Blog Archive

Monday, February 25, 2019

காற்றின் மொழி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

இங்கு இரண்டு நாட்களாக  அடித்து வரும் பலத்த காற்றைப்போல் இந்த 20 வருஷங்களாகப் பார்த்ததில்லை.

வலிமை பொருந்திய பூமி. வளம் கொண்ட மரங்கள்.
இவரை ஆட்டுவிக்கும்  சக்தி கொண்ட காற்று.
பத்துப் பதினைந்து விரைவு வண்டிகள்
 வீட்டைக் கடந்து செல்வது போலாச்  சத்தம் காதைத்  துளைக்கிறது.

காற்று நகரம் என்றே இந்த ஊருக்குப் பெயர்.
எல்லா வீட்டிலும் இருக்கும்  புகைக்கூண்டு வழியாக உள்ளே வீசி  திகில்  கூட்டுகிறது.

எனக்கு வயதாவதால் சத்தம் பொறுக்க முடியவில்லை என்று தான் நினைத்தேன்.
மாப்பிள்ளையும், மகளுமே  சொல்லும் அளவிற்கு
ஊழிக்காற்று போல சுற்றிச் சுற்றி வருகிறது. 24 மணி நேரம்
இதை சகித்துக் கொண்டாகிவிட்டது. இப்பொழுத்து நிலைமை கொஞ்சம் தேவை.

வெளியே  மாட்டி இருக்கும் மணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, பூந்தொட்டிகளைக் கவிழ்த்து இது என்ன ஆர்ப்பாட்டம்.

ஞாயிறு என்பதால் அநேகம் பேர்  வண்டிகளை எடுக்கவில்லை.

தொலைவில் செல்லும் தீ அணைக்கும் வண்டிகள் , ஆம்புலன்ஸ் இவைகளின் சத்தம் கூடப்  பெரிதாகக்  கேட்கவில்லை.

இந்த ஊரின் இயற்கை வினோதம்.
வாயு பகவானின் ஆட்சிக்குட்பட்ட ஊரென்று சொல்லலாமா.


20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் கவனம் அம்மா...

KILLERGEE Devakottai said...

இயற்கையின் வினோதம் கவனம் தேவை அம்மா.

ஸ்ரீராம். said...

புதுசு புதுசாய் சோதனைகள்... தொல்லைகள்...! சீக்கிரம் சரியாகட்டும் அம்மா.

நெல்லைத்தமிழன் said...

சுழல் காற்றா வல்லிம்மா? கவனமாயிருங்கள் என்று சொல்லும் அதே நேரம், இத்தகைய விநோத (பனிப் பொழிவு, பனித் தரை, ஊழிக்காற்று) காலநிலைகள் எப்படி இருக்கும் என்று அனுபவம் தேடுகிறது மனம். ஹாஹா (இக்கரைக்கு அக்கரை பச்சை).

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
ஆமாம், மா. குட்டிக் குட்டிக் குழந்தைகள் இன்று பள்ளி செல்வதைப் பார்த்தேன். கண்கள் மட்டுமே தெரிகின்றன. அத்தனை குளிர். ஸ்கி மாஸ்க் போட்டது போல அம்மாவும் பிள்ளைகளும் விரைந்தார்கள்.கவனமாக இருப்பேன் ராஜா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே தேவகோட்டை ஜி. நம்மால் வேறெவருக்கும்
தொந்தரவு இருக்கக் கூடாது.

வல்லிசிம்ஹன் said...

எல்லோருக்கும் உண்டானது நமக்கும் என்ற ஒற்றுமையே ஒரு ஆறுதல்.
அன்பு ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ. த.. நல்ல அழகான சீதோஷ்ணத்தைப் பார்க்க
ஜூலை. வரலாம். கடுங்குளிருக்கு ஜனவரி , ஃபெப்ருவரி,மார்ச்.

நம்மகத்துக்கே வாருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இயற்கையின் முன்னே மனித சக்தி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது...

கவனமாக இருங்கள் வல்லிம்மா....

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா இயற்கையின் முன் நாம் யார் அம்மா? அதுவும் இறைவன் தானே! நாம் என்ன செய்ய முடியும் அதையும் மீறி. கவலை வேண்டாம் கவனமா இருங்க அம்மா! எல்லாம் விரைவில் சரியாகிப் போகும்.

//இங்கு இரண்டு நாட்களாக அடித்து வரும் பலத்த காற்றைப்போல் இந்த 20 வருஷங்களாகப் பார்த்ததில்லை.//

இச்சமயம் பங்களூரிலும் எங்கள் பகுதியில் தானே ஏர் ஃபோர்ஸின் விமாங்களின் ஏர் ஷோ நடந்தது. அங்கு பார்க்கிங்க் பகுதியில் காய்ந்த புற்கள் தீப்பிடித்து 300க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்துவிட்டது. பெரிய தீ விபத்து.

மறுநாளே சென்னையில் ராமகிருஷ்ணா மருத்துவமனை அருகில் ஒரு ப்ரைவேட் கார்க்கம்பெனியின் பார்க்கிங்க் ஸ்லாட்டில் காய்ந்த புற்கள் தீப்ப்டித்து அங்கும் 187 கார்கள் தீக்கிரையாகிவிட்டன.

அப்புறம் பந்திப்பூர் காட்டிலும் காட்டுத்தீ ட்ரை காட்டினால்...பாவம் விலங்குகள் எனனச்சோ?

கீதா



வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், தில்லியின் குளிரைப் பற்றி மாமா குடும்பம் சொல்லிக் கேட்டிருக்கிறேன். காலை 11 மணிக்குதான் சூரிய வெளிச்சமே கண்ணில் படும்
என்பார். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் சேதமோ,
இல்லை மகிழ்ச்சியோ நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் என்னவோ நியூஸ் பேப்பர் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இவ்வளவு நிகழ்வுகளா. இரு விமானங்கள் மோதியதைக் காண்பித்தார்கள்.

எப்படி, இத்தனை தீ விபத்துகள் நடக்கின்றன.
அங்கே குளிர் காலம் இல்லையோ. உஷ்ணம்
இருந்தால் தான் இப்படி ஆகும் இல்லையா.
வனவிலங்குகள் மிகவும் பாவம்.

கரந்தை ஜெயக்குமார் said...

கவனேமாக இருங்கள் சகோதரியாரே

Geetha Sambasivam said...

சிகாகோவின் காற்று உலகப் பிரசித்தம் என்றாலும் இந்த வருஷம் இந்த அளவுக்குப் போயிருப்பது ஆச்சரியம் தான். இயற்கை தன்னை எவராலும் வெல்ல முடியாது என்பதை எப்படியோ காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. நமக்குத் தான் புரிவதில்லை. பத்திரமாக இருங்கள்.

Anuprem said...

ஓ இவ்வோளோ காற்றா..

இங்கும் இரு நாட்கள் அப்படி இருந்தது மா..மிக வேகமா காற்று,,நாம வடகம் போடும் போது ஏதாவது வரும் ன்னு சொல்லிட்டே செஞ்சோம் ..

இப்போ வழக்கம் போல அமைதியா இருக்கு

துரை செல்வராஜூ said...

இயற்கை எதை எதையோ உணர்த்தி எச்சரிக்கை செய்கின்றது..

ஆனாலும் அவற்றை உணர்ந்து கொள்ளும் சூழலில் உலகம் இல்லை..

பரமன் ஒருவனே பாதுகாப்பு....

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார் ,
கவனமாக இருக்கத்தான் வேண்டும் அப்பா. நம்மால் தொந்தரவு வரக்கூடாது இல்லையா.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா. இந்த ஊருக்கு வந்த பிறகு நம் ஊரின் வெய்யில் கொடுமை என்று சொல்வதையே விட்டு விட்டேன்.
பாலைவனத்தில் எல்லாம் பனி பெய்திருக்கிறது 3 அடி ஸ்னோ.
இயற்கையை மீறி மனிதன் செயல் படும் போது
இப்படித்தான் ஆகிறது.
இத்தனைக்கும் நிறைய மரங்களை நட்டுப் பாதுகாக்கிறார்கள்.

காற்று அடிக்கும்போது ஊசியாகக் குத்தும் பனி.
எல்லோரும் பொறுத்துதான் போகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனும்மா,
மாசிக்காற்று இலைகளை உருட்டி ஓடி வருமே.
குப்பைகளை இரைக்கும்.
பிறகு வெய்யில் காயும்.
இத்தனைக்கும் இளவேனில் காலம் நம்மூரில்.

வடகம் போடுகிறீர்களா. ம்ம்.நடத்துங்கள்.😊😊😊😊😊😊😊😊😊😊

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
கடவுள் தான் இருப்பதை அடிக்கடி உணர்த்துகிறார்.

மனிதன் தானே சாஸ்வதம் என்று இயங்குகிறான்.
இயற்கை ஒவ்வொரு தடவையும் வெல்லும்போதும் மனம் திருந்துவதில்லை.
நாம் கவலைப் பட்டு என்ன செய்வது.