Blog Archive

Thursday, February 21, 2019

காலம் இது காலம் இது

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நயாகரா நீரவீழ்ச்சி உறைந்தது. இது நடப்பது இப்போது வழக்கமாகிவிட்டது.  இந்த வீடியோவைப் பார்க்கும் போது நம்பவே முடியவில்லை. தடதடவென்று  ஆழ்ந்த பச்சை நிறத்தில்
அடர்ந்து பாயும் வேகம் திகில் கலந்த அழகாக இருக்கும் .
இப்பொழுதும் மேல்மட்டமே உறைந்திருக்கும் . அடியில் அருவி ஓடிக்கொண்டுதான் இருக்கும் என்றார்கள்.
இங்கே இப்படி என்றால்
நம் ஊரில் வெப்பம் அதிகமாகி இருக்கிறது என்று எல்லோருடைய பதிவுகளையம் பார்த்தால் புரிகிறது. மாசி மாதம் வெய்யில் காயும் ஆனால் உறைக்காது.
இப்பொழுது 
பார்க்கும்போது தெரிகிறது. இவ்வளவு  மாற்றங்களுக்கும் காரணம்
எல் நினோ எஃ பெக்ட்  என்கிறார்கள்

இங்கு பனி உறைவதோடு,மேலே ஐஸ் மழை பெய்யும் பொது அநேகர் வழுக்கி விழுவது
ஆபத்தாக முடிகிறது. தன குழந்தையை பள்ளிக்கூட பஸ்ஸில் ஏற்றிவிட வந்த இந்தியத் தந்தை தடால் என்று விழுந்த அதிர்ச்சியில்  சொன்னால் நம்ப முடியாது ..அவர் உயிர் பிரிந்து விட்டது.
இந்தப் பகுதியே சோகத்திலும் பயத்திலும்
ஸ்தம்பித்தது.

எல்லோரும் பள்ளிகளுக்கும் அவரவர் வேலைகளுக்கும் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜாக்கிரதை சொல்லியே எனக்கு  நாக்குலர்ந்து போகிறது.
 அனைவரும் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.


17 comments:

ஸ்ரீராம். said...

இப்போதுதான் முகநூலில் சறுக்கும் விளையாட்டு பார்த்து லைக்கிவிட்டு வந்தேன். இவ்வளவு ஆபத்தானதா இது?

நயாகரா நீர் வீழ்ச்சியில் பனி என்று கால்வைக்கப்போக, அது உடைந்து அடியில் விழும் அருவியில் மாட்டினால் என்ன ஆகும் என்று விபரீத கற்பனை ஓடுகிறது. விதம் விதமாக கஷ்டங்கள் அங்கு!


ஆமாம், இங்கு வெயில் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது!

Geetha Sambasivam said...

கடுமையான வெயில் இங்கே! ஏ.சி. போட்டுக்க ஆரம்பிச்சாச்சு. இப்போது உ.பி. கோயில், தெற்கு கோபுரம் போன்றவை நன்றாகத் தெரிகின்றன. பனி மூடிக் கொண்டிருக்கும். சிவராத்திரிக்கு முன்னேயே இப்படி!

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனைதான் சகோதரியாரே

KILLERGEE Devakottai said...

இயற்கையின் வினோதம் ஒவ்வொரு இடமும் ஒரு விதம்.

அனைவரும் நலமாக வாழ பிரார்த்திப்போம் அற்மா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

செய்தியாகப் படித்த நினைவு. பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், கெட்டியாகிவிட்ட பனி மீது உறுதியானவர்கள்
நடக்கலாம். இதே நயகராவில் ஒருவர் மலை ஏறுவது போல
ஏறி இருக்கிறார். இந்த ஐஸ் தான் வழுக்கும்.பனி வழுக்காது.

எல்லாரும் ஜாக்கிரதையாகத்தான் இருப்பார்கள். நான்
படி தாண்டாப் பாட்டி ஆக இருக்கிறேன். பயம் தான் காரணம்.

வல்லிசிம்ஹன் said...

அட ராமச்சந்த்ரா. ஸ்ரீரங்கமே வெய்யிலுக்கு ஆட்பட்டதா. திருச்சி இன்னும் கொதிக்கும்.

குடை இல்லாமல் வெளியே போகவேண்டாம் கீதா மா.
வீட்டு எஜமானரிடம் சொல்லி வைங்கோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார், வெவ்வேறு ரூபத்தில் இவ்வாறு நடக்கிறது.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, எல்லோரும் வளமாக
நலமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவருக்கு வணக்கம். நல்ல செய்திகளே காதில் விழப் பிரார்த்தனைகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் நலமாக இருக்கட்டும் அம்மா...

கோமதி அரசு said...

உங்கள் செய்தியை படித்த போது அதிர்ச்சியாக ஆகிவிட்டது. வழுக்கி விழுந்து உயிர் பிரிவது எல்லோருக்கும் பயத்தை ஏற்படுத்தும் செய்தி.
எல்லோரையும் க்டவுள் காப்பாற்ற வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, தலையில் அடிபட்டிருக்க வேண்டும் அம்மா.அதுதான் இந்த நிலை.
நம் மூன்றாம் சுழி துரையே இரண்டு தடவை விழுந்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்.

சென்ற வருடம் இவ்வளவு பனி வரவில்லை. வெளியே சென்று நம்மால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம் என்றே நான் வெளியே செல்வதில்லை.

இனியாவது நிலைமை மாற வேண்டும்.

நல்லதையே நம்புவோம்.

ராமலக்ஷ்மி said...

வருத்தமான செய்தி. கவனமாக இருந்திட வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
உண்மையே. எதிர்பாராமல் நடக்கும் இந்த விபத்துகளுக்கு என்ன பதில் சொல்வது மா. இறைவன் தான் துணை.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் பனி பற்றி வாசித்ததும் பயமாக இருக்கிறதே அதுவும் ஒருவரின் உயிர் பிரிந்தது என்பதை வாசித்ததும் மனம் வேதனையாகிவிட்டது. இப்படி ஒரு எதிர்பாரா விபத்தை எப்படி அந்தக் குடும்பம் எதிர்கொள்ளூம்?

இங்கு என் பகுதியில் (நாங்கள் ஊட்டி அருகில், கேரளத்தில்) திடீரென்று குளிர்ந்தது. காலை வேளையில் மட்டும். அப்புறம் மதியம் நல்ல வெயில்.

துளசிதரன்