்று பார்த்துப்
பார்த்து செய்தாள்.
நிம்மதியுடன் இந்த எழுபத்தைந்து வயதில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்.
வாழ்வில் நடக்கும் விபரீதங்களுக்கு நல்ல முடிவு சிலசமயமே கிடைக்கிறது.
உஷாவைப் பொருத்தவரையில் குறை இல்லை.
சென்றது. சங்கத் தலைவி காந்தா நடராஜனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அடுத்த மாதம் அரங்கேற இருக்கும்
குமார சம்பவ நாடகத்துக்கு ,தேவையான ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்
பட்டுவிட்டன. 50 பிரதிகள் பிரிண்ட் செய்யப் பட்டுத் தயார் நிலையில்
இருந்தன.
குமாரசம்பவம் நாடகத்தில் காளிதாசன் சிவ பார்வதி
இணைவதற்குக் காரணமாக இருந்த பார்வதியின் தவமும், காமனை வென்ற
சிவபெருமானுக்கு பார்வதியின் துணையோடு குமாரன் ,கார்த்திகேயன் பிறப்பதாகவும்
வடமொழியில் எழுதப்பட்ட காவியமாக இருக்கும்.
நம் தமிழ் வழக்கப் படியான புராணமாக இல்லாமல்
காதல் காவியமாக இருக்கும்.
சிவனாக சந்தரும், பார்வதியாக மேனகாவும்,கார்த்திகேயனாக
உஷாவும் பாத்திரங்களுக்கான வசனங்களைப்
படிப்பார்கள். மொத்தமே ஆறு காட்சிகள்.
வளர்ந்த கார்த்திகேயனாக தாரகாசுரனை அழிக்கும் பாத்திரப் படைப்பு.
அழகான காவியத்தில் சிவபெருமானின் உறுதியைக் கலைக்கும்
பார்வதியின் தவக்கோலக் காட்சிகள், சிவ பார்வதி சந்திப்பு எல்லாம்
ஓவியங்களாக வரையப் பட்டு நாடக மேடையில் வைக்கப்
பட்டன.
எல்லாம் உஷாவின் பெரும்பாலான பங்காக
உருவாகிக் காத்திருந்தன.
சின்ன குமரனாக உஷா மகேஷின் 6 வயது கைலாஷ்
வேல் பிடித்த கையோடு கிரீடம், பட்டு வேஷ்டி,
நகைகள் எல்லாம் அணிவதாக ஏற்பாடு.
இத்தனை கோலாஹலங்களிலும் மகேஷ் கலந்து கொள்ளாததோடு
சென்னைக்கும் கிளம்பிப் போய்விட்டான்.
அதைப் பற்றி யோசிக்க உஷாவுக்கு நேரம் இல்லை.
மற்றவர்கள் அதைப் பற்றிக் கேட்டாலும் அசிரத்தையாகப்
பதில் சொன்னாள்.
அவர்களுக்குள் நடக்கும் அர்த்தமில்லாத யுத்தம் வருத்தம் கொடுத்தாலும்,
அதை லட்சியம் செய்யும் எண்ணம் வரவில்லை.
ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சிறு குழந்தைகளின் ஆடல் பாடல்கள்,
திரையிசைப்
பாடல்கள் இசைக்கும் குழுவின் நிகழ்ச்சி, அதற்குப்
பிறகு நாடகம்.
ஆண்டுவிழாவுக்கு முதல் நாள் சென்னையிலிருந்து
மகேஷின் அம்மா தொலைபேசியில் அழைத்தார்.
வீட்டில் முக்கிய விழா நடக்கப் போவதாகவும்
உஷாவும் ,குழந்தைகளும் உடனே கிளம்பி வரவேண்டும் என்றும்
சொன்னார்.
மகேஷின் சித்தப்பாவுக்கு அறுபதாம் பிறந்த நாள் விழா.
முன்பே சொல்லவில்லையே இங்கே சங்க வேலைகள் இருக்கிறதே என்று
உஷா கேட்டதற்கு,
இது மிக முக்கியமான நிகழ்ச்சி, நீ வந்தே ஆக வேண்டும்.
மகேஷ் உன்னிடம் சொல்லவில்லையா என்றார்.
எனக்குத் தெரியாது அத்தை
இங்கே நாடக ஏற்பாடுகள் என்னை நம்பித்தான் நடக்கின்றன
என்னால் கிளம்ப முடியாது என்று அமைதியாகச் சொன்னாள்.
அடுத்த பகுதியில் முடிவைச் சந்திக்கலாம்.
வல்லிசிம்ஹன்
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
நற் செய்தி இன்று எங்கள் மகள் மருமகனுக்குத் திருமண நாள்.
இனிமை நிறைய , அவர்தம் மக்கள் நலமுடன் வாழ
ஆண்டவன் அவர்களுக்கு அருள் மழை பொழிய வேண்டும் என்று மனமார பிரார்த்திக்கிறேன் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் கதையில் வந்த மாந்தர்கள் உலகின் வேறு பக்கங்களில் வசிக்கிறார்கள்.
இருவருமே பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
உஷா வீட்டில் அவளைத்தவிர மூன்று சகோதரிகள்.
எல்லோரும் நிறைய படித்தவர்கள்
பாரதி கண்ட புதுமைப் பெண்கள். எதையுமே அறிவார்த்தமாகத்தான் அணுகுவார்கள்.
மகேஷ் வீட்டில் பாரம்பரியத்துக்கு நிறைய மதிப்பு.
பெண் என்பவள் வீட்டுக்கு மீறி எதுவும் செய்யக் கூடாது.
அனாவசிய பேச்சு சிரிப்பு, கூடாது.
குழந்தைகள் எப்பொழுதும் முதல் ராங் வாங்க வேண்டும்.
அம்மா அப்பா வார்த்தைக்கு கட்டுப் பட்டு எப்பவுமே
கோடு மீறாமல் நடப்பான்.
தன் மனைவியும் அப்படியே இருக்கவே விரும்பினான்.
மக்களை பார்த்துக் கொண்டு, வீட்டலங்காரங்களை செய்து,
நல்ல சமையல் செய்து போட்டு
நல்ல பெண்மணியாக வீட்டோடு இருக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தான்.
முதலில் எல்லாத் திருமணங்களையும் போல
அழகாகவே நடந்தது.
உஷாவுக்கு க்ரியேட்டிவாக எதுவும் செய்வதில் விருப்பம் அதிகம்.
தன்னால் முடிந்த உதவிகளை செய்வாள். அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்குத் தேவையான நேரத்தில் சங்கம் வழியாக கரம் கொடுப்பாள்.
இவைகள் அவளுக்கு மகிழ்சசி தந்தது,.
குழந்தைகளையும் அதில் ஈடு படுத்துவாள்.
வெளி உலகம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் அவளுக்கு
மும்முரம் அதிகம்.
இந்த இரண்டு பேருக்கும் நடுவில் முரண்பாடுகள் இருந்தாலும்,
மஹேஷுக்கு உறுத்தியது சந்தரின் வருகையும், அந்தச் செய்தியைத் திரித்துச் சொன்ன அவனது உதவியாளரும் தான்.
யார் மகேஷிடம் தவறான செய்தியைச் சொல்லி இருப்பார்கள் என்று குழம்பிப் போனாள் உஷா.
ஏற்கனவே அவன் மிக எளிதில் உணர்ச்சி வசப்படுபவன்
என்று தெரியும்.
தன்னை சந்தேகப்படுவான் என்று யோசித்ததில்லை.
சந்தர் , உஷாவுடன் ப்ரெசிடென்சியில் சம்ஸ்க்ருதம் படித்தவன்.
அந்த மொழி மேல் இருவருக்கும் ஆழ்ந்த பற்று உண்டு.
மயிலையில் இருக்கும் சம்ஸ்க்ருதக் கல்லூரியிலும்
நாடகங்கள் ,உரைகள் நடத்தி இருக்கிறார்கள்.
இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அவ்வளவுதான்.
சந்தரைத் திடீரென்று குன்னூரில் பார்த்தது உஷாவுக்கு அதிக
மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தினமும் செய்யும் சமையல்,வீட்டு சுத்தம், முதலிய
வீட்டு வேலைகளிலிருந்து அறிவு பூர்வமான
வேலைகளில் ஈடுபட அவளுக்கு ஆசை.
அது குடும்பத்தைப் பாதிக்காமல் இருக்க விரும்பினாள்.
சந்தருக்கு குன்னூர் டீ எஸ்டேட் ஒன்றில்
தலமை அதிகாரிப் பொறுப்பு கிடைத்திருந்தது,.
அவனும் அவனது அழகு மனைவி மேனகாவும்
அங்கே வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப்
பிறகே உஷா அவர்களை மகளிர் மன்றத்தில் சந்தித்தாள்.
அவன் சம்ஸ்க்ருதத்தில் கொண்ட பற்று மாறாமல்
ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதைக் கண்டு
ஆச்சர்யப் பட்டாள்.
கிளப்பின் தலைவி இவர்களது ஆர்வத்தைப் பார்த்து
புதிதாக ஆண்டுவிழா நிகழ்ச்சியில்
இவர்களது எளிய நாடகம் ஒன்று அரங்கேற்றலாமெ
என்று அவள் தான் சொன்னாள்.
இந்த மொழி புரியாதவர்களுக்கு ஆங்கிலத்தில்
மொழி பெயர்ப்பு செய்து கையில் கொடுத்தால் அந்த 30 நிமிட
நாடகத்தை அருமையாகச் செய்யலாம்.
புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் சொன்னாள்.
இருவரும் யோசித்து குமாரசம்பவத்தில்
ஒரு எளிய சம்பாஷணையை எடுத்துக் கொண்டு
அதைப் படித்து ஒரு நாடகம் போலச் செய்யலாம்.
உடை மாற்றம் எல்லாம் இல்லாமல்
சாதாரணமாகவே வானொலி நாடகம் போலச் செய்யலாம் என்று தீர்மானம்
செய்தார்கள். மேனகாவிற்கும் சம்ஸ்க்ரித மொழியில் ஆவல் இருந்ததால்
அவளுக்கும் ஒரு பாகம் கொடுக்கப் பட்டது.
இவை எல்லாம் இரண்டு மூன்று நாட்கள் அவகாசத்தில்
தீர்மானிக்கப்
பட்டன. அதைச் சொல்ல அவள் ஆவலுடன் மஹேஷை எதிர்பார்த்திருந்த
மகேஷ் இன்ஜினியரிங் படித்து அமெரிக்காவில் எம்.எஸ் செய்து வந்த பிறகே
பெற்றோர் பார்த்து நடந்த திருமணம்.
இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசமே.
மஹேஷுக்குச் சென்னை சூழ்நிலை பிடிக்கவில்லை.
கொடைக்கானல், ஏற்காடு, உதகமண்டலம் என்று குளிர்ந்த பிரதேசங்களில் தன திறமைக்கு கேற்ற வேலையைத் தேடி, இந்த பிலிம்ஸ் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது.
எந்திரங்களை மேற்பார்வையிடும் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது.
ஆறு வருடங்களில் இரு குழந்தைகளுக்குத் தாயானால் உஷா.
அவளுக்குத் தேவையான புத்தகங்கள், இசை அவளது பொழுது போக்கு.
குன்னூர் மகளிர் மன்றத்தில் சேர்ந்து டென்னிஸ்,மற்றும்பலவிதமாகப் பொழுது போனது.
குழந்தைகளை அங்கிருந்த ஆங்கிலப் பள்ளியில் கிண்டர் கார்ட்டனில் சேர்த்து அவர்களது வளர்ச்சியில்
மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
தாம்பத்ய வாழ்வின் உல்லாசத்தில் குறை இல்லை.
இன்று என்ன குறை என்று தெரியவில்லை.
வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு விரைந்து சென்று திறந்தாள்.
உள்ளே வந்த மகேஷ் , நான் சாப்பிட்டு விட்டேன் குட் நைட் என்று
படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான்.
உஷாவுக்கு சினம் எழுந்தது மனதில். அவனைப் பின் தொடர்ந்தாள்.
இன்னிக்கு உங்களுக்கு என்ன மூட் இது.
என்னிடம் சொன்னால் எனக்கும் புரியும்.
இப்படி வெளியில் சாப்பிடுவது தெரிந்தால் நான் சாப்பிட்டுப் படுக்கப் போயிருப்பேன்.
கதவு திறக்க ஒரு ஆள் வைத்துவிடலாம்.என்றபடி நேரத்தைகே காட்டினாள். நீங்கள் வெளியே சென்றது 7 மணிக்கு. இப்போது 11. என்ன செய்தீர் கள் என்று கேட்கவில்லை.
என்னிடம் சொல்லாமல் உங்களுக்கு என்ன வருத்தம்,கோபம் என்று படபடத்தாள் .
கால் உரையைக் கழட்டிக் கொண்டிருந்த மகேஷ், நிமிர்ந்தான். என்னிடம் மறைக்க ஒன்றும் இல்லை. நான் என் தோழன் ரமேஷுடன் சினிமா ஒன்று பார்த்துவிட்டு வருகிறேன்.
என் வருத்தம் ,கோபம் எல்லாவற்றுக்கும் நீதான் காரணம்.
உன் புதிய தோழன் சந்தர் , சென்னையிலிருந்து வந்திருக்கிறானே அவன்.
நீயும் அவனும் சம்ஸ்கிருதத்தில் குமாரசம்பவம் நாடகம் அரங்கேற்றப் போவதாகக் கேள்விப்பட்டேன்.
என்னைப் பொறுத்தவரையில் எந்த சம்பவமும் நம் வாழ்க்கைக்கு வேண்டியதில்லை.
அவன் நல்லவனாக இருக்கலாம்.. நீயும் அப்பழுக்கில்லாமல் பழகலாம்.
இந்தக் குன்னூருக்கு அது தாங்காது.
என்று வார்த்தை பாணங்களை வீசி வீட்டுக் குளியல் அறையில் சென்று கதவை மூடிக் கொண்டான்.
உஷா ,திகைப்பில் சிலையானாள் .
இன்றுதான் பேசியிருக்கிறோம். நாளை சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.
இவனுக்கு என் இந்த அனாவசிய பொறாமை
என்று யோசித்தவள் மனம் குழம்பியது.
மெதுவே அகன்று குழந்தைகள் அறையில் சென்று
படுத்துவிட்டாள்.
பாடல் இசை, ப்ளேயரில் வெள்ளமாக வந்து கொண்டிருந்தது.
ஜன்னல் வழியே அழகிய குன்னூர் வானத்தை வெறித்துக் கொண்டு
பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் மஹேஷ்.
குழந்தைகளைப் படிக்கச் சொல்லி விட்டு வாயில் விளக்கைப் போடவந்த உஷா
பிடித்தபாடலைக் கேட்கும் ஆர்வத்தில் அறைக்குள் வந்தாள்.
அவள் வந்ததைக் கூட கவனிக்காமல்
அசையாமல் இருக்கும் கணவனை வினோதமாகப் பார்த்தாள்.
பாட்டு முடிந்து ஜிம் ரீவ்ஸின் குரலில் இன்னோரு பாடல் தொடர்ந்தது.
என்னப்பா ஒரே சோகமாப் பாட்டு வருகிறது.
எனி திங்க் ராங்க். என்று கேட்டபடி அருகில் அமர்ந்தாள்.
ஓ ஒன்றும் இல்லை.
இன்னிக்கு இந்த மூட் என்று பாட்டை நிறுத்தினான்.
அவளை ஏறெடுத்துப் பார்த்தவன் கண்களில்
காதலோ கனிவோ இல்லை.
உஷா மனம் சட்டென்று உறைந்தது.
