Friday, February 22, 2019

நன்றி என் சக பதிவாளர்களுக்கு

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

வலைத்தளங்களில்  தஞ்சையம்பதி, நெல்லைத்தமிழன், கீ தா சாம்பசிவம் ,கோமதி அரசு அனைவரும் தரும் கோவில் உலா பற்றிய தகவல்களும் மனதை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றன.

இருக்கும் இடத்திலிருந்தபடியே  இத்தனை அழகு சிற்பங்களையும்
 கடவுள்  மூர்த்திகளையும்   சேவிப்பது
இணையில்லா பாக்கியம்.

அருமைத்  தோழர்களுக்கும் ,சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான  நன்றி.
பலதடவைகள்  மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.

மனமெல்லாம்  பூரிப்பு. எல்லோரும் வாழ்க வளமுடன்.

24 comments:

கோமதி அரசு said...

வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.

ஸ்ரீராம். said...

அடடே.... இப்படி ஒரு நன்றி அறிவிப்பா? நானும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

வல்லிம்மா... உங்கள் ஆர்வம்தான் என்னை வியக்கவைக்கிறது. நீங்க போகாத கோவிலுக்கா நாங்க போயிருக்கப்போறோம்.

உங்கள் கதைகளைப் படித்து (ஓரளவு உண்மைச் சம்பவம்னு சொல்லியிருப்பீங்க), நானும் ஒரு கதை எழுதறேன். ஹாஹா.

வெங்கட் நாகராஜ் said...

இப்படி ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்ளும் தகவல்களும், படங்களும் எத்தனை எத்தனை.....

உங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொள்ளும் வாழ்க்கைப் பாடங்கள் எத்தனை...

அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியும்....

KILLERGEE Devakottai said...

உண்மைதான் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, உங்கள் வழியாக நிறைய செய்திகளை அறிகிறேன். இப்போது. எங்கேயும் கிளம்பி முடியாத நிலையில் இது அதிர்ஷ்டம் அம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம். அப்படிப்பட்ட பார்க்கப்பட்ட போனால் எங்கள் ப்ளாகிற்கும் நன்றி சொல்லணும். எபிரேயர். வழியாகத்தான் தான் இவர்களை அடைகிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன்., நான் கோவில்கள் சென்று ஐந்து வருடங்கள்
ஆகிறது. உண்மைதான் முக்கியமான தமிழ் நாட்டுக் கோவில்களுக்குப்
போய் வந்திருக்கிறோம். கும்பகோணமும் அதைச் சுற்றியும்.
இன்னும் எத்தனையோ காணாத கோவில்கள் உள்ளன.
அதைத்தான் நீங்கள் எல்லோரும் எழுதுகிறீர்கள் இதுவே பெரிய பாக்கியம் இல்லையா.
அதைத்தான் சொன்னேன்.

என் நினைவுகளைப் பொக்கிஷமாகப் பதிகிறேன். பயணங்கள் உண்மையானவை. கதைகளில் கொஞ்சம் கற்பனை உண்டு.
சம்பந்தப் பட்டவர்களை வருந்தச் செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
உங்கள் எல்லோரின் அனுபவங்களும் எனக்கு உரமூட்டுகின்றன.
உங்களது குடும்பப் பாங்கு,திறமை எல்லாம் என்னை மகிழ்ச்கியில்
வியக்க வைக்கின்றன.

வாழ்வில் நல்ல நட்புகள் என் பதிவுலகத்தில்
என்னை எத்தனையோ எழுத வைத்திருக்கின்றன.
அத்தனைக்கும் என் நன்றி.கட்டாயம் சொல்லவேண்டும்.
எழுதும்போது கிடைக்கும் சுதந்திர உணர்வு எத்தனை மகத்தானது
என்று இந்த 13 வருடங்களாகத்தான் தெரிய வந்தது.👍👌

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

நல்ல தமிழில் எழுத முயற்சிக்க வேண்டும் என்ற நல்ல பாடத்தை உங்களிடம் கற்கிறேன்.
நன்றி மா.

