Blog Archive

Sunday, February 17, 2019

திருமணம் இன்னொரு உறவு 4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

அந்த வார இறுதி, நாடகத்துக்கான  ஒத்திகைகளுடன்

சென்றது. சங்கத் தலைவி காந்தா நடராஜனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அடுத்த மாதம் அரங்கேற இருக்கும்
குமார சம்பவ நாடகத்துக்கு  ,தேவையான ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்
பட்டுவிட்டன. 50 பிரதிகள் பிரிண்ட் செய்யப் பட்டுத் தயார் நிலையில்
இருந்தன.

குமாரசம்பவம் நாடகத்தில் காளிதாசன் சிவ பார்வதி
இணைவதற்குக் காரணமாக இருந்த பார்வதியின் தவமும், காமனை வென்ற
சிவபெருமானுக்கு பார்வதியின் துணையோடு குமாரன் ,கார்த்திகேயன் பிறப்பதாகவும்
வடமொழியில் எழுதப்பட்ட காவியமாக இருக்கும்.
நம் தமிழ் வழக்கப் படியான புராணமாக இல்லாமல்

காதல் காவியமாக இருக்கும்.
சிவனாக சந்தரும், பார்வதியாக மேனகாவும்,கார்த்திகேயனாக
உஷாவும் பாத்திரங்களுக்கான வசனங்களைப்
படிப்பார்கள். மொத்தமே ஆறு காட்சிகள்.
வளர்ந்த கார்த்திகேயனாக தாரகாசுரனை அழிக்கும் பாத்திரப் படைப்பு.
அழகான காவியத்தில் சிவபெருமானின் உறுதியைக் கலைக்கும்
பார்வதியின் தவக்கோலக் காட்சிகள், சிவ பார்வதி சந்திப்பு எல்லாம்
ஓவியங்களாக வரையப் பட்டு நாடக மேடையில் வைக்கப்
பட்டன.
எல்லாம் உஷாவின் பெரும்பாலான பங்காக
உருவாகிக் காத்திருந்தன.
சின்ன குமரனாக உஷா மகேஷின் 6 வயது  கைலாஷ்
வேல் பிடித்த கையோடு கிரீடம், பட்டு வேஷ்டி,
நகைகள் எல்லாம் அணிவதாக ஏற்பாடு.

இத்தனை கோலாஹலங்களிலும் மகேஷ் கலந்து கொள்ளாததோடு
சென்னைக்கும் கிளம்பிப் போய்விட்டான்.
 அதைப் பற்றி யோசிக்க உஷாவுக்கு  நேரம் இல்லை.
 மற்றவர்கள் அதைப் பற்றிக் கேட்டாலும் அசிரத்தையாகப்
பதில் சொன்னாள்.
 அவர்களுக்குள் நடக்கும் அர்த்தமில்லாத யுத்தம் வருத்தம் கொடுத்தாலும்,
அதை லட்சியம் செய்யும் எண்ணம் வரவில்லை.

ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சிறு குழந்தைகளின் ஆடல் பாடல்கள்,
திரையிசைப்
பாடல்கள் இசைக்கும் குழுவின்  நிகழ்ச்சி, அதற்குப்
பிறகு நாடகம்.
ஆண்டுவிழாவுக்கு முதல் நாள் சென்னையிலிருந்து
மகேஷின் அம்மா தொலைபேசியில் அழைத்தார்.
வீட்டில் முக்கிய  விழா நடக்கப் போவதாகவும்
உஷாவும் ,குழந்தைகளும் உடனே கிளம்பி வரவேண்டும் என்றும்
சொன்னார்.
மகேஷின் சித்தப்பாவுக்கு அறுபதாம் பிறந்த நாள் விழா.

முன்பே சொல்லவில்லையே இங்கே சங்க வேலைகள் இருக்கிறதே என்று
உஷா கேட்டதற்கு,
இது மிக முக்கியமான நிகழ்ச்சி, நீ வந்தே ஆக வேண்டும்.
மகேஷ் உன்னிடம் சொல்லவில்லையா என்றார்.
எனக்குத் தெரியாது அத்தை
இங்கே நாடக ஏற்பாடுகள் என்னை நம்பித்தான் நடக்கின்றன
என்னால் கிளம்ப முடியாது என்று அமைதியாகச் சொன்னாள்.
 அடுத்த பகுதியில் முடிவைச் சந்திக்கலாம்.

https://youtu.be/U0ckOQUCFbc?list=PLr4LxrxO2bgqTnp_91EPH0b62SWtt-yfr



13 comments:

Geetha Sambasivam said...

waiting for next post

ஸ்ரீராம். said...

மகேஷின் சதி வேலையோ! என்னவோ ஈகோ!

வல்லிசிம்ஹன் said...

முடிக்கணும் கீதா மா. இப்பவும் அவர்களை நினைத்தால்
வருத்தமாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவை அறிய காத்திருக்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் ,
இன்னது விஷயம்னு சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

ஒற்றுமை வேண்டும் ஒரு குடும்பத்தில். பழி வாங்குவது போல்
நடந்து கொண்டால் எப்படி உருப்படும்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா என்னவோ தெரிகிறதே...இது மகேஷின் ஈகோ படுத்தும் பாடு...மாமியாரின் அழைப்பு என்னவோ எங்கேயோ தட்டுகிறதே..பாவம் உஷா...முடிவுக்குக் காத்திருக்கிறோம்...

துளசிதரன், கீதா

கீதா : அம்மா இப்படியான ஈகோ சில ஆண்களை இப்படிச் சொல்லாமல் செல்லவும் செய்கிறது...நான் கண்டிருக்கிறேன்....என்னவோ போங்க என்ன ஈகோவோ?!! ம்ம்ம்

Thulasidharan V Thillaiakathu said...

வீடியோ அருமை! பாடலும்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, கீதா,

வீட்டில் ஒரு விசேஷம் என்றால் மருமகளிடம் முன் கூட்டியே சொல்ல வேண்டாமா.
அவள் எனக்குத் தொலைபேசினாள். என்ன விவரம் எனக்குத் தெரியாதே என்று.
நாங்கள் சென்னை செல்பவதாக இல்லை. அழைப்பிதழ் எப்பவோ வந்து விட்டது.
அவளிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும் மௌனமாகிவிட்டாள்.
பார்க்கலாம்மா என்று வைத்துவிட்டாள்.

மனதில் பொறாமை குடி புகுந்தால் என்னென்னவோ செய்யச் சொல்கிறது.

வல்லிசிம்ஹன் said...

Geethaa, can you recognise Baby Sridhevi.

Thulasidharan V Thillaiakathu said...

யெஸ் அம்மா அது பேபி ஸ்ரீதேவின்னு தெரிஞ்சுது...நேத்து சொல்ல விட்டுப் போச்சு...அழகு இல்லையா?!!!!

கீதா

கோமதி அரசு said...

பாடல் அருமை, ஸ்ரீதேவி நடிப்பு அருமை.
கதையின் போக்கு எதை நோக்கி போகிறது என்று தெரிந்து விட்டது.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க வளமுடன் கோமதி.
ஆமாம்,எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே சீராகப் போவதில்லை.
மாற்றங்களை எதிர்கொள்ள உறுதி வேண்டும்.
உஷாவும் ,குழந்தைகளும் அதற்குப் பிறகும் பல
பொருளாதாரப் பிரச்சினைகளைச் சந்தித்தார்கள்.