ஏதோ சரி இல்லை. ஆனால் இப்போது கேட்கக் கூடாது.
டின்னர் ரெடி. சாப்பிடலாமா என்று கேட்டாள்.
எனக்கு நடக்க வேண்டும் போல் இருக்கு.
நீயும் குழந்தைகளும் சாப்பிடலாமே என்றபடியே
ஜாக்கெட் எடுத்துக் கொண்டு , காலுறை பூட்ஸ் போட்டு
வெளியே நடந்துவிட்டான்.
அவன் மேஜையைச் சுற்றி வந்தவள் கண்களில்
பட்டதெல்லாம் மேலாண்மைப் படிப்பு சம்பந்தமான
புத்தகங்களும் இசைத்தட்டுகளும் தான்.
தொலைபேசி ஒலிக்க அதை எடுத்து ஹலோ
என்றாள். ஹல்லோ உஷா, எங்கள் வீட்டுக்கு ஏன் வரவில்லை.
வெள்ளிக்கிழமைதானே ,ரிலாக்ஸ் செய்யலாமே.
நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என்று இனிமையான
பெண் குரல் ஒலித்தது.
இண்டு ஃபில்ம்ஸ் தயார் செய்யும் அரசு அலுவலக
ஜெனரல் மானேஜரின் மனைவி காந்தா.
தனக்குத் தெரியாது என்று சொல்லாமல் இல்லாத தலைவலியின்
மேல் பாரத்தைப் போட்டுவிட்டு
இன்னோரு தடவை பார்க்கலாமே என்று இன்னும்
இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டாள். என்ன ஆச்சு இவருக்கு ...இரண்டு வாரமாக எதோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறாரே.வேலை யில் ஏதாவது தொந்தரவா. அதுக்கும் வீட்டில் சோகமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம். எப்போதும் என்னிடம் சொல்பவர் இப்போது மௌனமாக இருப்பது ஏன் . மனம் வருத்தப்பட,சட்டென்று சுதாரித்துக் கொண்டு குழந்தைகளை சாப்பிட அழைத்தாள்
மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள்.
இருவரும் இப்போதிருப்பது போலவே மகிழ்சசி பொருந்திய இல்லறமும் ,நன்மைகளும் தேக சௌக்கியமும் கிடைத்து, அனைத்து ஆலயக் கடவுள்களையும் தொழுது, நீண்ட நெடிய வருடங்கள் அவர்களின் மக்கள், பேரன்,பேத்திகளுடன் நல்வாழ்வு வாழ நம் மனம் நிறை வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நம் தீஜ் துரை கூகிள் ப்ளஸ் ஏப்ரில் முதல் இயங்காது என்று சொன்னார். நன்றி மா.
சொன்னதைக் கேட்டு இன்று கூகில் ப்ளஸ்
ல இருந்து விலகி ப்ளாகருக்கு வந்திருக்கிறேன்.
எங்கள்
அமாவாசை அன்று பாட்டிகளுக்கெல்லாம் ஒரு
உத்சாக வெறி வந்துவிடும்.
பேத்திக்கு கட்டளைகள் பிறந்த வண்ணம் இருக்கும்.
ஆண்டா..... பாட்டிக்கு அந்த ள் எழுத்தை சேர்க்க விட்டுபோகும். மதுரை தாத்தா ஆசார சீலர். மற்றவர்கள் சீக்கிரம் எழுந்து விட வேண்டும்.
பாய்கள் ஜமக்காளங்கள், போர்வைகள் மடிக்கப் பட்டு,
அந்தப் பெரிய கூடம் பெருக்கிமெழுகப் படவேண்டும்.
பிறகு அமாவசைத் தர்ப்பணம் செய்வார். என் ஒன்பது வயது நினைவுகள் இவை.
சென்னைப் பாட்டி இன்னும் ஒரு படி மேல்.
ஒரு தை பௌர்ணமிக்கு சென்னையில் இருந்தேன்.
பாட்டிக்குக் கடல் ஸ்னானம் செய்யத் தீர்மானம்.
அன்று சந்திர கிரஹணமும் சேர்ந்தது என்று நினைக்கிறேன்.
என் நட்சத்திரத்தில் பிடித்திருக்க வேண்டும். அதனால் இந்தத் தீர்மானம். கிரஹண தீட்டு போகணும் என்பார்.
பாவம் பாட்டி. இந்த ஊரிலோ அப்போது திருமணமே செய்து கொள்கிறார்கள்.
பாட்டிக்குச் சகோதரிகள் திருவல்லிக்கேணியில் இருந்தனர்.
புரசவாக்கத்திலிருந்து 22 ஆம் நம்பர் பஸ் பிடித்து,
மெரினா வந்து சேர்ந்தோம்.
காலை வேளையில் கூட்டம். எங்களுக்கும் இடம் கிடைத்துப்
பொங்கி வரும் அலைகளில்
மூழ்கி எழுந்தோம்.
எனக்கு நிறகப் பயம் உட்கார்ந்தே வரும் அலைகளில்
கோழி,காக்கை போல தலையை முக்கிக் கொண்டிருந்தேன்.
எதிர்பாராத பெரிய அலை என்னைத் தாக்க நான் கடலுள்
இழுக்கப் படுவதை உணர்ந்த நிமிடம் ஒரு சில் நொடி.
பக்கத்தில் இருந்தவர்கள் கைகளைப்
பிடித்து இழுத் தாரோ,நான் பிழைத்தேனோ.அடுத்த
அலையில் வங்கக் கடலுக்குள்
அடைக்கலமாகி இருப்பேன்.
அதற்காகக் கடல் பயம் எல்லாம் வரவில்லை.
இன்னும் பாசம் தான்.
பாவம் பாட்டி.மிகப் பயந்து போனார்.
தேங்கி நிற்கும் குளத்தைக் கண்டால் தான் எனக்குப் பயம். ஆரவாரிக்கும் கடல்
எத்தனையோ சிறந்தது.
அனைவருக்கும் நலன்கள்
பெருக வாழ்த்துகள்.
திருமண பந்தத்தில் எப்படி இணைகிறார்கள் இருவர் என்று
பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.
நிறைய தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.
எல்லோருமே மனமொத்த முறையில் செயல்படுவாதைத்தான் பார்த்தேன்.
அது யாரையுமே தவறாகவோ தப்பாகவோ எடை போடாத பருவம்.
என் மற்றத் தோழிகள் மேல்படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது
எனக்குத் திருமணம் கூடி வந்தது.
இவர்தான் உனக்கு நிச்சயைக்கப் படப் போகிறவர் என்ற போது
மனதில் சட்டென்று பதிந்து விட்டது அந்த முகம்.
முதன் முதலாகப் பார்த்த போதே இருவருக்கும்
புரிந்து விட்டது. ஒரு சிறிதளவு சந்தேகம் இல்லை.
நடுவில் பெரியவர்களுக்குள் கடிதப் போக்குவரத்தில்
சலனம் ஏற்பட்டாலும் சரியாகிவிட்டது இரண்டு பக்கமும்
பெருந்தன்மையோடு நடந்து கொண்டதால்.
மனமுதிர்ச்சியில் அவருக்குப் பெரிய பங்கு. என்
சிறு தப்புகளை எல்லாம் பொறுத்துக் குடும்பத்தை
நடத்தினார்.
குறை ஒன்றும் இல்லை. 47 வருடங்கள்
சேர்ந்திருக்க விதிக்கப் பட்ட,வாழ்த்தப் பட்ட வாழ்வு.
சில தம்பதிகளுக்குக் கிடைக்காது.
எல்லோருக்கும் இனிய மணவாழ்வு அமைய வேண்டும்
என்று இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.
என் கணவர் எங்கிருந்தாலும் என்னைக் காப்பார்.
குழந்தைகளுக்குத் துணை இருப்பார்
என்றே நம்புகிறேன்.
இணைந்த நாள் தை மாதம் 22 ஆம் நாள் 1966.