Vallisimhan
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
தை அமாவாசையும் ,ஸ்ரவண நக்ஷத்திரமும் சேர்ந்து வருகிறது.
முன்னோர்களின் ஆசைகள் நாம் நன்றாக இருக்க வேண்டியதுதான்.
அவர்கள் இங்கிருந்து ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்ஷ்ம
சரித்திரத்தில் இன்னும் மேலே செல்ல வேண்டும்.
தாங்கள் விட்டுச் சென்ற கார்யங்கள் அவர்களுக்கு
மேலே செல்ல முடியாத இடையூறுகளை
ஏற்படுத்தாமல் இருப்பதற்கே நாம் அன்னம் தண்ணீர் எள்
எல்லாம் நதிக்கரையிலோ, கடற்கரையிலோ நம் வீட்டுக் கிணற்றங்கரை யிலோ தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
முக்கியமான பித்ரு கடன் நீக்குவதே,பெற்ற மகன்கள் செய்ய வேண்டிய
தலையாய கடன். அன்னை வழிப் பெரியோர்கள், தந்தை வழிப் பெரியோர்கள்
அனைவருக்கும் கொடுக்கும் நீர் அவர்கள் தாகத்தைப்
போக்கி மேலும் இறைவனை அடைய
வழி வகுக்கும்.
நம் சந்ததியினருக்கும் அவர்கள் முன்னோர் பற்றி எல்லாம் தெரிவிக்க வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++
இந்த வருடம் வரும் 4 ஆம் தேதி எங்கள் மணநாள்.
அம்மாவின் நக்ஷத்திர பிறந்த நாள்.
திருவோணம்.
90 ஆகி இருக்கும் அம்மாவுக்கு.
அவள் அவ்வளவு வாழ ஆசைப் பட்டாளா தெரியாது.
எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் அம்மா நீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment