Blog Archive

Friday, February 15, 2019

கதையிலிருந்து சற்றே விலகி நின்று பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  இன்பமாக வாழ வேண்டும்.
நற்  செய்தி இன்று எங்கள் மகள் மருமகனுக்குத் திருமண நாள்.
இனிமை  நிறைய , அவர்தம் மக்கள் நலமுடன் வாழ
ஆண்டவன்  அவர்களுக்கு  அருள் மழை பொழிய வேண்டும் என்று மனமார பிரார்த்திக்கிறேன் .

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் கதையில்  வந்த மாந்தர்கள் உலகின் வேறு பக்கங்களில் வசிக்கிறார்கள்.

இருவருமே  பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

உஷா வீட்டில் அவளைத்தவிர மூன்று சகோதரிகள்.
எல்லோரும்  நிறைய படித்தவர்கள்

பாரதி  கண்ட புதுமைப் பெண்கள். எதையுமே அறிவார்த்தமாகத்தான் அணுகுவார்கள்.

மகேஷ்  வீட்டில் பாரம்பரியத்துக்கு நிறைய மதிப்பு.
பெண் என்பவள் வீட்டுக்கு மீறி எதுவும் செய்யக் கூடாது.
அனாவசிய    பேச்சு  சிரிப்பு, கூடாது.
குழந்தைகள் எப்பொழுதும் முதல் ராங் வாங்க வேண்டும்.

அம்மா அப்பா வார்த்தைக்கு கட்டுப் பட்டு  எப்பவுமே
கோடு  மீறாமல் நடப்பான்.
தன்  மனைவியும் அப்படியே  இருக்கவே விரும்பினான்.
மக்களை பார்த்துக் கொண்டு, வீட்டலங்காரங்களை செய்து,
நல்ல சமையல் செய்து போட்டு

நல்ல பெண்மணியாக வீட்டோடு இருக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தான்.

முதலில் எல்லாத்  திருமணங்களையும் போல
அழகாகவே நடந்தது.
உஷாவுக்கு  க்ரியேட்டிவாக  எதுவும் செய்வதில் விருப்பம் அதிகம்.

தன்னால் முடிந்த உதவிகளை செய்வாள். அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்குத் தேவையான  நேரத்தில் சங்கம் வழியாக  கரம் கொடுப்பாள்.
இவைகள் அவளுக்கு மகிழ்சசி தந்தது,.
குழந்தைகளையும் அதில் ஈடு படுத்துவாள்.
வெளி உலகம் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் அவளுக்கு
மும்முரம் அதிகம்.
இந்த இரண்டு பேருக்கும் நடுவில்  முரண்பாடுகள் இருந்தாலும்,
மஹேஷுக்கு உறுத்தியது சந்தரின் வருகையும், அந்தச் செய்தியைத் திரித்துச் சொன்ன அவனது உதவியாளரும் தான்.








22 comments:

ஸ்ரீராம். said...

ஒரு பின்னணி அவசியம்தான். நல்ல பாடல்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா உங்கள் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்! இறைவனின் அருள் எப்போதும் அவர்களுடன் இருக்க பிரார்த்தனைகள்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா ம்ம்ம்ம் என்னென்னவோ எண்ணங்கள்.....சொல்லத் தோணுது...கதை பின்னணி...

கணவன் மனைவி எல்லோரும் ஒரே சிந்தனைகளுடன், வேவ்லெங்க்த்துடன் இருப்பதில்லைதான்...அது வெகு அபூர்வம். முரண்பாடுகள் இன்ட்ரெஸ்ட்ஸ் வேறு வேறாக இருந்துவிட்டுப் போகட்டும்...ஆனால் புரிதல் இருந்துவிட்டால் போதுமே இல்லையா? கணவனுக்கு ஆசைப்பட்ட நல்ல விஷயங்களைச் செய்ய மனைவி தடையாக இருக்கக் கூடாது அது போல மனைவி செய்ய ஆசைப்படும் நல்ல விஷயங்களுக்கு கணவன் தடையாக இருக்கக் கூடாது. சந்தேகம் என்பதும் இந்த இடத்தில் வரவே கூடாது...இருவருக்கும் ...

