Blog Archive

Monday, February 04, 2019

தை மாதமும் நானும்

எல்லோரும் இனி
தாக வாழ வேண்டும்.

 அமாவாசை அன்று பாட்டிகளுக்கெல்லாம் ஒரு
உத்சாக வெறி வந்துவிடும்.
பேத்திக்கு கட்டளைகள் பிறந்த வண்ணம்  இருக்கும்.
ஆண்டா..... பாட்டிக்கு அந்த ள் எழுத்தை சேர்க்க விட்டுபோகும். மதுரை தாத்தா ஆசார சீலர். மற்றவர்கள் சீக்கிரம் எழுந்து விட வேண்டும்.
பாய்கள் ஜமக்காளங்கள், போர்வைகள் மடிக்கப் பட்டு,
அந்தப் பெரிய கூடம் பெருக்கிமெழுகப் படவேண்டும்.
பிறகு அமாவசைத் தர்ப்பணம் செய்வார். என் ஒன்பது வயது நினைவுகள் இவை.

சென்னைப் பாட்டி இன்னும் ஒரு படி மேல்.

ஒரு தை  பௌர்ணமிக்கு சென்னையில் இருந்தேன்.
பாட்டிக்குக் கடல் ஸ்னானம் செய்யத் தீர்மானம்.
அன்று சந்திர கிரஹணமும் சேர்ந்தது என்று நினைக்கிறேன்.
என் நட்சத்திரத்தில் பிடித்திருக்க வேண்டும். அதனால் இந்தத் தீர்மானம். கிரஹண தீட்டு  போகணும் என்பார்.
பாவம் பாட்டி. இந்த ஊரிலோ அப்போது திருமணமே செய்து கொள்கிறார்கள்.

பாட்டிக்குச் சகோதரிகள் திருவல்லிக்கேணியில் இருந்தனர்.
புரசவாக்கத்திலிருந்து 22 ஆம் நம்பர் பஸ் பிடித்து,
மெரினா வந்து சேர்ந்தோம்.
காலை வேளையில் கூட்டம். எங்களுக்கும் இடம் கிடைத்துப்
பொங்கி வரும் அலைகளில் 
மூழ்கி எழுந்தோம்.
எனக்கு நிறகப் பயம் உட்கார்ந்தே வரும் அலைகளில்
கோழி,காக்கை போல தலையை முக்கிக் கொண்டிருந்தேன்.
எதிர்பாராத பெரிய அலை என்னைத் தாக்க நான் கடலுள்
இழுக்கப் படுவதை உணர்ந்த நிமிடம் ஒரு சில் நொடி.
பக்கத்தில் இருந்தவர்கள் கைகளைப்
பிடித்து இழுத் தாரோ,நான் பிழைத்தேனோ.அடுத்த
அலையில் வங்கக் கடலுக்குள்
அடைக்கலமாகி இருப்பேன்.

அதற்காகக் கடல் பயம் எல்லாம் வரவில்லை.
இன்னும் பாசம் தான்.
பாவம் பாட்டி.மிகப் பயந்து போனார்.
தேங்கி நிற்கும் குளத்தைக் கண்டால் தான்  எனக்குப் பயம். ஆரவாரிக்கும் கடல்
எத்தனையோ சிறந்தது.
அனைவருக்கும்  நலன்கள்
பெருக வாழ்த்துகள்.

1 comment:

Avargal Unmaigal said...

ஆஹா 'வங்க கடலை வென்ற சிங்கம்' என்ற பட்டம் உங்களுக்கு தரலாமே.... கில்லர்ஜி என் ஐடியாவை நீங்கள் வழிமொழிவீர்களா?