எல்லோரும் வளமாக வாழவேண்டும் .
இங்கிலிஷ் பாட்டி வந்து இறங்கிய நேரம் இந்தப் பாட்டி கிளம்புகிறேன்.
நாலு நாட்களாவது ஆகும் முதுகு நேராக.
அனைவருக்கும் அன்பு.
![]() |
| ஆனந்திப்பாட்டி முதன் முதலில் எடுத்த படம் 30 வருடங்களுக்கு முன் எடுத்தது. |

![]() |
| ஸ்ரீவைகுண்ட நாதரும் உபய நாச்சிமார்களும் |
![]() |
| கோவில் நாதர் |
| வெளிச்சுற்று ஸ்ரீராமரும் ஆஞ்சநேயரும் ![]() |
![]() |
| மண்டபத்தில் யாளிகள் இப்பொழுது நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்து நாங்கள் கண்டு மகிழ்ந்த வாழைத் தோட்டம் எல்லாம் நஷ்டப் பட்டுவிட்டதாக கோமதி அரசுவிடம் பேசிய பொது தெரிந்தது. அந்த வளப்பம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.நாங்கள் பயணம் செய்த நான்கு நாட்களிலும் நல்ல வெப்ப நிலை. திருக்குறுங்குடியில் தான் சில்லென்று மழை. கீழ் நத்தத்தில் கூ டத் தாமிரபரணியின் கரையோரங்கள் வீடுகளாக மாறி இருந்தன. அதனால்தான் எங்களால் அந்த புனித ஆ ற்றைக் காண முடியவில்லை. திருக்குறுங்குடியிலிருந்து பயணம் மதியம் ஒரு மணிக்கு கிளம்பினோம் வழி நெடுக வாழை தான். பத்தாயிரம் வாழைமரங்கள் பார்த்திருப்போமோ என்னவோ. வண்டி ஓட்டுநர் வண்டியை விரட்டுவதிலேயே இருந்தார் . மகனிடம் நிதானப் படுத்தச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அதிக அரசியல் பேசுவதிலும் வேறு கோவில்களுக்குப் போவதிலும் அக்கறை காட்டினார். அடுத்த நாள் சென்னை திரும்ப வேண்டிய நிலையில் அவரது திட்டங்கள் எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதுவும் மதுரை சென்று விமானம் ஏ ற வேண்டும். நல்லபடியாக இரட்டைத்திருப்பதி வந்து சேர்ந்தோம். அங்கு இருக்கும் இரண்டு திருமலை தெய்வங்களையும் சேவித்துக் கொண்டு சுற்றி இருந்த வயல்வெளிகளை அனுபவித்த படி அங்கு மேய்ந்து கொண்டிருந்த மயில்களை ரசித்தபடி நத்தம் திவ்யதேசத்திற்கு வந்தோம். ![]() ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் வரகுணமங்கை திருக்கோவில் வீற்றிருந்த கோலம் தாயார் வரகுணவல்லி அங்கு ஓடிய நதியின் பெயர் ரேவா. இந்தக் கோவிலுக்குள் சென்று தரிசிக்க என்னால் இயலவில்லை. மகன் கள் நன்றாகத் தரிசித்து வந்தார்கள். வண்டி பறந்த வேகத்தில் முதுகு மிக வலி கொடுத்ததால் என்னால் இறங்க முடியவில்லை. |