இந்தப் புரிதல் இல்லாத போதுதான் பிரச்சனைகள் எழுகின்றன...கதைகளும் பிறக்கின்றன...ஹா ஹா ஹா

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். பின்னணி இல்லாமல் புரிதல் சாத்தியம் இல்லை. அந்தப் பாடல் கணவன் மனைவி இருவருக்கும் பொருந்தும் இல்லையா மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி டா கீதா மா. இருவரும் அலுவலுக்குச் சென்று வந்து விட்டார்கள் ஒரு கேசரி பெருமாளுக்கு. எல்லாம் பகவத் கிருபை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, இது நடந்த போது அவர்கள் திருமணமாகி பத்து வருடங்களே ஆகி இருந்தன.
அனாவசிய முரட்டுப் பிடிவாதம், உஷாவின் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை.
இருவரின் கோபம். எல்லாமே காரணம் அம்மா.
படித்தவர்கள் பண்புள்ளவர்கள் தான்.

எங்கள் வீட்டு ராணி,அவள் வீட்டுக்காரரோடு அனுசரித்துப் போவதைப்
பார்த்தால் அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இத்தனைக்கும்
அவருக்குச் சட்டென்று கோபம் வரும்.

Geetha Sambasivam said...

உங்கள் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். ஆசிகள். என்றென்றும் இதே போல் மகிழ்ச்சியுடன் வாழவும் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

நீங்கள் கொடுத்திருக்கும் பின்னணியில் இருந்து இருவரையும் புரிந்து கொள்ள முடிகிறது. அநேகமாய் மாறுபட்ட குணங்களைக் கொண்டவர்களே கணவன், மனைவியாகப் பரிமளிக்கின்றனர். என்றாலும் இதிலே சரியான புரிதல் இல்லை! :(

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. உங்கள் வாழ்த்துகளுக்கு மகள் சார்பில் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அதே தான் கீதா மா. இருவருக்கும் அவரவர் வழியில் செல்லவேண்டும். விருப்பம் கொண்டனர். சம்சாரத்தில் துளியாவது. விட்டுப் கொடுத்தல் வேண்டும். இந்த வேதனையைத் தான் நாங்கள் பார்த்தோம்..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா...

காமாட்சி said...

உங்கள் பெண்ணிற்கும்,மாப்பிள்ளைக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகளும்,அன்பான ஆசிகளும். அன்புடன்

நெல்லைத்தமிழன் said...

சிறிய விஷயங்கள்கூட பிரிவுக்குக் காரணமாயிடுது. பிற்காலத்துல நினைத்துப் பார்த்தால் பைசா பெறாத விஷயம் என்று மனதில் படும், ஆனால் காலம் அதற்குள் ஓடிவிட்டிருக்கும்.

நெல்லைத்தமிழன் said...

உங்கள் மருமகனுக்கும் மகளுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். மகள் ,மாப்பிள்ளை சார்பில் மனம் நிறை நன்றி மா.

ஸ்ரீராம். said...

மன்னிக்கவும் வல்லிம்மா... காலையில் சொல்ல மறந்து விட்டேன். உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சி மா. உங்கள் ஆசிகளுக்கு கோடி நமஸ்காரம். மகளிடம் காண்பித்தேன்.அவளுக்கு
மிக மிக மகிழ்ச்சி எல்லோருடைய வாழ்த்துக்களையும் பார்த்து .

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. வாழ்த்துகளுக்கு மகள் மாப்பிள்ளை சார்பில் மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த,
அவர்கள் சந்தோஷமாகவே இருந்தார்கள்.
புதுமையான தம்பதிகள். எங்களுக்குத்தான் அதிர்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,அதனால என்னம்மா பரவாயில்லை. நீங்க எல்லோரும் என் குடும்பதின் நல விரும்பிகள். அது எனக்கு நன்றாகவே தெரியும்.
நன்றி ராஜா.

கோமதி அரசு said...

அக்கா, அன்பு மகளுக்கும், மருமகன் அவர்களுக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
கதையை தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி , அருமை வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.