Anuprem said...


நிச்சயமா இவங்க அனைவரும் பல பல தகவல்களை பகிர்கிறார்கள், அனைத்திற்க்கும் எனது நன்றிகளும் ..

தங்களுக்கு எனது வணக்கங்களும் மா...இப்படி அழகா நன்றி சொல்லி அனைவரையும் ஊக்குவிப்பதற்காக

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் நன்றிகள்...

ராஜி said...

நன்றி கூறுவதில் இணைந்துக்கொள்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனும்மா, துளசி கோபால் பெயரை விட்டு விட்டேன்.
அனைவரும் பகிர்ந்து கொள்ளாவிட்டால் பல செய்திகள் நம்மை எட்டுமா என்றே தெரியாது.
நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். உங்கள் பதிவுகளே ஒவ்வொன்றும் ஒரு ரத்தினம் தான்.
அதற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல் வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி, உங்களது விவரமான பதிவுகளைப் படித்து ஆச்சர்யப் படுகிறேன்.
அனைத்தும் புது செய்திகளைக் கொடுக்கின்றன.
உங்களுக்கும் என் நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா எங்கள் நன்றிகளையும் சேர்த்துக் கொள்கிறோம்..

துளசிதரன்

அம்மா அட!! சூப்பரா நன்றி சொல்லி வாழ்த்தியிருக்கீங்க. இது மிக மிக நல்ல விஷயம் அம்மா. நம்ம நன்றியையும் அதுல கலந்து விட்டுருவோம்..ஹா ஹா ஹா

அம்மா அனுப்ரேமும் கூட நிறைய கோயில் பத்தி எழுதுவாங்க எழுதறாங்க...

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்கள் மூலமாக பல கோயில்களைப் பற்றி அறிந்துவருகிறேன். தொடருங்கள்.

துரை செல்வராஜூ said...

தங்களது தளத்தில் எனது பதிவையும் சொல்லி மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள்... பெரியவர்களுக்கு மத்தியில் எனக்குத் தெரிந்தவற்றை என்னால் இயன்ற வகையில் பதிவு செது வருகின்றேன்..

எல்லாவற்றுக்கும் காரணம் - எல்லம் வல்ல இறைவனின் பேரருளும் தங்களைப் போன்ற நல்லோர்களின் வாழ்த்துரைகளும் தான்...

என்றும் அன்புடன்
துரை செல்வராஜூ...

Geetha Sambasivam said...

வாழ்த்துகளுக்கும், நன்றி அறிவிப்புக்கும் மனமார்ந்த நன்றி ரேவதி. உங்களுடைய இந்தப் பதிவே இன்னிக்குத் தான் கவனிச்சேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயாவுக்கு வணக்கம். தங்கள்
ஆராய்ச்சிகளும், கரந்தை ஜெயக்குமாரின் எழுதுதுகளும் மிகவும் ஊக்கம் அளிப்பவை.
வருகைக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, கீதாமா, இரு நாட்களாக இங்கே சுழன்றடிக்கும் காற்று
கொடுத்த துன்பம்
மனத்தை எதிலும் ஈடுபடுத்த முடியவில்லை.
உங்கள் இருவரின் அறி பூர்வமான எழுத்துகளையும் பயணக் கட்டுரைகளியும் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு பெரிய நூலகமே நம் தமிழ் இணைய வெளியில் இயங்குகிறது.
மனம் நிறைந்த நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு, எனக்கு உங்கள் எல்லோருடைய எழுத்தும் சுவாசிக்கக் கிடைத்த
வரங்கள். மன்ம் நிறை நன்றி ராஜா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
அதனால் என்ன அம்மா. சொல்ல வேண்டிய நன்றிகளை சமயம் வரும்போது சொல்லி விட வேண்டும் என்றுதான் எழுதினேன்.

உங்கள் எல்லோருடைய திறமையும் எப்பொழுதும் என்னை வியப்பில்
இருக்க வைக்கின்றன.